சனி பெயர்ச்சி- 2025- மீன ராசி


மீன ராசிக்கு ஜென்ம சனி ஆரம்பம் ...கவனம் தேவை!!

ஜென்ம சனி என்றால் என்ன?

  • ஜோதிடத்தில் ஒரு ராசியில் சனி பகவான் அமர்ந்திருந்தால், அதாவது ராசிக்கு 1ம் வீட்டில் சனி அமர்ந்து இருப்பதை ஜென்ம சனி என்பார்கள்.
  • ஏழரை சனியை விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என்று முன்று வகையாக பிரிப்பார்கள். அதிகமாக தொல்லைகள் தரும் சனி  என்றால் அது ஜென்ம சனி தான் என்று சொல்ல்வார்கள்.
  • இந்த ஜென்ம சனி காலத்தில் சனி தன து, 3ம் பார்வையாக 3ம்  வீட்டை பார்ப்பதால் சகோதர, சகோதரிகள், உறவினர்களுடன் தேவையற்ற பிரச்சினையும், பகையும் வளர்த்துக் கொள்ளக்கூடிய சூழல் உருவாகும்.
  • மேலும் சனி 7ம் பார்வையாக 7ம்   வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் பிரச்சனை, வாழ்க்கைக்துணையுடன் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும்.
  • பத்தாம் வீட்டையும் சனி பார்ப்பதால் தொழில் பல தொல்லைகளை சந்திக்கும் நிலை வரும் . மேலும் சிலருக்கு வேலை இழப்பு, வியாபாரத்தில் நஷ்டம் என்று வரலாம்
  • பல்வேறு வகையில் விரயம் ஏற்படும் . சிலருக்கு விபரீத எண்ணங்கள் ஏற்படும். என்றாலும் வாழ்க்கையில் எது உண்மை என்று பல சோதனைக்கு சனி பகவான் பிறகு புரிய வைப்பா.
  • மேலும் இது 2 மற்றும் 3 ம் சுற்று எனில் சற்று பிரச்சனை குறைந்து இருக்கும். மேலும் சிலருக்கு பொங்கு சனியாக வந்து பல அதிஷ்டங்க்களை வாரி வழங்குவார் என்றும் சில ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது

பொது  கண்ணோட்டம்

  • உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி. அதிக கவனம் அவசியம். 12வது வீட்டில் இருந்த சனியால் வாழ்க்கையில் மந்தநிலை இருந்தது என்றாலும் சமாளிக்கக்கூடியதாகவே இருந்தது.
  • சனி இந்த பெயர்ச்சிக்கு பிறகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வாழ்க்கையில் பல வகையான சவால்களை சந்திக்க நேரிடும்.
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றி மறையும்.
  • இந்த பெயர்ச்சியை பொறுத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் வேகத்தை விட விவேகம் முக்கியம் என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.
  • சனி உங்கள் ராசியில் நிலைபெறுவதால் மனதில் குழப்பம் மற்றும் பதற்றம் ஏற்படக்கூடும். குடும்ப உறவுகளில் எதையும் நேரடியாக எடுத்துக்கொள்ளாமல் புரிதலுடன் அணுகுவது சிறந்தது.
  • தொழில் மற்றும் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகள் அவசியம்.
  • பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். கடந்த கால நிகழ்வுகளை நினைத்து மனதை வருத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வாக்குவாதங்களை தவிர்க்கவும். செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
  • வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கணக்கு முறைகளை சரிவர பரிசோதிக்க வேண்டும்.
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
  • யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த சோதனைக் கட்டத்தில் தேவையற்ற மற்றும் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • புதிய திட்டங்களை தள்ளிப் போடவேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
  • ஜென்ம சனி என்ற போதும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வருகிற ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு சற்று பிரச்சனை அளவு குறையும்.
  • ஜூலை 2026 முதல் ஜூன் 2027 வரை, சற்று நன்றாக இருக்கும் என்று சொல்லாம். தொழில் மற்றும் நிதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான சனிப் பெயர்ச்சி சுழற்சியின் கடைசி ஆறு மாதங்கள் சராசரியாக இருக்கும். இந்தக் காலம் கடுமையான சோதனைக் காலமாகவும் இருக்காது. அதிர்ஷ்டகரமானதாகவும் இருக்காது.

குடும்ப வாழ்க்கை

  • வியாபாரத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் கணக்கு முறைகளை சரிவர பரிசோதிக்க வேண்டும்.
  • ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு காணப்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்.
  • யாரிடமும் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்வதை தவிர்க்கவேண்டும்.
  • இந்த சோதனைக் கட்டத்தில் தேவையற்ற மற்றும் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
  • புதிய திட்டங்களை தள்ளிப் போடவேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
  • ஜென்ம சனி என்ற போதும் நிதி நிலைமையில் முன்னேற்றம் காணக்கூடும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வருகிற ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு சற்று பிரச்சனை அளவு குறையும்.
  • ஜூலை 2026 முதல் ஜூன் 2027 வரை, சற்று நன்றாக இருக்கும் என்று சொல்லாம். தொழில் மற்றும் நிதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைக்கும்.
  • ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான சனிப் பெயர்ச்சி சுழற்சியின் கடைசி ஆறு மாதங்கள் சராசரியாக இருக்கும். இந்தக் காலம் கடுமையான சோதனைக் காலமாகவும் இருக்காது. அதிர்ஷ்டகரமானதாகவும் இருக்காது.
  • அன்புக்குரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும், அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம். துணையிடம் ஒளிவு மறைவின்றி பேசு வேண்டும்.
  • காதலர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலக் கட்டம். அடுத்த கட்ட காதல் வாழ்க்கை எடுத்து செல்லவதில் சிரமம் இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் கருத்தைக் கட்டாயம் கேட்டாக வேண்டும். மேலும் வாக்கு வாதங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • சனி 7ம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்திலும், தொழில் கூட்டாளி வகையிலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டுதான் இருக்கும்.
  • ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை சனி வக்ர நிலையில் இருக்கும். இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
  • வீண் ரோஷம் மற்றும் அலட்சியம் ஆகியவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எதிரியின் பலத்தை குறைவாக மதிப்பிட கூடாது.
  • பயப்பட வேண்டாம். அமைதியும், முன் யோசனையுடன் செயல்பட்டால் இந்த ஜென்ம சனி கடப்பதில் சிரமம் சற்று குறைவாகும்.
  • பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். கடந்த நிகழ்வுகளை நினைத்து மனதை வருத்திக்கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்.

ஆரோக்கியம்

  • ஜென்ம ராசியில் சனியால் பதற்றம் உண்டாகும்  வயிறு, பித்தப்பை மற்றும் பிற செரிமானப் பகுதிகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
  • இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனை வர வாய்ப்பு உண்டு.
  • மேலும் சிலருக்கு  பரம்பரை உபாதைகள், ஹார்மோன் பிரச்சனைகள் மற்றும் முதுகுப் பிரச்சினைகள் வரலாம்.
  • மருத்துவ செலவு ஏற்படும் இருப்பினும் பயப்பட வேண்டியதில்லை. பாதித்து பிறகு சரியாகும். வீட்டில் பெரியவர்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் தந்தையின் உடல் நலம் பாதித்து சரியாகும்.
  • ஆரோக்கியத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரை, உடல்நலம் சராசரியாக இருக்கும்சோதனையான கட்டமாக இல்லாவிட்டாலும், அது ஒரு அதிர்ஷ்டமான காலகட்டமாகவும் இருக்காது .
  • ஜென்ம சனி காலகட்டத்தில் ஆரோக்கியத்திற்கு  முன்னுரிமை கட்டாயம் கொடுக்க வேண்டும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கவனித்து கொள்ளவது சவாலாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்

தொழில் மற்றும் நிதி நிலை

  • சனி ஒரு கர்ம கிரகம் அது உங்கள் முதல் வீடான ஜென்ம ராசியில் நுழையும்போது  மிகவும் கடினமாக உழைக்க வைப்பார்.
  • மாணவர்கள் பாடங்களை படிக்க தெளிவான அட்டவணை அமைத்து கொண்டு அதன்படி செயல் பட வேண்டும். விடாமுயற்சி மற்றும் தெளிவான திட்டத்துடன் இந்த சனி பெயர்ச்சியில் வரும் தடைகளையும் கடந்து கல்வியில் வெற்றி பெறலாம்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் பணி செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் வழங்கப்படலாம். அதனால் பணிகள் மலை போல குவியலாம். அதன் காரணமாக நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரலாம்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் மந்தமாக இருக்கலாம். என்றாலும்  உங்கள் திறமைகளை மேம்படுத்துவதற்கும்,  அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதற்கும் இது  ஏற்ற  நேரம் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். சக பணியாளர்களால்  பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது.
  • 10ம் வீட்டை சனி பார்ப்பதால், செய்யும் தொழிலில் தேக்கமும், சிக்கலும் உண்டாகும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காது. மேலும் எதிர்பாராத பெரிய செலவுகள் வரும். மேலும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படலாம்.
  • வேலையில் மேலதிகாரிகளால் சில பிரச்சனைகளை அனுபவிக்க வேண்டி வரும். பொய்யான குற்றச்சாட்டுகளும் இந்த நேரத்தில் உங்கள் மீது சுமத்தப்படலாம். வீண் ரோஷம் தவிர்த்தால் நல்லது.
  • அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீசத்தொடங்கும். பணியிடத்து ரகசியங்களைப் பிறரிடம் பகிர வேண்டாம்.
  • வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் தடைபடலாம். வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சந்தை நிலவரங்களைப் புரிந்து கொண்டு செயல்படுவது முக்கியம். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது சிறந்தது.
  • விவசாயம் தொடர்பான பணிகளில் சிரமம் இருக்கலாம். ஆனால் வருமானத்தில் தடங்கல்கள் இருக்காது.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருகிறது என்று சொல்லாம். திறமைகளை பல வழிகளில் வெளிப்படுத்தி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சி உயர்நிலையர்களுடன் சமரசமாக செயல்படுவது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியில் நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். முக்கிய முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். கடன் வாங்கும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். நிதி முடிவுகளை எடுப்பதில் கவனம் அவசியம்.
  • புதிய வணிக முயற்சிகள், முதலீடுகள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை செயல்படுத்தும் முன், சந்தை நிலவரங்களை ஆராய்ந்து அதில் உள்ள அபாயங்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

பரிகாரம்

  • சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும். விநாயகர் வழிபாடு விசேஷ நன்மைகள் தரும்.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை கட்டாயம் தவிர்க்க வேண்டும். முடிந்தால் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்.
  • முடிந்தவர்கள் திருநள்ளாறு சென்று, நள தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட ஜென்ம சனியின் தாக்கம் குறையும்.
  • குச்சனூர் சுயம்பு சனீஸ்வரரை வழிபட்டால் மனதளவில் அமைதி பெறலாம். இந்த வழிபாடு மனக்குழப்பங்களை நீக்கி தெளிவை அளிக்கும்.
  • சனி காயத்ரீ மந்திரத்தை 7 முறை உச்சரிப்பத்தின் மூலம் ஜென்ம சனியால் உண்டாகும் பிரச்சனைகள் நீங்கும்

சனி பெயர்ச்சி- 2025- கும்ப ராசி

கும்ப ராசிக்கு ஜென்ம சனி தீர்ந்தது... பாத சனி ஆரம்பம்

பாத சனி என்றால் என்ன?

  • ராசிக்கு 2ம் வீட்டில் சனி, பெயர்ச்சியடைந்து அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை பாத சனி என்பார்கள்.
  • பாத சனி காலத்தில் அஷ்டம சனி, ஜென்ம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும், அதிகம் பொருள் விரையம், உடல் நல பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வு  அதிகம் ஏற்படும் காலமாக  இருக்கும்.
  • மேலும் பாத சனியில் காலில் அடிபட்டு நொண்டி நடக்க வைக்கும் என்றும் சொல்ல்வார்கள். இது அனைவருக்கும் பொருந்தாது.
  • இரண்டாம் வீட்டில் சனி இருப்பதால் பேச்சினால் வில்லங்கம் உண்டாகும்.
  • ஜென்ம சனி காலத்தில் பல பிரச்சனைகளை சனி தந்து இருப்பார். ஆனால்  பாத சனி காலத்தில் பிரச்சனைகள் குறைந்தாலும் முழுமையாக விலகாது.
  • பாத சனி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திருமண தாமதம் உண்டாகலாம். பண வரவு மந்த தன்மை காணப்படும்.
  • எந்த செயல் செய்தாலும் பிரச்சனைகள் வரும் என்றாலும் இறுதியில் நன்மை உண்டாகும்.
  • சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
  • என்றாலும் மற்றவர்களுடைய ய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடதல் கூடாது.

பொது  கண்ணோட்டம்

  • கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து விட்டது என்பது மிக மகிழ்ச்சியான செய்தி எனலாம். ஏழரை  சனியின் கடைசி கட்டமான பாத சனியில் நுழைகிறார்கள்.
  • கடந்த 5 வருடத்தில் அனுபவித்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் எனலாம்.
  • வேலை இழந்தவரகளுக்கு வேலை கிடைக்கும். மேலும் பணிச்சூழலில் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.
  • குருவும் 5ம் வீட்டுக்கு செல்வதால் ஜூன் 2026 வரை நல்ல அதிர்ஷ்டங்களை அனுபவிக்க முடியும்.
  • என்றாலும் ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரையிலான காலம், பல ஏற்ற தாழ்வுகளுடன் வாழ்க்கை பயணம் இருக்கும்., மேலும் பதற்றம் அதிகரிக்கும்.
  • எனவே ஜூன் 2026க்குள், பணத்தை சேமித்து வைத்து கொள்ளவது நல்லது. எதிர்பார்ப்புகள் குறைந்தால் ஏமாற்றத்தை தவிர்க்க முடியும்.
  • இந்தக் காலகட்டத்தைக் கடக்க, ஆன்மீக பலத்தை அதிகரிக்க வேண்டும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
  • நெருக்கமான உறவுகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உதவிகள் மற்றும் கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
  • பங்காளிகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவுகளை எடுப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும்
  • உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உறவுகளை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகளும் தெளிவுகளும் பிறக்கும்.
  • தந்தை வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த இழுபறிகள் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
  • ஏழரை சனி இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதால் சுப விரயங்கள் மற்றும் சுப செலவுகள் அதிகரிக்கும். இந்த செலவானது பிற்காலத்தில் சில ஆதாயங்களை கொடுக்கும்.
  • தாராளமாக திருமணம் முயற்சி செய்யலாம். சிலா தாமதங்களை கொடுத்தாலும் நல்ல செய்தி வரும். சுப செலவு காலம் என்பதால் திருமணம கட்டாயம் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் புதிய இடம் மற்றும் வீடு வாங்கும் யோகம் உண்டு.
  • மனதில் இருந்த குழப்பங்கள், குறிப்பாக சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் ஏற்பட்ட தடுமாற்றங்கள், விரைவில் நீங்கி தெளிவு ஏற்படும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் சரியாகி, உங்கள் உறவில் இனிமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்களை பாதித்து வந்த தூக்கமின்மை பிரச்சனைக்குத் தீரும்.

குடும்ப வாழ்க்கை

  • கும்ப ராசிகார்களின் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டு என்பதால் தாராளமாக திருமணம் முயற்சி செய்யலாம். மேலும் உங்கள் பேச்சுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எனவே பேச்சில கவனம் தேவை.
  • மகன், மகள் திருமணம் நடைபெறும். பூர்வீகத்தில் இருந்த சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விலகும்.
  • குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களின் எதிர்பார்ப்புகளை உங்களால் திருப்திபடுத்த முடியாமல் போகலாம். உறவுகளுக்கு இடையே சற்று அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
  • திருமணத்திருக்கு காத்திருப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு நல்ல பெயர்ச்சியாக தான் இருக்கும். எனவே துணையை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக அவசியம்.
  • பிரிந்து இருக்கும் தம்பதிகள் கடந்தகால காயங்களை மறந்து ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் சுமுக உறவை பராமரிக்கலாம்.
  • ஜூலை 2025 முதல் குடும்பத்தில் நல்ல நிலை வரும். மேலும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2025க்குள் நல்ல செய்தி வர வாய்ப்பு உண்டு.
  • இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் அதிகமாக கடன் வாங்குவதை தவிர்த்து வேண்டும். சகோதர சகோதரிகளின்  உறவு முறைகள் சுமுகமாக இருக்காது .
  • புதிய வீடுகளை வாங்கி குடியேற இது சிறந்த நேரம் என்று சொல்லாம். வருகிற குரு பெயர்ச்சியால் ஜூன் 2026 வரை நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். என்றாலும்   2026க்குப் பிறகு சற்று மந்த நிலை ஏற்படுவதுடன் அன்புக்குரியவர்களுடனான உறவுகள் பாதிக்கப்படலாம். அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் குறையும்.
  • பொதுவாக ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை பொறுமையாக இருப்பது முக்கியம். மேலும் குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிட வேண்டும்.
  • இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியை பொறுத்தவரை குடும்ப உறவுகளிடம் பொறுமையாக பேச வேண்டும். பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. பேச்சுவார்த்தைகளின் போது அமைதி காப்பது நலம். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்தால் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தனக்கு கீழ் உள்ளவர்கள் தானே என்று யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம்.
  • இரண்டாம் வீட்டுக்கு சனி பகவான் செல்வதால் தனம், வாக்கு, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • என்றாலும் சனி பெயர்ச்சிக்கு பிறகு புத்துணர்வும், தைரியமும் கிடைக்கும். மனதில் தெளிவு கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்னைகள் விலகும்.

ஆரோக்கியம்

  • 7ம் பார்வையாக 8ம் இடத்தை சனி பார்ப்பதால் தேவை இல்லாத உடல் உபாதைகள், சிறு விபத்துக்கள் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கை தேவை.
  • இந்த பெயர்ச்சி அதிக மன அழுத்தம், பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும். இது உங்கள் தூக்கத்தின் தன்மையை சீர்குலைக்கக்கூடும்.
  • குறிப்பாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
  • மார்ச் 2025 முதல் ஜூன் 2026 வரை சிறப்பாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு மூல காரணத்தைக் கண்டு அறிய முடியும் மேலும்  அறுவை சிகிச்சை தேவைபடுபவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவது நல்லது.
  • ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை, உங்களுக்கு மட்டும் இன்றி குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும். இது உங்களுக்கு பதற்றம் மற்றும் மனச்சோர்வை அனுபவிக்க நேரிடும்.
  • கொழுப்பு, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த அளவைக் கண்காணிப்பது நல்லது.
  • இந்த சனிபெயர்ச்சியில், உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலம் என்று தான் சொல்ல வேண்டும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொறுப்புக்களும் மூலம் புதிய அனுபவங்களும் கிடைக்கும். பணி மாற்ற விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
  • பணி நிமிர்த்தமான ரகசியங்களை யாருடனும் பகிந்து கொள்ள வேண்டாம். பணி செய்யும் இடத்தில், உங்களுடன்  இருப்பவர்களால் அவ்வப்போது சில நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு மறையும். மேலும் உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.
  • பணியிடத்தில் சில  சவால்களை சந்திக்க நேரிடும். வேலைகள்  மலை போல குவிந்து காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும்.
  • உழைப்புக்கு ஏற்ற நற்பலன்களை அனுபவிக்க முடியும். தொழிலில் மாற்றத்தை எதிர்பார்த்து இருப்பவர்க்கு இது சிறந்த நேரம் எனலாம். என்றாலும் மாற்றத்தை ஏற்று கொள்ளும் முன் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
  • 10ம் பார்வையாக 11ம் இடமான தனுசு ராசியை சனி பகவான் பார்ப்பதால் தொழிலிலும், பணியிடத்திலும் தடை தாமதங்கள் உண்டாகும். பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் தாமதம் ஆகும்.
  • மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வுகளில் வெற்றி அடையலாம். ஆராய்ச்சி படிப்பில் இருப்பவர்களுக்கு, இருந்து வந்த தாமதங்கள் நீங்கி எதிர்பார்த்த நல்ல  முடிவுகள் கிடைக்கும். உயர்நிலைக் கல்வி மற்றும் முதுநிலை கல்வியில் தடைப்பட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பேச்சுக்களில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். என்றாலும் வெளியூர் மற்றும் வெளிநாடு வாய்ப்புகள் சற்று தாமதப்படும்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் எதிலும் விவேகத்துடன் செயல்பட வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொண்டர்களின் ஆதரவு கிடைத்தாலும் எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும் உடலில் ஒரு விதமான சோர்வுகளும் ஏற்பட்டு மறையும்.
  • வியாபார விஷயங்களை சற்று பொறுமையுடன் செயல்பட வேண்டும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
  • வெளிநாட்டு வர்த்தகத்தில் இருந்து வந்த தாமதங்கள் குறையும். பிற மொழி மக்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
  • வியாபாரம் செய்யும் கும்ப ராசிகாரர்களுக்கு தங்களுது வேலை ஆட்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
  • விவசாய பணிகளில் உழைப்புக்கு ஏற்ப லாபங்கள் கிடைக்கும். பாசன வசதி தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.

பரிகாரம்

  • சனிகிழமை தோறும், ஹனுமான் சாலிசாவைக் கேட்பது ஆறுதலையும் உணர்ச்சி ரீதியான நிவாரணத்தையும் அளிக்கும்.
  • முடிந்தால் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அபிஷேகத்திற்காக நல்லெண்ணெய் வழங்கவும்.
  • நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரை கொடுக்கலாம்.
  • தினமும் கணபதி மற்றும் அனுமனை வழிபட்டு வந்தால் மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். மேலும் சிவ வழிபாடு நல்லது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம்.
  • திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு சென்று நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்.

சனி பெயர்ச்சி- 2025- மகர ராசி


மகர ராசிக்கு ஏழரை  சனி தீர்ந்தது ... சகாய  சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்

சகாய சனி என்றால் என்ன?

  • ஏழரை சனி பிடியில் இருந்து விடுபடுவதை அதாவது  சனி பகவான் 3ம் இடத்திற்கு செல்வதை தான் சகாய  சனி என்று சொல்வார்கள்.
  • இந்த சகாய  சனியில் ஏழரை சனி ஏற்பட்டு வந்த துன்பங்கள் விலகி, நல்ல பலன்களும், பல்வேறு இன்பங்களும் கிடைக்கும்.
  • நல்ல பலன்களை அள்ளித்தரக்கூடிய அமைப்பாக சனி பகவான் அமைந்திருப்பதற்குச் சகாய சனி என்பார்கள்.
  • எண்ணங்கள் ஈடேறுவதற்கும், நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றி தருவதாகவும் இருக்கும்.
  • குடும்ப உறவில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும், சுப நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடக்கக்கூடிய அமைப்பாக இருக்கும்.
  • சகாய சனி இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளால் இன்பங்களை தரக்கூடியவர்.
  • மேலும் எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்று இழந்த பொருட்களை மீட்க வைப்பார்.
  • என்றாலும் 5 மற்றும் 9ம் வீட்டை பார்ப்பதால் குழந்தைகளும், தந்தையாலும் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் ஏழரை சனியில் இருந்து விடுதலை என்பது தான் இந்த சகாய சனியின் சிறப்பு ஆகும்.
  • பொது கண்ணோட்டம்
  • மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் இருந்து விடுதலையாகக் கூடிய காலம். இனி உங்களுக்கு பொற்காலமாகத்தான் இருக்கும என்று சொல்லாம்.
  • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணலாம். உங்கள் வாழ்வில் பல்வேறு அம்சங்களில், வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காணலாம்.
  • மகர ராசி பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குடும்பத்தில் தாய், தந்தை மற்றும்  சகோதரர்களுடனான பிரச்சனைகள் தீரும். மேலும்  வர வேண்டிய சொத்துகள்  பேசி சுமூகமான தீர்வு காண முடியும்.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் என்பதால் இந்த சனி பெயர்ச்சியின் நல்ல பலன்கள் 3 முதல் 4 மாதங்களுக்கு பிறகு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டத்தைத் தரும்.
  • ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரை ஒரு வருடத்திற்கு குரு மகர ராசியின் 6வது வீட்டிற்குச் சென்றாலும், பெரிய தடைகள் எதுவும் இருக்காது. கவலை வேண்டாம்.
  • புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், இப்போது ஒரு சிறந்த நேரம். ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை, குரு உச்சம் பெற்று சனியுடன் திரிகோணப் பார்வையில் சஞ்சரித்து, அதிர்ஷ்டத்தை பல மடங்கு பெருக்குவார்.
  • ஏழரை சனியால் இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து, நன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்து இருந்த தயக்கங்கள் நீங்கி, தெளிவான புரிதல் உருவாகும்.
  • என்றாலும் சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை புரிந்து செயல்படுவது முக்கியம்.
  • மாணவர்களுக்கு கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறைந்து, சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் ஊக்கமும், அவர்களுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான புதிய முயற்சிகள், முக்கிய மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் உருவாகும்.
  • வெளிநாட்டு பயணங்களில் தாமதம் ஏற்படலாம். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும்.
  • ஜூலை 13 முதல் நவம்பர் 28 வரை சனி வக்ர நிலையால் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும். எச்சரிக்கை தேவை.
  • 3ஆம் இடத்தில் அமரும் சனி பகவான் மூலம் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தைரியம், வெற்றி, முயற்சியை குறிக்கும் இடமாக இவைகள் விளங்குகின்றது. மனதில் தைரியம் பிறக்கும். முயற்சிகள் கைக்கூடும்.
  • ஒட்டுமொத்தமாக, மகர ராசிக்காரர்கள், தங்கள் வாழ்க்கையின் சிறந்த கட்டங்களில் ஒன்றில் நுழைகிறார்கள். எனவே  வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆக இந்த பெயர்ச்சியை  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப வாழ்க்கை

  • குடும்பத்திலிருந்து விலகிய மகர ராசிக்காரர்கள், மீண்டும் திரும்பி வருவதற்கான சூழல்கள் உருவாகும்.
  • காதல் வாழ்க்கை இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
  • விருப்பமான உணவு கிடைப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மே மாதத்திற்குப் பிறகு, இரண்டாவது வீட்டுக்கு ராகு வருவதால் ஒழுங்கற்ற உணவுப் பழக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கவனம் அவசியம்.
  • சனி பகவான் ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளை பார்க்கிறார். எனவே இது பயணங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
  • குடும்ப வாழ்க்கையை பொறுத்தளவில் பிப்ரவர 2026 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஆதரவாக இருப்பார்கள்.
  • உங்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணங்களை இறுதி செய்ய இது ஒரு சிறந்த நேரம் என்று சொல்லாம்.
  • மார்ச் 2026 வாக்கில் சிறிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும். ஆனால் விரைவில் விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  • காதலில் இருப்பவர்கள், குடும்பத்தாரின் ஆதரவுடன், நிச்சயதார்த்தம் செய்து திருமணம் செய்து கொள்ள இது ஒரு சிறந்த நேரம்.
  • ஆகஸ்ட் 2027 முதல் நவம்பர் 2027 வரையிலான காலத்தில் காதல் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களைத் தரக்கூடும். எனவே இந்த நேரத்தில் நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் போன்ற எந்த சுப நிகழ்ச்சிகளையும் நடத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
  • குடும்பத்தில் குழந்தையின் பிறப்பு  போன்ற நிகழ்வுகளால், குடும்ப சூழலில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
  • புதிதாக நண்பர்கள், முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மேலும் நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.
  • பிறருக்கு கடன் கொடுப்பது, ஜாமீன் கையெழுத்து போடுவது நல்லது இல்லை. கவனம் அவசியம்.
  • இந்த காலகட்டத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிட்டும். வாழ்கையில் எதை நோக்கி செல்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும். என்றாலும் பிடிவாதம் கொள்ளாமல் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
  • இந்த சனி பெயர்ச்சியில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்கையை வாழும் நிலையை சனி பகவான் ஏற்படுத்தி தருவார்.

ஆரோக்கியம்

  • இந்த சனி பெயர்ச்சி பொறுத்த வரை உங்களின் ஆரோக்கியம் மேம்படும். உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
  • ராகு இரண்டாம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆவதால் உணவு விசயங்களில் கவனம் அவசியம். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கல்லீரல், கொழுப்பு போன்ற உடல் உறுப்புகள் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மேலும் சிலருக்கு சிறுநீரக கல், பித்தப்பை கல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஜூலை முதல் நவம்பர் வரை, வயிறு தொடர்பான நோய்கள் உங்களைத் தொந்தரவு செய்யலாம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் தந்தையையும் தாயையும் தொந்தரவு செய்யலாம். அதன் பின் காலம் நன்றாக இருக்கும்.
  • 2025 ஆண்டை பொறுத்தவரை நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க முடியும். மார்ச் 2026 ஆண்டை நெருங்கும்போது, சில சிறிய நோய் தாக்கங்கள் ஆரம்பிக்கும். கவனம் அவசியம்.
  • பொதுவாக இந்த சனி பெயர்ச்சி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று சொல்லாம்.
  • தொழில் மற்றும் நிதி நிலை
  • ஏழரை சனி முடிவுக்கு வருவதால், உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் செலவுகள் தடையின்றி கிடைக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் குறைந்து, புதிய வேலை முயற்சிகள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறும்.
  • வேலையில்லாதவர்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். எதிரிகளால் உங்களை எதுவும் செய்ய முடியாது. தொழிலில் பெரிய ஒப்பந்தம் ஏற்படலாம்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் யோகம் உண்டு.
  • கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. வியாபாரம் விஸ்தரிப்பு, புதிய வியாபார முயற்சிகள், வெளிநாட்டு தொடர்புகள் நிறைய கிடைக்கும். என்றாலும் சில ஆபத்தான முடிவுகளை எடுப்பீர்கள். சற்று கவனம் அவசியம்.
  • புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு விதிகளை பின்பற்றுவது நல்லது.
  • வியாபாரத்தை நவீனமயமாக மாற்றி, வேலைகளை திட்டமிட்டு செயல்படுவீர்கள். மேலும் விளம்பர யுக்திகளை சரியாகப் பயன்படுத்தி வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பீர்கள்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்களை விருப்பப்படியே அமையும்.
  • அரசியல் மற்றும் சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உயரும். தேவையற்ற செலவுகள் இருந்தாலும், வருங்காலத்தில் அதனால் ஆதாயம் கிடைக்கும்.
  • நிதிநிலையை பொறுத்து வரை திடீர் பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கமிஷன், ஷேர் மார்க்கெட், தகவல் தொழில்நுட்பம், கனிணி சார்ந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பெருத்த நன்மைகள் ஏற்படும்.
  • நீண்ட காலமாக உயர் பதவி கிடைக்காதவர்களுக்கு உயர் பதவிகளில் அமரும் நிலை உண்டாகும். மேலதிகாரிகள் உடன் இருந்த மன கசப்புகள் முடிவுக்கு வரும்.
  • இந்த சனி பெயர்ச்சி தொழில் மற்றும் வேலை ரீதியாக நல்லது செய்யும். எனவே பயன்படுத்தி கொள்ளவும். தொழில் முறை வாழ்க்கையில், கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்

  • இந்த சனி பெயர்ச்சியில் ஆரோக்கியம் சிறக்க ஹனுமான் சாலிசாவைக் கேட்கலாம்.
  • திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
  • சனி, புதன் கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேலை நல்ல மாற்றும் விரைவில் வரும்.
  • ஞாயிற்றுக்கிழமை தோறும் பத்ரகாளி வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும்.
  • சனிக்கிழமை விரதம் இருப்பது, அசைவ உணவு, மது போன்றவற்றை தவிர்ப்பது நன்மை பயக்கும்.
  • இயன்றவர்கள் சனிக்கிழமை அன்று ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யலாம்.

சனி பெயர்ச்சி- 2025- தனுசு ராசி



தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ...ஜாக்கிரதை!

அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன?

  • ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைதான் அர்த்தாஷ்டம சனி எனப்படும்.
  • அர்த என்பது பாதி என்று சமஸ்கிருதத்தில் பொருள். அஷ்டமம் என்பது எட்டு. அஷ்டம சனியின் பலனில் பாதி பலன் இந்த காலகட்டத்தில் உண்டு. அதாவது அஷ்டம சனியில் பாதி, எந்த அர்த்தாஷ்டம சனிஅந்த அளவுக்கு பாதிப்பையும் கொடுக்க கூடியதுதான்.
  • அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுக்கான திடீர் செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும்.
  • புதிய தொழில் முயற்சிகள், வியாபாரம் உள்ளிட்டவை பெரிய வெற்றி தராமல், எடுத்த முயற்சிகளைக் கைவிடக் கூடிய நிலை வரலாம்.
  • தாயின் ஆரோக்கியத்தில் சில பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று குடியேற வேண்டி வரும்.
  • தொழில் பாதையை சனி பார்ப்பதாள் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும்.
  • சனி கடமை தவறாதவர், இந்த அர்த்தாஷ்டம சனி காலத்தில்  கடமைகளை  செய்யத் தவறினால், இந்த சனி தரும் விளைவு அதிகமாக இருக்கும்.

பொது  கண்ணோட்டம்

  • சனி பகவான் உங்கள் ராசியின், 4வது வீடான அர்த்தாஷ்டம சனியில் நுழைகிறார்.
  • என்றாலும் தனுசுயின் அதிபதி, குருக்கு சனி நட்பு என்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. என்றாலும்  சனி தனது 10வது பார்வையாக ராசியை பார்ப்பதால்   உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • புதிய முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உதவிகள் மற்றும் கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.
  • உடல்நலப் பிரச்சினைகளுடன், வேலை அழுத்தம் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும். இதனால் நிதி சிக்கல்கள் ஏற்படும்.
  • ஜூலை 2026 முதல் ஜூல 2027 வரை, கடுமையான சோதனை காலம் எனலாம். மறைமுக எதிரிகளைச் சந்திக்க நேரிடும். மேலும் மற்றவர்களின்  பொறாமைகளால் சில சிக்கல்களை அனுபவிக்க நேரிடும்.
  • சனிப் பெயர்ச்சியின் கடைசி ஆறு மாதங்கள், ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரை, கலவையான பலன்களைத் தரும்.
  • போட்டி சார்ந்த நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பங்காளிகளிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது மன அமைதிக்கு உதவும்.
  • சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனதில் ஆன்மீக உணர்வு உண்டாலாம்.
  • தடைகள் அதிகமாக இருந்தாலும் வாழ்க்கை செழிப்பு மற்றும் அமைதி இருக்கும்.
  • வீடு, மனை, வாகனம் வாங்கும் பொது மிகவும் கவனம் அவசியம். முடிந்தளவு பழைய வாகனங்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
  • உதவிகள் மற்றும் கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.
  • பெற்றோருடன் அனுசரித்து செல்வது அமைதியை கொண்டு வரும்.
  • தனுசு ராசி மாணவர்கள் பாடங்களில் இருந்த குழப்பங்களை நீக்கி, சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • மேலும் ஆராய்ச்சி கல்வியில் ஏற்பட்ட தாமதங்கள் நீங்கி எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உயர்கல்வியில் தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
  • சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தந்தையிடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
  • தூக்கம் இன்மை தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக விலகும்.
  • அனுபவம் இல்லாத புதிய செயல்களில் ஈடுபடும் பொழுது ஆலோசனை பெற்று செயல்படவும்.
  • ஜாமின் மற்றும் கடன் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது சிக்கல்களை குறைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கை

  • தனுசுராசிக்கு 4வது வீட்டில் சனி பெயர்ச்சி ஆவதால் குடும்பத்தில்  மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். என்றாலும் குடும்பத்தில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியான தருணங்களும் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
  • உங்கள் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும் எனவே வார்த்தையில் கவனம் அவசியம்.
  • மகன் மற்றும் மகளுக்கான திருமணத் திட்டங்களை இறுதி செய்வதற்கு இந்தக் காலம் ஏற்றது என்று சொல்லாம்.
  • குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தால், மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ ஒரு வய்ப்பு கிடைக்கும். மேலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • தந்தை வழியில் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். என்றாலும் தாயின் ஆதரவு கிடைக்க தாமதம் ஆகலாம்.
  • பெண்களுக்கு சுபகாரிய முயற்சிகள் சாதகமாக முடியும். தடைப்பட்ட வருவாய்கள் மீண்டும் கிடைக்கும்.
  • தனுசு ராசி பெண்களுக்கு குறுந்தொழிலில் ஆர்வத்துடன் செயல்பட்டு புதிய உயரங்களை எட்டுவார்கள்
  • திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடித்து அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
  • குழந்தை பாக்கியம் தாமதமான நேயர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
  • குடும்பத்துக்காக நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். இதனால் அன்புக்குரியவர்களுடன் அமைதியான மற்றும் மகிழ்ச்சி குழல் அமையும்.
  • மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் பட்சத்தில் அதில் வெற்றி பெறலாம்.
  • சனி தனது 3ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.
  • மதிப்பு மிகுந்த பொருட்கள் அல்லது வாகனங்கள் திருட்டு போவது அல்லது தொலைந்து போவது போன்றவை நடக்கும். எனவே கவனம் அவசியம் .
  • மேலும் சிலருக்கு நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். உறவுகள் பிரிந்து போய் அதிக சிக்ககளும் உண்டாகலாம்.
  • முன் எச்சிரிக்கையுடன் இருந்தால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும் புரிதலும் மேம்படும். சகோதரர்களிடம் சுமூகமான உறவை கடைப்படிக்க வேண்டும். மேலும்  உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் வேண்டும்.

ஆரோக்கியம்

  • பொதுவாக தனுசு ராசிக்கு கடந்த இரண்டரை வருடங்களாக சனி  சிறந்த நிலையில் இருந்தார். இது உடல் நலனை நன்றாக வைத்து இருந்தார். ஆனால்  இந்த சனி பெயர்ச்சியை பொறுத்த வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக செரிமானம் அல்லது பெண்களுக்கு கர்ப்பை  தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
  • மருத்துவ செலவு அதிகரிக்க செய்யும் இந்த பெயர்ச்சி என்று சொல்லாம். எனவே அதிக மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மிகவும் முக்கியமானது.
  • உடல்நலப் பிரச்சினைகளுடன், வேலை அழுத்தம் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும். என்றாலும் 7ம் வீட்டுக்கு வரும் குருவும் ராசியை பார்ப்பதால் இந்த  ஜூன் 2025 முதல் ஒரு வருடத்திற்கு உடல்நலம் மற்றும் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், மார்பு தொற்று மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.
  • சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் .

தொழில் மற்றும் நிதி நிலை

  • குரு பெயர்ச்சியின் காரணமாக இந்த ஆண்டு நிதி ரீதியாக நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • ஆனால் வரும் ஆண்டுகளில் எந்த முதலீடு செய்யும்போதும் கவனமாக திட்டமிட வேண்டியது அவசியம். மேலும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை செய்வீர்கள்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு என்றாலும் பணிச்சுமை மற்றும் தேவையற்ற தாமதங்கள் வரும்.
  • மேலதிகாரிகளுடன் மோதல் வர வாய்ப்பு உள்ளது. எச்சிரிக்கை அவசியம். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் பல சவால்களை சந்திக்க நேரலாம். இது தொழில் முயற்சிகளில் வளர்ச்சியயை தடுக்கலாம். கடன் சார்ந்த உதவிகளில் தாமதம் ஏற்படும்.
  • பணி மாற்ற விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
  • வேலை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ, வீடு மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • சமூகப்பணி மற்றும் அரசியலில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படுவது அவசியம். பழைய செயல்களால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும்.
  • வியாபாரம் தொடர்பாக பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டு வர்த்தகத் தடை நீங்கி, புதிய ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
  • விவசாயத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் உழைப்புக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். நிபுணர்களின் ஆலோசனைகள் அதிக விளைச்சலை அதிகபடுத்தலாம்.
  • உதிரிப் பாகங்கள் மற்றும் கமிஷன் சார்ந்த தொழில்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
  • சனி தனது 7ம் பார்வையாக பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் மற்றும் பணியில் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் எதிரிகள் உருவாகலாம். கவனம் அவசியம்.
  • பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது சொத்து வாங்குவதை முடிந்தளவு  தவிர்க்கலாம்.
  • செய்து கொண்டு இருந்த வேலையில் தொந்தரவு ஏற்பட்டு வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் நல்ல வேலை கிடைக்கும்.
  • சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் விலகும்.
  • தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் கைகொடுக்கும். என்றாலும் தொழிலில் மிக கவனம் அவசியம்.

பரிகாரம்

  • சோதனைக் கட்டத்தைக் கடக்க லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வர வேண்டும். மேலும் இது உங்களுக்கு பலம் அளிக்கும்.
  • மேலும் வராகி அம்மனை வழிபட்டு வர முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.
  • சனிக்கிழமையன்று கருப்பு எள் தானம் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்.
  • சனி காயத்ரீ மந்திரத்தை 7 முறை உச்சரிப்பத்தின் மூலம் அர்த்தாஷ்டம சனியால் உண்டாகும் பிரச்சனைகள் நீங்கும்.


சனி பெயர்ச்சி- 2025- விருச்சிக ராசி

      விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தீர்ந்தது ..பஞ்சம சனி சனி ஆரம்பம் ...

பஞ்சம சனி என்றால் என்ன?

  • சனி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே பஞ்ச சனி என்று அழைக்கப்படுகிறது.
  • தெளிவான சிந்தனைகள் இல்லாமல் மனதில் தேவையற்ற குழப்பங்களுடன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் சோர்ந்து இருக்கும் சூழலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம்.
  • பஞ்சம ஸ்தானம் 5வது வீடு, உயர்கல்வி, குழந்தைகள் மற்றும் மிக முக்கியமாக கடந்த பிறவியில் நீங்கள் செய்த கர்மாவை தீர்மானிக்கிறது. இங்கு தீய கிரகம் இருப்பது நல்லது அல்ல.
  • உயர்கல்வி மற்றும் குழந்தைகளைப் பெறுவதில் அல்லது கருத்தரிப்பதில் சிக்கலை உருவாக்கலாம்.
  • மேலும் குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். கவனம் அவசியம்.
  • என்றாலும் பஞ்சம சனி அனைத்து ராசிக்கும் தீங்கு செய்யாது என்பதை நிலைவில் வைத்து கொள்ளவும்.
  • மேலும் பஞ்சம சனி ஆரம்பிக்கறது என்றால் அர்தாஷ்டம சனி  முடிந்து விட்டது என்று பொருள். எனவே அர்தாஷ்டம சனி  முடிவதால் எதிலும் தடை நீங்கி,  செயல்களில் மேன்மை உண்டாகும்.
  • சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வாக்கியில் கவனம் தேவை

பொது  கண்ணோட்டம்

  • விருச்சிக ராசி அர்த்தாஷ்டம சனி முடிந்து என்பது தான் நல்ல மிக நல்ல செய்தி ஆகும். கடந்த சில வருடங்களாக  4ம் வீட்டில் சனி சஞ்சரித்தால்  உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம் மற்றும்  தொழில் வளர்ச்சியைப் பாதித்து இருக்கும்.
  • 5ம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு சனி மாறுவதால், உடல்நலம் மற்றும் தொழில் விஷயங்களில் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லாம்.
  • பதற்றம் மற்றும் மனச்சோர்விலிருந்து வெளியே வர முடியும் ஒட்டுமொத்தமாக, ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தைத் தவிர, தற்போதைய சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு சற்று சாதகமாக தான் இருக்கும் என்று சொல்லாம்.
  • அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில மாறுதல்கள் நிகழலாம் நண்பர்களுடன் சிறிது காலம் இடைவெளி விட்டு இருப்பது நல்லது.
  • வணிகத்தில் முடிவுகளை எடுப்பதற்கு முன், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
  • கமிஷன் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சற்று மாறுபட்ட சூழ்நிலைகள் உருவாகலாம்.
  • காரியங்களுக்காக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும் பாகப்பிரிவினை சம்பந்தமான முயற்சிகள் நல்ல பலனைத் தரும் .
  • பிரபலமான நபர்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது குலத்தொழில் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும்.
  • நீண்ட தூரம் பயணிக்க வாய்ப்புகள் உண்டாகும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
  • என்றாலும் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமான பெயர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை இந்த காலக்கட்டத்தில் உறவுகளில்  சவால்கள் காணப்படலாம் மேலும் சவால்களை சமாளிப்பது எளிதான காரியமாக இருக்காது மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
  • விருச்சிக ராசி மாணவர்களுக்கு புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும் மேலும் விருச்சிக ராசி மாணவர்கள், தங்களுது நண்பர் வட்டத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்
  • பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நல்லதையும் கெட்டதையும் கலந்து தரும் ஒரு பெயர்ச்சியாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்

குடும்ப வாழ்க்கை

  • இந்த பெயர்ச்சியை பொறுத்த வரை, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் இணக்கமான குடும்ப உறவைப் பராமரிக்க முடியும்.
  • ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தாலும், அது நடக்க சாத்தியம் இல்லை என்றாலும் புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம் என்பது மன அமைதியை தரும்.
  • மூத்த சகோதர சகோதரிகளுடன் சச்சரவுகள் ஏற்படலாம். சூழ்நிலையை அமைதியாகக் கையாள்வது அவசியம்.
  • திருமணத்திற்கு காத்திருப்போருக்கு, திருமணம் தாமதம் ஏற்படும். மேலும்  குழந்தைகளுடனான உறவுகள் சில கவலைகளை ஏற்படுத்தலாம். அவர்கள் உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எதிராக நடந்து கொள்ளலாம்.
  • சனி தனது 3வது பார்வையாக, 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி உறவுகளில் சில புரிதல் இன்மை இருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். சில விஷயங்களில்  விட்டுக்கொடுப்பது அமைதியைத் தரும்.
  • குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வதும், அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரவளிப்பதும் மன அமைதியைத் தரும்.
  • தந்தையின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கக்கூடும். பெண்கள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
  • நண்பர்களுடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • திருமணமான தம்பதிகள் கடுமையான மோதல்களையும் தவறான புரிதல்களையும் சந்திக்க நேரிடும் எனவே குடும்பத்தில் முன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
  • ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான காலம் கலவையான பலன்களைத் தரும் முடிந்தால் இந்தக் கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம்.
  • ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை காலங்கள் திருமணம் மற்றும் குழந்தை பேருக்கு ஏற்ற காலம் எனலாம் மேலும் காதலில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் சம்மந்தம் கிடைக்கும்.
  • பொதுவாக சனியின் தாக்கத்தால் காதல் உறவுகளில் தீவிரம் இருக்கும் மற்றும் வலு அடையும்.

ஆரோக்கியம்

  • இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவுக்கு சாத்தியம் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு  முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • இந்த சனிப் பெயர்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் குரு உங்களுக்கு மே2025 வரை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார்.
  • பிறகு குடும்பத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
  • சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளவது நல்லது.
  • வேலை அழுத்தம் திடீரென்று அதிகரிக்கக்கூடும். எனவே உடற் பயற்சி அவசியம். ஆரோக்கியமான உணவு முறையை கடை பிடிக்க வேண்டும்.
  • ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை காலத்தில் உங்களின் உடல் பிரச்சனைக்கு முல காரணத்தை கண்டு அறிவீர்கள்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • விருச்சிக ராசிகரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் தொழில் மற்றும் பணியிடத்தில் இருந்து வந்த அழுத்தங்கள் குறையும் புதிய வேலை வாய்ப்புகளுக்கான முயற்சிகள் பலனளிக்கும்.
  • உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
  • மேலும் பணியில் சில புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பணி செய்யும் இடத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
  • உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை தைரியமாக எடுத்துசொல்வது உங்களுக்கு சாதகமாக அமையும் .
  • வருமானம் சற்று குறைந்த இருந்தாலும், திறமையை வெளிப்படுத்துவது எதிர்காலத்தில் பெரிய முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைக்க இந்த பெயர்ச்சி உதவும் எனலாம்.
  • சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகள்  கிட்டும்.
  • வேலைகளை மாற்றம் நல்ல வெற்றி தரலாம் என்றாலும்  ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வேலைகளை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பலன்களைப் பெறலாம் செல்வத்தைக் குவிக்கும் போக்கில் வெற்றி பெறலாம்.
  • வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி, உற்சாகத்துடன் செயல்படத் தொடங்குவார்கள் .
  • வியாபாரத்தில் வருமானம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், புதிய வாய்ப்புகள் தேடி வரும் பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்.
  • மேலும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க சில புதிய முதலீட்டு கொள்கைகளை பின்பற்றவார்கள்.
  • விவசாயத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • கலைத்துறையில் இருப்பவர்கள், தற்போதைய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது உங்கள் செயல்பாடுகளில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. என்றாலும் வெளிநாட்டு வாய்ப்புகளில் இருந்த தாமதங்கள் நீங்கி, சாதகமான சூழ்நிலை உருவாகும்.
  • அரசியல்வாதிகளுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கி, எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகளும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும் காலம் வரும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் பணிவுடன் நடந்து கொள் வேண்டும்.
  • இதுநாள் வரை தடைபட்டிருந்த உதவிகளும், கடன் முயற்சிகளும் இனி நிறைவேறும். வியாபாரத்தில் நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வரும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். செயல்களில் இருந்த தயக்கம் நீங்கி, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
  • என்றாலும் வருமான விஷயங்களில் கவனமாக இருக்கவும். சுப காரியங்களுக்கான முடிவுகளை எடுக்கும் போது, யோசித்து செயல்படுங்கள்.

பரிகாரம்

  • முடிந்தவர்கள் நாமக்கல்லில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் மனத்திற்கும், சிந்தனைக்கும் நல்லது.
  • சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் மற்றும் அன்ன தானம் செய்யலாம் .
  • சனிக்கிழமையன்று ஸ்ரீ ஹனுமான் சாலிசாவை எட்டு முறை பாராயணம் செய்யலாம்.
  • எதிரிகளிடமிருந்து பாதுகாப்பைப் பெற, சுதர்சன மந்திரத்தைக் கேட்கலாம்.
  • அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்வதால் தீய விளைவுகளை களைய முடியும்.

சனி பெயர்ச்சி- 2025- துலா ராசி


துலா  ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...ரோக சனி சனி ஆரம்பம் ...இனி நல்லது தான் .. கொண்டாட்டம்...

ரோக சனி சனி என்றால் என்ன?

  • சனி ராசிக்கு ஆறாம் இடத்தில் சஞ்சரம் செய்யும் இந்ந நிலையே ரோக சனி என்று அழைக்கப்படுகிறது.
  • சனி, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், எதிரிகள் பலம் இழப்பார்கள். அல்லது எதிரிகளே காணோம் என்று சொல்லும் அளவிற்கு எதிரிகள் அழிவார்கள் எனவே   வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.
  • பொதுவாக ரோக சனி, இல்லங்களில் இன்பங்களை வழங்கி மன மகிழ்ச்சியை வழங்குவார்.
  • உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைகள் நீங்கி வலிமை அடையக்கூடிய சூழலை உருவாக்குவார்.
  • மேலும் கையில் பணம் தாராளமாக புழங்குவதால், கடன்கள் அடையும். தூர தேச பயணத்தால் லாபம் உண்டாகும்.
  • பணிகளில் மேன்மையை உருவாக்கி நெடுநாள் நினைத்த பல காரியங்களை செய்து முடிக்கு ஆற்றலை கொடுப்பார்.
  • இந்த சனி இருக்கும் காலம் வாழ்க்கையில் முன்னேற்றமான பாதையில் பயணம் செய்யலாம்.

பொது  கண்ணோட்டம்

  • இது ஒரு சாதகமான பெயர்ச்சியாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. பொதுவாக, சனி கிரகம் உங்கள் ராசியிலிருந்து 3, 6 அல்லது 11வது வீட்டில் சஞ்சரிக்கும் போது சாதகமானதாகக் கருதப்படுகிறது.
  • 6 வீடு சவால்கள் மற்றும் தடைகளுடன் தொடர்புடையது. மேலும் இந்த வீட்டில் சனியின் சஞ்சாரம் எதிரிகளின் மீதான வெற்றி குறிக்கும்.
  • சனி மெதுவாக நகரும் கிரகம் மேலும்  சக்திவாய்ந்த கிரகம், இந்த சனி பெயர்ச்சியின் நல்ல மாற்றத்தை பெற  இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம்.
  • ஜூன் 2025 முதல் பிப்ரவரி 2028 வரை, உங்கள் வாழ்க்கை மேல்நோக்கி நகர்வதை உணர முடியும்.
  • இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி, துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் குறைந்து, சிக்கல்கள் சீராகும்.
  • ஆன்மீக பயணங்கள் செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இருப்பினும் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்றே முடிவெடுக்க வேண்டும். மேலும் தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு இருக்கும்.
  • வாகன பயணத்தில் எச்சரிக்கை தேவை. ரகசிய முதலீடுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • தகவல் தொடர்பு துறையில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் முயற்சியில் மந்தநிலை காணப்படும்.
  • வழக்கு மற்றும் நிதி தொடர்பான விஷயங்களில் சாதகமான தீர்மானங்கள் வரும்.
  • சனி பகவான் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 7ஆம் பார்வையாக, 12ம் வீட்டை பார்ப்பதால் தாம்பத்ய உறவுகளில் தற்காப்புடன் செயல்படுவது நல்லது. 3ம் வீட்டை 10ம் பார்வையாக பார்ப்பதால் சகோதர உறவுகளுடன் பிரச்னைகள் உண்டாகும்.
  • இதுவரை இருந்த தடை மற்றும் தாமதங்கள் நீங்கும். மூத்த உடன் பிறந்தவர்கள், ஆதரவாக செயல்படுவார்கள்.
  • பொதுவாக துலா ராசிக்காரர்கள் எந்தத் துறையிலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவார்கள். தனி வரவுகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் குறைந்து, நிலவரம் சிறப்பாக இருக்கும்.
  • என்றாலும் சனியின் பார்வை காரணமாக முயற்சிகளில் சில தடைகள் ஏற்படும். ஆனால் அவை விரைவில் தீர்ந்து விடும்.
  • எதிர்காலம் குறித்து கவலைகள் மற்றும் எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும்.
  • சுற்றலா செல்ல வாய்ப்பு வரும், நல்ல சுவையான உணவு சுவைத்து உண்ணும் சூழ்நிலை வரும். என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.
  • இந்த சனி பெயர்ச்சி, துலாம் ராசி பிறந்தவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் சவால்களையும், சிறந்த வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்பது திண்மம்.

குடும்ப வாழ்க்கை

  • ஐந்தாம் வீட்டில் இருந்த சனி சில பல பிரச்னைகளை கொடுத்து இருப்பார் ஆனால் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான வேறுபாடுகள் குறையும் உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கேற்ப செயல்படுவது சிறந்தது.
  • என்றாலும் தாயுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும் பேச்சுக்கான தடுமாற்றங்கள் மாறும் .
  • எங்கிருந்து எப்படி வாய்ப்பு வருகிறது என்று யோசிப்பதற்கு முன்பே பல வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
  • ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி காலகட்டம் ஆகும்.
  • கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியும் பூர்வீக சொத்துகள் தொடர்பான சிக்கல்கள் தோன்றலாம் அதிக சிந்தனையால் தூக்கமின்மை நேரிடலாம்.
  • காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
  • இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம்  வேண்டுபவருக்கு  குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
  • கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .
  • காதலில் வெற்றி, திருமணத்தில் வெற்றி, திருமண தடை நீக்கம் என்று திருமணம் தொடர்பான அனைத்து நல்ல பலன்களும் இந்த காலகட்டத்தில் நடக்க இருக்கிறது.
  • இதுவரை திருமணம் ஆகாத துலாம் ராசிகாரர்களுக்கு திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம்  வேண்டுபவருக்கு  குழந்தை பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்படும் .
  • குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை மேம்படும் இதுவரை இருந்த மனக்கசப்பு விலகும். குடும்பத்தில் ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் சுமூகமான பேச்சு வார்த்தைகளால் பல நன்மைகள் நடக்கப் போகிறது.
  • கடந்த கால அனுபவங்களும் அதன் மூலம் கற்ற படிப்பினைகளும் உங்களுக்கு இப்போது உதவும்.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் கணவன் மனைவி உறவு மேம்படும் கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு வளர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்றாலும் சில சமயங்களில் அதிக பணிகளின் காரணமாக குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் போகலாம் .

ஆரோக்கியம்

  • போன சனி பெயர்ச்சியால் உடல் வலி மற்றும் மன வலி கஷ்டங்களை அனுபவித்து இருப்பீர்கள் மார்ச் 29, 2025 அன்று சனி 6 வது வீட்டிற்குள் நுழைவதால், ஆரோக்கியத்தை பொறுத்து நிம்மதி பெரு மூச்சு உண்டாகும்.
  • மூச்சு, அடி வயிறு, நுரையீரல் தொடர்பான வியாதிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது .
  • முன்பு அறுவை சிகிச்சை செய்திருந்தால், இப்போது முழுமையாக குணமடைய முடியும்.
  • ஜூன் 2026 பிறகு சில சிறிய உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வரக்கூடும். இருப்பினும், இவற்றை மருந்துகளால் எளிதாகக் கட்டுப்படுத்தலாம் .
  • 6வது வீடு ஆரோக்கியத்துடன் தொடர்புடையது மேலும் 3ம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் நலனில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் நல்லது .
  • வயிறு சார்ந்த உபாதைகள், ஜீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் அதிகம் வருவதற்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் வாய்ப்பு உண்டு.
  • சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளவது நல்லது.

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தில் இருந்த தடை மற்றும் தாமதங்கள் குறையும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் வரும்.
  • தன்னம்பிக்கையுடன் செயல்படுவதன் மூலம் நல்ல மதிப்பை பெற முடியும் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்ப்பது சிறந்தது.
  • சக ஊழியர்களிடம் பொறுமையுடன் செயல்படவும் பணி தொடர்பான சிறு பயணங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.
  • ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொழில், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், காவலர்கள், அரசியல்வாதி ஆகிய அனைவருக்கும் இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல  ஏற்றங்கள் மற்றும் மாற்றங்கள் உண்டாகும்.
  • சிலர் தொழில், வியாபாரம், வேலை, கல்விக்காக வெளிநாடு செல்ல வேண்டி இருக்கும்.
  • தொழிலை மேம்படுத்துவது அல்லது விரிவாக்கம் செய்ய முடியும். மேலும் தொழிலில் புதிய உத்திகளைக் கையாளலாம் அதே சமயத்தில்  சில சவால்களையும் சந்திக்க நேரலாம்.
  • இந்தக் காலகட்டம் மாணவர்களின் வளர்ச்சிக்கு அனுகூலமான காலக்கட்டமாக இருக்கும்.விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் இவர்களுக்கு மிகவும் அனுகூலமான காலகட்டம் இது எனலாம் .
  • இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும் அரசு வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் அரசு சார்ந்த சலுகைகள் இப்போது கிடைக்கும்.
  • சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு தடைகள் விலகும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • கடன் பெறுவதற்கு முயற்சி செய்பவர்களுக்கும் சுலபமாக கடன் கிடைக்கும் அந்த கடனை அடைப்பதற்கும் உரிய வழி தெரிந்து கொள்ளலாம் .
  • ஓரளவு முயற்சி செய்தாலும் பெருமளவு வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் காலகட்டமாக இந்த சனி பெயர்ச்சி இருக்கும்.
  • என்றாலும் பங்கு சந்தை போன்ற நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் அவசியம் பண விஷயங்களில் கவனமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் .
  • ஆசைகள் அதிகரிக்கும் மேலும் செலவும் அதிகரிக்கும் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க கவனமாக திட்டமிடல் மிகவும் அவசியம்.
  • விவசாய பணிகளில் முன்னேற்றம் காணப்படும் வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் சாதகமாக மாறும்.வேலையாட்களுடன் சூழ்நிலையை புரிந்து செயல்படுங்கள் .
  • கலை துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்  சம்பள விஷயங்களில் சற்று குழப்பமான நிலைகள் உருவாகலாம் கவனம் தேவை.
  • சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் நீண்ட காலமாக இருந்த சிக்கல்கள் தீரும் தொண்டர்கள்  எண்ணங்களை புரிந்து, ஆதரவுகளை அதிகரிக்க வாய்ப்புஅமையும் கட்சி சார்ந்த வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்கும்.
  • வீடு, நிலம், வாகனம், மனைகளை புதிதாக வாங்கும் அமைப்பு உண்டாகும் பணத்தை இந்த வகையில் பாதுக்கலாம்.
  • 6ம் வீட்டு வரும் சனியால் எதிரிகளை தோற்கடித்து,தொழில் துறையில் அதிகரித்த செல்வாக்கை பெற முடியும் முயற்சிக்கு ஏற்ற முழு பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்

  • சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்
  • வீட்டுக்கு அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று எள் தானம் செய்வதன் மூலமும் வாழ்கையில் உண்டாகும் பிரச்னைகள் தீரும்
  • அமாவாசை அன்று முன்னோர்களை வணங்கி பிராத்தனைகளை செய்யலாம்
  • சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபட்டால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்

சனி பெயர்ச்சி- 2025- கன்னி ராசி

கன்னி ராசிக்கு கண்டக சனி ஆரம்பம் ...பயம் வேண்டாம்... கவனம் தேவை !....

கண்டக சனி என்றால் என்ன?

  • சனி சந்திரனுக்கு 7யில் வருவதை தான் கண்டக சனி என்று சொல்வார்கள்.  கண்டக சனி மன அமைதியின்மையை தருவார். என்று சொல்படுகிறது. எனவே இது நல்லது அல்ல.
  • கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள்.
  • அதாவது ராசிக்கு ஏழில் சனி சஞ்சரிக்கும் காலங்கள், உடல் உபாதைகள் 7ம் வீடு என்பது நண்பர்கள் கூட்டாளிகள் மற்றும் (களத்திரம்) வாழ்க்கைத்துணை ஆகியவற்றை குறிப்பதால் அதை சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் மற்றும் படிப்பினையை கற்றுக்கொடுக்கும் இந்த கண்டக சனி எனலாம்.
  • கண்டக சனி என்பது ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் அதற்கான முடிவையும் பலனையும் எட்ட பல சிரமங்களைப் பட வேண்டி வரும். இந்த காலத்தில் எண்ணியதை அதற்கான நேரத்தில் முடிப்பது சிரமம். திட்டமிட்ட சுப காரியங்கள் நடத்த முடியாமல் போகலாம்.
  • எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனிகாலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொது  கண்ணோட்டம்

  • கன்னி ராசி பொறுத்தவரை சனி பகவான் 7வது வீட்டிற்குள் நுழைகிறது. இது சாதகமானது இல்லை மற்றும்  உடல்நலம் மற்றும் உறவுகளை குறிப்பாக வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை துணை  பெற்றோர்களை  பாதிக்கலாம்.
  • என்றாலும் குரு, ராகு மற்றும் கேது சாதகமாக இருப்பதால் சில பாதுகாப்பு உணர்வை வழங்கும்.
  • ஜூலை முதல் நவம்பர் வரை குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இது வீட்டுச் சூழலைப் பாதிக்கும். இந்தக் கட்டத்தில் பொறுமையும், சூழ்நிலைகளை சாதுர்யமாகவும் கையாள்வதும் அவசியம்.
  • இந்த காலகட்டத்தில் உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது தவிர, இந்த நேரத்தில் பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில்,  நெருங்கிய உறவுகளில் விரிசல்கள் ஏற்படலாம்.
  • முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்கலாம். இந்த கடினமான காலத்தில் தன்னம்பிகையுடன் செயல்பட வேண்டியிருக்கும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்ளவது நல்லது.
  • என்றாலும் காதல், கல்யாணத்தில் சிறு குழப்பம் இருந்தாலும் முடிவு நல்லபடியாக இருக்கும். அதாவது பல முயற்சிகள் எடுத்தாலும் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் தடை ஏற்படலாம். ஆனால் பின்னர் சிறப்பாக நடக்கும்.
  • அலைச்சல் அதிகரிக்கும் ஆனால் அதற்கான பலன்கள் அதிகமாக கிடைக்கும் எனவே கவலை வேண்டாம்.
  • வயதை கணக்கில் கொண்டு தாய்க்கு உடல்நிலை பிரச்னை, உத்தியோகத்தில் பணியிட மாற்றம் போன்றவை ஏற்படும்.
  • குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
  • கடன் எதாவது வாங்கினால் யோசித்து தான் செய்ய வேண்டும். கட்ட சிரமம் பட நேரிடும்.
  • ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் மூன்றாம் பார்வையாக 9 ஆம் இடத்தை பார்ப்பதால் தந்தை உடல்நிலை உத்தியோகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • புதிதாக இடம், மனை, வெளிநாட்டு பயணங்கள், முதலீடு, கடன் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது. அல்லது தவிர்ப்பது நல்லது.
  • உயர் அதிகாரிகளுடன் பேசும்போது சூழ்நிலையை உணர்ந்து கருத்துக்களை பகிர வேண்டும். மனதில் தோன்றியதை வெளிப்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • நண்பர்கள், பங்குதாரர்களுடன் சாதகமற்ற நிலை இருக்கும். கவனம் அவசியம்.
  • வாகனப் பயணங்கள் மற்றும் கால்நடை தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
  • என்றாலும் எதிர்காலம் குறித்த கவலைகள் மற்றும் தயக்கங்கள் குறையும். முயற்சிகளில் இருந்த தடுமாற்றங்கள் நீங்கி செயல்பாடுகளில் அனுபவங்கள் வெளிப்படும். தூக்கமின்மை பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

குடும்ப வாழ்க்கை

  • சனி 7வது வீட்டில் நுழைந்தாலும், 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை சாதகமான ஆண்டாகவே  இருக்கும். வாழ்க்கைத் துணை, குழந்தைகள்  உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
  • உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணத்தை முடிக்க இது ஒரு சிறந்த நேரம். மேலும் குடும்பத்தில் குழந்தை பிறப்பது போன்ற மன மகிழ்ச்சியான செய்தி வரும்.
  • குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மீண்டும் சேர்ந்து இருந்துஇணக்கமான வாழ்க்கையை நடத்த சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  • மார்ச் 2026க்கு பிறகு வாக்கியில் கவனம் தேவை. பேச்சில் சிறு சிறு பிரச்னைகள் வரலாம். ஆனாலும் இயல்பு நிலைக்குத் திரும்பும்.
  • காதலில் இருப்பவர்களுக்கு நல்ல நேரம் என்று தான் சொல் வேண்டும். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் செய்து கொள்ளவும் ஒரு சிறந்த நேரம்.  காதல்,  பெற்றோர்களின் ஆசியுடன் திருமணம் நடக்கும். பயன்படுத்தி கொள்ளவும்.
  • குழந்தைக்காக காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. மருத்துவ முறைகளை பயன் படுத்தி குழந்தை பாக்கியம் பெறவும் இது சிறந்த  நேரம்.
  • 2026 மற்றும் 2027ஆண்டு திருமணமான தம்பதிகள் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சியின் முதல் பாதியில் குடும்ப உறவுகள் மேம்படும். பெண்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். என்றாலும் தாயின் சூழ்நிலையை புரிந்து செயல்பட வேண்டும்.
  • வாழ்க்கைத்துணையுடன் ஒற்றுமையை நிலைநிறுத்துவது நல்லது. பெண்கள் வீட்டு சூழலை மாற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
  • சனி தனது 7ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால் தந்தை உடல் ஆரோக்கிய பிரச்சனை அல்லது தந்தை விட்டு தூற தேசம் செல்லுதல் போன்றவை உண்டாகும். மேலும் சனி தனது 10வது பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வீடு, நிலம், வாகனம் சார்ந்த ஆவனத்தில் சிக்கல் வரலாம். கவனம் அவசியம்
  • மேலும் வாழ்க்கைத் துணையால் தொல்லை, சங்கடம் அதிகமாகும். சொந்த வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த வெற்றி கை நழுவிப் போகும்.
  • கடன் வாங்க தூண்டும் அளவிற்கு செலவுகள் கட்டுக்கு அடங்கமல் போகலாம்.
  • பயணங்களால் ஆதாயம் கிடைக்கும் ஆனால் பெரிய அளவு ஆதாயம் இருக்காது என்றுதான் சொல்ல வேண்டும்.
  • ஆன்மீக தெய்வம் சார்ந்த விஷயங்களில் கோவில் சார்ந்த விஷயங்களில் சலிப்பு ஏற்படும் காலமாக காணப்படுகிறது. கவன சிதறல் வேண்டாம்.
  • நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், உறவினர்களின் பொறாமையால் பாதிப்புகள் உண்டாகும்.
  • வெளிநாட்டிலிருந்து பண ஆதாயம் வெளிநாட்டிலிருந்து வியாபார தொடர்புகள் எதிர்பார்த்து இருப்பவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள்.

ஆரோக்கியம்

  • ஆரம்பத்தில் அதாவது இந்த வருடத்தில் 2025ம் ஆண்டில் ஆரோக்கியத்தில் எந்த ஒரு பெரிய பிரச்சனைகள் வராது.என்றாலும் மார்ச் 2026 தொடங்கும் பொது  சில சிறிய பாதிப்புகள் தோன்றத் தொடங்கலாம். கொலஸ்ட்ரால், சர்க்கரை அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கண்கணிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். செரிமானம் அல்லது வயிறு தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனம் தேவை.
  • ஜனவரி 2026 முதல் உடல் ஆரோக்கியத்தில் தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம் அல்லது சோர்வு ஏற்படலாம்.
  • வாகனப் பயணங்களில் கவனம் அவசியம். வீண் சாகசங்களை தவிர்க்க வேண்டும்.
  • அதிக பணிகளால் சோர்வு ஏறப்டாமல் இருக்க முறையான தூக்கம் மேற்கொள்ள வேண்டும். முறையான தூக்கம் மேற்கொள்வதன் மூலம் தூக்கமின்மை பிரச்சினையைத் தவிர்க்கலாம்
  • மேலும் முழங்கால்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • அதிகப்படியான சர்க்கரை உணவு மற்றும் ஆல்கஹால் தவிர்க்கவும்.
  • உடல்நிலைல் பொறுத்தவரை வயதை அனுசரித்து ஆர்த்தோ, அடிவயிறு, கேஸ்டிரிக் பிரச்னை, ஒற்றை தலைவலி போன்றவை ஏற்படும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • உத்தியோகத்தைப் பொறுத்தவரை தடைகள் மற்றும் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றாலும் மனம் என்றாலும் மனம் தளர வேண்டாம்.
  • உத்தியோகத்தை பொறுத்து பணிகள் மலை போல குவியலாம் எனவே குறிப்பிட்ட காலத்தில் எல்லா  பணிகளை முடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் குறுக்குவழிகள் பலனைத் தராது என்பதை நினைவில் வைத்து கொள்ளவும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே வெகுமதியைப் பெற்றுத் தர முடியும்
  • வியாபார கூட்டாளிகள் கடைசி நேரத்தில் முதலீடு இல்லை என்று கை விரிக்கும் சூழ்நிலை வரலாம் கூட்டாளிகளின் சந்தேகங்களை சரிசெய்வது மன அமைதியை ஏற்படுத்தும்
  • வியாபாரத்தில் இலக்குகளை அடைய பல்வேறு அணுகுமுறைகள் உதவும் லாபத்தை மேம்படுத்த நுட்பங்களை புரிந்து கொள்ள வேண்டும் வெளிநாட்டு மற்றும் வெளியூர் கொள்முதல் நடவடிக்கையில் கவனம் அவசியம். அரசு உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது
  • கலைத்துறையில் இருப்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழலும் அதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும் ஊதியம் மற்றும் நிலுவையில் இருந்து வந்த வரவுகள் கிடைக்கும் எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.
  • சில சக ஊழியர்கள் அல்லது நெருங்கிய கூட்டாளிகள் உங்களை ஏமாற்றலாம் கவனம் அவசியம்.
  • சமூகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் பழைய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் உயர் பொறுப்பில் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும் மேலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் தடைகள் நீங்கும் வரவுகளில் ஏற்பட்ட காலதாழ்வு படிப்படியாக குறையும் பலதரப்பட்ட மக்களிடமிருந்து ஒத்துழைப்புகள் கிடைக்கும்
  • இந்த சனி பெயர்ச்சியில் வருமானம் சீராக இருக்கும் சேமிக்கவும் முடியும்என்றாலும் எதிர்பாராத செலவும் உண்டாகும் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்
  • ஊக வணிகம் மற்றும் சரக்கு வர்த்தகம் நேர்மறையான முடிவுகளைத் தரலாம், ஆனால் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் எச்சரிக்கை வேண்டும்
  • புதனே பத்தாம் வீட்டுக்கும் அதிபதியாக வருவதால் தொழில், ஜீவனம், வெளிநாட்டு தொடர்பு, முயற்சிகளில் கவனம் இருந்தால், உங்களை நீங்களே பார்த்துக் கொள்வதன் மூலமாக ஏழாம் வீட்டு சனியின் தீய பலன்களை கடந்துவிடலாம்.
  • கன்னி ராசி மாணவர்கள் வேகமாகவும் விவேகமாகவும் இயங்க வேண்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திவைக்க கூடாது

பரிகாரம்

  • ஏழாம் வீட்டில் இருக்கக்கூடிய சனியின் பாதிப்பை குறைக்க பெருமாள் கோயில்களில் சென்று விஷ்ணு வழிபாடு செய்யலாம்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு, துப்புரவுப் பணியாளர்களுக்கு, முதியவர்கள், கணவரை இழந்தவர்களுக்கு உதவி செய்வது நன்மை பயக்கும்
  • ஹனுமான் சாலிசா மற்றும் கால பைரவ அஷ்டகம் கேட்பது மிகவும் நல்லது.
  • திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதால் தம்பதிகள் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
  • நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுக்கலாம்.
  • முடிந்தால் திரநள்ளாறு சென்று, நல தீர்த்தில்  நீராடும் சனி பகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றலாம்
  • சனி கிழமை அன்று அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி, மேலும் அங்கு உள்ள சனி பகவானுக்கு நல்எண்ணெய் விளக்கு ஏற்றி வர கண்டக சனியின் தாக்கம் குறையும்
>

சனி பெயர்ச்சி - 2025- சிம்மம் ராசி


சிம்மம்  ராசிக்கு பஞ்சம சனி தீர்ந்தது ...அஷ்டம  சனி ஆரம்பம் ...ஜாக்கிரதை!

அஷ்டம சனி என்றால் என்ன?

  • ஒரு ராசிக்கு எட்டாவது இடத்தில் சனி பகவான் இருக்கும்போது அஷ்டம சனி ஏற்படுகிறது. அஷ்டமம் என்றால் எட்டு என்று பொருள்.
  • அஷ்டம சனி காலத்தில் அவசரப்பட்டு எந்த முடிவுகளையும்  எடுக்கக்கூடாது, மற்றவர்களை நம்பி ஏமாறும் நிலை வரலாம். மேலும்  சட்டப்பூர்வ விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.
  • அஷ்டம சனியால் உண்டாகும் தீமைகளை பற்றி விவரமான செய்யுள் உண்டு.மேலும் அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி எனபார்கள்.  என்றாலும் அஷ்டம சனி எல்லாருக்கும் தீமை செய்யுமா? என்றால் கட்டாயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
  • பொதுவாக முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்ம வினைகளை பொறுத்து சனி பகவான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பது ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனிகாலத்தில் என்று தான் சொல்லுவார்கள்
  • வயதிற்கேற்ப இந்த அஷ்டம சனி பிரச்சனைகளை தரும். அதாவது நான்கு வயது முதல் 15 வயது வரையுள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்கள் படிப்பில் சற்று மந்த தன்மை நிலவும்.
  • 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால் அவர்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
  • குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள், உறவினர்களால் சில பிரச்சனைகள், மனதில் எப்போதும் குழப்ப நிலை, சிலருக்கு வேலை பறிபோகும், பணியிடத்தில் தொடர்ந்து பிரச்சனை, பணப்பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை இந்த இரண்டரை வருடத்தில் தரும் என்று சொல்வார்கள்
  • சனியின் தீமைகள் ஒவ்வொரு ராசியையும் பொறுத்து மாறுபடும். சில ராசிகளுக்கு அவர் கெடுதல் செய்வதில்லை என்றும் ஜோதிடத்தில் கூற பட்டு உள்ளது.
  • பொதுவாக சனிபகவான். ஏழரை சனி காலத்தை விட அதிகம் கஷ்டப்பட வைப்பது அஷ்டம சனி காலம் என்றும் சொல்வது உண்டு .
  • சிம்ம ராசிக்கு அஷ்டம சனி எனவே சற்று எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பொது  கண்ணோட்டம்

  • கடந்த இரண்டு ஆண்டுகளில், கண்டக சனியால் ஆரோக்கியம் மற்றும் உறவுககள் பாதிப்பை சந்தித்து இருக்கும். இந்த சனி பெயர்ச்சிக்கு பிறகு  அஷ்டம சனி நடைப் பெறும்.  அதாவது சனி சிம்மத்திற்கு  8 ஆம் வீட்டிற்குச் செல்கிறார்.இது நல்லது அல்ல. இந்த பெயர்ச்சி  வாழ்க்கையின் பல்வேறு நல்ல அம்சங்களை சீர்குலைக்கலாம். பயப்பட வேண்டாம். இந்த பிரச்சனை இரண்டரை வருடமும் நீடிக்காது.
  • சனி படிப்பினையை தரும் நியாயமான ஆசிரியர். சனி பாதகம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் சரியான பாதையைத் தேர்வு செய்ய வேண்டும். கட்டாயம்  குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக் கூடும்.
  • என்றாலும் அஷ்டம சனியால் உண்டாகும் சில நன்மைகளும் உண்டு. உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு இனிமையாகும்.உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள முடியும்.
  • முதல் 6 மாதங்கள் கல்வியை பொறுத்து பெரிய பிரச்சனைகள் வராது. சிலருக்கு புகழ்பெற்ற பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை கிடைக்கும்.
  • ஜூலை 2026 முதல், அஷ்டம சனிப் பெயர்ச்சியின் உண்மையான தாக்கத்தை உணர முடியும்
  • பொதுவாக எல்லோருக்கும் அஷ்டம சனி பாதிப்பை ஒரே மாதிரி ஏற்படுத்தாது. ராசிகளுக்கு தக்கபடி மாறுபடும். அதில் சிம்ம ராசிக்கு கஷ்டம் கொஞ்சம் அதிகமாக கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
  • இந்த சனி பெயர்ச்சியில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது என்பதால் பிறரை நம்ப வேண்டாம்.
  • சட்டப்பூர்வ விஷயங்களில் கவனம் தேவை. வழக்கு, மாறுதல் போன்ற சட்டப்பூர்வ விஷயங்களில் சிக்கிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. உடல் நலத்தில் சிறிதளவு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது
  • நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.பொறுமையாக இருந்து, நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் இந்த காலகட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து செல்லலாம்.
  • மார்ச் 2025 பிறகு முதல் ஒரு ஆண்டு, முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி சிம்ம ராசியில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • இந்த நேரத்தில் ஜனன கால ஜாதகத்தில் நல்ல தச மற்றும் புத்திகள் இருக்கும் பட்சத்தில், திருமணம் கை கூடும். மேலும் வேலை மற்றும் தொழிலில் அணுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
  • என்றாலும் கடன் உபாதைகள் மற்றும் குடும்ப உருப்பினரகளுடன் மனஸ்தாபம் ஆகியவை உண்டாகும்.
  • பொதுவாக புதிதாக வீடு கட்ட நினைப்பவர்கள் புதிய வாகனம் வாங்க நினைப்பவர்கள் இந்த அஷ்டம சனியை பயன்படுத்த வேண்டாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

குடும்ப வாழ்க்கை

  • இந்த அஷ்டம சனியில் குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவது நல்லது.குடும்ப விஷயங்களில் அவமானம் ஏற்படலாம்.
  • சனி தனது 7ம் பார்வையாக, இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வாக்கில் கவனம் அவசியம். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.
  • பூர்விக சொத்து விவாகாரத்தில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாகவும் அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது.
  • பெண்கள் சுய தொழில் தொடங்குவது போன்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
  • வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப பொருளாதாரம் குறித்த விஷயங்களில் ரகசியம் பாதுக்காக வேண்டும்.
  • செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் சற்று கவனம் வேண்டும்.
  • சம்மந்த இல்லாத விஷயங்களில் தலையிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
  • மேலும் விவாகரத்து வழக்கு மற்றும் குழந்தை சம்மந்த பட்ட வழக்குகள் இருக்கும் பட்சத்தில் அது உங்களுக்கு சாதக இருக்காது. என்றாலும் குரு 11ம் வீட்டுக்கு வருவதால் இந்த வருடம் சனி தாக்கம் வெகுவாக குறையும்
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காது. குடும்ப அரசியல் தலை தூக்கும். தூக்கமின்மை உண்டாகும்.
  • ஜூலை 2026 முதல் பிப்ரவரி 2028 வரை பொறுமையாக இருப்பது முக்கியம். குடும்ப உறுப்பினர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும்.
  • குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குழந்தைகளின் கல்வி தொடர்பான பிரச்சினைகள் போன்றவை வர வாய்ப்பு உள்ளது.
  • திருமணம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் குரு பெயர்ச்சிக்கு பிறகு முயற்சி செய்யவும்.முக்கியமாக ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலத்தை நிச்சயதார்த்தம்  அல்லது திருமணம் செய்யும் அமைப்பு உண்டாகும்
  • காதலர்கள் குறிப்பாக 2027 ஆம் ஆண்டின் இறுதியில் பல அதிர்ச்சிகரமான செய்திகளால் மனம் உடையும் சூழ்நிலை வரலாம். எச்சிரிக்கை அவசியம்
  • இந்த சவாலான காலங்களில் உங்கள் துணையுடன் தொடர்பு மற்றும் புரிதலைப் பேணுவது மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளவும்
  • மேலும் காதலை பொறுத்தவரை கண்மூடித்தனமாக நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே உறவை அமைத்துக் கொள்ளும் முன் நன்கு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
  • திருமணமான தம்பதிகள் தற்காலிக சவால்களை சந்திக்க நேரலாம். நினைத்து போல் எதுவும் நடக்காது.
  • பொறுமையுடன் செயல்பட்டு, கருத்து வேற்றுமைகளை தவிர்க்கவும்.வாழ்க்கை துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் அவர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

ஆரோக்கியம்

  • ஏழாவது வீட்டில் இருந்த சனி பகவான் உங்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை கொடுத்து இருப்பார். மேலும் சனியின் தற்போதைய சஞ்சாரம் அதிக மன அழுத்தம், பதட்டத்தை அதிக படுத்தும்.
  • என்றாலும் குருவின் துணையால் உடல் நிலை பாதிப்பு இந்த வருடம் சற்று கட்டுக்குள் தான் இருக்கும். கவலை வேண்டாம்.
  • உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குறிப்பாக மூட்டு வலி, தலைவலி, தோல் நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மன அழுத்தம், கவலை, மனச்சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். தூக்கமின்மை, உணவு செரிமான கோளாறுகள் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
  • உடல்நிலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். ஏதேனும் பழைய நோய் மீண்டும் தோன்றக்கூடும்.
  • பயணத்தின் போதும், வாகனத்தை இயக்கும் போதும் கவனம் அவசியம்.
  • சிறிய காயங்கள் கூட ழுமையாக குணமடைய நீண்ட காலம் எடுத்து கொள்லாம்.
  • முறையான உணவை உட்கொள்வது, யோகா பயிற்சியை மேற்கொள்ளவது. அவசரமில்லாத வாகனம் இயக்குதல் ஆகியவை வலுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். மேலும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்திக்க முயற்சிசெய்யவும்.

தொழில் மற்றும் நிதி நிலை

  • பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
  • உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
  • என்றாலும் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது
  • மேலும் வெளி நாட்டில் வியாபாரம், வேலை, கல்விக்காக செல்ல முயற்சி செய்பவருக்கு எனது அருமையான காலம் எனலாம்.
  • சிம்ம ராசி வியாபாரிகள் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும்.
  • பூர்விக தொழில் அதாவது தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
  • உணவு தொழில்களில் இருப்பவர்கள் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும்.
  • கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மூத்த கலைஞர்களிடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறைந்து,மகிழ்ச்சியான செய்திகள் வரலாம்.
  • சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடனும் அமைதியுடனும் செயல்பட வேண்டும். தொண்டர்கள் இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிறிய சவால்களை சந்திக்க நேரலாம். என்றாலும் இலக்கை அடைய முடியும். சற்று கடினமாக உழைக்க வேண்டும்.
  • நிதிநிலையைப் பொறுத்தவரை ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். கவனம் அவசியம்.
  • பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தான் செய்ய வேண்டும். புதிய முயற்சிகளுக்கு இது சரியான நேரமாகத் தெரியவில்லை.
  • மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
  • நிதி சம்மந்தமாக யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களை நம்பி ஏமாறும் வாய்ப்புள்ளது.
  • குழப்பம், பயம் வேண்டாம். உங்களை நீங்களே செதுக்கும் காலம் இது என்பதை மனதில் வைத்து கொள்ளவும்.

பரிகாரம்

  • அமாவாசை அன்று குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவு போடலாம்.
  • முடிந்தவர்கள் சனி பகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லாம் அல்லது கேட்கலாம்.
  • சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள், மேலும் முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யலாம்.
  • சிவ ஆலயத்திற்கு சென்று, சனி பகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்ய வணங்கி வரலாம். வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகள் குறையும். மேலும் சிவபெருமானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர இன்னல்கள் ஓரளவு குறையும்.
  • பைரவ அஷ்டகம் கேட்பது மற்றும் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்வது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நம்பிக்கையையும் வலிமையையும் பெற உதவும்.
  • திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை சென்று வணங்க தடைகள் நீங்கும்.