Tamil New year 2024 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2024 பொது பலன்கள்


 

குரோதி வருடம் - 2024

குரோதி என்றால் பகை மற்றும் கேடு என்று பொருள். 60 தமிழ் வருடங்களில் 38வதாக வரக்கூடியது குரோதி ஆண்டு ஆகும்

இடைக்காட்டாரின் குரோதி வருடம் வெண்பா

கோரக் குரோதி தனிற் கொள்ளி மிகுங் கள்ளரினால்
பாரிற் சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை பெய்யுமே மஃகங்குறையுமே
சொற்பவிளையுண்டெனவே சொல்

விளக்கம்

குரோதி வருடம் மோசமானதாக இருக்கும் என்றும், அசம்பாவிதங்கள் அதிகமாக நடக்கும், பொருட்கள் திருடு போக அதிக வாய்ப்புள்ளது. இந்த குரோதி ஆண்டில் மழை சொற்பமாக அதாவது குறைவாக பெய்யும் என்பதால் விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் மக்கள் கடவுள் மீது இருக்கக்கூடிய நம்பிக்கை குறைய போக வாய்ப்புள்ளது.

பொதுவாக உலக அளவில் இயற்கைச் சீற்றமும், எதிரிகளால் பயமும் ஏற்பட வாய்ப்பு உண்டு. .  எரிமலைச் சீற்றம், கடல் கொந்தளிப்பு, மலைப்பிரதேசங்களில் சரிவு, நெருப்பினால் விபத்துகள், ரசாயனக் கழிவுகளால் விபத்துகள் வர வாய்ப்பு உண்டு 

கிரகங்கள் இருக்கும் நிலை 



மேஷ ராசியில் சூரியன், குரு, மிதுனத்தில் சந்திரன், கன்னியில் கேது, கும்பத்தில் சனி, செவ்வாய், மீனத்தில் ராகு, புதன், சுக்கிரன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர்.

இந்தாண்டு ஏப்ரல் 14, சித்திரை 1ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையில் மிதுன ராசியில் பிறக்கின்றது