தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 - மிதுனம்
குரோதி வருடம் - 2024- மிதுனம்
- புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு குரோதி தமிழ் புத்தாண்டு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது.
- ராசிக்குப் பதினோராம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு என்ற கிரக நிலை அமைப்பு பெற்று இந்த வருடம் ஆரம்பிக்கிறது
- இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்பட உள்ள கிரக நிலையில் மாற்றங்கள் ஆகிய வற்றை கொண்டு பார்க்கும் போது மிதுன ராசிகாரார்களுக்கு இந்த ஆண்டு அமைதியாக மற்றும் பொறுமையாக இருந்தால் ஆனந்தம் நிலவும் ஆண்டாக இருக்கும்
- வீடு அல்லது மனை வாங்கும் யோகம், புதிதாக வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் எனலாம்
- தாயார், தாய் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.
- நீண்ட நாட்களாக உடல் நல பிரச்னைகள் நிவர்த்தி ஆகும்.
- திருமணம் கைகூடும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள், திருமணம், வீடு, வாகனம், சொத்து வாங்குதல் தொடர்பான சுப விரயங்கள் ஏற்படும்.
- அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும்.
- கலை படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலிதமாகும். பல நாள் கனவுகள் நனவாகும்.
- மாணவர்களுக்கு சீரான உயர்வுகள் கிட்டும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகளை அவசியம் கேட்டு நடக்க வேண்டும். மேலும் இவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- மே 01, 2024 அதிர்ஷ்டம் அவ்வளவாக இருக்காது. என்னென்றால் 12வது வீட்டில் இருப்பார். ஆனாலும் அவர் சுப காரியச் செலவுகளை உருவாக்குவதால் சற்று மனம் அமைதி அடையும் .
- ஆன்மீக யாத்திரைக்கு திட்டம் இருந்தால் அது நிறைவேறும்.
- அரசியலில் உள்ளவர்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டில் நல்ல பெயரையும், பதவியையும் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கும். ஆனாலும் கவனம் தேவை
- பெண்கள் தாங்களுக்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சில நல்ல வாய்ப்புகள் அமையும்.
- மிருகசீரிடம் 3,4 பாதங்களில் பிறந்த மிதுன ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம் இது எனலாம். அவசர பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்
- குடும்பத்தில் அமைதியும் சாந்தமும் நிலவும்.குழந்தை இல்லாத தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- குரோதி தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிரடி மாற்றங்களைத் தரப்போகிறது என்பது திண்மம்
- கடன் வாங்க வேண்டாம் மேலும் கிரெடிட் கார்டு என்னும் கடன் அட்டை பயன்படுத்துவதில் கவனம் தேவை. அநாவசியக் கடன்கள் வாங்க வேண்டாம்.
- தம்பதியர் இடையே மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். விட்டுக்கொடுத்துப் போவது முக்கியம்
- பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
- அரசியலில் இருப்பவர்கள் அகலக்கால் வைப்பது கூடாது.
- ஆரோக்யத்தில் அக்கறை வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்வோர்க்கு உடல்நலம் சீராக இருக்கும்.
- காது, மூக்கு, தொண்டை, அஜீரணப் பிரச்னைகள் வரலாம்.
- வாகனத்தில் சிறுபழுது இருந்தாலும் உடனே கவனிப்பது நல்லது.
- 10ல் ராகு நான்காம் வீட்டில் கேது சஞ்சரிக்கிறார். 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், கீர்த்தி, செல்வாக்கு அந்தஸ்து ஸ்தானத்தில் ராகு வருவதால் தொழிலில் சிறப்பை தரும். நினைத்த மாதிரி வேலை வாய்ப்பு அமையலாம். ஊதிய உயர்வு, பதவி உயர்வு தருவார்
நட்சத்திர பலன்கள்
- மிருகசீரிடம் 3,4 பாதங்களில் பிறந்த மிதுன ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய வருடம் இது எனலாம். அவசர பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்
- திருவாதிரை பாதங்கள் பிறந்த மிதுன ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தரக்கூடிய காலமாக இருக்கும். பல வழிகளிலிருந்து அதிர்ஷ்டங்கள், ஆதரவுகள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைவார்கள்
- புனர்பூசம் 1, 2, 3 பாதங்களில் பிறந்த மிதுன ராசிக்காரர்கள் நன்மையையும், தீமையும் கலந்த ஆண்டு எனலாம். புதிய வீடு, மனை, வாகனம் உள்ளிட்ட சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தீய பலன்களாக, அலைச்சலும், மருத்துவ செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிகாரம்
- பெருமாள் கோவிலுக்குச் சென்று வலம் வரவும் நல்லது நடக்கும்
- மனதுக்குப் பிடித்த மகான்கள் அல்லது குருக்களை கும்பிடுவது, மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்
- முடித்தால் திருவண்ணா மலையை பெளர்ணமி திதியில் கிரிவலம் செய்யலாம்
- வியாழக்கிழமையன்று குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.