விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தீர்ந்தது ..பஞ்சம சனி சனி ஆரம்பம் ...
பஞ்சம சனி என்றால் என்ன?
- சனி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் இந்த நிலையே பஞ்ச சனி என்று அழைக்கப்படுகிறது.
- தெளிவான சிந்தனைகள் இல்லாமல் மனதில் தேவையற்ற குழப்பங்களுடன் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் சோர்ந்து இருக்கும் சூழலை ஏற்படுத்த வாய்ப்புண்டு. பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடலாம்.
- பஞ்சம ஸ்தானம் 5வது வீடு, உயர்கல்வி, குழந்தைகள் மற்றும் மிக முக்கியமாக கடந்த பிறவியில் நீங்கள் செய்த கர்மாவை தீர்மானிக்கிறது. இங்கு தீய கிரகம் இருப்பது நல்லது அல்ல.
- உயர்கல்வி மற்றும் குழந்தைகளைப் பெறுவதில் அல்லது கருத்தரிப்பதில் சிக்கலை உருவாக்கலாம்.
- மேலும் குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படும். கவனம் அவசியம்.
- என்றாலும் பஞ்சம சனி அனைத்து ராசிக்கும் தீங்கு செய்யாது என்பதை நிலைவில் வைத்து கொள்ளவும்.
- மேலும் பஞ்சம சனி ஆரம்பிக்கறது என்றால் அர்தாஷ்டம சனி முடிந்து விட்டது என்று பொருள். எனவே அர்தாஷ்டம சனி முடிவதால் எதிலும் தடை நீங்கி, செயல்களில் மேன்மை உண்டாகும்.
- சனி இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வாக்கியில் கவனம் தேவை
பொது கண்ணோட்டம்
- விருச்சிக ராசி அர்த்தாஷ்டம சனி முடிந்து என்பது தான் நல்ல மிக நல்ல செய்தி ஆகும். கடந்த சில வருடங்களாக 4ம் வீட்டில் சனி சஞ்சரித்தால் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம் மற்றும் தொழில் வளர்ச்சியைப் பாதித்து இருக்கும்.
- 5ம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு சனி மாறுவதால், உடல்நலம் மற்றும் தொழில் விஷயங்களில் குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் என்று சொல்லாம்.
- பதற்றம் மற்றும் மனச்சோர்விலிருந்து வெளியே வர முடியும் ஒட்டுமொத்தமாக, ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தைத் தவிர, தற்போதைய சனிப் பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு சற்று சாதகமாக தான் இருக்கும் என்று சொல்லாம்.
- அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில மாறுதல்கள் நிகழலாம் நண்பர்களுடன் சிறிது காலம் இடைவெளி விட்டு இருப்பது நல்லது.
- வணிகத்தில் முடிவுகளை எடுப்பதற்கு முன், அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
- கமிஷன் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு சற்று மாறுபட்ட சூழ்நிலைகள் உருவாகலாம்.
- காரியங்களுக்காக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும் பாகப்பிரிவினை சம்பந்தமான முயற்சிகள் நல்ல பலனைத் தரும் .
- பிரபலமான நபர்களின் தொடர்பு கிடைக்க வாய்ப்புள்ளது குலத்தொழில் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும்.
- நீண்ட தூரம் பயணிக்க வாய்ப்புகள் உண்டாகும் பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
- என்றாலும் இந்த பெயர்ச்சி மிகவும் சாதகமான பெயர்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை இந்த காலக்கட்டத்தில் உறவுகளில் சவால்கள் காணப்படலாம் மேலும் சவால்களை சமாளிப்பது எளிதான காரியமாக இருக்காது மற்றவர்களுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.
- விருச்சிக ராசி மாணவர்களுக்கு புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும் மேலும் விருச்சிக ராசி மாணவர்கள், தங்களுது நண்பர் வட்டத்தில் இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம்
- பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நல்லதையும் கெட்டதையும் கலந்து தரும் ஒரு பெயர்ச்சியாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்
குடும்ப வாழ்க்கை
- இந்த பெயர்ச்சியை பொறுத்த வரை, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் இணக்கமான குடும்ப உறவைப் பராமரிக்க முடியும்.
- ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தாலும், அது நடக்க சாத்தியம் இல்லை என்றாலும் புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரலாம் என்பது மன அமைதியை தரும்.
- மூத்த சகோதர சகோதரிகளுடன் சச்சரவுகள் ஏற்படலாம். சூழ்நிலையை அமைதியாகக் கையாள்வது அவசியம்.
- திருமணத்திற்கு காத்திருப்போருக்கு, திருமணம் தாமதம் ஏற்படும். மேலும் குழந்தைகளுடனான உறவுகள் சில கவலைகளை ஏற்படுத்தலாம். அவர்கள் உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு எதிராக நடந்து கொள்ளலாம்.
- சனி தனது 3வது பார்வையாக, 7ம் வீட்டை பார்ப்பதால் கணவன் மனைவி உறவுகளில் சில புரிதல் இன்மை இருக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். சில விஷயங்களில் விட்டுக்கொடுப்பது அமைதியைத் தரும்.
- குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வதும், அவர்களைப் புரிந்து கொண்டு ஆதரவளிப்பதும் மன அமைதியைத் தரும்.
- தந்தையின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கக்கூடும். பெண்கள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
- நண்பர்களுடன் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதை குறைத்துக் கொள்ளுங்கள்.
- திருமணமான தம்பதிகள் கடுமையான மோதல்களையும் தவறான புரிதல்களையும் சந்திக்க நேரிடும் எனவே குடும்பத்தில் முன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம் எதிரிகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
- ஆகஸ்ட் 2027 முதல் பிப்ரவரி 2028 வரையிலான காலம் கலவையான பலன்களைத் தரும் முடிந்தால் இந்தக் கட்டத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம்.
- ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை காலங்கள் திருமணம் மற்றும் குழந்தை பேருக்கு ஏற்ற காலம் எனலாம் மேலும் காதலில் இருப்பவர்களுக்கு பெரியோர்களின் சம்மந்தம் கிடைக்கும்.
- பொதுவாக சனியின் தாக்கத்தால் காதல் உறவுகளில் தீவிரம் இருக்கும் மற்றும் வலு அடையும்.
ஆரோக்கியம்
- இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தில் சிறிய பின்னடைவுக்கு சாத்தியம் இருப்பதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- இந்த சனிப் பெயர்ச்சியின் முதல் மூன்று மாதங்கள் சிறப்பாக இருக்கும். ஏனெனில் குரு உங்களுக்கு மே2025 வரை நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவார்.
- பிறகு குடும்பத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த காலகட்டத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
- சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்து கொள்ளவது நல்லது.
- வேலை அழுத்தம் திடீரென்று அதிகரிக்கக்கூடும். எனவே உடற் பயற்சி அவசியம். ஆரோக்கியமான உணவு முறையை கடை பிடிக்க வேண்டும்.
- ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை காலத்தில் உங்களின் உடல் பிரச்சனைக்கு முல காரணத்தை கண்டு அறிவீர்கள்.
தொழில் மற்றும் நிதி நிலை
- விருச்சிக ராசிகரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சியில் தொழில் மற்றும் பணியிடத்தில் இருந்து வந்த அழுத்தங்கள் குறையும் புதிய வேலை வாய்ப்புகளுக்கான முயற்சிகள் பலனளிக்கும்.
- உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- மேலும் பணியில் சில புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பணி செய்யும் இடத்தில் இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள்.
- உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை தைரியமாக எடுத்துசொல்வது உங்களுக்கு சாதகமாக அமையும் .
- வருமானம் சற்று குறைந்த இருந்தாலும், திறமையை வெளிப்படுத்துவது எதிர்காலத்தில் பெரிய முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைக்க இந்த பெயர்ச்சி உதவும் எனலாம்.
- சிலருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிட்டும்.
- வேலைகளை மாற்றம் நல்ல வெற்றி தரலாம் என்றாலும் ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் வேலைகளை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பலன்களைப் பெறலாம் செல்வத்தைக் குவிக்கும் போக்கில் வெற்றி பெறலாம்.
- வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி, உற்சாகத்துடன் செயல்படத் தொடங்குவார்கள் .
- வியாபாரத்தில் வருமானம் ஏற்ற இறக்கமாக இருந்தாலும், புதிய வாய்ப்புகள் தேடி வரும் பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள்.
- மேலும் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க சில புதிய முதலீட்டு கொள்கைகளை பின்பற்றவார்கள்.
- விவசாயத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும் என்று தான் சொல்ல வேண்டும்.
- கலைத்துறையில் இருப்பவர்கள், தற்போதைய சூழலைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது உங்கள் செயல்பாடுகளில் ஆர்வம் குறைய வாய்ப்புள்ளது. என்றாலும் வெளிநாட்டு வாய்ப்புகளில் இருந்த தாமதங்கள் நீங்கி, சாதகமான சூழ்நிலை உருவாகும்.
- அரசியல்வாதிகளுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கி, எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகளும், புதிய பொறுப்புகளும் கிடைக்கும் காலம் வரும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் பணிவுடன் நடந்து கொள் வேண்டும்.
- இதுநாள் வரை தடைபட்டிருந்த உதவிகளும், கடன் முயற்சிகளும் இனி நிறைவேறும். வியாபாரத்தில் நிலவிய இழுபறி நிலை முடிவுக்கு வரும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். செயல்களில் இருந்த தயக்கம் நீங்கி, புதிய உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
- என்றாலும் வருமான விஷயங்களில் கவனமாக இருக்கவும். சுப காரியங்களுக்கான முடிவுகளை எடுக்கும் போது, யோசித்து செயல்படுங்கள்.
பரிகாரம்
- முடிந்தவர்கள் நாமக்கல்லில் வீற்றிருக்கும் ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் மனத்திற்கும், சிந்தனைக்கும் நல்லது.
- சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் மற்றும் அன்ன தானம் செய்யலாம் .
- சனிக்கிழமையன்று ஸ்ரீ ஹனுமான் சாலிசாவை எட்டு முறை பாராயணம் செய்யலாம்.
- எதிரிகளிடமிருந்து பாதுகாப்பைப் பெற, சுதர்சன மந்திரத்தைக் கேட்கலாம்.
- அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்வதால் தீய விளைவுகளை களைய முடியும்.