தனுசு லக்கினத்தின் பொது பலன்கள்

 


    • சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார் சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக நன்மை செய்வார் 
    • செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார்.
    • குருவும் செவ்வாயும்  சேர்ந்திருந்தால் குரு மங்கள யோகம் கிடைக்கும்.
    • பாக்கியாதிபதி சூரியன்  எட்டில் மறைந்து சனியோடு சேர்க்கை பெற்று இருந்தால  தியாகசீலராகவும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்ல நேரிடும் 
    • சந்திரனும் சுக்கிரனும்  சேர்ந்த இருந்தால்    தனுசு லக்னத்திற்கு ஆசையை தூண்டி  சுகவாழ்விற்கு கடனை வாங்க செய்து  அதன் மூலம் அசிங்கம்,அவமானம் போன்ற கெடுபலனை சந்திர அல்லது சுக்கிர தசையில்  தரும்.
    • புதனும் சந்திரனும்  இணைந்தால் ஏதேனும் ஒரு கிரகத்தின் தசா நடந்தாலும் வேதனை தரும் 
    • ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் கடன், பகை, வழக்கு, நோய், அவமானம் என்று புதன், சுக்கிர தசா முழுவதும் நிகழும்.
    • ஆனி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தலாம் என்று நூல்கள் சொல்கின்றன 
    •  

பொது பலன்கள் 

    • சத்தியவான், நல்ல குணமுடையவன், நன்றாக பேசுபவன் , தனவான் , பழகுவதற்கு இனியவன் , வித்தையுடையவன்
    • இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்கள், நல்ல பலமுள்ள உடலமைப்பு உள்ளவர்கள், வட்டமான நெந்தி, தீண்ட அழகான மூக்கு நீண்ட அல்லது சற்று உருண்டையான முகம்,   அழகிய பல்வரிசை  உள்ளவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்கள், தீர்க்கதரிசி எதையும் எளிதில் கிரகிக்கும் சக்தியுள்ளவர்கள், சுய கவுரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
    • இடுப்புக்கு கீழ் குதிரையும், இடுப்புக்கு மேல் வில் பிடித்த மனிதன் சின்னம்: அந்த சின்னத்திற்கு ஏற்றபோல் திறமைசாலிகள, தானதர்ம சிந்தனை கொண்டவர்கள், எந்த செயலிலும் குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.
    • எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள், தான் சரியென்று எண்ணியதை அடித்துச் சொல்லுவார்கள், உரத்த அதிகாரமும் கட்டளை இடுவதும் போன்ற குரலில் பேசுவார்கள் பண்பும் ஆசாரமும் உள்ளவர்கள் முன் கோபி, ஆனாலும் இரக்ககுணம் உள்ளவர்கள். பேச்சி கெட்டிக்காரர்கள். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவார்கள். கொஞ்சம் தற்பெருமை உள்ளவர்கள். ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் ஈடுபட்டுப் புகழ்பெறக் கூடியவர்கள்.
    • தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகள் மற்றும் விவேகம் மிக்கவர்கள். இவர்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். 
    • இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் செல்வச் செழிப்பு அதிகம் பெற்று இருப்பார்கள்.
    • தாராள மனது கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவராவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். 
    • ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு  பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள்.
    • பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. 
    • பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.
    • நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனிதாபிமானத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களோ தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.
    • இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்று கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.
    • இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள்.  எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 30

துலாம் லக்கினம்

பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு

பகருவேன் புந்தியுமே பகையுமாவர்

சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்

சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்

நீரப்பா நெடுமாலும் கோணமேற

நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்

ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே

அப்பனே புலிப்பாணி பாடினேனே


பொருள்:

இப்பாடலில் தனுசு  லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் புதன் பகை ஆவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார் என்று குரு அருளால் உரைக்கிறார்

 விளக்கம்:

ராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையா கொண்ட தனுசு ராசியை இலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகழப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன் விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யா வசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன்.


திருமண வாழ்க்கை

  • தனுசு இலக்கினகாரர்கள் திருமணம் தாமதப்படும். சற்று தாமதமாக நடந்தால் நல்லது.
  • தனுசு லக்ன, ஜாதகர்க்கு மிதுன ராசி ஏழாமிடமாகும். புதன் நீச்சமாயிருந்தாலும், பகையாக இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.  ஒருசில குழந்தைகளே இருக்கும்
  • திருமணமே வேண்டாமென்று வாதாடி. பிறகு செய்து கொள்வார்கள். திருமண வகையில், பயணச் செலவும், உறவினர் கூடிப் பங்கு பெறுவதற்கும் பெரும் பாடு ஏற்படும். உறவுக்குள்ளேயே திருமணம் அமையலாம். திருமணம் படிப்பை உத்தேசித்து நிச்சயிக்கப்படும்.
  • தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் - சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள்
  • வாழ்க்கைப் போராட்டங்கள் பல அமையினும், வாழ்க்கை துணை அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவார்கள் 
  • புதன் நல்லபடி காணப்பட்டால், வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும். புதன் கெட்டிருந்தால், வாழ்க்கை துணைக்கு ஞாபக மறதி ஏற்படும். மேலும் ஏதேனும் குற்றம் கண்டு பிடித்தவண்ணம் இருப்பார். வாழ்க்கை துணை அதிகம் பேசக் கூடியவராவார்.
  • தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். 
  • 7 – ஆம் அதிபதி உச்சமானால், தனுசு லக்னக்காரருக்கு திருமணம் ஆனவுடன் மிகப்பெரிய கௌரவம் கிட்டும்
  • காதல் வெற்றி அடையும்.ஆனால் காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்

தொழில்

  • பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோகிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வித்துறை, பதிப்புத்துறை போன்ற தொழில்கள் அமையலாம்.
  • புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும்.
  • புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
  • புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும்.
  • சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும் 
  • தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும்.
  • தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம். 
  • புதன் 10க்கு உரியவர் என்ற வகையில் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். புதன் கெட்டால் எந்த தொழிலும் சிரமம் ஏற்படும் 
  • புதன் ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
  • 7 ஆம் இடம் பாதக ஸ்தானமாகவும் மாரகஸ்தானமாகவும் அமைவதால் பாதகாதிபதியாகிறார். நான்காம் இடத்தில் நீசம் பெற்றால் ஜீவன பாவம் வலுக்கும்
  • கிரகங்கள்  

    சூரியன் :    9 வீட்டுக்கு உரியவர். யோககாரர் தான் . லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரியமான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்

    சந்திரன் : தனுசு லக்னத்திற்கு அவமானம், அவப்பெயர், கண்டம் போன்ற கெடு பலனைத் தரும் அட்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால்  சந்திரன் தன் தசா புத்திகளில் வேதனையை தர தவறமாட்டார்.

    செவ்வாய்:  சிறந்த யோககாரரே  . 12, 5 க்கு உரியவர். சூரியனை விட செவ்வாயே அதிகமாக நன்மை செய்வார்  

    குரு:  இவர் 2 மற்றும் 5க்கு உரியவர். தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்..

    புதன் : புதன் 7க்கு  மற்றும் 10 க்கு உரியவர். யோகாரர் ஆவார் ஆனாலும் தனுசு லக்னாத்திற்கு புதன் பாதகாதிபதியாக செயல்படுவதால் தன் தசா/புத்தியில்  யோகமான பலனை வழங்க மாட்டார்

    சுக்கிரன்: தனுசு லக்ன அதிபதி குருவிற்கு  சுக்கிரன் பகை கிரகம்.  தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் அதிபதியாகவும், பதினொராம் அதிபதியாகவும் விளங்கும் சுக்கிரன் ஏதோ ஒரு வகையில் லாபத்தை சுக்கிரன் தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு வழங்கினாலும் கடன்,வம்பு,வழக்கு,நோய் போன்ற கெடுபலனையும் வழங்க தவறுவதில்லை. சுக்கிர தசா  பொதுவாக முழுமையான சுபபலனை வழங்காது .

    சனி:  தனுசு லக்னத்திற்கு 2 மற்றும் 3க்கு  அதிபதியாக  சனி இருந்தாலும்  தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தாற்கு  நன்மையும்,தீமையும் கலந்தே தருவார்.   எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் மூன்றாம் அதிபதியோ/மூன்றில் அமர்ந்த கிரகமோ தன் தசா/புத்தியில் நன்மையைத் தராது.

    ராகு & கேது  : குரு அணிக்கு சர்ப கிரகங்களை சுப பலனை வழங்காது. மேலும் சனியைப்போல் ராகு என்ற அடிப்படையிலும் சுபப் பலனை தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு தராத நிலையில் ராகு, கேது உள்ளது.


    தனுசு   லக்கினம்  – நட்சத்திரம் 


    தனசு  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: மூலம், பூராடம், உத்திராடம்-1 நட்சத்திரங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது தனசு   லக்கின பலன்கள்  பார்ப்போம்.
    இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
    அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


    தனுசு  லக்கினம்   – மூலம்  

    மூலம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, கேது தாக்கத்துடன் இருப்பார்.

    இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.

    தனுசு  லக்கினம் – பூராடம்  

    பூராடம்    நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், குரு தாக்கத்துடன் இருப்பார்.

    பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள்.  சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும். அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாதவர்களிடம் மட்டும் பழகுவார்கள்

    தனுசு  லக்கினம்   – உத்திராடம் -1 

    உத்திராடம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், குரு  தாக்கத்தில்  இருப்பார்.

    குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.  கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள். எப்போதும் பொருளாதார ரீதியாக பஞ்சம் இருக்காது.அகங்கார குணம் கொண்டவர் என்பதால் குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படும். தான் செய்கின்ற தவறுகளை மிக சமார்த்தியமாக சமாளித்து விடுவார்கள்.


    மந்திரம் 

    தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய துர்க்கை துதி மனதார சொல்லி வருவது நல்லது  


    இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
    விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
    திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
    அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே

    ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்