Showing posts with label கிரகங்கள். Show all posts
Showing posts with label கிரகங்கள். Show all posts

தனுசு லக்கினத்தின் பொது பலன்கள்

 


    • சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார் சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக நன்மை செய்வார் 
    • செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார்.
    • குருவும் செவ்வாயும்  சேர்ந்திருந்தால் குரு மங்கள யோகம் கிடைக்கும்.
    • பாக்கியாதிபதி சூரியன்  எட்டில் மறைந்து சனியோடு சேர்க்கை பெற்று இருந்தால  தியாகசீலராகவும், போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் செல்ல நேரிடும் 
    • சந்திரனும் சுக்கிரனும்  சேர்ந்த இருந்தால்    தனுசு லக்னத்திற்கு ஆசையை தூண்டி  சுகவாழ்விற்கு கடனை வாங்க செய்து  அதன் மூலம் அசிங்கம்,அவமானம் போன்ற கெடுபலனை சந்திர அல்லது சுக்கிர தசையில்  தரும்.
    • புதனும் சந்திரனும்  இணைந்தால் ஏதேனும் ஒரு கிரகத்தின் தசா நடந்தாலும் வேதனை தரும் 
    • ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் இணைந்து இருந்தால் கடன், பகை, வழக்கு, நோய், அவமானம் என்று புதன், சுக்கிர தசா முழுவதும் நிகழும்.
    • ஆனி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை இயற்கை எய்தலாம் என்று நூல்கள் சொல்கின்றன 
    •  

பொது பலன்கள் 

    • சத்தியவான், நல்ல குணமுடையவன், நன்றாக பேசுபவன் , தனவான் , பழகுவதற்கு இனியவன் , வித்தையுடையவன்
    • இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்கள், நல்ல பலமுள்ள உடலமைப்பு உள்ளவர்கள், வட்டமான நெந்தி, தீண்ட அழகான மூக்கு நீண்ட அல்லது சற்று உருண்டையான முகம்,   அழகிய பல்வரிசை  உள்ளவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பானவர்கள் தன்னம்பிக்கையுள்ளவர்கள், தீர்க்கதரிசி எதையும் எளிதில் கிரகிக்கும் சக்தியுள்ளவர்கள், சுய கவுரத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
    • இடுப்புக்கு கீழ் குதிரையும், இடுப்புக்கு மேல் வில் பிடித்த மனிதன் சின்னம்: அந்த சின்னத்திற்கு ஏற்றபோல் திறமைசாலிகள, தானதர்ம சிந்தனை கொண்டவர்கள், எந்த செயலிலும் குறிக்கோளுடன் செயல்படுவார்கள்.
    • எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள், தான் சரியென்று எண்ணியதை அடித்துச் சொல்லுவார்கள், உரத்த அதிகாரமும் கட்டளை இடுவதும் போன்ற குரலில் பேசுவார்கள் பண்பும் ஆசாரமும் உள்ளவர்கள் முன் கோபி, ஆனாலும் இரக்ககுணம் உள்ளவர்கள். பேச்சி கெட்டிக்காரர்கள். எல்லோரிடமும் பிரியமாகப் பழகுவார்கள். கொஞ்சம் தற்பெருமை உள்ளவர்கள். ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் ஈடுபட்டுப் புகழ்பெறக் கூடியவர்கள்.
    • தனுசு லக்னத்தின் அதிபதி குரு பகவனாவார். தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவாளிகள் மற்றும் விவேகம் மிக்கவர்கள். இவர்கள் அயல் நாடுகளுக்குப் பயணம் செய்து பொருள் ஈட்டுவார்கள். இவர்கள் வயதில் மூத்தவர்களையும், படித்தவர்களையும் மதித்து மரியாதை செலுத்துவார்கள். சுறுசுறுப்பான மனநிலையை கொண்டவர்கள். 
    • இவர்களுக்கு வாழ்க்கையின் முற்பகுதியை விட பிற்பகுதியில் செல்வச் செழிப்பு அதிகம் பெற்று இருப்பார்கள்.
    • தாராள மனது கொண்டவர்கள். இவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவராவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். புகழ்ச்சியில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். 
    • ஆலய மற்றும் பொது ஸ்தாபனங்களுக்கு  பொது ஸ்தாபனங்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வார்கள்.
    • பழைமையான விஷயங்களிலும், வேதம் மற்றும் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். வீண் பகட்டு இவர்களிடம் இருக்காது. 
    • பிறரிடம் உண்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களும் அதே போல இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் தயாள மற்றும் ஈகை உள்ளம் கொண்டவர்கள்.
    • நல்ல ஒழுக்கமுடையவர்கள். மனிதாபிமானத்துக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். இவர்களால் இவர்களின் சகோதர, சகோதரிகள் தான் பயனடைவார்களோ தவிர அவர்களால் இவர்களுக்கு எந்த பயனும் இல்லை. உறவினர்கள் இவர்களை மோசம் செய்தால் அவர்களின் உறவை துண்டித்து கொள்ள தயங்க மாட்டார்கள். நல்ல இனிமையான குரல் வளம் கொண்டிருப்பார்கள்.
    • இவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். எப்பேற்பட்ட கஷ்டங்கள், எதிர்ப்புகள், வம்பு வழக்குகள் இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிட்டடாலும் அவைகளை வாழ்கையின் ஒரு அங்கமாக ஏற்று கொண்டு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வார்கள். தர்ம சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.
    • இவர்கள் எல்லோருக்கும் ஆலோசனை சொல்லும் இடத்தில் இருப்பார்கள்.  எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்களிடம் ரகசியம் மட்டும் எதையும் சொல்ல கூடாது. தன்னுடைய சொந்த கருத்துகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பார்கள். ஆனால் எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்து முடிவு எடுப்பதில் வல்லவர்கள்.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 30

துலாம் லக்கினம்

பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு

பகருவேன் புந்தியுமே பகையுமாவர்

சீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்

சிவசிவா செம்பொன்னும் சேதமாகும்

நீரப்பா நெடுமாலும் கோணமேற

நீணிலத்தில் பேர்விளங்கும் நிதியுமுள்ளோன்

ஆரப்பா போகருட கடாக்ஷத்தாலே

அப்பனே புலிப்பாணி பாடினேனே


பொருள்:

இப்பாடலில் தனுசு  லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“தனுசு லக்கினத்தில் பிறந்தவர்கள் புதன் பகை ஆவார். ஆனால் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார் என்று குரு அருளால் உரைக்கிறார்

 விளக்கம்:

ராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையா கொண்ட தனுசு ராசியை இலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகழப்படும் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன் விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யா வசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன்.


திருமண வாழ்க்கை

  • தனுசு இலக்கினகாரர்கள் திருமணம் தாமதப்படும். சற்று தாமதமாக நடந்தால் நல்லது.
  • தனுசு லக்ன, ஜாதகர்க்கு மிதுன ராசி ஏழாமிடமாகும். புதன் நீச்சமாயிருந்தாலும், பகையாக இருந்தாலும் திருமணம் தாமதப்படும்.  ஒருசில குழந்தைகளே இருக்கும்
  • திருமணமே வேண்டாமென்று வாதாடி. பிறகு செய்து கொள்வார்கள். திருமண வகையில், பயணச் செலவும், உறவினர் கூடிப் பங்கு பெறுவதற்கும் பெரும் பாடு ஏற்படும். உறவுக்குள்ளேயே திருமணம் அமையலாம். திருமணம் படிப்பை உத்தேசித்து நிச்சயிக்கப்படும்.
  • தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை மிகுந்த புத்திக் கூர்மை கொண்டவர்களாகவும் - சாமர்த்தியம் உடையவர்களாகவும் இருப்பார்கள்
  • வாழ்க்கைப் போராட்டங்கள் பல அமையினும், வாழ்க்கை துணை அதற்கு ஏற்ப நடந்து கொள்ளவார்கள் 
  • புதன் நல்லபடி காணப்பட்டால், வாழ்க்கைத் துணை மூலமாக மிகப் பெரிய நன்மைகள் வந்து சேரும். புதன் கெட்டிருந்தால், வாழ்க்கை துணைக்கு ஞாபக மறதி ஏற்படும். மேலும் ஏதேனும் குற்றம் கண்டு பிடித்தவண்ணம் இருப்பார். வாழ்க்கை துணை அதிகம் பேசக் கூடியவராவார்.
  • தனது துணையை முழுவதுமாக முழுவதும் நேசிப்பர். தனது துணையை சமமாக எண்ணுவர். 
  • 7 – ஆம் அதிபதி உச்சமானால், தனுசு லக்னக்காரருக்கு திருமணம் ஆனவுடன் மிகப்பெரிய கௌரவம் கிட்டும்
  • காதல் வெற்றி அடையும்.ஆனால் காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்

தொழில்

  • பாரம்பரியத்தில் பற்றுள்ளவர். ஆசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொருளாதார நிபுணர், நீதிபதி, புரோகிதம், வங்கித்துறை, மடாதிபதி, மத தலைமை, கல்வித்துறை, பதிப்புத்துறை போன்ற தொழில்கள் அமையலாம்.
  • புதனுடன் 9,12 க்கு அதிபதிகளான சூரியன், செவ்வாய் இணைந்து 9,12 ல் சந்திரன், ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய அற்புத அமைப்பு உண்டாகும்.
  • புதன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் பூமி, வேளாண்மை, விவசாய தொடர்புடைய தொழில், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 
  • புதனுடன் சனி சேர்க்கைப் பெற்றால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யக்கூடிய வாய்ப்பும், சனி பலமிழந்திருந்தால் அடிமைத் தொழில் செய்யக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். புதன், குரு சேர்க்கை பெற்றால் வக்கீல் தொழிலில் அரசாங்க ஜீவனம் உண்டாகும்.
  • சனி வலிமை பெற்று, 10 ல் சூரியன் செவ்வாய் இருந்தால் அரசாங்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கக்கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும் 
  • தனுசு லக்னம் உபய லக்னம் என்பதாலும், புதன் 10ம் அதிபதி மட்டுமின்றி 7ம் அதிபதியாகவும் இருப்பதாலும், உபய லக்னத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி என்பதாலும், திரிகோணங்களில் அமைந்தால் மட்டும் கூட்டால் நற்பலனை பெறமுடியும்.
  • தனுசு லக்னத்திற்கு 7ம் இடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத் தொழில் செசய்வதைத் தவிர்த்து, எதிலும் தனித்து செயல்படுவது, உத்தியோகம் செய்வது உத்தமம். 
  • புதன் 10க்கு உரியவர் என்ற வகையில் கம்ப்யூட்டர், கணிதம், வங்கிப் பணி, பங்குச் சந்தை போன்றவற்றில் அனுகூலமும்,  குரு போன்ற சுபர் பார்வை பெற்றால் நூல் ஆசிரியர், பதிப்பகம், பத்திரிகைத் துறை, புத்தக வெளியீடு, ஆசிரியர் பணி போன்ற துறைகளில் புகழ் பெறக்கூடிய யோகமும் அமையும். புதன் கெட்டால் எந்த தொழிலும் சிரமம் ஏற்படும் 
  • புதன் ராகு, கேது போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றால் சட்டத்திற்கு புறம்பான தொழிலில் ஈடுபடக்கூடிய அவலநிலை ஏற்படும்.
  • 7 ஆம் இடம் பாதக ஸ்தானமாகவும் மாரகஸ்தானமாகவும் அமைவதால் பாதகாதிபதியாகிறார். நான்காம் இடத்தில் நீசம் பெற்றால் ஜீவன பாவம் வலுக்கும்
  • கிரகங்கள்  

    சூரியன் :    9 வீட்டுக்கு உரியவர். யோககாரர் தான் . லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரியமான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்

    சந்திரன் : தனுசு லக்னத்திற்கு அவமானம், அவப்பெயர், கண்டம் போன்ற கெடு பலனைத் தரும் அட்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால்  சந்திரன் தன் தசா புத்திகளில் வேதனையை தர தவறமாட்டார்.

    செவ்வாய்:  சிறந்த யோககாரரே  . 12, 5 க்கு உரியவர். சூரியனை விட செவ்வாயே அதிகமாக நன்மை செய்வார்  

    குரு:  இவர் 2 மற்றும் 5க்கு உரியவர். தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்..

    புதன் : புதன் 7க்கு  மற்றும் 10 க்கு உரியவர். யோகாரர் ஆவார் ஆனாலும் தனுசு லக்னாத்திற்கு புதன் பாதகாதிபதியாக செயல்படுவதால் தன் தசா/புத்தியில்  யோகமான பலனை வழங்க மாட்டார்

    சுக்கிரன்: தனுசு லக்ன அதிபதி குருவிற்கு  சுக்கிரன் பகை கிரகம்.  தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் ஆறாம் அதிபதியாகவும், பதினொராம் அதிபதியாகவும் விளங்கும் சுக்கிரன் ஏதோ ஒரு வகையில் லாபத்தை சுக்கிரன் தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு வழங்கினாலும் கடன்,வம்பு,வழக்கு,நோய் போன்ற கெடுபலனையும் வழங்க தவறுவதில்லை. சுக்கிர தசா  பொதுவாக முழுமையான சுபபலனை வழங்காது .

    சனி:  தனுசு லக்னத்திற்கு 2 மற்றும் 3க்கு  அதிபதியாக  சனி இருந்தாலும்  தன் தசா/புத்தியில் தனுசு லக்னத்தாற்கு  நன்மையும்,தீமையும் கலந்தே தருவார்.   எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் மூன்றாம் அதிபதியோ/மூன்றில் அமர்ந்த கிரகமோ தன் தசா/புத்தியில் நன்மையைத் தராது.

    ராகு & கேது  : குரு அணிக்கு சர்ப கிரகங்களை சுப பலனை வழங்காது. மேலும் சனியைப்போல் ராகு என்ற அடிப்படையிலும் சுபப் பலனை தனுசு லக்னத்தில் பிறந்தோருக்கு தராத நிலையில் ராகு, கேது உள்ளது.


    தனுசு   லக்கினம்  – நட்சத்திரம் 


    தனசு  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: மூலம், பூராடம், உத்திராடம்-1 நட்சத்திரங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது தனசு   லக்கின பலன்கள்  பார்ப்போம்.
    இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
    அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


    தனுசு  லக்கினம்   – மூலம்  

    மூலம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, கேது தாக்கத்துடன் இருப்பார்.

    இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய காரியங்களை தவறாமல் ஒழுங்காக செய்வார்கள். கேது சாரத்திலும், குருபகவானின் ராசியிலும் பிறந்திருப்பதால் மத சம்பிரதாயங்களிலும் ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபாடு அதிகமிருக்கும். மற்றவர்களிடம் எதிர் கேள்வி கேட்டதில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை. திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். கல்லூரி பருவத்தில் நிகழ்ந்த காதல் சம்பவங்கள் அடிக்கடி மனதில் நிழலாகும். ஒய்வு பெற்ற பின்பும் சும்மா இருக்க மாட்டார்கள். சிலர் சுய தொழில் தொடங்குவார்கள். பலர் வயதான காலத்தில் மண வாழ்க்கையை துறந்து துறவறத்தில் நாட்டம் கொள்வார்கள். கோயில்கள், சித்தபீடங்கள், தியான மண்டபங்களை தேடிப் போய் சரணடைவார்கள்.

    தனுசு  லக்கினம் – பூராடம்  

    பூராடம்    நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், குரு தாக்கத்துடன் இருப்பார்.

    பூராட நட்சத்திராதிபதி சுக்கிர பகவான் என்பதால் வாசனை திரவியங்கள் மீது அதிக ஆசை வைத்திருப்பார்கள். எப்பாடு பட்டாலும் நினைத்ததை நினைத்தபடி நிறைவேற்றுவார்கள். மந்திரியோ மண் சுமப்பவனோ எந்த பாகுபாடு பார்க்காமல் பழகுவார்கள். சூதுவாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு படுத்துவார்கள்.  சிறு வயதில் கல்வியில் ஆர்வம் இல்லாமல் இருந்தாலும், போக போக சரியாகி விடும். அமைதியை அதிகம் விரும்புவதால் பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையை கண்டால் மனதை பறி கொடுப்பார்கள் உற்றார் உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவார்கள். கண்ணால் பார்த்ததை கையால் வரையும் ஆற்றல் கொண்டவர்கள், யோகம் தியானம் போன்றவற்றிலும், தற்காப்பு கலைகளிலும் ஆர்வம் இருக்கும். சுய மரியாதையும், சுதந்திரத்தை விரும்பவராகவும் இருப்பதால் தன்னுடைய சொந்த விஷயங்களில் தலையிடாதவர்களிடம் மட்டும் பழகுவார்கள்

    தனுசு  லக்கினம்   – உத்திராடம் -1 

    உத்திராடம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சூரியன், குரு  தாக்கத்தில்  இருப்பார்.

    குடும்பத்தில் மீது அதிக அக்கரை உள்ளவர்கள். அழகாக இருப்பார்கள் நல்ல வாழ்க்கைத் துணையும் அமையும்.  கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்திருப்பார்கள். எதிலும் எளிமையை விரும்புவார்கள். ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள். எந்த ஒரு காரியத்தையும் நேர்மையாக, தெளிவாக சிந்தித்து செயலாற்றுவார்கள். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்கமாட்டார்கள். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். ஆனால் நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய துணிவார்கள். ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையையும், மற்றவர்களை மதித்து நடக்கும் பண்பினையும் கொண்டவர்கள். இவர்களை எளிதில் எடை போட முடியாது. மர்மமான மனிதர்களாக இருப்பார்கள். எப்போதும் பொருளாதார ரீதியாக பஞ்சம் இருக்காது.அகங்கார குணம் கொண்டவர் என்பதால் குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பங்கள் ஏற்படும். தான் செய்கின்ற தவறுகளை மிக சமார்த்தியமாக சமாளித்து விடுவார்கள்.


    மந்திரம் 

    தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய துர்க்கை துதி மனதார சொல்லி வருவது நல்லது  


    இசைதந்து இல்வாழ்வின் இடர்நீக்கிக் காப்பவளே,
    விசையுடனே மணமாலை விருப்பமொடு அளிப்பவளே,
    திசையெல்லாம் திருவிளங்கத் திருவடியால் நடந்தவளே,
    அசைவற்றபொருளதையும் ஆட்சிசெய்வாய் துர்க்கையளே

    ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



    விருச்சிக லக்கினத்தின் பொது பலன்கள்

     




      • சில நூல்கள் சூரியன் , சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் சொல்கிறது.
      • செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள்.  குருவும், சனியும் புதனும் கொல்ல  மாட்டார்கள் என்று சில நுல்கள் சொல்கிறது.  மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்
      • விருச்சிக லக்கினத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள்
      • புதன் மற்றும் குருவின் சேர்க்கை அல்லது  பார்வை, புதன் நட்சத்திரத்தில் குரு இருப்பது அல்லது குரு நட்சத்திரத்தில் புதன் இருப்பது நல்லது.
      • புதன் வீட்டில் குரு இருப்பது  அல்லது குரு வீட்டில் புதன் இருப்பது நல்லது.
      • புதனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுடன் ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை 
      • புதனுக்கு அடுத்த வீட்டில் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை 
      • சுக்கிரன் 3, 8 ஆம் பாவங்களில் அதிக நற்பலன் தருவதில்லை.
      • ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார் என்று நூல்கள் சொல்கின்றன 

    பொது பலன்கள் 

      • புத்திமான் , வஞ்சகன் , தனவான் , எடுத்திட காரியத்தை முடிப்பவன் , மனைவி மீது பிரியமுள்ளவன் , வரையற்ற விஷப்பிரியன், முன்கோபமுடையவன்
      • செவ்வாயின் அதிபதி பெற்ற விருச்சிக இலக்கினகாரர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருப்பார்கள்.
      • இவர்களுக்கு முன் கோபம் என்பது உடன் பிறந்ததாகும். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். அவசரகுணம் அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு மிகவும் குறைவு.
      • தேள் சின்னம்: இந்த லக்கினகாரர்கள் கொஞ்சம் தேள் போல் வார்த்தைகளால் கொட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.  அவர்களுக்கு வேண்டியவர்க்காக எதையும் செய்வார்கள் 
      • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதை மிகவும் முக்கியம் என நினைப்பவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது இவர்கள் மூலம் காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும்
      • இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை நேரம் கிடைக்கும் போது பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள். 
      • எதிர்கள் அதிகமாக இருக்கும். எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும்
      • இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள்.
      • எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும் - நண்பர்களிடமும் - உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கக் கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.
      • இது ஒரு ஸ்திர ராசியாகும். இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும்.
      • சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும். பெரும்பாலும் இந்த லக்கினகாரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை.
      • கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள்.
      • விருச்சிக லக்னதில் பிறந்தவர் ஆண்களாக அல்லது பெண்களாக இருந்தாலும்  பெண்களின் மீது அன்பு, மரியாதை  வைத்திருப்பார்.
      • பெற்றோரிடம் பாசம் மிக்கவர். வாழ்க்கை துணையிடம் அன்பு, காதலுடையவர். நன்றாகப் பேச வல்லவர். இவர் பேச்சுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும்.
      • எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர்

    புலிபாணி ஜோதிடம்- பாடல் - 28

    துலாம் லக்கினம்

    தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற

    செழுமதியும் கோணத்தில் சேரநன்று

    அறிவித்தேன் அகம்பொருளும் அடிமை செம்பொன்

    அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்

    அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா

    மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்

    தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே

    தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே


    பொருள்:

    இப்பாடலில் விருச்சிக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் சந்திரன் திரிகோண ஸ்தானங்களில் (5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். அதற்கு மாறாக கேந்திரத்தில் இருந்தால் நேர் மறையான பலனை தருவார். என்று எல்லா வல்ல போகரின் அருளால் கூறுகிறார் “

     விளக்கம்:

    தேள் சின்னம் கொண்ட விருச்சிக லக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் கேந்திர ஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க.

    குறிப்பு:


    சூரியன், சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் என்று சொல்கிறது.

    திருமண வாழ்க்கை

    • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை அமைத்து கொள்ளவார்கள்.  
    • முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். இவர்களும் வாழ்க்கைத்துணையை எங்குமே விட்டுக்கொடுக்காமல் நேசிப்பபார்கள் 
    • பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும்
    • விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  7ம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்கு அமையும் துணை அதிக செலவினை செய்யக் கூடியவராகவும் ஆடம்பரமாக வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் விட்டு கொடுத்து போவர்கள் 
    • மகிழ்வாகத் திருமண வாழ்வு அமையும். சுக்கிரன் கெட்டுவிட்டால், மகிழ்வு பாதிக்கப்படும். வாழ்க்கை கசக்கும்.
    • இரண்டாமிடமான, தனுசு பாபக் கிரகங்களைப் பெற்றிருந்தால் குடும்ப நன்மை இருக்காது. சுப கிரகமானால், குடும்பம் வளர்ச்சி அடையும். சுப கிரகமானால் வாழ்க்கை துணையிடம் எப்பொழுதும், பண நடமாட்டம் இருக்கும்.
    • சுக்கிரனை, குரு அல்லது புதன் பார்த்தால், வாழ்க்கை துணை  அழகும் சொத்தும் மிக்க  நாகரிக உடை உடுத்துபவராக  இருப்பார்கள் 
    • விருச்சிக இலக்கின கார்கள் ஆண்ணாக  இருக்கும் பட்சத்தில் சுக்கிரன், சனி , ராகு, கேது , செவ்வாய் முபகை நீச்சமடைந்தால்  மனைவி வீட்டு வேலைகளை கவனிக்காதவராகவும் , பொறுப்பற்றாகவும் இருப்பார். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கணவன் வேலைக்கு கூட போகதவராக இருப்பர்கள் 

    தொழில்

    • 7க்கு உரிய சுக்கிரன் அருள் காரணமாக கூட்டுத் தொழில் கை கொடுக்கும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
    • இந்த லக்கினகாரர்கள்  புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும்.
    •  சூரியன்  செவ்வாயுடன் சேர்க்கை பெற்று வலுப்பெற்றால், ஆளுமை திறன் பெருமளவில் கொண்டவராக, பிறரை ஆட்சி செய்பவராக, நிலம் தொடர்பான தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவராக ஜாதகரின் வருவாய் ஈட்டும் அமைப்பு அமையும்.
    • சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காரி (சனி), ஆட்சியில் உயர்வு நிலை பெற்றால், அரசியலில் வெற்றியாளராக ஜாதகர் வலம் வருவார்..
    • சூரியன் அதன் பகை கோள்களான சனி  அல்லது ராகு ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்றால், ஜாதகர் சட்டத்திற்கு எதிரான தொழில்களை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டும் கீழ்த்தரமான நிலை ஏற்படும்.
    • சனி அல்லது ராகு ஆகியவற்றுடன் சூரியன் 8 அல்லது 12 ஆகிய மறைவிடங்களில் அமைந்தால், ஜாதகர் நிலையற்ற வருவாயுடன் வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படும்.
    • புதுப்புது யோசனைகள் வந்தபடி இருக்கும். ஒரேமாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்காது
    • சிலர்  கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவார்கள். கல்வியில் ஆர்வம் அதிகம் 
    • இந்த இலக்கின காரர்கள் ஜாதகத்தில் சூரியனுடன் குரு நல்லபடி இருக்கும் பட்சத்தில் அமைச்சர், காவல்துறை அதிகாரி, பேராசிரியர், வங்கி மேலாளர் என்று சிறிய வயதிலேயே பெரிய பதவிகளில் அமர்வீர்கள்
    • "தான்  உண்டு தன் வேலையுண்டு’ என்று அலுவலகத்தில் ஏதேனும் வேலையைச் செய்தபடி இருப்பார்கள். எதையும் படைப்புத்திறனோடும், வித்தியாசமாகவும் செய்வார்கள்.
    • எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் முக்கியமான முதன்மைப் பதவியிலும், நிர்வாகத்திலும்தான் ஈடுபாடு காட்டுவார்கள். உயர்ந்த பதவிகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.
    • நாட்டின் நலத்திட்டங்கள் அனைத்திலும் பங்கு கொள்ள விரும்புவார்கள். குறைந்தபட்சமாக அதிகார மையத்திற்கு அருகிலாவது இருப்பார்கள்.

    கிரகங்கள்  

    சூரியன் :   10ம் வீட்டுக்கு உரியவர். யோககாரர். லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் மிகவும் செல்வச் செழிப்பான அல்லது பாரம்பரியமான பெயர் சொல்லக்கூடிய குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்

    சந்திரன் : 9 ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் யோககாரர். பிறந்ததிலிருந்தே தந்தையின் வளர்ச்சி உயரும். நீடித்த, நிலைத்த செல்வத்திற்கான வழி பிறக்கும். அதே சந்திரன் பாதகாதிபதியாக வருவதால், சில விஷயங்களில் தந்தையோடு முரண்படுவார்கள்.

    செவ்வாய்:  மேஷ லக்கினாதிபதி மற்றும் அஷ்டமதிபதியும் ஆவார். விருச்சிக லக்னத்திற்கு லக்னத்தில் அமர்ந்து செவ்வாய் ருசக யோகத்தைத் தருவார். 
    புதன் : இவர்  11 மற்றும் 8 க்கு உடையவர். 11க்கு உடையவராயினும் யோகமில்லதவர். மராகதிபதியும் ஆவார். அவர் தன் தசையில் மாரகம் ஒப்பான கண்டம் தரவார். 

    குரு: இவர் 2 மற்றும் 5க்கு உரியவர். தன காரகன் குருவின் தன பஞ்சம ஸ்தானாதி பதியாக வருவதால் குருவின் பார்வை பலம் தொழில் யோகத்தை தரும். குரு எங்கு இருப்பினும் நன்மைகள் தராமல் இருக்கமாட்டார்.

    சுக்கிரன்: இந்த லக்னக்காரர்களுக்கு சப்தமாதிபதியாகவும் விரயாதிபதியாகவும் இருக்கிறார். சப்தமாதிபதியாகி, எடுத்த எல்லா காரியங்களிலும் வெற்றியைத் தருவார். ஆனால், கடைசிக் காலத்தில் எதுவும் கையில் இருக்காது. சுக்கிரன் 3, 8 ஆம் பாவங்களில் அதிக நற்பலன் தருவதில்லை.

    சனி: இவர் 3  மற்றும் 4 க்கு உடையவர். செவ்வாய்க்கு எதிரி அல்ல. விருச்சிக லக்னத்திற்கு சனி நட்பும், எதிர்ப்பும் கலந்த சமத் தன்மை உடையவராகவே இருப்பார்.  


    விருச்சிகம்   லக்கினம்  – நட்சத்திரம் 


    விருச்சிக  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது விருச்சிக  லக்கின பலன்கள்  பார்ப்போம்.
    இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
    அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


    விருச்சிகம்  லக்கினம்   – விசாகம் 4 

    விசாகம்   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு, செவ்வாய் தாக்கத்துடன் இருப்பார்.

    விசாகத்தின்   அதிபதி குரு ஆவார். அனைவரிடமும் அன்பும் கருணையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இல்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்வீர்கள். மன உறுதி மிக்கவர்களாக இருப்பார்கள். ஆழ்ந்த சிந்தனையும், அந்தச் சிந்தனையைச் செயல்படுத்தும் ஆற்றலும்கொண்டவர்களாக இருப்பார்கள்.  பழங்காலப் பொருள்களைச் சேகரித்து பொக்கிஷமாக பாதுகாப்பதில் விருப்பம்கொண்டிருப்பார்கள். `நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்று சொல்லும் வகையில் அழகும் பண்புகளும்கொண்ட வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். 

    விருச்சிகம்  லக்கினம் – அனுஷம்   

    அனுஷம்    நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சனி, செவ்வாய் தாக்கத்துடன் இருப்பார்.

    இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி ஆவார். நெற்றிக்கண் திறப்பினும் குற்றத்தைச் சுட்டிக்காட்டத் தவறமாட்டார்கள். மதப் பற்று மிக்கவராகவும் கூச்ச சுபாவம் உடையவராகவும் இருப்பார்கள்.கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரும்  இவர்களை விரும்புவார்கள். தெய்வ நம்பிக்கை உடையவர்கள். பெரியவர்களிடத்தில் விசுவாசமும் மரியாதையும் உள்ளவராக இருப்பார்கள். பலராலும் பாராட்டப்படும் செயல்களைச் செய்வார்கள். பலருக்கும் அவர்களுடைய துன்பத்தில் ஆதரவுக்கரம் நீட்டினாலும் தாங்களது  பிரச்னைகளை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். பல நல்ல காரியங்களில் தங்களுடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

    விருச்சிகம்  லக்கினம்   – கேட்டை 

    விசாகம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  புதன் , செவ்வாய் தாக்கத்தில்  இருப்பார்.

    விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி புதன்  ஆவார். புத்திமான், கடுமையான உழைப்பாளிகள். அதேசமயம் கொஞ்சம் கடுமையானவர்களும் கூட. இலக்கை குறித்து வைத்துக்கொண்டு பயணிப்பவர்கள். இடையில் எந்தத் தடை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து ஈட்டி போல செயல்படுபவர்கள். தன் முயற்சியில் யார் குறுக்கே வந்தாலும் தயவு தாட்சண்யமே காட்டாதவர்கள். ஏறி மிதித்து முன்னேறிச் சென்றுகொண்டே இருப்பார்கள். ஆனால் தர்மம் செய்வதில் அவர்களை மிஞ்ச முடியாது. மெத்தப் படித்த புத்திசாலிகள். அறிவாளிகள். அந்த அறிவாளித் தனத்தால் தனக்கென புதுப்பாதை போட்டு அதில் பயணிப்பவர்கள்..


    மந்திரம் 

    விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய சிவ துதி மனதார சொல்லி வருவது நல்லது 


    நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்
    நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்
    ஊருளான் எனதுரை தனதுரையாக
    ஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்
    பாருளார் பாடலோ டாடல் அறாத
    பண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்
    ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்
    இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !
    செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
    செல்வ மதிதோய செல்வம் உயர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேய
    செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !

    ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



    துலாம் லக்கினத்தின் பொது பலன்கள்






    • துலா லக்னத்திற்க்கு சனி தன் பரி பூர்ண ஆசியை வழங்கி, எல்லா நன்மைகளையும் செய்வாா். சனியின் பூர்ண அருளை இவர்கள் பெறுவதால் துலா லக்னத்தாருக்கு தீர்க்காயுள் உண்டு.
    • கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.
    • துலா ராசிக்காரர்களுக்கு இரண்டு, ஏழுக்குடை செவ்வாய் பலமாக அமைந்தால் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். பொதுவாக இவர்களில் பலருக்கு சுய தொழில் அமைய சிரமப்பட வேண்டி இருக்கும்.
    • சந்திரன் ஆட்சி, உச்சம், கேந்திரம் என பலமாக அமைந்தால் இவர்களின் கணக்குகள், திட்டங்கள் எல்லாம் வெற்றியடையும். 
    • சனியும்,புதனும் சாதகமாக இருந்தால் உயர் உச்ச தொழில் அதிபர்களாக வலம் வருவார்கள்.
    • லக்னத்திலேயே செவ்வாய், ராகு மற்றும் குருவின் நட்சத்திரங்கள் இருப்பதால் செவ்வாய்க  கொல்ல மாட்டார் என்று சில நூல்கள் சொல்கின்றன
    • புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகத்தைக் கொடுக்கும்

    பொது பலன்கள் 

  • தராசு  சின்னம்: துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், நியாயத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் தராசுச் சின்னத்தைப் போன்றவர்கள்
  •  இவர்கள் எங்கேயும் எப்போதும் நீதியையே பார்ப்பார்கள். தங்களைச் சுற்றி இவர்கள் ஒரு லட்சுமணக் கோடு போட்டிருப்பார்கள். அதைத் தாண்டி வரவே மாட்டார்கள். இதனாலேயே ‘பிழைக்கத் தெரியாவர் அவர்’ என்று சுற்றத்திலும் நட்புகளிடையேயும் இவர்களைப் பற்றி சொல்வார்கள்.
  • நல்ல குணம், புத்தி, அறிவு, பொறுமை, புகழ் உடையவர், தனவான் , இரக்கம் உடையவர், ஜனப்பிரியர் , சுகவான். 
  • இனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள்
  • பெண்களைக் கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிகத் தேர்ச்சி பெறுவர். கற்பனை திறன் அதிகம்.
  • மிகுந்த ஆசை இருந்தாலும் ஆசைகள் எல்லை தாண்டும்போது இவர்களை இவர்களே கட்டுப்படுத்திக்கொள்ளும் விவேகத்தோடு இருப்பார்கள் 
  • குழந்தைப் பருவத்தில் சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில்  மிகுந்த சந்தோஷமாக  இருக்கும்  31, 32 வயதுக்கு மேல்  வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 
  • இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரனின் சரியான இடத்தில் இருந்தால் அவர்களுக்கு இன்பத்தை தரும் தேவையான அனைத்து சுகங்கள், செல்வமும், நல்ல மனைவியும் குடும்பமும் கிட்டும் என்பது உண்மை.
  • இவர் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் தன்மை கொண்டவர் என்று சில ஜோதிட நூl கள் சொல்ல்கின்றன 
  • துலா லக்கினகாரர்கள் வசீகர தோற்றம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு மரியாதையை கொடுப்பவர்கள், இனிமையான குரல் கொண்டவர்கள், பேராசை கொஞ்சம் வெளிப்படும், சகோதரர்கள் நண்பர்களால் சந்தோஷம் அடைவார்கள். குழந்தைகள் மேலுயர உதவார்கள்.
  •  சந்தோஷம் துக்கம் சேர்ந்து இருக்கும், கடன் இருந்துகொண்டு இருக்கும், அமைதியானவர்கள், கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், முயற்சியால் முன்னுக்கு வருபவர், வேலை மாற்றம் இருந்துகொண்டு இருக்கும்.
  •  படிப்பு வைத்திய செலவு  அவ்வப்பொழுது ஏற்படும், பயணம் இவர்களின் பொழுதுபோக்கு, புத்திசாலி மிக்கவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எடைபோட்டு பழகுவார்கள், அழகிய கவர்ச்சியானவர்கள், வெற்றியாளர்கள்,  அரசாங்கத்தால் அவ்வளவு நன்மை பெறமாட்டார்கள். 
  • சங்கீதத்தில் மிகுந்த நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். வாசனை திரவியத்தில் நாட்டம் இருக்கும் 

  • புலிபாணி ஜோதிடம்- பாடல் - 28

    துலாம் லக்கினம்

    கூறினேன் கோலுட யில்லு மாகில்

    கொற்றவனே கதிரவனும் கோணமேற

    சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த

    சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு

    மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க

    மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா

    தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே

    திடமான புலிப்பாணி தெரிவித்தேனே


    பொருள்:

    இப்பாடலில் துலா லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “துலா லக்கினத்தில் பிறந்தவர்கள் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) சூரியன் இருந்தால் மிக நல்ல ராஜ யோகத்தை தருவார். ஆனால் வேறு இடங்களில் இருந்தால் அவரது தசா புத்தியில் தொல்லைகள் தருவார் என்று திடமாக அறிந்து சொல்கிறார்.“


     விளக்கம்:

    கன்னியா லக்கினத்தில் உதித்த பேருக்கு குருவினால் வெகு துன்பம் வாய்த்திடும் உண்மையாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வார். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணி ஆகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.

    லக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான சூரியன் நிற்கப் பிறந்த ஜாதகருக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால் கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவே ஆகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெற எடுத்துச் சொன்னேன். உணர்க!

    குறிப்பு:

    1, 5, 9-இல் சூரியன் இருந்தால்  மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் கடவுளின் பேரருளால் கிட்டும்.

    திருமண வாழ்க்கை

    • துலா லக்கினத்தில் பிறந்தவருக்கு மேஷ ராசி ஏழாமிடமாக வருவதால் வாழ்க்கை துணை  இவர்களை மிஞ்சி சில காரியங்களில் இறங்குவர். மேலும்  சிறு சிறு விஷயங்களில் எல்லாம் பெரிதாகக் குற்றம் கண்டு பிடிப்பார்.
    •  துலாம் லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே செவ்வாயும்  சுக்கிரனோடு சேர்ந்திருந்தால் வாழ்க்கைத் துணைக்கு அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுத்து பிறகு கவலை படுவார்கள். ஆனாலும் பூமி லாபம், வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். 
    • இவர்களின் வாழ்க்கை துணை மிகுந்த தைரியசாலியாகவும், மனதில் பட்டதை உடனடியாக வெளியில் சொல்லக் கூடியவர்களாகவும், தீர்க்கமான கொள்கை கொண்டவர்களாகவும், எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். 
    • வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் வாழ்க்கை துணையிடம் அடங்கிப் போவது சிறந்தது. 
    • உங்கள் வாழ்க்கை துணைக்கு  தொழில் மாற்றம் வரும். திருமணம் நடந்த பிறகு வாழ்க்கை துணைக்கு சொத்து உங்களுக்கு கிடைக்கும்
    • பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

    தொழில்

    • துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி சந்திரன். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.
    • பொதுவாக இரும்பு எந்திரம், டிரான்ஸ் போர்ட், கட்டிட கான்ட்ரக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பார்கள். பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள்.
    • எக்காரியத்திலும் மிகமிக நிதானமாக ஈடுபடுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து முடிவுக்கு வருவார்கள். 
    • அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் மகத்தான வெற்றி கிடைக்கும் . சிலர் தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள்  மேலும்  சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர். 
    • சொந்த தொழில் மூலம் வருமானம் குறைவு. கூட்டு தொழில்  நன்மை இல்லை அதனால் பணம் இழப்பு இருக்கும்.
    • Shipping ஷிப்பிங் தொழில், ஏற்றமதி மற்றும் இறக்குமதி தொழில்கள் சிறப்பாக இருக்கும் 
    • மேலும் தண்ணிர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும்.  உயர் தர துணி வியாபாரம் செய்வது இவர்களுக்கு சிறப்பாக இருக்கும் 
    • வக்கீல், ஜோதிடர், ஆராய்ச்சியாளர் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
    • பல நாடுகளுக்கு சென்றாலும் சிலருக்கு வெளி நாட்டு இருந்து  தொழில் செய்யும் அமைப்பு இருக்காது. 
    • சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9, 12க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில்,உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்தியநாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும். இந்த ஜாதகர்கள் நிறைய பேருக்கு விவசாயம் மற்றும்  ஆசிரியராக இருப்பார்கள்.
    •  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும்.
    • தேய்பிறை சந்திரனாக இருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.
    • சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
    • சுக்கிரன் பலம் பெற்று கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
    • சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

    கிரகங்கள்  

    சூரியன் :   துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 11 ம் அதிபதியாக  இருந்தாலும் சூரியன் இங்கு நீசம் பெறுவதால் பொருளாதார பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு விதத்தில் கடன் என்பது இவர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாதது. 

    சந்திரன் : 10ம் வீட்டுக்கு உரியவர். சுக்கிரனுக்கு பகை ஆயினும் நல்லதே செய்வார். தொழில் ஸ்தானாதிபதி என்ற வகையில் நல்லதே செய்வார். 
    புதன் : இவர் 12 மற்றும் 9 க்கு உடையவர். மேலும் புதன் வீடு கன்னியில் நீசம் அடைந்தாலும் இவர் யோககாரரே ஆவார் 

    செவ்வாய்: செவ்வாய் 2 , 7 உரியவர். பகைவர் மேலும் மராகதிபதி ஆவார். செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே நல்லது. இல்லை என்றால் மரகத்திற்கு ஒப்பான தொல்லையை தரவார்.

    குரு: குரு 3, 6 க்கு உரியவர். சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைகிறார். பகை கிரகம் என்றாலும் பெரிய அளவு கெடுதல் செய்ய மாட்டார். ஆனால் யோகமில்லாதவர். 

    சுக்கிரன்: துலாம் லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். நல்லதையும் கெட்டதையும் கலந்தே தருவார் 

    சனி: சனி என்பவர் 4, 5க்கும் உரியவராக இருந்து நன்மை அளிப்பார். நல்ல யோகத்தை தருபவர். யோககாரர் ஆவார்  

    சூட்சுமங்கள்  

    • இவர்களுக்கு 8க்கு உரியவர் ஆனாலும் சுக்கிரன் யோகாரரே. தான் இருக்கும் நிலை பொறுத்து நன்மையையோ  தீமையையோ  கொடுப்பார்.
    • துலா  லக்கின என்றால் சனி (5அதிபதி என்பதால் ),  புதன் (9 அதிபதி என்பதால் ) நன்மைகள் அதிகம் செய்வார்கள். 
    • துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் பாதக அதிபதி ஆவார். அவர் 8 இல் மறைந்து குரு மற்றும் புதன் உடன் இணைந்து இருப்பது நல்ல அமைப்பு. இருப்பினும் சூரிய திசை மற்றும் புத்தி வரும்பொழுது பணம் சம்பந்தபட்ட விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்
    • துலாம் லக்கினத்திற்கு லக்கினாதிபதியே 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாக வருகிறார். எனினும் லக்கினாதிபதிக்கு அட்டமாதிபத்ய தோஷம் இல்லை. எனவே சுக்கிரன் 8 இல் ஆட்சி பெற்று இருப்பது ஜாதகருக்கு நன்மை தான்.
    • துலாத்திற்கு சனி உச்சமாகும் நிலையில் சூட்சும வலுவோ அல்லது சுபர் பார்வையோ பெறும் நிலையில் மட்டும்தான் நல்ல பலன்களைத் தருவார். இவைகள் இல்லாமல் அவர் உச்சம் மட்டும் பெறுவது அவரது தசையில் நன்மைகளைத் தராது.
    • துலாம் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று சச யோக நிலையில் இருக்கும் சனி  சூட்சும வலுப் பெறாமல் வெறும் ஆட்சி பலத்தை மட்டுமே அடைந்திருக்கும் நிலையில் நான்காமிடத்தின் முக்கிய செயல்பாடுகளான வீடு, வாகனம், தன் சுகம், கல்வி, அம்மா ஆகியவற்றில் கெடுதல்களைச் செய்வார்

    தசா பலன்கள் - சூரியன் 

      துலாம்   லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.  
      • துலாம் லக்கினத்திற்கு 11 வீடு சிம்மம்.  ஆனால் சூரியன் பகை. மேலும் சூரியன் பலமிழந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு இருக்கும்.
      • சூரிய தசாவின் சுயபுக்தி காலங்களில் ஜனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். 
      • ராகு லக்னத்திற்கு 8, 12-ல் அமையப் பெற்று, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் சூரிய தசை காலத்தில் பகைவர்களால் பிரச்சினை, கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு, பண விரையம் ஏற்படக்கூடிய நிலை, விபத்தினால் கண்டம், அலர்ஜி பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும்
      • புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று இருந்தாலும், சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் சூரிய தசை காலத்தில் நல்ல தைரியம், துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வ பக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி, தொழில் வியாபாரத்தில் ஈடுபடும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். 
      • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
    • துலாம்  லக்கினக்காரர்களுக்கு கடகம்  10 ம் இடம்,  சந்திரன் பகை என்றாலும்  நல்ல பலனே கிடைக்கும் எனலாம் 
    • தொழிலுக்கு முயற்சி செய்பவருக்கு புது தொழிலும், தொழிலில் இருப்பாவருக்குமுன்னேற்றமும் உண்டாகும் 
    • ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால் அம்மாவின் அசையாச் சொத்து, அறிவுச் சொத்து எல்லாமுமே உங்களை வந்து சேரும். அதே சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ அதாவது கெட்டு இருந்தால்  எதையுமே எளிதாக அடைய முடியாமல் அவஸ்தைப்படுவார்கள் 
    • வளர்பிறையில் பிறந்து, ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால் சுகமான வாழ்க்கை அமையும் என்பது உண்மை ஆகும் 
    • செவ்வாய் பலம் பெற்று இருந்தாலும்  எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் திறனும், வீரம், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும், பெயர், புகழ், உயர கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

    • செவ்வாய் 2 மற்றும் 7 க்கு உரியவர் என்பதால் ஒரளவுக்கு அனுகூலத்தைக் கொடுத்தாலும், 2, 7ம் பாவங்கள் மாரக ஸ்தானம் என்பதால் சில உடம்பு பாதிப்புகளை உண்டாக்குவார். 
    • திருமணத்திற்கு எதிர்பார்வருக்கு திருமணம் உண்டாகும். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும் 
    • செவ்வாய் பலவீனமாக இருந்து புத்தி நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, வியாதியால் கவலை, கஷ்டம், உற்றார்- உறவினர்களிடம் கலகம், புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.
    •  ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை  நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும்.
    • பொதுவாக நன்மையும் தீமையும் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலை பொறுத்து நன்மை மற்றும் தீமையின் அளவு மாறுபடும் .
    • பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறையும். அரசு பணி, அரசு ஆதரவில் தடை தாமதம் ஏற்படும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன் துலா லக்கினத்திற்கு 9, 12 க்கு உடையவர். மேலும் புதன் வீடு கன்னியில் நீசம் அடைந்தாலும் இவர் யோககாரரே ஆவார் 
      • 9க்கு உரியவர் என்பதால் நல்ல பலனையே தருவார். படிக்கும் வயதில் நல்ல கல்வி, திருமண வயதில் திருமணம் ஆகிய நல்லவைகள் அமையும் 
      • தந்தைக்கு நல்லது மேலும் தந்தையால் நன்மை உண்டாகும். 
      • அறிவு பெருகும். சொத்துகள் வாங்குதல், தொழிலில் முன்னேற்றம் ஆகியவை உண்டாகும்.
      • வரவும் இருக்கும். செலவும் அதிகமாக இருக்கும். அது சுப செலவாக கூட இருக்கலாம் 
      • வெளிநாடு நாடு, வெளி மாநிலம் அல்லது வெளி இடத்தில் தங்கும் சூழல் வரலாம். அது படிப்பு அல்லது தொழில் சம்மந்தப்பட்டாதகவும் இருக்கலாம் 
      • போலஆனால் புதன் தீய கிரகத்துடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்லது நடக்கும் என்று சொல்ல முடியாது.
      • மேற்படிப்பு இந்த திசை சிலருக்கு உதவும். தாய்மாமனுக்கும் சிறப்பாக இருக்கும். அவர்களாலும் நன்மை சிலருக்கு உண்டாகும் 
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  

        துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • இவர்  4 மற்றும் 7 க்கு உரியவர். குரு பகை கிரகம்.  பொதுவாக கன்னி லக்கினகாரர்களுக்கு குரு தசை அவ்வளவு சிறப்பாக இருக்காது. கட்டாயம் யோக பலனைத் தரமாட்டார். எனினும் குரு முழு சுப கிரகம் என்பதால் நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார்
        • கன்னி லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு குரு மறைதல் மிகவும் நல்லது. மேலும் லக்கினாதிபதி அல்லது யோக கிரகத்தின் பார்வை பெறும் போது குரு தசையின் பாதிப்பு குறையும் 
        • தொழிலுக்காக கடன் வாங்கும் சூழல் வரும். விரயம் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டும் .
        • விரயம், கடன் ஏற்படும். முத்த சகோதர சார்ந்த விசயங்களில் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை வராது. ஆனால் கடன் வாங்கி செலவு சூழல் வரும் 
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • துலாம் லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். அஷ்டம ஸ்தானாதிபதியாக மறைவு ஸ்தானத்தில் வருவதால், வெளிநாட்டுக்கு அனுப்பி சொந்த ஊரில் இருக்க முடியாமல் செய்வது, அல்லது வழக்கு, நீதிமன்றம் என அலைய விட்டுவிடுவது போன்றவற்றைச் செய்வார்.
          • அதிக முயற்சிகள் இந்த திசையின் முதல் பகுதியில் எடுப்பபார்கள். அது நன்மையில் முடியும்.
          • இளைய சகோதர, சகோதிரிகள் உதவார்கள். சொத்துகள் சேரும்.
          • வீடு, டவர்ஸ் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் பிரச்சனை பார்க்க நேரிடும்.
          • உல்லாசமாக இருக்க விரும்புவார்கள். அது போல் சூழ்நிலையும் அமையும். அதிக உல்லாசம் ஆபத்தை தரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும் 
          • மனைவி மற்றும் பெண்களால் அனுகூலம், அசையா சொத்து சேர்க்கை, சந்தோஷம், பகைவரை வெற்றிகொள்ளும் அமைப்பு, வியாபாரம், தொழிலில் உயர்வு, கலை உலகில் சாதனை செய்யும் ஆற்றல், இசையில் நாட்டம் போன்ற சிறப்பான பலன்கள் உண்டாகும்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • துலாம் லக்னத்திற்கு சனி பகவான் நான்காம் இடம் மற்றும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் அதாவது திரிகோணம் மற்றும் கேந்திராதிபதியாக வருவதால் அவரை துலா லக்னத்திற்கு யோக காரகன் ஆகின்றார் 
            • சனி திசையில் இந்த கெடுபலன்கள் அதிகமாக ஏற்பட்டால் ஜாதகர் செல்கின்ற பாதை அல்லது சென்ற பாதை சரியான பாதையாக இருந்திருக்காது. அவருடைய எண்ணங்கள் செயல்கள் ஒத்துப்போகாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருந்தாலும் அடுத்தவர்களை தான் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலம் பயன்பெறும் பெறும் எண்ணம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தீய பலன்களை சந்திக்க நேரிடும்.
            • ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள், வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம், போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்
            • பொதுவாகவே சனிபகவான் நல்ல பலன்களைக் கொடுப்பார் என்பதில் எந்த ஐயமில்லை.
            • சனி பலமாக இருந்தால் ஆரோக்கிய மேம்பாடு, நோயற்ற வாழ்வு, புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு, தன சேர்க்கை உண்டாகுதல், எதிர்பாராத லாபம் ஏற்படும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சுக்கிரனுக்கு ராகு நட்பு.  அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை என்று தான் சொல்ல வேண்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம்
              • வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்ல கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும்
              • ராகு அசுப பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்து ராகு தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை, மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும்.
              • ராகு பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
              • மத்திம பருவத்தில் நடைபெற்றால் ஸ்பெகுலேஷன் மூலம் எதிர்பாராத தன சேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடிவரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும்
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • சுக்கிரனுக்கு  கேது  நட்பு . என்ற வகையில் கேது(Ketu Dasa) நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர், புகழ் உயரும் அமைப்பு, அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, தருமம் செய்யும் மனப்பான்மை, ஆலய தரிசனங்களுக்காக பயணங்கள் கொள்ளும் வாய்ப்பு, ஆன்மிக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.
                • கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கொடூர செயல்களை செய்யும் நிலை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும்.
                • கேது தசையில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம், உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
                • இந்த தசையில் சந்திரன் பலவீனமாக இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிற்றுக்கோளாறு, நீர் தொடர்பான உடல் உபாதைகள், மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளுடன் பகை, வீடு, மனை வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்..
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                துலாம்  லக்கினம்  – நட்சத்திரம் 


                துலாம்  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.
                இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


                துலாம்  லக்கினம்  – சித்திரை 3, 4   பாதம்   

                சித்திரை  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  செவ்வாய், சுக்கிரன் தாக்கத்துடன் இருப்பார்.

                சித்திரையின்  அதிபதி சூரியன் ஆவார். புகழும் ஆற்றலுமிக்கவர்கள், திறமைசாலிகள், மற்றவர் குணமறிந்து நடப்பவர்கள், வெற்றியாளர்கள், தைரியசாலி,  செல்வமிக்கவர், பரந்த நல்ல நோக்கமும் கொண்டவர்கள், மெய்யறிவாளிகள், அறநெறியில் வாழ்க்கை நடத்துபவர்கள், எதிர்த்துவரும் பகையாளிகளை பணிய வைத்திடுவார்கள், தன்மானம் இவர்கள் உயிர் நாடி

                துலாம்  லக்கினம் – சுவாதி  

                சுவாதி   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் ராகு,சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். கல்வியாளன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், சாந்தசொருபி, முன் கோபி, பேச்சில் இனிமை, தேவ கணம் கொண்டவர்கள், ரகசியமிக்கவர், கோபத்தை வெளிகாட்டமாட்டான், ஒருசிலர் காமமிக்கவர், மற்றவர்கள் நோக்கமறிந்து நடப்பவர், குறிக்கோள் மிக்கவர்கள், மற்றவர்களை சந்தோஷத்தப்படுத்துபவர்கள், நற்குணமும் கொண்டவர், நற்செயல் செய்பவர், பெரிய மனித சகவாசம் உண்டு, திட தேகம் கொண்டவர்கள், நேர்மை மிக்கவர், பன்மடங்கு யோசனை மற்றும் செயல் இருக்கும், கலக்கமிக்கவர், ஒரு சிலருக்கு திருட்டுத்தனம் மற்ற கெட்ட எண்ணம் இருக்கும், கௌரவத்தை உண்டுபண்ணுவார்கள்

                துலாம்  லக்கினம்   – விசாகம் 1, 2 

                விசாகம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  சுக்கிரன் தாக்கத்தில்  இருப்பார்.

                விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். வாய்மையாளன், புத்திமான், விகடகவி, வியாபாரி, கல்வியால் ஊக்கமிக்கவர், ஜோதிட சாஸ்திரம் கொஞ்சம் தெரியும், வியாதியஸ்தன், தர்மநெறி நடப்பவன், இடம் பொருள் ஏவல் நடப்பான், சங்கீத ஞானம் இருக்கும், கபடதாரி, புகழ்ச்சி இவர்களுக்கு பிடிக்கும், களிப்புடையவன், சூழ்ச்சி மிக்கவன், தன்னை பற்றி உயர்த்தி பேசுபவன், ஏமாற்றும் குணமுண்டு, திறமைசாலிகள்,  சாதிக்க முயற்சிப்பவர்கள்.


                மந்திரம் 

                துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய ராகவேந்திரர் துதி மனதார சொல்லி வருவது நல்லது 


                நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
                நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
                பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
                பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
                கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
                காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
                வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
                மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்



                மேஷ லக்கினத்தின் பொது பலன்கள்

                 

                அதிபதிசெவ்வாய்
                யோககாரகர்கள்குரு, சூரியன்
                யோகமில்லாதவர்கள்புதன், சுக்கிரன், சனி
                மாரக அதிபதிசுக்கிரன்
                நோய்அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
                ஆயுள்சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

                சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் மாரகபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 

                சுக்கிரன் 2, 7-க்குடையவன் என்ற வகையில் சுபாவ மாராகன்  அதாவது இரு மாறாக ஆதிபத்தியம் உள்ளவன். மாரகம் கொடுக்க மாட்டான் என்பது விதி.

                 மேஷம் லக்கினம்- சுப சேர்க்கை

                  • சூரியன்  &  சந்திரன்
                  • சூரியன் & செவ்வாய்
                  • சூரியன் & குரு
                  • செவ்வாய் & குரு
                  • செவ்வாய் & சந்திரன்
                  • குரு & சனி

                மேஷம் லக்கினம்- ஆகாத தசைகள் 


                • புதன் தசை முழுவதும் சனி தசை, பிற்பாதி லாபம் என்றாலும் மாரகன் என்ற வகையில் தீங்கு செய்யும்.
                • லக்னாதிபதி மற்றும் ஆயுள்காரகன் வலுத்தால் 100 வயது வரை வாழ்வார்
                • பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

                பொது பலன்கள் 

                • தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் , புத்திமான், அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன்.
                • செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்
                • ஆடு சின்னம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பழைய நூல்களில் அது போல் குறிப்பு இருப்பாதாக தெரியவில்லை. மேஷ லக்கினகாரர்கள் கொஞ்சம் ஆட்டின் குண நலன்கள் மற்றும் அதன் செயல்கள் இருக்கும். 
                • மேஷ லக்கினகாரர்கள் நீண்ட கழுத்துடையவர், மெலிந்த தேகம்,  மத்திம உயரம், சிலபேருக்கு சிவந்த கண், புஜசாலியாகவும், சுறுசுறுப்பாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.
                • மேஷ லக்கினகாரர்கள் சர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு துடுக்குதனமும் வேகமும் இருக்கும்
                • நெருப்பு ராசி என்பதால் அதிகமான ஆவேசம் மற்றும் கோபத்தினால் தடுமாற்றம் இருக்கும் 
                • குறைந்த அழகு கொண்டவராகவும், பேச்சுதிறமை, தர்ம மிக்கவர் எழுத்துத்திறமை உடையவர், பிடிவாதம் மிக்கவர், மனஉறுதி வலிமை மிக்கவர்,  எடுத்த காரியத்தைத் திறமையாக முடிப்பவர்.
                • சிலர் பொறாமை குணம் மிக்கவராக இருப்பார்கள் .
                • அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். 
                • தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை, கவலைகளை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ லக்கினகாரர்கள்  மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

                புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

                மேஷ (மேட) லக்கினம்

                கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

                கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

                ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

                அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

                கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

                கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

                தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

                தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


                பொருள்:

                இப்பாடலில் மேஷ(மேட) லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                “மேஷ லக்னகாரர்களுக்கு சனி தொல்லை தருவார். ஆனால் அந்த சனி வீடு, செல்வம் தருகிறார் என்றால் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு என்று பொருள். சனி திரிகோணமாகிய  5, 9 யில் இருந்தால்  நன்மையையும், கேந்திரத்தில் இருந்தால் கெடு பலனையும் தன்  தசா புத்தியில்  தருவார்.“

                 விளக்கம்:

                மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள் குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாக கேந்திரத்தில்  இருந்தால் கெடு பலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது தசா புத்திகளில் சொல்க.

                குறிப்பு:

                மேஷம் என்பது கால புருஷனுக்கு தலை மற்றும் தலைமையான சூரியன் மேஷத்தில் உச்ச்மாவதால் அவரின் பலம் நிறைந்திருக்கும். சூரியன் மகனான சனி 10, 11 பாவத்திற்கு உரியவர். மேஷத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் மேலும் மேஷத்தில் சனி நீசம் அடைகிறது.எனவே மேஷ லக்கின காரருக்கு சனி அவ்வளவாக நம்மை செய்ய மாட்டார். ஆனால் சனி மறைவு, நீசம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன் மாறுபடும்.

                திருமண வாழ்க்கை

                • மேஷ இலக்கின காரர்களுக்கு வாய்க்கும் துணை குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராக இருப்பார்கள் .
                • வாழ்கை துணையின் தலையிட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக எந் மேஷ இலக்கின பெண்களுக்கு பொருந்தும்
                • மண வாழ்க்கையில் அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும் ஆனாலும் குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
                • திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் .
                • ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்கள் .
                • சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் அழகான வாழ்க்கை துணை அமையும் 
                • சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
                • வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
                •  2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.
                • வாழ்க்கை துணை அழகு குறைந்து உள்ளவராகவும் ,புண்ணிய காரியங்களில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த உடல்  உடையவராக அமையவர்கள் 

                தொழில்

                • மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். 
                • மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை - குதிரை பேரம் - பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்தல் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்கனத்தை கொண்டவர்கள், நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
                • பொதுவாக இரும்பு, நிலம், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள்.
                • பெரும்பாலும் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை மேற்கொள்வர்.  அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றி உறுதியாக பெறுவர்கள்.
                • லக்கனத்துடன் புதன் அல்லது சுக்கிரன் சேர்ந்து  இருக்கும் மேஷ இலக்கினகாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து, பல பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் மேற்கொள்வர்கள்
                • லக்கனத்துடன் குரு வலுவுடன் சேர்ந்து இருந்தால் கடல்கடந்த தொழில் செய்யும்  அமைப்புகள் பெற்று இருப்பார்கள் அல்லது  சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த தொழிலை கொண்டிருப்பர்கள் 

                கிரகங்கள்  

                சூரியன் : 5ம் வீட்டுக்கு உரியவர். அதாவது மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சூரியன் அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்

                சந்திரன் : 4ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் நன்மை செய்யும் கிரகம் ஆகும். மேலும் வளர்பிறை சந்திர என்றால் நல்ல நண்பன் போன்றவர் 

                புதன் : இவர் 3 மற்றும் 6க்கு உடையவர். யோகமில்லாதவர். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பின்னடைவான பலன்களை தரக் கூடியவர் புதன்.

                குரு: இவர் 9 மற்றும் 12க்கு உரியவர். குரு வலிமையடைந்தால்  ஜாதகருக்கு சொத்துக்கள் பெருமளவில் சேரும். ஆனால் பெரும் செலவாளியாக இருப்பர்கள். சிலசமயம் சொத்துக்கள் கரைந்து போகவும் வாய்ப்பிருக்கும். அதாவது பொதுவாக இரு ஆதிபத்ய கிரகங்கள் வலிமையடைந்தால் இரண்டு வீட்டு பலன்களையும் கலந்தே கொடுப்பார்
                சுக்கிரன்: சுக்கிரன் நல்லவன் இல்லை. தன் திசையில் மாராகம் அல்லது மாராகத்திற்கு ஒப்பான துன்பத்தை தருவார். நன்றாக இருந்தால் பலன் நிவர்த்தி கிடைக்கும் 

                சனி: மேஷ லக்னத்திற்கு சனி பலம் பெறாமல் இருப்பது விசேடம். மேஷ லக்னத்திற்கு 10 என்னும் தொழிலையும் 11 என்னும் லாபத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. ஆனால் சனி இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே  தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்

                ராகு & கேது: மேஷ லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

                கிரகங்கள்- சுக்கிரன்    

                • லக்னத்தின் 2 மற்றும் 7ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.  
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாம் வீட்டில்   ஆட்சி பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 7ல் சுக்கிரன் பலம் பெறுவது நலமான அமைப்பல்ல.
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீடு என்னும் கணவன் மனைவி உறவென்னும்  மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர லக்ன மாரகாதிபதி சுக்கிரனே ஆவார். ஆனால் இவர் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை.
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெறாமல் மிதமான பலத்தில்  இருப்பது விசேடம். ரிஷபம், கடகம், தனசு, மீனம்  வீடுகளில் இருந்தால் நலம் தரும். 

                கிரகங்கள்- புதன்

                • மேஷ இலக்கினகாரர்களுக்கு  புதன் எந்தவிதத்திலும் உதவி நினைக்காதவர். 

                • மேஷ லக்னத்திற்கு புதன் எங்கிருந்தாலும் எதாவது ஒரு பிரச்னை தந்து விடுவார். குறிப்பாக இவர் 2 என்னும் குடும்பத்தில் அமர்ந்தாலும் 7 என்னும் களத்திர பாவத்தில்  அமர்ந்தாலும் 10 என்னும் தொழிலில்  அமர்ந்தாலும் மொத்தமாக பாதித்து விடுவார்.

                • மேஷ லக்னத்திற்கு புதன் மிதுனம் கன்னி விருச்சிகம்  ஆகிய இடங்களில் அமர்ந்தால் மிதமான பலன்களை வெளிப்படுத்தக் கூடியவர்.

                சூட்சுமங்கள்  

                • மேஷ லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் எதுவும் இல்லை. அதாவதுசெவ்வாய் புதன் சனி மூவரும்  6 வீடுகள் பலன்களை பலமிழக்க செய்து விடுகிறார்கள்.
                • குரு சுக்கிரன் தனது பங்கிற்கு 4 வீடுகளின்  பலன்களை  செய்கிறது ஆனால் குரு சுக்கிரன் பலம் பொருத்து மாறுபடும்.
                • இறுதியாக சூரியன் சந்திரன் நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஆனால் சந்திரனுக்கு 10 வருடமும் சூரியனுக்கு 6 வருடமும் ஆக  மொத்ததம்  16 வருடங்கள் தான். ஆனாலும்  இவர்கள் பலம் பெற இருத்தல் வேண்டும் .

                தசா பலன்கள் - சூரியன் 

                மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சூரியன்  நட்பு மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • அரசு உதவிகள் அல்லது அரசு வேலைகள் சிரமம் இன்றி நடக்கும்
                • தைரியம் அதிகரிக்கும் 
                • பூர்வீக சொத்துக்களால் லாபம் மேலும் தந்தைவழி மற்றும் புத்திரர்கள் வழிகளில் ஆதாயம் கிட்டும்
                • மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்
                • சுயதொழில் எண்ணிய லாபம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்
                • ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
                • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                 தசா பலன்கள் - சந்திரன் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு  சந்திரன் நட்பு, சமம் என்ற நிலையில் இருகிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  செவ்வாய் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி, 8க்கு உரியவரும் செவ்வாய். தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் தோற்றம் பொலிவு மேம்படும்.செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்
                • ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்
                • பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்
                • மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
                • வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்
                • சுய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்
                • குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
                • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                தசா பலன்கள் -  புதன் 
                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்
                • முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்
                • வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்
                • உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்
                • உயர் கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல் அதிகரிக்கும்
                • கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களுடன் கேளிக்கை ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                 தசா பலன்கள் -  குரு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                தசா பலன்கள் - சுக்கிரன்  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
                • தொழிலில் பிரச்சனை வரலாம். 
                • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
                • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
                • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
                • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
                • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
                • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் - சனி 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சனி செவ்வாய்க்கு பகை. சனி  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வரவும் உண்டு. செலவும் உண்டு. ஆனால் செலவு அதிகரிக்கும் 
                • தொழிலில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் 
                • வாழ்க்கை துணையின் வழியில் நல்ல உதவி உண்டு. ஆனாலும் வாழ்க்கை துணை செலவுகள் அதிகம் செய்யும் சூழல்  அமம்யும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அதாவது பரமத்து பணிகள் வர கூடும்.
                • ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. 
                • பொருளாதாரம், குடும்பம், குழந்தைகள் கவனம் தேவை
                • மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் 
                • முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்
                • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  ராகு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். ராகு  செவ்வாய்க்கு பகை. ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • வழக்கு தொடர்பான விஷயங்களிலும், செய்யும் செயல்களிலும் கவனம் தேவை
                • நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் 
                • நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும் 
                • நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாகும்
                • நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்
                • உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்
                • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  கேது  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். கேது  செவ்வாய்க்கு பகை.  கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • செயல்படும் தன்மைகளில் மாற்றம் உண்டாகும். அஞ்ஞான சிந்தனைகள் தோன்றி மறையும் 
                • மனதில் எழும் ஆசைகள் குறையும். பல்துறை பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் 
                • மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும் 
                • குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும் 
                • புதுவிதமான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும் 
                • பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும் 
                • தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும் 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் அஸ்வினி, பரணி, கிருத்திகை பாதம் – 1 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம். 

                மேஷம் லக்கினம்  – அஸ்வனி 

                அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், கேது தாக்கத்துடன் இருப்பார்.
                அஸ்வினி நட்சத்திரம் தேவ குணம் கொண்டவர்கள், தெய்வீக அருள் கொண்டவர், ஜோதிட சாஸ்திரங்களில் மற்றும் இதிகாசம் ஆர்வ மிக்கவர். இவர்கள் கடமை தவறாதவர், கருமமே கண்ணாக திகழ்பவர்கள், பெண்கள் மீது அன்பு காட்டுவார்கள், தன்னலமற்றவர்கள், பராக்கிரமம் உடையவர்கள், உண்மை பேசுபவர், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அணிகலன் மீது ஆசை கொண்டவர். நற்பெயர் பெற்றவர், கொஞ்சம் கோபக்காரர் ஆனால் வெளியே தெரியாது, சாதுர்யம் மிக்கவர், புத்திசாலித்தனம் கொண்டு புகழையும் பொருளையும் ஈட்டுவார், எதிர்கால திட்டம் புரிபவர், பரிசுத்தமானவன், அமைதியானவர், தெளிப்படுத்தி பின்பு வழக்கை நடத்துபவர், நல்லதே நினைப்பவர், ஒருசிலர் புறம் பேசுவார், உடல் உஷ்ணத்தால் நோய் பிறவியில் இருக்கும், நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு இருப்பார். அழகில் சுமாராக இருப்பார்கள், பெரியவர்களிடம் கேட்டு நடப்பவர்.

                மேஷம் லக்கினம்  – பரணி 

                பரணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.
                பரணி நட்சத்திரம் மனுஷ குணம் கொண்டவர், வசதிமிக்கவன், தான் மனதையும் நற்பெயரும் காத்து வாழ்க்கை நடத்திச்செல்வர்கள். பேச்சில் உறுதி, மனைவியின் பேச்சை கேட்பவன், பெற்றோருக்கு மகிழ்வு தருவானாக, அறச்செயல் செய்பவன், எப்பொழுதும் கோபமாக இருப்பான், தூக்கம் குறைவு, மெய்யறிவு மற்றும் நன்நெறி மிக்க நீதிமான், தான தர்மம் செய்பவர், தெய்வ அருள் கொண்டவர், சுலபத்தில் வெற்றி அடைவார், பிடிவாத மிக்கவர், பருத்த தோற்றமிக்கவர், மனதில் வஞ்சகம் இருக்கும், நன்றியறிவுள்ளவர், பலசாலி, சோம்பல் உடையவர், சாஸ்திரப்படி இருப்பான், உடல் பருமனானவர், அரசுப் பணி செய்பவர் மற்றும் குணம் மாறுபட்டு கொண்டு இருக்கும்.

                மேஷம் லக்கினம்  – கிருத்திகை  


                கிருத்திகை நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சூரியன்  தாக்கத்துடன் இருப்பார்.
                கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் இரு நெருப்பு கிரகங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் குணம் கோபம், ஆக்ரோஷமாக, சிலர் இதனால் ரத்த அழுத்தப் பாதிப்புடன் இருப்பார்கள், இரவில் தூக்கமில்லாதவர்கள், புலனின் விஷயங்களில் ஆர்வம் மிக்கவர், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவான், பேச்சில் சாமர்த்திய மிக்கவர், தெளிவானவர்,  ஆசாரமுள்ளவர், வித்துவான், சூரன், புத்திமான், நிலம் வீடு, மாடு கன்று பாக்கியம் கொண்டவர், சாஸ்திரங்களை சம்பிரதாயங்கள் 

                மந்திரம் 

                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய  தாயுமானவ சுவாமி பதிகத்தை மனதார சொல்லி வருவது நல்லது 

                அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
                அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
                பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
                பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
                துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
                தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
                நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
                நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்