Showing posts with label Rohini. Show all posts
Showing posts with label Rohini. Show all posts

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - ரிஷபம்

ரிஷப ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார்.

  • 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சோதனை மிகுந்த காலம், மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும், ஆனாலும் பயப்பட தேவை இல்லை . குருவின் விசேஷ  பார்வையான 5,7,9ம் வீடுகளின் மீது விழுகிறது.

  • எனவே ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார், வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும்,எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், ஊதிய உயர்வும் உண்டு.

  • மேலும் குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும்.

  • குருவின் விசேஷ  பார்வையால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும்,பூர்வீக சொத்துகள் சேரும்

  • தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும், அதேசமயம் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது, வீண் ரோஷம் தவிர்ப்பது மிக அவசியம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம்

  • உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமாக இருப்பது  நல்லது

  • பிறர் குறையை பெரிதுபடுத்து வேண்டாம், இந்த சமயத்தில் வேண்டாத கோபத்தால்  பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம்

  • புதிய முதலீடுகளை செய்வதை தவிர்ப்பது நல்லது , அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம், வரவை சேமிக்கப் பழகுங்கள்

  • சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள்

  • பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள், தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்

  • பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும், கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள்

  • அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது

  • அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும்

  • மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள்

  • சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்

  • கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்கள்

கார்த்திகை 2,3,4 ம் பாதங்களில்  பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.


ரோகிணி 

ரோகிணி  நட்சத்திரத்தில்   பிறந்த  ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். 

  • உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவார்கள். 

  • உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து  சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். சக ஊழியர்களால் நன்மை அடைவார்கள்.  

  • பொதுவாக படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். 

  • வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

  • வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.



மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்

மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள் பாதங்களில்  பிறந்த ரிஷப ராசிகாரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பாப்போம். 


  • வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. 

  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். 

  • வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். கணவன். மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகளுக்கு  தேவையானவற்றை மகிழ்ச்சி உடன் செய்வார்கள். 

  • சந்தோஷமான காரியங்கள் நடக்கும். ஆனாலும் மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். 

  • உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். 

பரிகாரம் 

அருகில் உள்ள  அம்மன் கோவில் உள்ள அம்மனுக்கு மல்லிகை பூ சாரம் அல்லது  மாலையை அணிவித்து வணங்கி வர மன கவலை நீங்கும்


Full Video