தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மகரம்

  • இந்த தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, சூரியன், ஓன்பதாம் இடத்தில் கேது, இரண்டாம் இடத்தில் சனி, செவ்வாய் முன்றாம் இடத்தில் ராகு, புதன், சுக்கிரன் சேர்க்கை, என்ற கிரகநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரகநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு மகர ராசிகாரர்களுக்கு வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது



  • கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வருமானம் பல வழிகளிலும் அதிகரிக்கப்போகிறது

  • மே மாதம் குரு மாற்றத்தால் விடிவுகாலம் பிறக்கப்போகிறது. மேலும் எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு ஆகும்

  • அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். ஏற்றமும் மாற்றமும் எண்ணப்படியே வந்து சேரும்.

  • வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். தவிர்க்க வேண்டாம்.

  • பொறுப்புகளை ஏற்று கொண்டால் உயர்வு உண்டு. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். விசேஷங்கள் தொடர்ச்சியாக வரும்.

  • வாரிசுகளால் பெருமை சேரும். ஆன்மிகப் பயணங்கள் செல்லும் சந்தர்ப்பம் அமையும்

  • வீடு, வாகனம், ஆபரணம் சேரும். தம்பதியரிடையே அன்யோன்யம் உருவாகும்.

  • உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும்.

  • வர்த்தகம், வியாபாரம் எதுவானாலும் லாபமும் வளர்ச்சியும் உண்டு. தொழில், வியாபாரத்தை விரிவு படுத்த முடியும்

  • சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு ஏற்ப உதவுவார்கள்.

  • அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு, பெருமை, புகழ் சேரும். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம்.

  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு சோதனைகள் நீங்கும் காலம். வாய்ப்புகள், தொடர்ச்சியாக வரும்.

  • பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்

  • குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான பாக்கியம் கிட்டும். குரோதி ஆண்டில் மகர ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் ஏற்படப்போகிறது.

  • புதிய முதலீடுகளில் கவனம் அவசியம். வர்த்தக நிபந்தனைகளை யாருக்காகவும் மீறவேண்டாம்

  • உறவுகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்

  • மாணவர்கள் மறதியை மறக்க, அன்றாடம் படிப்பது அவசியம்

  • முதுகு, கழுத்து, அடிவயிறு, பற்கள், நரம்பு உபாதைகள் வரலாம்

  • நட்சத்திர பலன்கள்

  • உத்திராடம் 2, 3, 4 பாதங்களில் பிறந்த மகர ராசிகாரர்கள், மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

  • திருவோணம் நடசத்திரத்தில் பிறந்த மகர ராசிகாரர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். வாழ்க்கை துணையுடன் சகஜ நிலை காணப்படும்.

  • அவிட்டம் 1, 2 பாதங்களில் பிறந்த மகர ராசிகாரர்கள், திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உறவினர் வருகை இருக்கும். பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எந்த செயலிலும் மிகவும் கவனமாக, ஈடுபடுவது நன்மை தரும்.

  • பரிகாரம்

  • சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்

  • பிள்ளையாரைக் கும்பிடுவது, வாழ்வை பிரகாசமாக்கும்

  • பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும்