தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 -மீனம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் மீன ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, சூரியன், ஏழாம் இடத்தில் கேது, ராசியில் பன்னிரெண்டில் சனி, செவ்வாய், ராசியில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது, இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு தலைகனம் தவிர்த்தால், தலை உயர்ந்து நடக்கும் ஆண்டு.



  • ஒரே நேரத்தில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். பொறுமையை கையாள்வது அவசியம்.

  • அலுவலகத்தில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். எல்லாம் தெரியும் நினைவும் ஏனோ தானோ செயலும் கூடாது.

  • இடமாற்றம் தாமதமானாலும் கைகூடும். பதவி, ஊதிய உயர்வு வேண்டுவோர் வீண் புலம்பல் தவிர்ப்பது முக்கியம். சிலருக்குப் புதிய பணிவாய்ப்பு கிட்டும்.

  • குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். சுபகாரியங்களும் உறவுகள் வருகையும் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவை அறவே தவிருங்கள். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள்.

  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் கிட்டும்.

  • சுக்ரனும் புதனும் சாதகமாக இருக்கும் தருணத்தில் குரோதி வருடம் பிறக்கிறது. ஆகவே, செயலில் வேகம் கூடும். மனதில் அமைதி உண்டாகும். பிள்ளைகளுக்குச் சொத்து சேர்க்க சூழல் அமையும். கலைகளில் நாட்டம் பிறக்கும்.

  • சிலரின் படைப்புகள் பத்திரிக்கைகளில் இடம்பெற வாய்ப்பு உண்டு. நண்பர்கள் வட்டாரத்தில் மதிப்பு உயரும்.

  • வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். அது தொடர, தளர்ச்சி இல்லா உழைப்பு முக்கியம் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக படித்து பார்க்கவும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை.

  • மனதளவில் தைரியத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த முக்கியமான வேலைகள் இந்த ஆண்டில் வெற்றிகரமாக நடைபெறும்.

  • சிலர் புதிய இடத்தை வாங்கி, வீடு கட்டுவார்கள். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இந்த ஆண்டில் அது நிறைவேறும். மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

  • அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். மேலிடத்தின் ஆதரவு கிட்டும்.

  • பதவி, பொறுப்புகள் தாமதமானாலும் கைகூடும்.

  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு வாய்ப்புகள் தேடிவரும். செல்லும் இடத்தின் சட்டதிட்டங்களை சற்றும் மீறவேண்டாம். மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்ணும் பெறுவீர்கள்.

  • மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும். முகஸ்துதி நபர்களிடம் இருந்து விலகி இருங்கள்.

  • குரு பெயர்ச்சிக்கு பிறகு குருவின் பார்வை 7, 9 மற்றும் 11ஆம் இடத்திற்கு வருவதால் திருமணங்கள் கைகூடும்.

  • இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் பேசும் வார்த்தைகளால் பிரச்சனைகள் உருவாகலாம். கவனம் தேவை

  • அலர்ஜி, அல்சர், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • நட்சத்திர பலன்கள்



  • பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்த மீன ராசிகாரருக்கு இந்த வருடம் பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது.

  • உத்திரட்டாதி பிறந்த மீன ராசிகாரருக்கு இந்த வருடம் மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும் பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

  • ரேவதி பிறந்த மீன ராசிகாரருக்கு இந்த வருடம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் முன்கோபம் ஏற்பட்டு அதனால் வீண்தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

  • பரிகாரம்



  • தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடல் நலம் சீராகும். பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும்

  • கோதண்டராமரை கும்பிடுவது, கோடி கோடி நன்மைகளை தரும்.

  • வெள்ளி, செவ்வாய் கிழமைகளில், வராகியம்மன் மற்றும் காளி வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வர, சகல காரியமும் நன்மையும், வெற்றியும் தரும்.

  • ராகு, கேது, சனியால் வரும் பிரச்சனையை குறைக்க சித்தர்களையும் மகான்களையும் தரிசிக்கவும்