இந்த வருடம் - 2025 ராகு , கேது பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்த பெயர்ச்சியில் ராகு, ரிஷப சிம்ம ராசிக்கு ராகு 7ம் வீடான கும்பத்திற்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்கிறார்கள்.
ராகு , கேது பெயர்ச்சி
பொது பலன்கள்
சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் வீண் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துப் பேச வேண்டும். என்றாலும் 8ம் வீட்டில் இருந்த ராகு, 2ம் வீட்டில் இருந்து கேது கொடுத்த சிரமம்த்தை ஒப்பிடும்போது இது சற்று சிரமம் குறைவாகவே இருக்கும். மேலும் ராகுவை குரு பார்ப்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
குடும்பத்தில் உங்களின் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அதை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த சிக்கலை தீர்க்கும் முன் அதன் எதிர் வினைகளை ஆராய வேண்டும்.
இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். முந்தைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணமும் கிடைக்கும், மேலும் நாள்பட்ட நோய்கள் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.
தொழில் மற்றும் சில காரணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம். என்றாலும் ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால் குடும்பத்தின் அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது.
புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சமுகத்தில் அதாவது சங்கம் போன்றவற்றில் புதிய பொறுப்புகள் வரலாம். ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஏழாவது வீட்டில் ராகுவின் பெயர்ச்சி சிம்ம ராசிக்கு சற்று கலவையான பலன்களைத் தரும்.
இந்த பெயர்ச்சியால் வாழ்க்கை துணையுடன் பல தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இதனால் முடிந்தளவு உங்கள் வாழ்க்கை துணையிடம் உண்மையை பேசவும் மேலும் எதையும் மறைக்காமல் இருக்க வேண்டும்.
வாழ்க்கை துணையுடன் உண்டாகும் பிரச்சனைக்கு எந்த மூன்றாவது நபரின் உதவி வேண்டாம். இல்லையெனில் சிக்கல் வர வாய்ப்பு உண்டு.
ராகுவின் இந்த பெயர்ச்சியின் போது, வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நெறிமுறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய வேண்டாம்.
ராகுவால் தொழிலில் சில தவறான புரிதல்கள் அல்லது மோதல்களையும் உருவாக்கக்கூடும். கவனம் அவசியம். என்றாலும் வணிகம் தொடர்பாக சில புதிய திட்டங்களை தீட்டி அதை செயல் படுத்துவீர்கள்.
வியாபரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும்.முதலீடுகளைச் செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பதும் தக்க ஆலோசனைகளை பெற்று செயல்படுதல் நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
7வது வீட்டில் ராகு சஞ்சரிப்பதல் தொழிலில் அல்லது குடும்ப உறவுகளால் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.
உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி சாதகமாக தான் இருக்கும். என்றாலும் கல்வியில் கவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதை தவிர்க்கலாம். கெட்ட பழக்கத்திற்கு ஆளாக நேரிடும்.
7 ஆம் வீட்டில் ராகுவால், சமூகம் சார்ந்த ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் முதல் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. எனவே கேது பெயர்ச்சிப்பது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதால், கேது பெயர்ச்சி 2025 போது உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனைகள் அல்லது தொற்றுநோய்களுக்கு கூட மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்
மேலும் இந்த நேரத்தில், மனதில் பற்றின்மை உணர்வு எழும்.உங்களை சுற்றி உள்ளவரால் அதிகரிக்கலாம்.
வணிகத்தில் இருப்பவர்கள் புதிய வணிக முடிவுகளை எடுக்கும் முன் அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுதல் நல்லது. என்னென்றால் ராசியில் இருக்கும் கேதுவால் முடிவெடுக்கும் திறன் பாதிக்க படலாம். என்றாலும் தனிப்பட்ட தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த கேது உதவார்
1 ஆம் வீட்டில் கேது, ஆடம்பர செலவுகளை அதிகரிக்க செய்வார். இந்த கேது பெயர்ச்சி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.