Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

சனி பெயர்ச்சி- 2025- தனுசு ராசி



தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி ஆரம்பம் ...ஜாக்கிரதை!

அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன?

  • ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கும் நிலைதான் அர்த்தாஷ்டம சனி எனப்படும்.
  • அர்த என்பது பாதி என்று சமஸ்கிருதத்தில் பொருள். அஷ்டமம் என்பது எட்டு. அஷ்டம சனியின் பலனில் பாதி பலன் இந்த காலகட்டத்தில் உண்டு. அதாவது அஷ்டம சனியில் பாதி, எந்த அர்த்தாஷ்டம சனிஅந்த அளவுக்கு பாதிப்பையும் கொடுக்க கூடியதுதான்.
  • அர்த்தாஷ்டம சனி நடக்கக்கூடிய ராசிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு திடீர் உடல் நல பாதிப்புகள் ஏற்படுத்தி மருத்துவ செலவுக்கான திடீர் செலவுகள் ஏற்படுத்தும். அதனால் சேமிப்பு பணம் விரயமாகக் கூடிய நிலை ஏற்படும்.
  • புதிய தொழில் முயற்சிகள், வியாபாரம் உள்ளிட்டவை பெரிய வெற்றி தராமல், எடுத்த முயற்சிகளைக் கைவிடக் கூடிய நிலை வரலாம்.
  • தாயின் ஆரோக்கியத்தில் சில பிரச்னை ஏற்படலாம். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று குடியேற வேண்டி வரும்.
  • தொழில் பாதையை சனி பார்ப்பதாள் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும்.
  • சனி கடமை தவறாதவர், இந்த அர்த்தாஷ்டம சனி காலத்தில்  கடமைகளை  செய்யத் தவறினால், இந்த சனி தரும் விளைவு அதிகமாக இருக்கும்.

பொது  கண்ணோட்டம்

  • சனி பகவான் உங்கள் ராசியின், 4வது வீடான அர்த்தாஷ்டம சனியில் நுழைகிறார்.
  • என்றாலும் தனுசுயின் அதிபதி, குருக்கு சனி நட்பு என்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று சொல்லப்படுகிறது. என்றாலும்  சனி தனது 10வது பார்வையாக ராசியை பார்ப்பதால்   உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • புதிய முயற்சிகளில் எதிர்பாராத திருப்பங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உதவிகள் மற்றும் கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.
  • உடல்நலப் பிரச்சினைகளுடன், வேலை அழுத்தம் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும். இதனால் நிதி சிக்கல்கள் ஏற்படும்.
  • ஜூலை 2026 முதல் ஜூல 2027 வரை, கடுமையான சோதனை காலம் எனலாம். மறைமுக எதிரிகளைச் சந்திக்க நேரிடும். மேலும் மற்றவர்களின்  பொறாமைகளால் சில சிக்கல்களை அனுபவிக்க நேரிடும்.
  • சனிப் பெயர்ச்சியின் கடைசி ஆறு மாதங்கள், ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரை, கலவையான பலன்களைத் தரும்.
  • போட்டி சார்ந்த நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பங்காளிகளிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சமாதானமாகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது மன அமைதிக்கு உதவும்.
  • சனி மீனத்தில் சஞ்சரிக்கும் இந்த காலக்கட்டத்தில் உங்கள் மனதில் ஆன்மீக உணர்வு உண்டாலாம்.
  • தடைகள் அதிகமாக இருந்தாலும் வாழ்க்கை செழிப்பு மற்றும் அமைதி இருக்கும்.
  • வீடு, மனை, வாகனம் வாங்கும் பொது மிகவும் கவனம் அவசியம். முடிந்தளவு பழைய வாகனங்களை வாங்குவதை தவிர்க்கலாம்.
  • உதவிகள் மற்றும் கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டும்.
  • பெற்றோருடன் அனுசரித்து செல்வது அமைதியை கொண்டு வரும்.
  • தனுசு ராசி மாணவர்கள் பாடங்களில் இருந்த குழப்பங்களை நீக்கி, சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.
  • மேலும் ஆராய்ச்சி கல்வியில் ஏற்பட்ட தாமதங்கள் நீங்கி எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். உயர்கல்வியில் தடைப்பட்ட வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
  • சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளில் இருந்த குழப்பங்கள் விலகும். தந்தையிடம் ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
  • தூக்கம் இன்மை தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக விலகும்.
  • அனுபவம் இல்லாத புதிய செயல்களில் ஈடுபடும் பொழுது ஆலோசனை பெற்று செயல்படவும்.
  • ஜாமின் மற்றும் கடன் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது சிக்கல்களை குறைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் சில மாற்றமான சூழல்கள் ஏற்படும்.

குடும்ப வாழ்க்கை

  • தனுசுராசிக்கு 4வது வீட்டில் சனி பெயர்ச்சி ஆவதால் குடும்பத்தில்  மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அதிகரிக்கும். என்றாலும் குடும்பத்தில் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியான தருணங்களும் அதிகரிக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.
  • உங்கள் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு கிடைக்கும் எனவே வார்த்தையில் கவனம் அவசியம்.
  • மகன் மற்றும் மகளுக்கான திருமணத் திட்டங்களை இறுதி செய்வதற்கு இந்தக் காலம் ஏற்றது என்று சொல்லாம்.
  • குடும்பத்திலிருந்து பிரிந்திருந்தால், மீண்டும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் வாழ ஒரு வய்ப்பு கிடைக்கும். மேலும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
  • தந்தை வழியில் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். என்றாலும் தாயின் ஆதரவு கிடைக்க தாமதம் ஆகலாம்.
  • பெண்களுக்கு சுபகாரிய முயற்சிகள் சாதகமாக முடியும். தடைப்பட்ட வருவாய்கள் மீண்டும் கிடைக்கும்.
  • தனுசு ராசி பெண்களுக்கு குறுந்தொழிலில் ஆர்வத்துடன் செயல்பட்டு புதிய உயரங்களை எட்டுவார்கள்
  • திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்ற துணையைக் கண்டுபிடித்து அமைதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
  • குழந்தை பாக்கியம் தாமதமான நேயர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
  • குடும்பத்துக்காக நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். இதனால் அன்புக்குரியவர்களுடன் அமைதியான மற்றும் மகிழ்ச்சி குழல் அமையும்.
  • மேலும் நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கும் பட்சத்தில் அதில் வெற்றி பெறலாம்.
  • சனி தனது 3ம் பார்வையாக 7ம் வீட்டை பார்ப்பதால், வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டும்.
  • மதிப்பு மிகுந்த பொருட்கள் அல்லது வாகனங்கள் திருட்டு போவது அல்லது தொலைந்து போவது போன்றவை நடக்கும். எனவே கவனம் அவசியம் .
  • மேலும் சிலருக்கு நண்பர்கள் பகைவர்கள் ஆவார்கள். உறவுகள் பிரிந்து போய் அதிக சிக்ககளும் உண்டாகலாம்.
  • முன் எச்சிரிக்கையுடன் இருந்தால் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும் புரிதலும் மேம்படும். சகோதரர்களிடம் சுமூகமான உறவை கடைப்படிக்க வேண்டும். மேலும்  உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் வேண்டும்.

ஆரோக்கியம்

  • பொதுவாக தனுசு ராசிக்கு கடந்த இரண்டரை வருடங்களாக சனி  சிறந்த நிலையில் இருந்தார். இது உடல் நலனை நன்றாக வைத்து இருந்தார். ஆனால்  இந்த சனி பெயர்ச்சியை பொறுத்த வரை ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக செரிமானம் அல்லது பெண்களுக்கு கர்ப்பை  தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
  • மருத்துவ செலவு அதிகரிக்க செய்யும் இந்த பெயர்ச்சி என்று சொல்லாம். எனவே அதிக மருத்துவச் செலவுகளைத் தவிர்ப்பதற்கு முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மிகவும் முக்கியமானது.
  • உடல்நலப் பிரச்சினைகளுடன், வேலை அழுத்தம் மற்றும் பதற்றமும் அதிகரிக்கும். என்றாலும் 7ம் வீட்டுக்கு வரும் குருவும் ராசியை பார்ப்பதால் இந்த  ஜூன் 2025 முதல் ஒரு வருடத்திற்கு உடல்நலம் மற்றும் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில், மார்பு தொற்று மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.
  • சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் .

தொழில் மற்றும் நிதி நிலை

  • குரு பெயர்ச்சியின் காரணமாக இந்த ஆண்டு நிதி ரீதியாக நன்றாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • ஆனால் வரும் ஆண்டுகளில் எந்த முதலீடு செய்யும்போதும் கவனமாக திட்டமிட வேண்டியது அவசியம். மேலும் தேவையில்லாத ஆடம்பர செலவுகளை செய்வீர்கள்.
  • உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு என்றாலும் பணிச்சுமை மற்றும் தேவையற்ற தாமதங்கள் வரும்.
  • மேலதிகாரிகளுடன் மோதல் வர வாய்ப்பு உள்ளது. எச்சிரிக்கை அவசியம். உயர் அதிகாரிகள் இடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.
  • இந்த பெயர்ச்சி காலக்கட்டத்தில் பல சவால்களை சந்திக்க நேரலாம். இது தொழில் முயற்சிகளில் வளர்ச்சியயை தடுக்கலாம். கடன் சார்ந்த உதவிகளில் தாமதம் ஏற்படும்.
  • பணி மாற்ற விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
  • வேலை காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ, வீடு மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • சமூகப்பணி மற்றும் அரசியலில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படுவது அவசியம். பழைய செயல்களால் ஒரு விதமான தடுமாற்றம் ஏற்படும்.
  • வியாபாரம் தொடர்பாக பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டு வர்த்தகத் தடை நீங்கி, புதிய ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
  • விவசாயத்தில் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் உழைப்புக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். நிபுணர்களின் ஆலோசனைகள் அதிக விளைச்சலை அதிகபடுத்தலாம்.
  • உதிரிப் பாகங்கள் மற்றும் கமிஷன் சார்ந்த தொழில்களில் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
  • சனி தனது 7ம் பார்வையாக பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் மற்றும் பணியில் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் எதிரிகள் உருவாகலாம். கவனம் அவசியம்.
  • பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் சனி சஞ்சாரம் செய்யும் போது சொத்து வாங்குவதை முடிந்தளவு  தவிர்க்கலாம்.
  • செய்து கொண்டு இருந்த வேலையில் தொந்தரவு ஏற்பட்டு வேலையை விடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் நல்ல வேலை கிடைக்கும்.
  • சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சுயமாகத் தொழில் செய்தவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் விலகும்.
  • தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் கைகொடுக்கும். என்றாலும் தொழிலில் மிக கவனம் அவசியம்.

பரிகாரம்

  • சோதனைக் கட்டத்தைக் கடக்க லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வர வேண்டும். மேலும் இது உங்களுக்கு பலம் அளிக்கும்.
  • மேலும் வராகி அம்மனை வழிபட்டு வர முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.
  • சனிக்கிழமையன்று கருப்பு எள் தானம் செய்யலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யலாம்.
  • சனி காயத்ரீ மந்திரத்தை 7 முறை உச்சரிப்பத்தின் மூலம் அர்த்தாஷ்டம சனியால் உண்டாகும் பிரச்சனைகள் நீங்கும்.