மிதுன ராசி குரு பெயர்ச்சி
பொது பலன்கள் 2024-25
- விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குருவால் சில சோதனைகள் நடந்தாலும் நன்மைகளும் அதிகம் நடைபெறும்.
- வேலை தொழில் ரீதியாக முன்னேற்றங்களும் நன்மைகளும் ஏற்படும், புதிய வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.
- குரு பெயர்ச்சியின் ஆரம்ப காலங்களில் விரையச் செலவு இருக்கும் சுப விரைய செலவுகளாக மாற்றி கொள்ள வேண்டும்
- விரைய ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு, இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8ம் இடங்களை பார்க்கறார்.
- இதனால் முன்னேற்றத் தடைகள் நீங்கும், மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
- அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள்.
- எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்று கொள்ளங்கள். நல்லதே நடக்கும்.
- பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது
- வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம்.
- கடன் தருவது, பெறுவதை மிக கவனம் தேவை. சீனிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள்.
- பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.
- அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள்.
- தொழிலமைப்பில் லாபம் சீராகும்,பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம்.
- தொழிலில், வியாபாரம் தொய்வின்றி செல்லும், பெயரும், புகழும் கிடைக்கும்
- அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு.
- அரசாங்கப் பணியில் இருப்பவர்களுக்கு சீரான நன்மைகளை கிடைக்கும்.
- முதலிட்டில் கவனம் தேவை, உழைப்பு கான பலன் உடனடியாக கிடைக்காது
- தூக்கம் பாதிக்கும், உடல் நலனில் அக்கரை தேவை
- மாணவர்கள் நன்கு படித்து , அவர்களின் மதிப்பெண் உயரும்.
- கலைஞர்கள், சிறிய பயணத்தில் கவனம் தேவை .
- காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம்.
மிருகசீரிஷம் 3,4 ம் பாதங்கள்
- இந்த குரு பெயர்ச்சியின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும்.
- பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம்.
- விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்வார்கள்.
- உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவார்கள்.
- உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப் பெறுவார்கள். உதவிகளின் மூலம் வெற்றி காண்பார்கள்.
திருவாதிரை
- இந்த குரு பெயர்ச்சியின் மூலம் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.
- பூமி சம்பந்தமான துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். வீண் அலைச்சல் ஏற்படலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
- எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
- மனதிருப்தியுடன் செயலாற்றுவார்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
- கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
- இந்த குரு பெயர்ச்சியால் பாராட்டு கிடைக்கும். ஆனாலும் மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
- ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உற்சாகத்தைக் கொடுக்கும்.
- தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும்.
- உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.
- புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.
- குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும்.
பரிகாரம்
புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மதுரை மீனாட்சி, விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.