-
இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் கும்ப ராசிக்கு முன்றாம் இடத்தில் குரு, சூரியன், எட்டாம் இடத்தில் கேது, ராசியில் சனி, செவ்வாய் இராண்டாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு சுகமும் சந்தோஷமும் அதிகமாக கிடைக்கும்.
-
அடக்கமாகச் செயல்பட்டால், அனைத்திலும் நன்மை கிட்டும் ஆண்டு இந்த ஆண்டு எனலாம்
-
வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் மேலும் பணியிடத்தில் துணிவை விடப் பணிவே நல்லது. பொறுப்புகளை நேரடியாக கவனிக்க வேண்டும்.
-
திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அதற்கும் பொறுமையே அவசியம்.
-
விட்டு கொடுத்தால் வீட்டில் நிம்மதி நிலவும். உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம்.
-
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத்துணை உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
-
உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் முயற்சிகளில் தடங்கல், தாமதங்களைத் தவிர்க்க முடியாது. மேலும் ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாத்து வர வேண்டியதும் அவசியம். பணிபுரிவோரிடம் வீண் கடுமை வேண்டாம்
-
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்காது என்றாலும் வர்த்தகத்தில் திடீர் வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சமயத்தில் உழைப்பை உறுதியாக்குவது அவசியம்.
-
சிக்கனத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
-
கலைத்துறையினர் முயற்சி செய்தால் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம் அன்பும் அமைதியுமே அனைத்திலும் நன்மை செய்யும்.
-
அரசு, அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற வாக்குறுதிகளைத் தவிருங்கள்.
-
மாணவர்கள் சோம்பலை விரட்டினால், சாதிக்கலாம். விடியற்காலை படிப்பு, விசேஷ நன்மை தரும். ஒருமுறைக்குப் பலமுறை பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
-
பெண்களுக்கு குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் அவை தானகவே நிவர்த்தியாகிவிடும். கோபத்தைக் குறைப்பதன் மூலம் சிக்கல்கள் தீரும்.
-
குரோதி ஆண்டு முழுவதும் ராகு ராசியிலும் கேது ஆயுள் ஸ்தானத்திலும் பயணம் செய்வதால் எந்த அளவிற்கு பண வருமானம் வந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
-
விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். மூன்றாம் நபரை மத்தியஸ்தம் செய்ய அழைக்க வேண்டாம்.
-
உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
-
தூக்கமின்மை, மன அழுத்தம், நரம்பு உபாதை, படபடப்பு உபாதைகள் வரலாம். தினமும் மன, உடற்பயிற்சி செய்வது நல்லது.
-
அவிட்டம் 3, 4ம் பாதங்களில் பிறந்த கும்ப ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். எனினும் நஷ்டம் ஏற்படாது. கவலை வேண்டாம். அரசியல்வாதிகளுக்கு மகிழ்ச்சியும், துன்பமும் மாறி மாறி வரலாம். மாணவமணிகளும், கலைஞர்களும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சிலருக்குத் திருமண வாய்ப்புகள் அமையக்கூடும். பெண்களால் சிலர் அனுகூலம் பெறுவர். உடல்நலத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம். தொலை தொடர்பு செய்திகள் இனிமையானதாக இருக்கும்.
-
சதயம் நடசத்திரத்தில் பிறந்த கும்ப ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் ஏற்படும் சிறு மனக்குழப்பங்களை உங்கள் பொறுமையின் மூலம் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து, திட்டமிட்டு நிதானமாகச் செயல்படுவதன் மூலம் சங்கடங்கள் குறையும். தெய்வ அனுகூலத்தால் பொருளாதார நிலையில் எவ்வித சங்கடமும் வராது. தேவைகள் இல்லாமல் கடன் பெறுவதை தவிர்க்கவும்.
-
பூரட்டாதி 1, 2, 3 பாதங்களில் பிறந்த கும்ப ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு சிறு சிறு தடைகளுக்குப் பிறகு வெற்றி நிச்சயம் உண்டு. தெய்வ அனுகிரகம் உங்களைக் காக்கும். கடிதப் போக்குவரத்தின் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் தொந்தரவு காணப்பட்டாலும், பேச்சு வார்த்தை மூலம் சரி செய்துவிடலாம். நண்பர்கள் பெருமளவில் உதவியாக இருப்பார்கள்.
-
சிவனையும் பார்வதியையும் வழிபட்டு வர வாழ்க்கை சிறக்கும்.
-
பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனமகிழ்ச்சி உண்டாகும்
-
வீட்டில் தினமும் 4 ஒரு முக மண் அகல் விளக்கு இலுப்பை எண்ணை விட்டு ஏற்றி வர மன குழப்பம் ஆகலும்
நட்சத்திர பலன்கள்
பரிகாரம்