பொதுவான குணங்கள்
திருவோண நட்சத்திர அதிபதி சந்திரன் என்பதால் விதவிதமான வாசனை பொருட்களை விரும்பி பூசிக் கொள்வார்கள். அடிக்கடி கோபப்பட்டாலும் உடனடியாக சாந்தமடைவார்கள். தூய்மையான ஆடை அணிவதில் அதிக விருப்பம் இருக்கும். தனக்கென தனிக் கொள்கை உடையவர்கள். எதிலும் மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள். கருமியாக இருந்தாலும் வாடிய பயிரை கண்ட போது வருந்திய வள்ளலார் போல எதிரிக்கும் உதவும் பரந்த மனம் இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இதமாகப் பேசி பழகுவார்கள். ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான் என்பதற்கேற்ப எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் பெயர் புகழை பெறுவார்கள். எந்த ஒரு உயிருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். நல்ல நீதிமான்கள், பசியை பொறுத்து கொள்ள முடியாது. பாலால் ஆன இனிப்பு பொருட்களை விரும்பி உண்பார்கள். அழகான உடல்வாகும் எப்பொழுதும் புன்னகையுடன் விளங்கும் முகமும் இருக்கும் இல்லையென்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்கள். நவீன ரக ஆடைகளை விரும்பி அணிவார்கள்
குடும்ப வாழ்க்கை
வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணைக்கு பயந்து நடப்பார்கள் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபடுவார்கள். எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் சாதனை படைப்பார்கள். செல்வத்துக்கும் அந்தஸ்துக்கும் குறைவேயில்லை என்று சொல்லும்படி அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெறுவர்கள். தாயின் மீதும் அதிக பாசம் இருக்கும். பழி பாவத்திற்கு அஞ்சுவார்கள்.
நண்பர்கள்
நண்பர்கள் ஒரு சிலர் இருப்பார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பதில் கவனம் தேவை.
நட்பு நட்சத்திரங்கள்
அவிட்டம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த ஆறு நட்சத்திரக்காரர் நண்பர்களும் திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்வார்கள். எந்த பிரதிபலனும் பாராமல், குடும்ப நலன் பேசுபவர்களாகவும், பொருளாதார உதவிகளை செய்பவர்களாகவும், சுக துக்கங்களில் பக்கத் துணையுடனும் இருப்பார்கள். நீங்கள் வேண்டாம் என்று மறுத்தாலும் உங்களுக்கு உதவி செய்வதை அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்
திருவாதிரை, சுவாதி, சதயம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். கார்த்திகை (மேஷம்) உத்திரம் (கன்னி) உத்திராடம் (தனுசு) மிருகசீரிடம் (மிதுனம்), சித்திரை(துலாம்) அவிட்டம் (கும்பம்) இந்த நட்சத்திரங்களையும் தவிர்க்க வேண்டும்.
தொழில்
பொதுவாக இவர்கள், உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் நிச்சயமாக தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அதில் கூட்டு தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். கூட பணிபுரிபவர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்கள் என யாருடனாவது கூட்டாக தொழில் செய்வார்கள். மற்றவர்கள் வியக்கும் படி வாழ்வில் முன்னேறுவார்கள். பலர் முனைவர் பட்டம் பெற்று மொழி ஆராய்ச்சி அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆராய்ச்சி போன்றவற்றிலும் தொழிலதிபர், வங்கி பணி, எழுத்தாளர் பேராசியர்களாகவும் ஜொலிப்பார்கள்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பால் முன்னேறி வெற்றி வாகை சூடுவார்கள். மக்களை நேசிப்பவராகவும், சமூக நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவராகவும் இருப்பார்கள். புலவராகவும் பண்டிதர் களாகவும் சிறந்து விளங்குவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி புதிய தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி பிரம்மாண்டமாக தொழில் நடத்துவார்கள். சிறு வயதிலிருந்தே இசை, ஓவியம் நாட்டியம் போன்றவற்றில் ஈடுபாடு அதிகம் இருக்கும். கலைஞர்களையும் ஊக்குவிப்பார்கள்.
தசா பலன்கள்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் தசையாக வரும். சந்திரன் தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சந்திரன் தசை:
இந்த தசை காலங்களில் சிறு சிறு ஜல தொடர்புடைய பாதிப்புகள், தாய்க்கு சோதனைகளும் உண்டாகும்.
செவ்வாய் தசை:
இரண்டாவதாக வரும் செவ்வாய் தசை மொத்த காலங்கள் 7 வருடங்கள் நடைபெறும். செவ்வாய் பலம் பெற்று அமைந்திருந்தால் கல்வியில் முன்னேற்றம் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும்.
ராகு தசை:
மூன்றாவதாக வரும் ராகு தசை காலங்கள் மொத்தம் 18 வருடங்களாகும். இக்காலங்கள் ஏற்ற இறக்கமான பலன்களைப் பெற முடியும். கல்வியில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.
குரு தசை:
நான்காவதாக வரும் குரு தசை காலங்கள் சாதனைகள் பல செய்ய வைக்கும். பொருளாதார மேம்படும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வாழ்க்கையில் உயர்வடைவார்கள்
சனி தசை:
ஐந்தாவதாக வரும் சனி தசை காலங்கள் சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் உயர்வும் மக்களிடையே நற்பெயர் உண்டாகும்.
பொது பரிகாரம்
திருவோண நட்சத்திரத்தின் தலவிருட்சம் பாலுள்ள எருக்கு மரம். இம்மரம் உள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
திருவோண நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், விவாகம், பூ முடித்தல், சீமந்தம், குழந்தைக்கு பெயரிட்டு தொட்டிலிடுதல், மொட்டையடித்து காது குத்துதல்,புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்றவை நல்லது. வங்கியில் சேமிப்பு தொடங்குதல் மாடு ஆடு வாங்குதல், குளம், கிணறு வெட்டுதல், வாசக்கால் வைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புதுமனை புகுதல், விதை விதைத்தல், விருந்துண்ணல், புனித யாத்திரை செல்லுதல், உபநயனம் செய்தல் கல்வி, நாட்டியம் ஆகியவற்றை கற்க தொடங்குதல் போன்றவை நற்பலனை உண்டாக்கும்.
பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:
திருமணம் பொருத்தம் பார்க்கும் போது
பொருந்தும் நட்சத்திரங்கள்:
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், உத்திரட்டாதி ஆகும்.
பொருந்தா நட்சத்திரங்கள்:
ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. திருவாதிரை வேதை ஆகும்.
(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)
சொல்ல வேண்டிய மந்திரம்
சாந்தாகாரம் சதுர்ஹஸ்தம்
ச்ரவண நட்சத்திர வல்லடம்
விஷணும் கமலபத்ராஷம்
தீயா யேத் கருட வாகனம்