குரு பெயர்ச்சி 2024-25 - பொது பலன்கள்

 குரு பெயர்ச்சி 2024-25 


நிகழும்  குரோதி வருஷம், உத்தராயணம், வஸந்த ரிது, சித்திரை மாதம் 18ம் தேதி , ஆங்கில தேதி  1, 5, ரண்டாயிரத்து இருவத்து நான்கு,  அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்


அதாவது , கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் மேஷ ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2ம் பாதம் ரிஷப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார், ரிஷபம் குருவின் பகைவீடு, அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7, 9ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு இந்த குரு  பெயர்ச்சி நடைப்பெறும் போது கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.

பொது பலன்கள் 

இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள்  தோன்றினாலும் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.

வானியலில் சில அதிசயமான புதிய கண்டுபிடிப்புகள்  இந்த குரு பெயர்ச்சியில்  நிகழ்த்தப்படலாம். பல  நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபடும், அதனால் , மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும்

குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகள் பலம் பெறுகின்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும். 

மேஷ ராசி  குரு பெயர்ச்சி பலன்கள் 

ரிஷப ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

கடக ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

கன்னி  ராசி குரு பெயர்ச்சி பலன்கள்

துலா ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

விருச்சிக ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

தனுசு குரு பெயர்ச்சி பலன்கள்

மகர ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

கும்ப ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

மீன ராசி  குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மீனம்

மீனம்   ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தனவாக்கு ஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இரண்டாம் வீட்டில், சுப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குரு, இந்த ஆண்டு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்துக்கு செல்கிறார். அவர்  சப்தம ஸ்தானம் (7ம் வீடு ), பாக்கிய ஸ்தானம் (9ம் வீடு ), லாப ஸ்தானம் (11ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • ராசிக்கு உப ஜெய ஸ்தானத்தில் குரு பெயர்ச்சி நடப்பதால், ள் பல விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். 
  • கோபத்தை குறைத்துக் கொண்டு, பொறுமையாக, நிதானமாக பேசுவதும் அவசியம்.  
  • சிறப்பாக செயல்பட்டாலும், எதிர்பார்க்கும் ஆதாயங்கள் கிடைப்பதில் தாமதமாக நடக்கும்.
  • குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம்  தலைகனம் தவிர்ப்பது அவசியம். 
  • அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். 
  • பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். 
  • தவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். 
  • வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். வார்த்தையில் கவனம் இல்லை என்றாலும்  ஒற்றுமை காணமல் போகும். கவனம் அவசியம் . 
  • வாரிசுகள் வாழ்வில் சுப தடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். 
  • வீண் ஆடம்பரம்வேண்டாம். 
  • கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.
  • கடின முயற்சிகளின்  முலம்  வெற்றி உண்டாகும்.
  • சிறு தூர பயணங்கள்  செல்லும் சூழல் உண்டாகும்
  • எதிர்பார்க்கும் மாறுதல்கள் தாமதமாக கிடைத்தாலும், நல்ல பதவிகள், கௌரவமான பதவிகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபம் கிடைக்கும். 
  • பல வகையான நெருக்கடிகள் இருந்தாலும், குருவின் பார்வை நல்ல முடிவுகளைத் தரும். 
  • அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும்.
  • மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும்.
  • அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். 
  • பெண்கள் உடல் நலத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவோ, குடுக்கவோ வேண்டாம்
  • பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் மாற்றங்கள் கிடைக்கும். 
  • வேற்று மொழி தொடர்பு, கமிஷன், ஏஜென்சி, போன்ற வேலைகளில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெற முடியும். 
  • வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். 

 பூரட்டாதி 4ம் பாதம் 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும். 
  • குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 
  • குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்.
  • பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது

உத்திரட்டாதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • பணத்தேவைகள் பூர்த்தியாகும். வாகனங்கள் யோகம் உண்டு. மனநிம்மதி கிடைக்கும். 
  • காரிய வெற்றி உண்டாகும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் வெற்றி அடையும். 
  • மேலிடத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். பண வரத்து உண்டாகும். 
  • புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது. 
  • வியாபாரிகளுக்கு காரிய தடை ஏற்படலாம். கவனம் தேவை.  காரியங்கள்  தாமதப்படும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டு.
  • எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
  • கூட்டுத் தொழில் லாபம் அடையும். 
  • கடின உழைப்பு காரிய வெற்றியைத் தேடித்தரும். 
  • வெளியூர் சென்றுவர நேரிடலாம்.

ரேவதி 

  • இந்த குரு பெயர்ச்சியால் மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும். 
  • எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கல் ஏற்படும். 
  • அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. 
  • பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும் என்றாலும் சாதகமான பலன்கள் உண்டாகும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். 
  • புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.
  • குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். 
  • குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டு 

பரிகாரம்

மாரியம்மனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும் 
சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை தரும் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கும்பம்

கும்பம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது நான்காம் இடத்திற்கு வருகிறார். அவர் அஷ்டம ஆயுள் ஸ்தானம் (8ம் வீடு ),தொழில் ஸ்தானம் (10ம் வீடு ), விரைய ஸ்தானம்(12ம் வீடு ) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • கடந்த காலத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். 
  • பொருளாதரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்கும் யோகம் சிலருக்கு அமையும். 
  • ஒரு சிலருக்கு சொத்து வாங்குவதில் இருந்து வந்த தடை விலகும். 
  • வாழ்க்கை மேம்படும். அம்மா வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். 
  • உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். 
  • பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். 
  • பணி செய்யும் இடத்தில்  பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். 
  • பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். 
  • திட்டம்  இடுதலும் , நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். 
  • தொழில், வேலை மற்றும் வியாபாரத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், பெரிய முயற்சிகள், முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. 
  • அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. 
  • அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி உண்டு 
  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை சிதற விட கூடாது.
  • பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். ஆனாலும் உடல் ரீதியான உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை
  • பணிபுரியும் பெண்களுக்கு, வேலை பளு அதிகரித்து, சில நெருக்கடிகளும் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு உரிய வெகுமதிகள் கிடைக்கும். 
  • வீட்டில் இருப்போரிடம்  விட்டுக் கொடுத்தல் முக்கியம். வார்த்தைகளில் கவனம் தேவை. உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். 
  • குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். 
  • உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது.
  • குரு பெயர்ச்சியால் பெரிய பாதகங்கள் இல்லை என்றாலும்  இதர கிரகங்களின் சஞ்சாரம் மூலம் குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்படலாம்
  •  ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம்.

அவிட்டம் - 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் , இவர்கள் செய்த வேலைகளை  தாங்கள்  செய்ததாகக் கூறி, மற்றவர்கள் நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. 
  • வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர்கள். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். 
  • உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். . வெளியூர் பயணங்களால் லாபம் உண்டு. 
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் படியான லாபத்துடன் கூடிய விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவார்கள்.

சதயம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. 
  • பெரியவர்களிடம் நற்பெயர் எடுப்பதால்  மகிழ்ச்சி உண்டாகும். 
  • மனம் தெளிவடையும்.  பணவரத்து அதிகரிக்கும். 
  • எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். எதிர்ப்புகள் விலகும். 
  • நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். 
  • விரும்பிய காரியங்களை செய்வதுடன், அதற்கு நல்ல  சாதகமான பலன் கிடைக்கும் .
  • புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். 
  • தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.
  • வியாபார போட்டிகள் குறையும். 
  • பழைய பாக்கிகள் வசூலாகும்.  
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். 
  • கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 
  • பிள்ளைகள்,  சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுபார்கள், அதனால்  சந்தோஷம் உண்டாகும். 
  • இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பார்கள். 
  • பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். 
  • ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டு  
  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்

விநாயகரை  வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். 
சனிக்கிழமை அன்று விநாயகருக்கு  தேங்காய் மாலை சாத்தி வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்பாகும் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - மகரம்

 

 மகரம்  ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார்.  பாக்கிய ஸ்தானம் (9ம்  வீடு),  லாப ஸ்தானம் (11ம்  வீடு)   ராசி (1ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இந்த அமைப்பு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது.
  • அலுவலகத்தில்  செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு மரியாதை உயரும். 
  • இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். 
  • உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  
  • வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். முயற்சிகள் கைகூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். 
  • மனம் போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.
  • ஏழரை சனி நடந்தால் கூட, குரு ஐந்தாம் வீட்டில் இருப்பதும் ம், குருவின் பார்வை ராசியின் மீது விழுவதும்  சனியின் நெருக்கடிகளையும் போக்கும்
  • மறைமுக எதிர்ப்புகள் குறையும், சட்ட சிக்கல்கள் தீரும். 
  • மன நிம்மதியுடன், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். 
  • பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமித்து வைப்பது நல்லது .
  • அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். 
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். 
  • வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு தவிர்ப்பது நல்லது .
  • பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். மேலும் உறவினர்கள், குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு பெருகும் 
  • செய்யும் தொழிலில்கஷ்டங்கள்  நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும்.  
  • அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். 
  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. 
  • யாருக்கும் வாக்குறுதிகள்  தரவேண்டாம். 
  • அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் கிடைக்கும். 
  • மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும்.  
  • கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் சிறப்பாக அமையும். 
  • உறவுகளிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 
  • வெளியூர், வெளிநாடு சென்று பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கும்
  • நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம்.

உத்திராடம் - 2, 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும் என்றாலும் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும்.  
  • குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம் உண்டாகும்.
  • மனக் குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். 
  • பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்

  • இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். 
  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். 
  • வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. 
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். 
  • புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். 
  • குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். 
  • கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.
  • குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். 
  • மற்றவர்கள் ஆலோசனை கேட்டாக இவர்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். 
  • எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். 
  • புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும்  நல்லபடியாக முடிக்க முடியும் . 
  • புதிய சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும்   திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். விநாயகருக்கு அருகம்புல்லை  சாத்தி வழிபட்டால் நல்லது தடை இன்றி நடைபெறும் 

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - தனுசு

 


தனுசு ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். தொழில் ஸ்தானம் (10ம்  வீடு), விரைய ஸ்தானம்(12ம்  வீடு), தனவாக்கு ஸ்தானம்(2ம்  வீடு) ஆகியவற்றைப் பார்க்கிறார்.
  • இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். 
  • வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 
  • அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். 
  • எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். 
  • அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். 
  • மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சல் வேண்டாம். 
  • செலவுகள் உண்டு.  செலவுகளை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும்
  • குடும்பத்தில் இது வரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி மிகவும் மகிழ்ச்சியான, இணக்கமான சூழல் நிலவும். ஆனாலும் விட்டுக்கொடுத்தல் முக்கியம்
  • அசையும் அசையா சொத்து சேரும். கடன் வாங்கி  அசையா சொத்துக்கள் வாங்கும் அமைப்பு சிலருக்கு  உண்டு. இது நல்லது தான் 
  • வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். 
  • பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்.
  •  ஆடம்பரத்திற்காக கையிருப்பை  கரைக்க வேண்டாம். 
  • பெண்களுக்கு செல்வாக்கு உயரும். செயல்களில் நிதானம்வேண்டும்
  • தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். 
  • வேலை தொழில் ரீதியான விசயங்களில் முன்னேற்றம் நிகழும். எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும்.
  • அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 
  • பெரிய அளவில் தொழில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது.
  • அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். 
  • சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். 
  • மாணவர்கள் தவறான பாதையில் போக வேண்டாம். எதிர்பாலரிடம் வரம்புடன் பழகவும். 
  • கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும்.  
  • கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். பண விசயங்களில் கவனம் தேவை.
  • உடல் ஆரோக்கியம் முன்பை விட முன்னேறும். என்றாலும் உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும்.
  • மேலும் அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். 

மூலம்

  • இந்த குரு பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும்.
  • பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. 
  • உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. 
  • விற்பனையில் லாபத்தை எதிர் பார்க்கலாம். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். 
  • பெற்றொர்கள், பெரியோர்களின்  சொல்படி நடப்பது நன்மை தரும். 
  • பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். 
  • எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம்.  நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். 
  •  காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும் என்றாலும் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம்

  • இந்த குரு பெயர்ச்சியால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். 
  • தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். 
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். 
  • குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. 
  • கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். 
  • பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். 
  • நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்

உத்திராடம் 1ம் பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். 
  • கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. 
  • தெய்வ வழிபாடுகள் வெற்றி உண்டாகும். 
  • பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். 
  • மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். 
  • நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். 
  • இவர்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். 
  • வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்

முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் மூலம்  கஷ்டங்கள் குறைந்து  மனதில் நிம்மதியை தரும் வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபட்டு வர வாழ்க்கை சுகமாகும்.

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - விருச்சிகம்

 

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது ஏழாம் இடத்திற்கு வருகிறார். 

  • அவரது 5, 7, 9ம் பார்வைகள்  ராசிக்கு முறையே பதினொன்று,ராசி மற்றும்  மூன்றாம் இடங்களை பார்க்கிறார்.

  • இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். 

  • பணியிடத்தில்  பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயர வாய்ப்பு உண்டு. மிகச்சிறிய முயற்சி கூட மிகப் பெரிய அளவுக்கு வெற்றி கிடைக்கும் 

  • உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். 

  • புதிய பணிவாய்ப்பு எதிர்ப்பார்ப்பு போல் கூடிவரும். 

  • அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும். 

  • இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். 

  • இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். ஆடை, ஆபரணம், சொத்து சேரும்.  

  • எல்லா விதங்களிலும் வளர்ச்சியை, விரும்பும் மாற்றத்தை, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உயர்வும் இந்த பெயர்ச்சி கொடுக்கும்.

  • தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும்.  கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்பட்டால் கூட அவ்வபோது சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. 

  • அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும். 

  • அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும். 

  • பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும்.வாரிசுகளால் பெருமை உண்டு. 

  • எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள், சேமிப்புகளும் அதிகரிக்கும். 

  • மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். 

  • கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம்.

  • மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம் 

  • யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம்.

  • உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். ஆனாலும் தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம்.


விசாகம் 4 பாதம் 

  • இந்த குரு பெயர்ச்சியால் வாழ்வு வளம் பெறும். 

  • துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவார்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பார்கள். 

  • வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். 

  • மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். 

  • ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்திதெளிவு உண்டாகும். 

  • தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். 

அனுஷம்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். 

  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். 

  • உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். 

  • பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். 

  • விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். 

  • ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். 

  • எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். 

  • திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.


கேட்டை

  • இந்த குரு பெயர்ச்சியால் பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும். 

  • விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். 

  • ஆனால் அதன் முழுப்பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். 

  • மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பார்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். 

  • புதிய பொறுப்புகளையும் பெறுவார்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். 

  • கவனமாக பேசுவது அவசியம்.  எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சினைகளை உண்டாக்கலாம். கவனம் தேவை 


பரிகாரம் 

துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். மேலும் வீட்டு அருகில் இருக்கும் அம்மன் கோயிலில் அம்மனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, வணங்கி வர தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும் 



.


குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - துலாம்

 

துலாம் ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • இந்த பெயர்ச்சியில் குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது  எட்டாம் இடத்திற்கு வருகிறார்.துலா ராசியின் விரைய , தனவாக்கு மற்றும் சுக ஸ்தானம் அதாவது ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களை  பார்க்கிறார்.

  • இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். 

  • எட்டில் குரு மறைவது பொதுவாக எதிர்மறையான விளைவுகளை, தாமதங்களை ஏற்படுத்தினாலும், துலாம் ராசிக்கு குரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது பல விஷயங்களில் சாதகமான பலன்களைத் தரும். 

  • ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம்

  • அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். 

  • பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. 

  • வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். 

  • தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பெண்கள் திடீர் அதிர்ஷ்டம்  வரும்  

  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும். 

  • திருமணத்திற்கு காத்திருக்கும் துலாம் ராசியினருக்கு மிகச் சுலபமாக திருமணம் கைகூடும், காதலிப்பவர்களுக்கு திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும், குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம்.  பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.

  • வருமானத்திற்கு குறைவே இல்லை என்றால் கூட தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது. 

  • தொழில் மட்டும் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரு சில நெருக்கடிகளும் போட்டியும் இருந்தால் கூட, அதனை மிக எளிதாக எதிர்கொள்ளும் சூழலும் ஏற்படும். 

  • கூட்டு தொழில் செய்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

  • தொழில் வேலை விசயங்களில், புதிய முயற்சிக்கு  வெற்றி  கிடைக்கும். யாரேனும் ஒருவர்  உதவிக்கரம் நீட்டுவார். பணியிடத்தில் புரமோசன் கிடைக்கும். 

  • தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். 

  • தேவையற்ற  கடன்களைத் தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம்.

  • அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. 

  • பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். 

  • கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள்  வரும். 

  • மாணவர்களுக்கு மதிப்பு உயரும். 

  • இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். 

  • ஏதேனும் நோய்வாய்ப்பட்டவர்கள் முறையாக மருந்து மாத்திரைகள், மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொண்டு உடல்நலத்தை கவனித்துக் கொள்வது அவசியம். 

  • நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். 
 

சித்திரை 3, 4 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். 

  • நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். ஆனாலும்  பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. 

  • பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். 

  • தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். 

  • அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். 

  • எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். 

  • மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி


  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

  •  கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும்.  

  • சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது, மனதுக்கு இதமளிக்கும். 

  • பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. சற்று நிதானமாக பேசுவது நன்மை தரும். 

  • பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். 

  • அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். 

  • நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. 

  • சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்


  • இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். 

  • பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். 

  • தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. 

  • பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வால் அனைவருக்கும்  நன்மைகள் செய்து மனம் மகிழ்சசி  அடையும் 

  • பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. 

  • சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். 

  • விருந்து கேளிக்கைகளில் கலந்துகொள்ளும் சுழல் வரும் . நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்  

குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும் நல்லது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்

குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கன்னி

கன்னி ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25

  • குரு பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.அதாவது  ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். தனது 5, 7, 9 பார்வையாக  1, 3, 5 ஆகிய இடங்களை பார்க்கறார்.

  • இதனால் கடந்த பல மாதங்களாக ஏற்பட்ட மனக்குழப்பம், வீண் விரையம், அலைச்சல், தடைகள், பொருளாதார நெருக்கடி, உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். கன்னி ராசியினருக்கு ஜென்ம ராசியின் மீது குரு பகவானின் பார்வை விழுவது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். 

  • ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். 

  • அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். 

  • வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.

  • குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும்.

  • பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்

  • சிறிய முயற்சி கூட மிக பெரிய அளவுக்கு பலன் தரும்

  • திருமணம் கைகூடும்.குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். 

  • செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். 

  • அரசுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். 

  • உயரதிகாரிகளால் பாராட்டுகள் கிடைக்கும். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவார்கள். 

  • கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவார்கள். 

  • ஆரோக்கியம் மேம்பட்டும். ஆனாலும் சிலருக்கு ஹார்மோன் குறைபாடுகள்  வர வாய்ப்பு கவனம் தேவை .

  • தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம்.

  • வாகனத்தை வேகமாக ஓட்டுவதை தவிர்க்கவும்.

  • உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.

  • கூட்டு தொழிலில், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதேபோல, உறவினர்கள் இடையே ஏற்படும் பிரச்சனைகளை அனுசரித்து செல்வது பல விதங்களில் நன்மை தரும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள் 

  • இந்த குரு பெயர்ச்சியால் தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். 

  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். 

  • குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். 

  • கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவார்கள். 

  • உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள்.


அஸ்தம்

  • இந்த பெயர்ச்சியால் திடீர் செலவு உண்டாகலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவது மனநிம்மதி  தரும். 
  • அதிக முயற்சிசெய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் சிறந்த வாய்ப்புகள் கைகூடும்
  •  கவுரவம் அதிகரிக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். 
  • சகவியாபாரிகளுடன் ஒத்துப் போவார்கள். பெரிய கடன்களிலிருந்து விடுபடவும் வழி கிடைக்கும். 
  • உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.


சித்திரை - 1, 2 பாதங்கள்

  • இந்த குரு பெயர்ச்சியால் வீட்டை விட்டு வெளியே தங்கும் சூழல் வரலாம் . 

  • பதவிகளில் முன்னேற்றம் உண்டாகும் . கடின உழைப்பும், புத்திசாதூர்யமும் பதவி முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 

  • அதே போல் நஷ்டம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. என்றாலும்  சமயோஜித புத்திக் கூர்மையால் திடீரென்று வரும் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவார்கள். 

  • சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மேலும்  பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவது நன்மை தரும். 

  • எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பது அவசியம். எல்லாகாரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.


பரிகாரம்

அருகிலிருக்கும் ஐயப்பன்  சென்று வணங்குவதால்  சிக்கலான பிரச்சினைகள் தீரும். மேலும் நரசிம்மர் வழிபாடு , பைரவர் வழிபாடு நன்மைகள் தரும் 

Full Video



குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - சிம்மம்


 சிம்ம ராசி குரு பெயர்ச்சி 

பொது பலன்கள் 2024-25


  • குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதாவது 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கப்போகிறார். அவரது விசேஷப் பார்வைகள் தனவாக்கு ஸ்தானம், சுக ஸ்தானம், ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

  • இதனால்  வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்

  • தொழில் அல்லது வேலை மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு செய்தொழில் மற்றும் வேலை ரீதியான பிரச்சினைகள் நிகழும்.

  • சிம்ம ராசிக்கு பத்தாம் இடத்தில் வரும் குரு பெயர்ச்சி வேலையில் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். 

  • தொழில் காரகன் சனி களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் ஓரளவு பிரச்சினைகளை சமாளிக்கலாம்.

  • வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். 

  • அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வு கட்டாயம் உண்டு . உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். 

  • அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வீட்டில் இன்சொல் பேசுவது அவசியம் 

  • ஆரோக்கியத்தில் படிப்படியான நிலையான முன்னேற்றம் இருக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும்.

  • குருவின் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். 

  • அசையும் அசையா சொத்து சேரும். அத்துடன்  செலவுகள் ஏற்படும். அதை சுப செலவுகளாக மாற்றிக் கொள்ளும் அமைப்பு உண்டாகும் 

  • சிலருக்கு வேலை தேடாமல்  வேலை வாய்ப்பு கிடைக்கும் உண்டு, அதை ஏற்றுக் கொண்டால்  அனுகூலமான பலன்களையே  தரும். 

  • வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும்.  

  • அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். 

  • அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். 

  • சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாக கிடைக்கும் . 

  • மாணவர்களுக்கு சோம்பலை தவீர்க்கவும். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்புவோருக்கு சாதகமான வாய்ப்புகளும்  கிடைக்கும்.

  • வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது.  

  • சிம்ம ராசி பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சில விஷயங்களில் சோதனை காலமாக அமையும் ஆனால்  அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம். 

  • அவசியமில்லாத கடன் வாங்குவதை , கொடுப்பதை முடித்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது.

  • மன அமைதியை கருத்தில் கொண்டு, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மகம்

  • இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

  • பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்கள். 

  • எதிலும் கவனமாக இருப்பது நல்லது. 

  • வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும்.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. 

  • கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கவலை குறையும். 

  • சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். 

  • நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். 

  • அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவார்கள். மனநிம்மதி உண்டாகும்.

பூரம்  

  • இந்த பெயர்ச்சியால் சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. 

  • நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 

  • வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். 

  • வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். 

  • தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

  • பொதுவான விஷயங்களில்  உங்கள் கருத்துக்களை மற்றவர்களால் ஏற்று கொள்ளப்படும் . வியாபாரப் போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம்  - 1 பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் இவர்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

  • குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவார்கள். 

  • அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். 

  • பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது மிகவும் நல்லது .

  • எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். 

  • அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 

  • நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். 

  • கோபத்தால் சின்ன சின்ன  சண்டைகள் ஏற்படலாம். 

  • பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.


பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வருவது, பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும், சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு ஆகியவை  வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்

Full Video 





குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2024-25 - கடகம்

கடக ராசி குரு பெயர்ச்சி 
பொது பலன்கள் 2024-25

  • இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் கடக ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 3, 5, 7ம்  இடங்களில் பதிகின்றன. 

  • இந்த அமைப்பினால் கடக ராசியின்  சகோதர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானங்கள் விசேஷ நன்மை பெறுகின்றன. 

  • இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். 

  • தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும் என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. 

  • அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். மனம் விரும்பிய வேலை மாற்றம், பதவி உயர்வு, இடம் மாற்றம், ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்

  • தொழில் வியாபாரம் பெரிய அளவு வளரும், நல்ல லாபம் ஈட்டுவார்கள். போட்டி பொறாமை விலகும்

  • குழந்தை பாக்கியம், திருமணம் கைகூடும். காரிய தடை நீங்கும்

  • பண வரவு, பொருளாதாரம் மேம்படும்

  • எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.

  • தொழிலில் உழைப்புக்கு ஏற்ற லாபத்தை அடைய முடியும்

  • வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும்.  பங்குவர்த்தகத்தில் நிதானம் முக்கியம்

  • யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். 

  • அரசியலில் இருப்பவர்கள் அடக்கத்தால் அதீத நன்மை பெறலாம். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். 

  • அரசாங்கத் துறையில் உள்ளோர் மறைமுக எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள். 

  • பெண்களின் எதிர்பார்ப்புகள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும், யோகமான பலன்கள் கிடைக்கும். மேலும்  குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

  • மாணவர்கள் மறதியை விரட்ட, கவனத்துடன்  படியுங்கள்.  

  • சினிமா, கலைத்துறையினர் முயற்சிகளால் முன்னேற்றம் காணலாம். 

  • யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். 

  • அஷ்டம சனியின் தாக்கம்  இருக்கும் எனவே எல்லா விஷயங்களில் பொறுமை தேவை. பயணத்தில் உடைமைகள் பத்திரம்.

  • அஜீரணம், தூக்கமின்மை,அலர்ஜி, தலைவலி உபாதைகள் வரலாம்.

புனர்பூசம் 4ம் பாதம்

  • இந்த குரு பெயர்ச்சியால் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவார்கள். 

  • பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். 

  • பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். 

  • ஆனாலும் உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் அதிக கவனம் தேவை. 

  • கவனத்துடன் செயல்படுவது  பதவி உயர்வு மற்றும் செயலில்  வெற்றி ஆகியவை  தேடி வரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வருவதோடு சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். 

  • மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை.


பூசம்

  • இந்த குரு பெயர்ச்சி தொழில் செய்பவர்களின் தங்களின் ஆர்டர்கள் எடுப்பதில் கவனம் அவசியம். கவனத்துடன் செயல்பட்டால் லாபம் உண்டாகும். 

  • மேலும் கடின உழைப்பு  வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவலை தேவை எல்லை கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

  • சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். 

  • உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். பொறுப்புகள் அதிகரிக்கும். 

  • மனதைரியத்தால் வெற்றி காண முடியும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். 

  • விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வார்கள். கடன் பிரச்சினை குறையும். 

  • வீண் அலைச்சல் மற்றும்  பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும், சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெற்று வெற்றியும் காண்வார்கள்


ஆயில்யம் 

  • இந்த பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவார்கள். வீண் செலவை இவர்களே உண்டாக்குவார். 

  • வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். 

  • பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். 

  • ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 

  • தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.

  • புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

  • உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். 

  • உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.


பரிகாரம் 

அம்மன் வழிபாடு, மற்றும்  புற்று அம்மன் கோவிலுக்கு சென்று வேப்பிலை சாற்றி வழிபட  எல்லா துன்பங்களும் நீங்குவதோடு எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்

Full Video