குரோதி வருடம் - 2024- ரிஷபம்
- ஆண்டு ஆரம்பமாகும் நாளில் ரிஷப ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு, ஐந்தாமிடத்தில கேது, ஏழாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பத்தாம் இடத்தில் சனி, பதினோராம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது.
- இந்த அமைப்பின் அடிப்படையிலும், இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையிலும் முயற்சிகளுக்குப் பலன் தரும் வருடமாக இருக்கும்.
- செவ்வாய் சனி சேர்க்கை பத்தாம் வீட்டில் சேர்ந்திருக்கும் போது புது வருடம் பிறக்கிறது. அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் உருவாகும். இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் ஏற்று கொள்ளுவது லாபத்தை தரும்.
- குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். உறவுகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வாழ்க்கை துணையுடன் ஒற்றுமை, அந்நியோன்னியம் அதிகரிக்கும்
- சுபகாரியத்தடைகள் தெய்வ வழிபாட்டால் நீங்கும்.
- தம்பதியர் உடல்நலத்தில் பரஸ்பரம் அக்கறை அவசியம். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும்.
- வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். மகளுக்கோ, மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.
- குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
- பிள்ளைகளின் உயர்கல்வி நல்லவிதமாக முடியும்.
- வர்த்தகத்தில் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரத்தொடங்கும்.
- அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானமே நிலையான ஏற்றம் தரும்.
- அசுர குருவாகிய சுக்கிரன் ஆட்சி வீட்டில் தேவ குரு மே மாதத்தில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
- அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை அவசியம் கேட்டு நடப்பது நல்லது.
- அரசாங்க உத்தியோகம் செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.
- பெண்களுக்கு சகோதர வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கணவர் வழி உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். வேலைக்கு செல்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
- ஆன்மீக பயணங்களால் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் ஏற்படும்.
- சினிமா, மியூசிக், நாடகம், கலைத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். வாய்ப்புகள் தேடி வரும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம்.
- எந்த விஷயத்திலும் நிதானமும் நேர்மையும் தவறாமல் இருப்பது மிக அவசியம்.
- எந்தச் செயலையும் திட்டமிட்டு நேரம் தவறாமல் செய்வது நல்லது. பொறுப்புகளைப் புலம்ப வேண்டாம்.
- மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். புறம் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- குடும்ப ரகசியங்கள் எதையும் பொது இடத்தில் பகிரவேண்டாம். வீடு, வாகனச் சேர்க்கையில் நிதானம் அவசியம்.
- முதலீடுகள் செய்யும் பொது எதையும் யோசித்து செய்ய வேண்டும். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுதல் நல்லது .
- எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழக வேண்டும் . யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம்.
- மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம்.
- ஆறுகள், அருவிகளில் குளிக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல்நலத்தில் ரத்த அழுத்த மாற்றம் ,டிப்ரஷன், தூக்கமின்மை வரலாம்.
- உணவை முறைப்படுத்துங்கள். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. எப்போதும் பெருமாள் வழிபாடு, பெருமைகள் சேர்க்கும்
- பொதுவாக ரிஷப ராசிக்கு இந்தாண்டு குரு மற்றும் சனி நற்பலனைத் தரக்கூடிய நிலையிலும், ராகு,கேது சுமாரான பலன்கள் தரக்கூடியவராக இருப்பார்கள்.
பரிகாரம்
- சிவாலய வழிபாடு மிகவும் நல்லது .
- வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் போன்ற பெண் தெய்வ வழிபாடு செய்வது நல்லது.
- சனிக்கிழமை தோறும் அனுமனை வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபட செயல்களில் இருக்கும் தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்
- குரு , தட்சண மூர்த்தி வழிபாடு சால சிறந்தது