தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - சிம்மம்



குரோதி வருடம் - 2024-    சிம்மம் 

சிம்ம ராசிக்கு ஓன்பதில் சூரியன், குரு, இரண்டாம் வீடாயாகிய கன்னியில் கேது, ஏழாம் வீடாயாகிய கும்பத்தில் சனி, செவ்வாய், எட்டாம் வீடாயாகிய மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். 



  • சித்திரை மாதம் 18ஆம் தேதி குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆக போகிறார். குரு பத்தாம் வீட்டுக்கு போகிறார்

  • அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு இது எனலாம்.

  • பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் மாற்றம் வரும்.

  • வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும்.

  • குரு பார்வையால் குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும்.

  • கண்டச்சனியாக ராசிக்கு நேர் எதிரே சனி ஆண்டு முழுவதும் அமர்ந்திருப்பதால் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. சனி தரும் சச யோகத்தால் செல்வம் வீடு தேடி வரும்.

  • பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்க தோன்றும். சிலருக்கு காதல் மலரும் திருமணத்தில் முடியலாம்.

  • நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதிகள் குரோதி ஆண்டில் ஒன்று சேருவார்கள்.

  • அசையும் அசையா பொருட்சேர்க்கை ஏற்படும்

  • வங்கிக் கடன்களை தேவையின்றி வாங்குவதைத் தவிருங்கள்.

  • அரசு, அரசியல்துறையினருக்கு பொறுமை மிகமிக முக்கியம். தேவையில்லாத வாக்குறுதிகள் தருவதைத் தவிருங்கள்.

  • படிப்பில் நல்ல முன்னேற்றமும், வெளியூர், வெளிநாடு சென்று மேற்படிப்புக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.

  • பெண்களுக்கு தாய் வழி சொந்தங்கள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும்.

  • 8-ம் வீட்டில் ராகு இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்கும் பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம்

  • குடும்ப ஸ்தானத்தில் கேது இருப்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.

  • அலுவலகத்தில் ஒருபோதும் அவசரம் அலட்சியம் கூடாது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் தவிர்க்க வேண்டாம்

  • மேலதிகாரியிடம் பேசும்போது வீண் கர்வம் ௯டாது .

  • யாருடைய தலையீட்டையும் குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தம்பதியர் பரஸ்பரம் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

  • தொலைதூர பயணத்தில் உடைமைகள் பத்திரம்.

நட்சத்திர பலன்கள்

  • மகம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் பெரியளவில் எந்த ஒரு கெடு பலனும் இல்லாமல், சில நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.

  • பூர பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் பண வரவுகள், பண புழக்கங்கள், பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கை, வீடு, மனை, வாகன சேர்க்கை என பல விதத்தில் சாதக பலன்கள் கிடைக்கும்.

  • உத்திரம் 1ம் பாதத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையிடம், நண்பர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது

பரிகாரம்

  • தேய் பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு செய்யவும்.

  • சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வருவது நன்மை தரும்.

  • வராகி அம்மனை வழிபடுவதால் யோக பலன்களை அள்ளி கொடுக்கும்

  • பிரதோஷம், பெளர்ணமி, திங்கட்கிழமைகளில் சிவன் கோயில் சென்று சிவனுக்குரிய சிவபுராணம் படிப்பது மிகச்சிறப்பானது