Showing posts with label மீன ராசி. Show all posts
Showing posts with label மீன ராசி. Show all posts

மீன ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 

இந்த பெயர்ச்சியில்  ராகு, மீன ராசிக்கு 12ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மீன  ராசியின்  6ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கும் ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும். ராகு உங்கள் ராசியை விட்டு நீங்குவது நன்மை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. 
  • திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இப்போது நல்ல நேரமாக இருக்கும். திருமணம் அல்லது காதல் திருமணம் இரண்டும் உங்களுக்கு நல்ல  பலனளிக்கும்
  • இந்த ராகு-கேது சஞ்சாரத்தின் போது, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.  தூக்கம் கெடும். நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள்.
  • இந்த பெயர்ச்சியால்,  இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.
  • மேலும், நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டு. ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள்.
  • ராகு, கேது பெயர்ச்சி சிறப்பாக இருக்கும் ராசிகளில் மீன ராசியும் ஒன்றாகும். ராகு உங்கள் ராசியை விட்டு நீங்குவது நன்மை தரக்கூடியதாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிப்பதால் எந்த ஒரு செயலிலும் கூடுதல் கவனம் தேவை. 
  • திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இப்போது நல்ல நேரமாக இருக்கும். திருமணம் அல்லது காதல் திருமணம் இரண்டும் உங்களுக்கு நல்ல  பலனளிக்கும்
  • இந்த ராகு-கேது சஞ்சாரத்தின் போது, உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்.  தூக்கம் கெடும். நீங்கள் எதிர்பாராத மருத்துவச் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்யாரை நம்பி பணம் கொடுத்தீர்களோ அவர்களே திரும்ப வந்து உங்களிடம் பணத்தை சேர்ப்பார்கள்.
  • இந்த பெயர்ச்சியால்,  இடமாற்றம், ஊர் மாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றத்தால் நன்மை உண்டாகும்.
  • மேலும், நிறைய பண வரவு உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் உண்டு. ஆடம்பர சுற்றுலா, இன்பச் சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். 

  • மீன ராசிக்காரர்களுக்கு ராகு பன்னிரண்டாவது வீட்டில் செல்கிறார். இதில் சில நல்ல மற்றும் சில தீய மாற்றங்கள் வர கூடும்.
  • உடல்நலப் பிரச்சினைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம். இதன் காரணமாக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். 
  • மேலும் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்கும். எது சரி எது தவறு என்று தெரியாமல் செலவு செய்ய வேண்டிய சூழ் நிலை உண்டாகும்.
  • 12 ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பது வெளிநாடுகளில் இறக்குமதி, ஏற்றுமதி தொழில்,  ஆராய்ச்சி அல்லது ஆன்மீகம் தொடர்பான தொழில்களில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
  • திருமணம் ஆனா மீன ராசிகாரர்களுக்கு, தங்களின் வாழ்க்கை துணையை புரிந்து கொள்ளவது சற்று சவாலானதாக இருக்கும்.
  • மீன ராசியில் பிறந்த  மாணவர்கள் இந்த பெயர்ச்சியின் போது கலவையான பலன்களை சந்திக்க நேரிடும்.
  • உத்தியோகத்தில் எதிர்கொண்ட கடினமான நேரங்கள் முடிவுக்கு வரக்கூடும், மேலும் நீங்கள் சில நேர்மறையான மாற்றங்களைக் காணத் தொடங்கலாம்.

  • மீன ராசிக்காரர்களுக்கு கேது ஆறாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. கேதுவின் ஆறாவது வீட்டில் பெயர்ச்சிப்பது சாதகமான பலன்களைதரும்.
  • கேதுவின்பெயர்ச்சியால்  செலவுகளும் அதிகரிக்கும். உங்கள் வருமானத்தை விட அதிகமான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். கவனம் தேவை.
  • மேலும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ,  போராட்டங்கள் மற்றும் தடைகளுக்குப் பிறகு வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • உடல்நலப் பிரச்சினைகள், உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் வர வாய்ப்பு உண்டு.என்றாலும் கடந்த கால உடல் நல பிரச்சினைகளில் இருந்து விடுபட இந்த கேது பெயர்ச்சி உதவும் 
  • 6ம் வீட்டில் கேது சஞ்சரிப்பது பணி இடத்தில்  சவால்களைச் சமாளிக்கவும், போட்டியை வெல்லவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும் உதவும்.
  • சுகாதாரம் அல்லது பொது சேவை போன்ற சேவை சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் இந்த பெயர்ச்சியை குறிப்பாக நன்மை பயக்கும்.
  • 6 ம் வீட்டில் உள்ள கேது கடன்களை அடைப்பதற்கும் நிதிப் பொறுப்புகளை திறம்பட நிர்வகிப்பதற்கும் `உதவி செய்வார்.

மீன ராசி - குரு பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 குரு பெயர்ச்சி  எப்போது?

ரிஷப ராசியில் வக்ரகதியில் உள்ள ஜோதிட கணக்கீடுகளின் படி, குரு பகவான் மே 15, 2025 அன்று, அதிகாலை 2:30 மணிக்கு சுக்கிரன் வீடுயான ரிஷப ராசியிலிருந்து புதனுக்குச் சொந்தமான மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

பிறகு அவர் அக்டோபர் 18, 2025, சனிக்கிழமை அன்று  இரவு 21:39 மணிக்கு மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு செல்வார்.

மீண்டும் வெள்ளிக்கிழமை, டிசம்பர் 5, 2025 அன்று பிற்பகல் 15:38 மணிக்கு  மிதுன ராசிக்கு வருகிறார் 


குரு பெயர்ச்சி பொது பலன்கள்

மீன ராசிக்கு அதிபதியும் மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிமான குரு பகவான் நான்காம் வீட்டுக்கு வருகிறார். இது பெரிய தவறு இல்லை. என்றாலும் பெரிய நற்பலன்கள் கொடுக்காது. மேலும்  பெரிய ஏற்றம் எதுவும் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

வீடு, ரியல் எஸ்டேட் மற்றும் பராமரிப்பு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு  வளர்ச்சிகான  வாய்ப்புகள்கிடைக்கும் .

என்றாலும் முதலீடு , பங்கு சந்தை மற்றும் எல்லா பண விஷயத்தில் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு நெருங்கியவரே பிரச்சனைகளை தரும் வாய்ப்பு உள்ளது.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைப்பதில் தாமதம் ஆனாலும் வேலை கட்டாயம் கிடைக்கும். என்றாலும் வருமானம் திருப்திகரமாக இருக்காது.

திருமணத்திற்கு காத்து இருப்பவர்களுக்கு திருமணம் சற்று தாமத படும்.

உடல் நலத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. என்றாலும் மன நலத்தை பாதுக்க வேண்டும். மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

மீன ராசி மாணவர்களுக்கு அதிக கவனம் மற்றும் பொறுமை இருந்தால் போட்டி தேர்வுகளில் வெற்றி கட்டாயம் உண்டு.

அலுவலகத்தில் சீரான போக்கு நிலவும். நேர்மையான  உழைப்பும், நேரடி கவனமும் இருந்தால், எதிர்பார்க்கும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும்.

மீன ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் வியாபாரத்தில், வாடிக்கையாளர்களை  திருப்தி மற்றும் நம்பிக்கை பெற முயற்ச்சிக்க வேண்டும்.

யாருடைய தனிப்பட்ட தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். அனுபவம் மிக்கவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.

குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சங்கடங்கள் தீரும். வரவு சீராகும். குழந்தைகளிடம்  வீண் கண்டிப்பு வேண்டாம். சுபகாரியங்களில் ஆடம்பரம் தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

குரு பெயர்ச்சி 2025 அக்டோபர் மாதத்தில் குரு பகவான் ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கும் போது, ​​அந்த நேரம் குழந்தைகளுக்கும், பொருளாதார வளத்திற்கும் ஏற்றதாக இருக்கும். காதல் உறவுகளிலும் வெற்றிக்கான நேரம் இருக்கும்.

அதன் பிறகு, குரு வக்ர நிலையில் டிசம்பரில் மீண்டும் நான்காவது வீட்டிற்குள் நுழையும் போது, ​​குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்றத்தாழ்வு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக மாறும் மற்றும் நீங்கள் பணியிடத்திலும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும் அப்போதுதான் நீங்கள் வெற்றியைப் பெற முடியும்.

குரு பார்வையின் பலன்கள்




ஸ்தான பலத்தை விட பார்வை பலனை  அதிகம் பெற்ற குரு பகவான்,தனது 5, 7, 9ம் பார்வையாக, முறையே எட்டாம்   வீடு  , பத்தாம்   வீடு மற்றும் பனிரெண்டாம் வீடுகளை  பார்க்கிறார். அதாவது துஸ்தானம் ர் ஸ்தானம், தொழில் ஸ்தானம் மற்றும்  விரைய மற்றும்  மோட்ச ஸ்தானத்தை  பார்க்கிறார். 

இந்த பார்வைகளால்   சாதகங்கள் அதிகரித்து சங்கடங்கள் குறையும். அதேசமயம் உங்கள் செயலிலும் வார்த்தையிலும் நிதானம் இருந்தால் மட்டுமே நல்லவை நிலைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

குருவின் பார்வைகளால், மீனம் ராசிக்காரர்களுக்கு சில சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். பணப்புழக்கம், கௌரவம் மற்றும் குடும்பத்தில் அமைதி போன்ற பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.