மீன ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 

இந்த பெயர்ச்சியில்  ராகு, மீன ராசிக்கு 12ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மீன  ராசியின்  6ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கும் ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும். ராகு உங்கள் ராசியை விட்டு நீங்குவது நன்மை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. 
  • திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இப்போது நல்ல நேரமாக இருக்கும். திருமணம் அல்லது காதல் திருமணம் இரண்டும் உங்களுக்கு நல்ல  பலனளிக்கும்
  • இந்த ராகு-கேது சஞ்சாரத்தின் போது, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.  தூக்கம் கெடும். நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள்.
  • இந்த பெயர்ச்சியால்,  இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.
  • மேலும், நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டு. ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.
  • ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கும் ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும். ராகு உங்கள் ராசியை விட்டு நீங்குவது நன்மை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. 
  • திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இப்போது நல்ல நேரமாக இருக்கும். திருமணம் அல்லது காதல் திருமணம் இரண்டும் உங்களுக்கு நல்ல  பலனளிக்கும்
  • இந்த ராகு-கேது சஞ்சாரத்தின் போது, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.  தூக்கம் கெடும். நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள்.
  • இந்த பெயர்ச்சியால்,  இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.
  • மேலும், நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டு. ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். 

  • மீன ராசிக்காரர்களுக்கு ராகு பன்னிரண்டாவது வீட்டில் செல்கிறார். இதில் சில நல்ல மற்றும் சில தீய மாற்றங்கள் வர கூடும்.
  • உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 
  • மேலும் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். எது சரி எது தவறு என்று தெரியாமல் செலவு செய்ய வேண்டிய சூழ் நிலை உண்டாகும்.
  • 12 ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பது வெளிநாடுகளில் இறக்குமதி, ஏற்றுமதி தொழில்,  ஆராய்ச்சி அல்லது ஆன்மீகம் தொடர்பான தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
  • திருமணம் ஆனா மீன ராசிகாரர்களுக்கு, தங்களின் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ளவது சற்று சவாலானதாக இருக்கும்.
  • மீன ராசியில் பிறந்த  மாணவர்கள் இந்த பெயர்ச்சியின் போது கலவையான பலன்களை சந்திக்க நேரிடும்.
  • உத்தியோகத்தில் எதிர்கொண்ட கடினமான நேரங்கள் முடிவுக்கு வரக்கூடும், மேலும் நீங்கள் சில நேர்மறையான மாற்றங்களைக் காணத் தொடங்கலாம்.

  • மீன ராசிக்காரர்களுக்கு கேது ஆறாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. கேதுவின் ஆறாவது வீட்டில் பெயர்ச்சிப்பது சாதகமான பலன்களைதரும்.
  • கேதுவின்பெயர்ச்சியால்  செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கவனம் தேவை.
  • மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ,  போராட்டங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • உடல்நலப் பிரச்சினைகள், உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் வர வாய்ப்பு உண்டு.என்றாலும் கடந்த கால உடல் நல பிரச்சினைகளில் இருந்து விடுபட இந்த கேது பெயர்ச்சி உதவும் 
  • 6ம் வீட்டில் கேது சஞ்சரிப்பது பணி இடத்தில்  சவால்களைச் சமாளிக்கவும், போட்டியை வெல்லவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவும்.
  • சுகாதாரம் அல்லது பொது சேவை போன்ற சேவை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் இந்த பெயர்ச்சியை குறிப்பாக நன்மை பயக்கும்.
  • 6 ம் வீட்டில் உள்ள கேது கடன்களை அடைப்பதற்கும் நிதிப் பொறுப்புகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் `உதவி செய்வார்.

கும்ப ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

 

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 

இந்த பெயர்ச்சியில்  ராகு, கும்ப ராசியிலும் , கும்ப  ராசியின்   7ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த ராகு கேது பெயர்ச்சி பொறுத்தவரை கும்ப ராசிக்கு சிறப்பாக இருக்காது என்று சொன்னாலும் ம் ராகு குரு பார்வை பெறுவதால் குரு சண்டாள யோகம் உண்டாகும். அதனால் நல்ல பலன்கள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது ராகுவால் சில  நல்லது நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
  • என்றாலும் திருமணம் செய்ய விரும்பும் கும்ப ராசிகாரர்களுக்கு தடைகள், தாமதங்கள் மற்றும் ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டி வரும்.
  • திருமணமானவர்கள் தங்களுக்குள் வாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வாழ்க்கை துணையின் உடல் நிலை பாதிக்க படலாம். கவனம் அவசியம்.
  • கும்பம் ராசிக்காரர்களின் உண்மை உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். சிலர் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
  • அரசு வேலைகள் கிடைக்கும். மேலும் அரசுத் தரப்பில் இருந்து தள்ளி போன ஆதாயங்கள் தேடி வரும். மேலும் சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். 
  • கடன் தொல்லையில் இருந்த சிக்கல்கள் தீரும். என்றாலும் வருமானம் சுமாராக தான் இருக்கும். உண்டாகலாம். 
  • பணம் கொடுக்கல் வாங்கல்களில் தகராறு வரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் கூட்டாளிகள் உடன் மன கஷ்டம் வரலாம். தொழில் கூட்டாளிகளை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
  • ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரத்தில், பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடும்.
  • காதல் வாழ்க்கை சற்று கடினமாக இருக்கலாம். ராகு-கேது பெயர்ச்சி உங்கள் காதல்  உறவுகளில் சில ஏற்ற தாழ்வுகளைக் கொண்டு வரலாம்.
  • இந்த கால கட்டத்தில் உங்கள் தேவைக்காக மட்டும் செலவு செய்யாமல் உங்கள் விருப்பங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். எனவே மன கட்டுப்பாடு அவசியம்.
  • உத்தியோகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். மேலும் உங்கள் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகள் சில பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே எச்சிரிக்கை அவசியம்.
  • சொந்தத் தொழில் செய்யும் கும்ப ராசிகாரர்களுக்கு, தொழில் முன்னேற்றம் மந்தமாக தான் இருக்கும்.
  • மது உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கத்தில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. 
  • வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனம் தேவை. வாகனம் இயக்கும் போது சாகசம் செய்தால் விபத்துகள் உண்டாகலாம். 

  • கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு முதல் வீட்டில் பெயர்ச்சிப்பார். இந்த பெயர்ச்சியின் போது உங்கள் சிந்தனை மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை பாதிக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறனும் மாறும்.
  • சரியா அல்லது தவறா என்று யோசிக்கமால் மிக விரைவாக சில முடிவையும்  எடுப்பீர்கள். எச்சிரிக்கை தேவை.
  • எந்த வேலையிலும் அவசரம் காட்டுவீர்கள். இதனால் அந்த வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. 
  • உடல்நலப் பிரச்சினைகளில் அலட்சியம் செய்ய வேண்டாம், அது பிரச்னைக்கு ஆளாக்கும். 
  • ராகுவின் பெயர்ச்சி பலன் காரணமாக, உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலமாக இருக்காமல், வாழ்க்கை துணை யை பற்றி குடும்ப உறவு மேம்படும்.
  • வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்
  • வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்
  • ராகுவின் பெயர்ச்சி பலன் காரணமாக, உங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்து சுயநலமாக இருக்காமல், வாழ்க்கை துணை யை பற்றி குடும்ப உறவு மேம்படும்.
  • வியாபாரம் செய்பவர்கள், வியாபாரத்தில் தேவை இல்லாத பொய்களை சொல்ல வேண்டாம். வியாபாரத்தில் நம்பகமான அனுபவமுள்ள நபரின் ஆலோசனையைப் பெற்று செயல் பட வேண்டும்.
  • ராசியில்  ராகு இருப்பதால்,  நிதி நிலைத்தன்மையில் சற்று  ஏற்ற இறக்கங்களை ஏற்படும்.
  • ராகு ராசியில் சஞ்சரிப்பதால் காதலில் புதிய தொடர்புகள் ஏற்படக்கூடும். என்றாலும் அது நிலைக்கும் என்று சொல்ல முடியாது.
  • இந்த ராகு பெயர்ச்சியால், உங்களின்   தன்னம்பிக்கையையும் விருப்பத்தையும் அதிகரிக்கும். 

  • கும்ப ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. 
  • இந்த  கேதுவின் பெயர்ச்சி உங்கள் திருமண வாழ்க்கைக்கு சாதகமாக இருக்காது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்கள் வாழ்க்கை துணையுடன் பல வாக்குவாதங்கள், பதட்டங்கள், மோதல்கள் வர வாய்ப்பு உள்ளது.  உங்கள் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ள வேண்டும். 
  • கேதுவின் 7வது வீட்டில் சஞ்சரிப்பதால், கூட்டு தொழில் இருப்பவர்கள், தங்கள் கூட்டாளியுடன் தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும். . கவனம் அவசியம்.
  • 7வது வீட்டில் கேது, உங்களுக்கு செரிமான பிரச்னைகள், மன அழுத்தம் போன்றவற்றை தரும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
  • போட்டித் தேர்வுகள் அல்லது உயர்கல்விக்குத் தயாராகி வரும் கும்ப ராசி மாணவர்கள், தடைகளைத் தாண்டி வெற்றியை அடைய அதிகமாக உழைக்க வேண்டும்.

மகர ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, மகர ராசிக்கு 2ம்  வீடான கும்பத்திற்கும், மகர ராசியின்   8ம் வீடான சிம்மத்திற்கும்  செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த ராகு கேது பெயர்ச்சி, மகர ராசிக்கு கலவையான பலன்களை தான் தரும். எட்டாம் வீட்டுக்கு கேது வருவது அவ்வளவு நல்லது அல்ல. ராகு 2ம் வீட்டில் குரு பார்வை பெற்று இருப்பது நல்லது தான். 
  • திருமணமானவர்களின் வாழ்க்கையில் சில கவலைகள் மற்றும் சவால்களை சந்திக்க வேண்டி வரும். எனவே அமைதியாக இருப்பது முக்கியம்.
  • இந்த பெயர்ச்சியால் வருமான ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெறுகும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.
  • ராகு 2ம் வீட்டில் குரு பார்வையுடன் இருப்பதால், குடும்பத்தில் சண்டை வந்தாலும்  உங்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.
  • பேச்சு, தொழில்நுட்பம், ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட தொழில்களில் உள்ளவர்களுக்கு சிறப்பான வளர்ச்சியும், வருமானமும் கிடைக்கும். 
  • வேலை வாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.  வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிட்டும். 
  • யார்க்கும் ஜாமீன் கொடுக்க கூடாது. பிரச்னை கட்டாயம் வரும். வேறு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் உண்டாகும். 
  • உறவுகளிடமும், தொழில் செய்யும் இடத்திலும் பேச்சில் பொறுமையும் எச்சரிக்கையும் 
  • வாழ்க்கை துணையுடன்சில கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத்துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
  • இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது முக்கியம், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்.  மேலும்  சிலர் கண்ணாடி போடும் சூழ் நிலை வரலாம்.
  • இந்த பெயர்ச்சியில் மகர ராசிகாரர்கள் கட்டாயம், இரவு நேரத்தில் பயணம் மற்றும் நடு இரவில் உணவு உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். எட்டாம் வீட்டு கேது, உங்களின்  உடலில் இருக்கும் அமிலத் தன்மையை அதிகரிக்க செய்ய  வாய்ப்பு உண்டு. எச்சிரிக்கை அவசியம்.
  • இந்த பெயர்ச்சி உங்கள் காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் வரும் . பொதுவாக இந்த பெயர்ச்சியின் காரணமாக உங்களுக்கு  காதல் வாழ்க்கை கசக்கும்.
  • உடன்பிறந்தவர்களுடன் நிதி அல்லது சொத்து தகராறுகள் வர வாய்ப்பு உள்ளது. என்றாலும் பெற்றோரின் ஆதரவு நடுநிலையாக இருக்கலாம்.
  • மேலும் மகர ராசி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சோம்பேறிதனத்தை தவிர்க்க வேண்டும். என்றாலும் வேறு நாட்டில் படிக்க விரும்பும் மகர ராசி மாணவர்களுக்கும் மற்றும் கல்விக்கான கடன் தேவை படும் மகர ராசி மாணவர்களுக்கும் , இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். 

  • மகர ராசிக்காரர்களுக்கு ராகு உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். குரு பார்வை ராகு பெற்று இருப்பதால், உங்களின் பேச்சி அனைவரையும் கவரும். இனிய வார்த்தைகளை பேசினால், அனைவரும் கவர முடியும். என்பதை மனதில் கொள்ளவும்.
  • கோபத்தில் யாரிடமும் கசப்பான அல்லது கெட்ட வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • ராகுவின் இந்த பெயர்ச்சியின் போது, ​​உணவு தொடர்பான பிரச்சனைகள் அல்லது உடல் சார்ந்த பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். கவனம் அவசியம்.
  • ராகுவின் பெயர்ச்சியால், வாழ்க்கை துணையின் பேச்சை கேட்பது, மேலும் அவர்களின் யோசனைகளை கேட்பதும் நல்லது.
  • பலருக்கு மறைமுக வருமானம் மூலம் ஆதாயம் உண்டாகும். என்றாலும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றால் சிக்கல்கள் உண்டாகும்.
  • இந்த ராகு பெயர்ச்சி கலவையான பலன்களை தான் தரும்,,  என்றாலும் நல்ல பலன்கள் அதிகமாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விஷயம் ஆகும்.

  • மகர ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து எட்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கிறார். எட்டாவது வீட்டில் கேதுவின் பெயர்ச்சி உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த பலன்களைத் தரும். 
  • இந்த பெயர்ச்சியால், நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம் என்றாலும் உடல்ரீதியான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். அதாவது  ​​உடலில் பித்த உறுப்புகளின் தன்மை அதிகரிப்பதும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்
  • கேது கிரகத்தின் இந்த மாற்றத்தின் தாக்கத்தால், உங்கள் மனமானவது  மதம், ஆன்மீகம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தும். 
  • கேது பெயர்ச்சியால் , உங்களுக்கும் , உங்கள் வாழ்க்கை துணைக்கும் உடல்நல சம்மந்த பட்ட பிரச்சனைகள் வந்து   தொந்தரவு செய்யலாம். உணவில் கவனம் செலுத்த வேண்டும்
  • 8 ஆம் வீட்டில் கேதுவால், உளவியல், தத்துவம் அல்லது அமானுஷ்ய அறிவியல் போன்ற துறைகளில்  மாணவர்களுக்கு இது ஒரு சாதகமான நேரம் .

தனுசு ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 

 

இந்த பெயர்ச்சியில்  ராகு, தனுசு   ராசிக்கு 3ம்  வீடான கும்பத்திற்கும், கேது, தனுசு  ராசியின்  9ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • தனுசு ராசியை பொறுத்தவரை குரு  மற்றும் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கிறது.  கடந்த கால பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.  உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மகிழ்ச்சியும்  மற்றும் ஆதரவும் கிடைக்கும்.
  • தற்போது பிரிந்து இருக்கும் தம்பதியர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. மேலும் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை உருவாகலாம்.
  • 3, 9க்குரிய இடங்களில் ராகு, கேது அமரும்போது யூகம் செய்யக்கூடிய சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லாம். 
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.
  • பாக்கிய ஸ்தானத்தில் கேது உட்காருவதால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும்.
  • தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்கும். என்றாலும் சிலருக்கு சளி, இருமல், டான்சில்ஸ் போன்றவை ஏற்படும். அத்துடன் நீரிழிவு அல்லது இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்
  • தனுசு ராசியை பொறுத்தவரை குரு  மற்றும் ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கிறது.  கடந்த கால பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.  உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு மகிழ்ச்சியும்  மற்றும் ஆதரவும் கிடைக்கும்.
  • தற்போது பிரிந்து இருக்கும் தம்பதியர்கள் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. மேலும் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை உருவாகலாம்.
  • 3, 9க்குரிய இடங்களில் ராகு, கேது அமரும்போது யூகம் செய்யக்கூடிய சக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லாம். 
  • தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பார்வையோடு ராகு இருப்பதால் உங்கள் மனதில் பட்ட காரியங்கள் நடக்கும்.
  • பாக்கிய ஸ்தானத்தில் கேது உட்காருவதால் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக  இருக்கும்.
  • தனுசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் ஒட்டுமொத்தமாக நன்றாக இருக்கும். என்றாலும் சிலருக்கு சளி, இருமல், டான்சில்ஸ் போன்றவை ஏற்படும். அத்துடன் நீரிழிவு அல்லது இரத்தக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  • தனுசு ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் மூன்றாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார்.   மூன்றாவது வீட்டில் ராகு பகவான் இருப்பதன் மூலம் உங்களுக்கு வெற்றியின் கதவுகளைத் திறக்கும்.
  • நண்பர்களின் ஆதரவு பெருகும், அவர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும். அதாவது குடும்பம் மற்றும் உங்கள் தனிப்பட்ட உறவுகளை விட உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதையும் அவர்களுக்கு உதவுவதையும் நீங்கள் விரும்புவீர்கள்.
  • ராகுவின் தாக்கத்தால் உங்கள் சகோதர சகோதரிகள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். என்றாலும் பெரிய பிரச்னை வராது.
  • உத்தியோகத்தில் , நல்ல பலன்கள் உண்டாகும். ஆனாலும் சக ஊழியர்களுடன் தவறான புரிதலை கொண்டு வரலாம். கவனம் தேவை.
  • 3 ம் வீட்டில் ராகு இருப்பதால் மனதில் இருந்து வந்த பயங்கள் நீங்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • தனுசு ராசிக்கும்  கேது , ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார்.   கேதுவின் பெயர்ச்சியால் மத ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு அதாவது ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். மேலும்  நீண்ட யாத்திரை மேற்கொள்வீர்கள். இந்த பெயர்ச்சியால் மனம் கடவுள் வழிபாட்டை விரும்பும்.
  • இத்துடன் மனம்  சில நேரங்களில் தனியாக இருக்க விரும்பும். தனியாக இருப்பது உங்களுக்கு சில சோகத்தை ஏற்படுத்தலாம். அதைச் சமாளிக்க உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.
  • உத்தியோகத்தில் சில  ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம் மற்றும் இந்த காலகட்டத்தில், உங்கள் தொழிலை  மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • 9ம் வீட்டு கேதுவால், தந்தை வழி உறவுகளிடம் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.  மேலும் தந்தை வழி சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகளும்  உங்களுக்கு சாதகமான முடிவுக்கு வரும்.
  • காதலில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் நடக்கும்.



விருச்சிக ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

 

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 




இந்த பெயர்ச்சியில்  ராகு, விருச்சிக   ராசிக்கு 4ம்  வீடான கும்பத்திற்கும், கேது, விருச்சிக  ராசியின்  10ம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த ராகு கேதுவின் பெயர்ச்சி காரணமாக பலவிதத்தில் உங்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உங்கள் செயலில் அதிர்ஷ்டம் துணை நிற்கும். உங்கள் வாழ்க்கையில் சில போராட்டமான சூழ்நிலை இருந்தாலும் லாபம் அதிகமாக கிடைக்கும். 
  • வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும்.
  • இந்த பெயர்ச்சி உங்கள் உறவில் ஒற்றுமை ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. மேலும் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை காணப்படும்.
  • உடன் பிறப்புகளுடன் உங்களில் உறவு சிறப்பாக  இருக்கும். மேலும் தந்தையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். என்றாலும் உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது.
  • 4 ஆம் இடத்தில் ராகு இருப்பதுடன்  குரு பார்வையை ராகு பெறுவதால் பண சேமிக்கும் அளவுக்கு வருமானம் இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சியில் செல்வத்தை சேர்க்க முன்னுரிமை கொடுப்பிர்கள். முதலீடுகள் மூலம் நல்ல வருவாயைக் காணலாம்.
  • செய்யும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
  • உத்தியோக வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு வரும்.
  • உத்தியோகத்தில் உங்களின் செயல் திறன் அங்கீகரிக்கப்படும். மேலும் பாராட்டும் கிட்டும்.
  • உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் வயதில் முத்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்க கூடும். எச்சிரிக்கை தேவை.
  • மேலும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், ஆனால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது.
  • விருச்சிக ராசி மாணவர்களின் கல்வி திறன் சற்று மெதுவாக இருக்கும். தேர்வில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை. உங்கள் திறமையில் நீங்கள் சந்தேகம் கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு நான்காம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். எனவே இந்த ராகு பெயர்ச்சி, உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வை  ஏற்படுத்தும்.
  • உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம்  மோதல்களைத் தவிர்த்து, தெளிவான தகவல்தொடர்பைப் பேணு வேண்டும்.
  • தொழில்  காரணமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் சூழ் நிலை வரலாம்.எனவே குடும்ப உறுப்பினர்களிடையே இடைவெளி அதிகரிக்கலாம்.
  • ரியல் எஸ்டேட் அல்லது முதலீடுகள் மூலம்  நல்ல ஆதாயங்கள் உண்டு. என்றாலும் திடீர் நிதி முடிவு எடுக்க வேண்டாம்.
  • செலவுகள் அதிகரிக்கும் எனவே சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சொந்த வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள, சற்று அதிகமான மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
  • தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் உங்களுக்கு பலன்களை தரும். ஏதாவது ஒரு இடத்தில் கமிஷன் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் அமைப்புன் உண்டு எனலாம்.
  • இந்த பெயர்ச்சியின் விளைவு காரணமாக, மார்பு சம்மந்த பட்ட  தொற்றுகள்  அல்லது பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
  • குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தாலும் பரஸ்பர அன்பின் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.
  • உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கேது கெடுக்கலாம்.அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
  • இந்த கேது பெயர்ச்சியால் வேலை செய்பவர்களுக்கு மிக சிறப்பான  நிலை உண்டாகும். பணியிடத்தில் சில மோசமான நிலைகள் வந்தாலும் உத்தியோகத்தில் நல்ல  யோகம் உண்டாகும்.
  • வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும் என்றாலும்  விருப்பம் படி  வேலை அமையாது. எனவே ஏமாற்றத்திற்கு உள்ளவீர்கள். 
  • சொந்த வியாபாரம் செய்ய நினைக்கும் விருச்சிக ராசிகாரர்களுக்கு முயற்ச்சிக்கு ஏற்ப வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • அதிகப்படியான உழைப்பைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறைகளை பரமாரிக்க வேண்டும்.
  • உயர்கல்வி அல்லது தொழில்முறை பயிற்சி கல்வியில் உள்ள விருச்சிக ராசி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம்

துலா ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, துலா    ராசிக்கு 5ம்  வீடான கும்பத்திற்கும், கேது, துலா  ராசியின்  11ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த பெயர்ச்சியால் , துலா ராசிகாரர்களுக்கு பல வகைகளிலும் திடீர் யோகங்கள் ஏற்படும். புது வாகனம், சொந்த வீடு அமையும். 
  • இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  மேலும் உங்களின் தேவைகளை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவுவாரகுள். தம்பதியினருக்கு இடையிலான தொடர்பு மேம்படும்.
  • துலாம் ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவாக குணமடையவும் வழிவகுக்கும். மேலும்  புதிய சிகிச்சை செய்ய விரும்புவருக்கு இது சரியான நேரம் எனலாம். வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். 
  • அத்துடன்  வருமானமும் நன்றாக இருக்கும்.. தடைபட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
  • கடன், நோய், மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் விலகும். இரவு தூக்கமின்றி தவித்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றாலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்ப பெரியவர்கள் மூலம் பண ஆதாயம் உண்டாகும். சமூகத்திலும், வீட்டிலும் மதிப்பு மரியாதை கூடும். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயமும், லாபம் உண்டாகும். குழந்தைகள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் கல்வி சார்ந்து முன்னேற்றம் அடைவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் மூலம் பாக்கியம் பெறுவீர்கள்.
  • திருமணத்திற்கு தயாராக இருக்கும் துலா ராசிகாரர்களுக்கு திருமணம் கை கூடும். காதலில் இருப்பவர்களுக்கு கல்யாண செய்யும் எண்ணம் இருந்தால், அது சிறப்பாக ஈடேறும்.
  • இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக குடும்ப செலவுகளை அதிகமாகலாம். மேலும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்கள் தீரும். பணியிடங்களில் இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளை பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • உங்களின் அணுகுமுறை எதிர்கால வெற்றிக்கான வலுவான அடித்தளங்களுக்கு வழிவகுக்கும்.என்றாலும்  யோசிக்காமல் முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது .
  • அரசு ஊழியர்களுக்கு, இடமாற்றம் இருக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம், இட மாற்றம், உத்யோக மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். 
  • சிலருக்கு குடும்பத்துடன் சுற்றலா செல்ல வாய்ப்பு உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக பயணத்திற்கும் செல்லவும்  வாய்ப்பு உண்டு. 
  • வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும். மனம் தளர வேண்டாம்.   ஆசிரியர் அல்லது அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் பெற்றோரின் ஆதரவு முக்கியமானது.
  • பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்வதுடன்,  குரு பார்வையும் பெற்று இருப்பதால் துலா ராசிக்கு  ராஜ யோகம் ஏற்படும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.  வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் கிடைக்கும்.
  • கடன் பிரச்னைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சியால் அதிகளவு பயன்பெற போவது துலாம் ராசியினர் தான்.
  • நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணத்தால் மாற்றம் ஏற்படும். என்றாலும் வேற்று மொழி நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசிக்கு ராகு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிப்பதும் சில நல்ல பலன்களைத் தரும்.

உங்களின் அறிவுத்திறன் , ஞாபக சக்தி கூர்மையாக மாறும். எனவே தோல ராசி மாணவர்கள்  கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். 

இந்த ராகு பெயர்ச்சியால் காதல் உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் தேவையில்லாத பொய்களை சொல் வேண்டாம்.

இந்த நேரத்தில், உங்கள் மனம் பங்குச் சந்தையை நோக்கிச் செல்லக்கூடும் மற்றும் அதில் முதலீடு செய்வதன் மூலமும் லாபம் ஈட்டலாம். என்றாளுன் பந்தயம், சூதாட்டம், லாட்டரி போன்றவற்றியில் சிறப்பாக இருக்காது. கவனம் தேவை.

எந்த வேலை கடினமாக இருந்தாலும் அதை எளிதாக செய்து முடிப்பீர்கள். 

வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ராகுவின் பெயர்ச்சியால் , சில நேரங்களில் உங்கள் மனதில் தவறான எண்ணங்கள் வரலாம். கவனம் தேவை 

5ம் வீட்டில் ராகு வருவதால் , காதலில் உள்ளவருக்கு சிறப்பாக இருக்கும். மேலும் சிலர் காதலிக்க ஆரம்பிக்கலாம்.  மேலும் 5ம் வீட்டு ராகுவால்  தவறான புரிதல் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையும், பரஸ்பர புரிதலும் கட்டாயம் தேவை.

துலாம் ராசிக்கு கேது  பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சிக்கும். பதினொன்றாவது வீட்டில் கேதுவின் பெயர்ச்சி பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த கேது பெயர்ச்சியால் நன்மைகளு உண்டாகும்.

உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்கும். உங்கள் ஆசைகளை வரம்பிற்குள் வைத்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி கட்டாயம் வெற்றி உண்டு.

கேது பெயர்ச்சி 2025 காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்காது, எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய பிரச்சினை கூட உங்களுக்கு  இடையே வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும். கவனம் அவசியம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

மூத்த உடன்பிறப்புகளுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு  உடல்நலப் பிரச்சினைகள் வரும்.

11 ஆம் வீட்டில் உள்ள கேது உறவினர்கள்  அல்லது நட்புகளிடம் இருந்து சில  பிரிவினைகள் வர வாய்ப்பு உண்டு.

இந்த காலகட்டத்தில் கடந்த கால முதலீடுகள் அல்லது பரம்பரை சொத்துக்களிலிருந்து எதிர்பாராத லாபங்கள் ஏற்படலாம்

கன்னி ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, கன்னி   ராசிக்கு 6ம்  வீடான கும்பத்திற்கும், கேது, கன்னி  ராசியின்  12ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த பெயர்ச்சியால் , பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட  கன்னி ராசிகாரர்களுக்கு நல்ல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
  • கன்னி ராசிக்கு கடந்த கால மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அதே வேளையில் இரவு தூக்கத்திற்கு  மிக கவனம் செலுத்த வேண்டும். 
  • திருமணம் தடை இருந்தவர்களுக்கு அது நீங்கி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.  சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும்.
  • பழைய  கடன் சுமை முழுமையாக விலகும். உங்கள் நிதி நிலை மேம்படும்.
  • எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். 
  • சேவை சார்ந்த தொழில்கள், சுகாதாரம் அல்லது சட்டம் ஆகியவற்றில் இருப்பவர்கள் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். என்றாலும் குரு பத்தாம் வீட்டுக்கு வருவதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் அவசியம். அதாவது பணிச்சுமை அதிகரிக்கும்.
  • கேது விரய ஸ்தானத்தில் அமர இருப்பதால் பணியிட மாற்றம் இருக்கும். ராகு ஆறாம் இடத்துக்கு வருவதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். 
  • கன்னி ராசி மாணவர்களுக்கு , போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் .
  • புதிய வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை புனரமைப்பது போன்ற சுப செலவுகள் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்  அமையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் நிகழும். அனைத்து காரியத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
  • பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட  சின்ன சின்ன பிரச்னைகள் வந்து சரியாகும். கவனம் அவசியம் .

  • கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு ஆறாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஆறாவது வீட்டில் ராகு பெயர்ச்சிப்பது சாதகமாக கருதப்படுகிறது. 
  • ராகுவின் இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால்  வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் குறையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் வெற்றி கிட்டும்.
  • ராகு பெயர்ச்சி 2025 போது உத்தியகத்தில் இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் தங்களுடன் பணிபுரியம் நண்பர்களுடன் சற்று எச்சிரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால்  அவர்கள் உங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் செய்யலாம். 
  • நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது உங்களுக்கு சாதகமாக வரும். 
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். செலவுகள் குறையும், பண வரவு கூடும்.  முன்பு செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம்.
  • பழைய  கடன்களை அடைப்பதற்கு இது சரியான நேரம் என்று சொல்லாம்.
  • 6 ஆம் வீட்டில் ராகு இருப்பதால், குறிப்பாக திருமண அல்லது நெருங்கிய குடும்ப உறவுகளில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
  • ராகு 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உடல்நலம் மேம்படும். கடந்த கால நோயில் இருந்தும் விடுபடுவீர்கள்.
  • கன்னி ராசி மாணவர்களுக்கு உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளைத் தொடர வாய்ப்பு உண்டு.
  • 6 ஆம் வீட்டில் ராகுவருவதால் , தொழிலில்  செயல்பாட்டுத் திறனை மேம்படும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 
  • வணிக கூட்டாளி மற்றும் வாடிக்கையார்ர்களை திருப்திபடுத்தும் முயற்றி நல்ல வெற்றியை தரும். இந்த ராகு பெயர்ச்சியில், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

  • கன்னி ராசிக்காரர்களுக்கு கேது  பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்காது. எனவே நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
  • இந்த பெயர்ச்சியால் செலவுகள் அதிகரிக்கும். மேலும் திடீர் செலவுகள் உண்டாகும். மனம் ஆடம்பரத்தை நாடுவதால் மேலும் செலவுகள் உண்டாகும். எனவே சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • பணியிடத்தில் சில சமயங்களில்  அலட்சியமமாக இருப்பீர்கள் . கவனம் வேண்டும்.
  • இந்த பெயர்ச்சியில் உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. காய்ச்சல், கடுமையான தலைவலி தூக்கமின்மை மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட  தொந்தரவுகள் வரலாம். எனவே உங்கள் உடல்நலத்தை குறித்து  அலட்சியமாக இருக்க வேண்டாம்.
  • கேதுவின்  பெயர்ச்சியால் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரித்து, தியானம், சாதனா போன்றவற்றில் அதிக நேரத்தை செலவீடுவீர்கள்.புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டாம். அவர்களுக்கு நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். 

சிம்ம ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, ரிஷப சிம்ம ராசிக்கு   ராகு 7ம்  வீடான கும்பத்திற்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் வீண் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துப் பேச வேண்டும். என்றாலும் 8ம் வீட்டில் இருந்த ராகு, 2ம் வீட்டில் இருந்து கேது கொடுத்த சிரமம்த்தை ஒப்பிடும்போது இது சற்று சிரமம் குறைவாகவே இருக்கும். மேலும் ராகுவை குரு பார்ப்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்தில்  உங்களின் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அதை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த சிக்கலை தீர்க்கும் முன் அதன் எதிர் வினைகளை ஆராய வேண்டும்.

இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். முந்தைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணமும் கிடைக்கும், மேலும் நாள்பட்ட நோய்கள் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.

தொழில் மற்றும் சில காரணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம். என்றாலும்  ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால்  குடும்பத்தின்  அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது.

புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சமுகத்தில் அதாவது சங்கம் போன்றவற்றில் புதிய பொறுப்புகள் வரலாம். ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் வீண் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துப் பேச வேண்டும். என்றாலும் 8ம் வீட்டில் இருந்த ராகு, 2ம் வீட்டில் இருந்து கேது கொடுத்த சிரமம்த்தை ஒப்பிடும்போது இது சற்று சிரமம் குறைவாகவே இருக்கும். மேலும் ராகுவை குரு பார்ப்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்தில்  உங்களின் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அதை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த சிக்கலை தீர்க்கும் முன் அதன் எதிர் வினைகளை ஆராய வேண்டும்.

இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். முந்தைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணமும் கிடைக்கும், மேலும் நாள்பட்ட நோய்கள் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.

தொழில் மற்றும் சில காரணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம். என்றாலும்  ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால்  குடும்பத்தின்  அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது.

புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சமுகத்தில் அதாவது சங்கம் போன்றவற்றில் புதிய பொறுப்புகள் வரலாம். ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஏழாவது வீட்டில் ராகுவின் பெயர்ச்சி  சிம்ம ராசிக்கு சற்று கலவையான பலன்களைத் தரும். 

இந்த பெயர்ச்சியால் வாழ்க்கை துணையுடன் பல தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இதனால் முடிந்தளவு உங்கள் வாழ்க்கை துணையிடம் உண்மையை பேசவும் மேலும் எதையும் மறைக்காமல் இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணையுடன் உண்டாகும் பிரச்சனைக்கு எந்த மூன்றாவது நபரின் உதவி வேண்டாம்.  இல்லையெனில் சிக்கல் வர வாய்ப்பு உண்டு.

ராகுவின் இந்த பெயர்ச்சியின் போது, ​​வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நெறிமுறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய வேண்டாம். 

ராகுவால் தொழிலில் சில  தவறான புரிதல்கள் அல்லது மோதல்களையும் உருவாக்கக்கூடும். கவனம் அவசியம். என்றாலும் வணிகம் தொடர்பாக சில புதிய திட்டங்களை தீட்டி அதை செயல் படுத்துவீர்கள்.

வியாபரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும்.முதலீடுகளைச் செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பதும் தக்க  ஆலோசனைகளை பெற்று செயல்படுதல் நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

7வது வீட்டில் ராகு சஞ்சரிப்பதல்  தொழிலில்  அல்லது குடும்ப உறவுகளால்  மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். 

உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி சாதகமாக தான் இருக்கும். என்றாலும் கல்வியில் கவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதை தவிர்க்கலாம். கெட்ட பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். 

7 ஆம் வீட்டில் ராகுவால், சமூகம் சார்ந்த ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் முதல் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. எனவே  கேது பெயர்ச்சிப்பது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதால், கேது பெயர்ச்சி 2025 போது உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனைகள் அல்லது தொற்றுநோய்களுக்கு கூட  மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்

மேலும் இந்த நேரத்தில், மனதில் பற்றின்மை உணர்வு எழும்.உங்களை சுற்றி உள்ளவரால்  அதிகரிக்கலாம். 

வணிகத்தில் இருப்பவர்கள் புதிய வணிக முடிவுகளை எடுக்கும் முன்  அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுதல் நல்லது. என்னென்றால் ராசியில் இருக்கும் கேதுவால் முடிவெடுக்கும் திறன் பாதிக்க படலாம். என்றாலும் தனிப்பட்ட  தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த கேது உதவார்

1 ஆம் வீட்டில் கேது,  ஆடம்பர செலவுகளை அதிகரிக்க செய்வார். இந்த கேது  பெயர்ச்சி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.