- சில நூல்கள் சூரியன் , சந்திரன், சனி கூடியிருந்தால் நல்ல யோகம் சொல்கிறது.
- செவ்வாய், புதன், சுக்கிரன் மாரகாதிபர்கள். குருவும், சனியும் புதனும் கொல்ல மாட்டார்கள் என்று சில நுல்கள் சொல்கிறது. மாரக ஸ்தானத்தில் பாவிகள் இருந்தால் கஷ்ட கண்டம் ஏற்படும்
- விருச்சிக லக்கினத்திற்கு சூரியனும், சந்திரனும் சுபர்கள்
- புதன் மற்றும் குருவின் சேர்க்கை அல்லது பார்வை, புதன் நட்சத்திரத்தில் குரு இருப்பது அல்லது குரு நட்சத்திரத்தில் புதன் இருப்பது நல்லது.
- புதன் வீட்டில் குரு இருப்பது அல்லது குரு வீட்டில் புதன் இருப்பது நல்லது.
- புதனுடன் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுடன் ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை
- புதனுக்கு அடுத்த வீட்டில் ராகுவோ கேதுவோ இருப்பது அல்லது குருவுக்கு அடுத்து ராகுவோ கேதுவோ இருப்பது நல்லது இல்லை
- சுக்கிரன் 3, 8 ஆம் பாவங்களில் அதிக நற்பலன் தருவதில்லை.
- ஆணி மாதம் வளர்பிறை துவாதசி திதியில் விசாக நட்சத்திரத்தில் சனிக்கிழமை மாலை வேளையில் மரணமடைவார் என்று நூல்கள் சொல்கின்றன
பொது பலன்கள்
- புத்திமான் , வஞ்சகன் , தனவான் , எடுத்திட காரியத்தை முடிப்பவன் , மனைவி மீது பிரியமுள்ளவன் , வரையற்ற விஷப்பிரியன், முன்கோபமுடையவன்
- செவ்வாயின் அதிபதி பெற்ற விருச்சிக இலக்கினகாரர்கள் கல்வி கேள்விகளில் மிகுந்த ஈடுபாடு உடையவராய் இருப்பார்கள்.
- இவர்களுக்கு முன் கோபம் என்பது உடன் பிறந்ததாகும். எதையும் எடுத்த எடுப்பில் முடிக்க நினைப்பார்கள். அவசரகுணம் அதிகம் இருக்கும். எல்லாவற்றையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற இருப்பார்கள். பொறுமை என்பது இவர்களுக்கு மிகவும் குறைவு.
- தேள் சின்னம்: இந்த லக்கினகாரர்கள் கொஞ்சம் தேள் போல் வார்த்தைகளால் கொட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களுக்கு வேண்டியவர்க்காக எதையும் செய்வார்கள்
- விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதை மிகவும் முக்கியம் என நினைப்பவர்கள். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். யாருக்காவது இவர்கள் மூலம் காரியம் ஆகவேண்டும் என்றால் இவர்களை புகழ்ந்தால் போதும், காரியம் தன்னால் முடியும்
- இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. அப்படியே யாரவது ஏமாற்றினாலும் அவர்களை நேரம் கிடைக்கும் போது பழிவாங்குவார்கள். பிறரை கேலியும் கிண்டலும் செய்வதில் வல்லவர்கள்.
- எதிர்கள் அதிகமாக இருக்கும். எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்க விரும்புவார்கள். சில சமயங்களில் இனம் புரியாத மனக் கவலைகளும் பதட்டமும் வந்து போகும்
- இவர்கள் தங்களுடைய கடுமையான உழைப்பு, அறிவாற்றல், முயற்சிகளில், முன்னேற்றம் அடைவார்கள்.
- எந்த ஒரு கடினமான சூழ்நிலையிலும் பெரியவர்களிடமும் - நண்பர்களிடமும் - உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கக் கூடிய திறன் படைத்தவர்களாக இருப்பார்கள்.
- இது ஒரு ஸ்திர ராசியாகும். இவர்களுக்கு ஆரோக்கியமான உடலமைப்பும், தீர்க்கமான கண்களும் இருக்கும்.
- சுய சம்பாத்தியத்தில் விருப்பம் உள்ளவர்கள். இவர்களது வாழ்கையில் சுலபமான விஷயங்கள் கூட மிகுந்த போராட்டத்திற்கு பிறகே நடக்கும். பெரும்பாலும் இந்த லக்கினகாரர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைப்பதில்லை.
- கொண்ட குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் செயல்படுவார்கள். கடுமையான உழைப்பாலும், அறிவாற்றல் திறனாலும், செய்யும் தொழிலில் முன்னேறுவார்கள்.
- விருச்சிக லக்னதில் பிறந்தவர் ஆண்களாக அல்லது பெண்களாக இருந்தாலும் பெண்களின் மீது அன்பு, மரியாதை வைத்திருப்பார்.
- பெற்றோரிடம் பாசம் மிக்கவர். வாழ்க்கை துணையிடம் அன்பு, காதலுடையவர். நன்றாகப் பேச வல்லவர். இவர் பேச்சுக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் மதிப்பு இருக்கும்.
- எல்லாவற்றிற்கும் வாக்குவாதம் செய்பவர். குரூர சுபாவம் உள்ளவர். விரும்பாத பிறருடன் பகைமை பாராட்டுவார். எதிலும் அளவுக்கு மீறிய ஆசையுள்ளவர்
புலிபாணி ஜோதிடம்- பாடல் - 28
துலாம் லக்கினம்
தெரிவித்தேன் தேளினில்லம் சென்மந்தோன்ற
செழுமதியும் கோணத்தில் சேரநன்று
அறிவித்தேன் அகம்பொருளும் அடிமை செம்பொன்
அப்பனே கிடைக்குமடா அவனிவாழ்வன்
அறிவித்தேன் கேந்திரமும் கூடாதப்பா
மறையவனே கொடும்பலனை குறித்துச்சொல்லும்
தெரிவித்தேன் போகருட கடாக்ஷத்தாலே
தேர்ந்து நீபுலிப்பாணி நூலைப்பாரே
பொருள்:
இப்பாடலில் விருச்சிக லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்
“விருச்சிக லக்கினத்தில் பிறந்தவர்கள் சந்திரன் திரிகோண ஸ்தானங்களில் (5, 9) இருந்தால் மிக நல்ல பலனை தருவார். அதற்கு மாறாக கேந்திரத்தில் இருந்தால் நேர் மறையான பலனை தருவார். என்று எல்லா வல்ல போகரின் அருளால் கூறுகிறார் “
விளக்கம்:
தேள் சின்னம் கொண்ட விருச்சிக லக்கினத்தில் பிறந்தோனுக்கு நன்மை செய்யத்தக்க சந்திர பகவான் திரிகோணத்தில் அமைவது நற்பலன்களை வாரி வழங்கும். இதனை உனக்கு நன்கு அறிவுறுத்துகிறேன். நல்ல வீடு அமைதலும் தனலாபம் பல்கிப் பெருகுதலும், அடிமைகள் வாய்த்தலும் சீரிய பொன்னாபரண சேர்க்கையும் அவனுக்குக் கிடைத்து இந்த பூமியில் வெகு புகழுடன் வாழ்வான். ஆனால் கேந்திர ஸ்தானத்தில் அவன் வீற்றிருப்பின் இதற்கு நேர்மாறான பலன்களை நீ கூறவும். இதையும் என் குருவான போகரது கடாட்சத்தாலேயே நான் குறித்துச் சொல்கிறேன். நன்றாக ஆய்ந்தறிந்து என் நூலின் சிறப்பினை உணர்ந்து கொள்க.
குறிப்பு:
திருமண வாழ்க்கை
- விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல்படி கேட்டு நடக்கக்கூடிய வாழ்க்கைத் துணை அமைத்து கொள்ளவார்கள்.
- முடிந்தவரை விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய வாழ்க்கைத் துணை அமையும். இவர்களும் வாழ்க்கைத்துணையை எங்குமே விட்டுக்கொடுக்காமல் நேசிப்பபார்கள்
- பொருளாதாரத்தில் மிகப்பெரிய நல்ல லாபம் என்பது திருமணத்திற்குப் பிறகு ஏற்படும்
- விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்கு அமையும் துணை அதிக செலவினை செய்யக் கூடியவராகவும் ஆடம்பரமாக வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் விட்டு கொடுத்து போவர்கள்
- மகிழ்வாகத் திருமண வாழ்வு அமையும். சுக்கிரன் கெட்டுவிட்டால், மகிழ்வு பாதிக்கப்படும். வாழ்க்கை கசக்கும்.
- இரண்டாமிடமான, தனுசு பாபக் கிரகங்களைப் பெற்றிருந்தால் குடும்ப நன்மை இருக்காது. சுப கிரகமானால், குடும்பம் வளர்ச்சி அடையும். சுப கிரகமானால் வாழ்க்கை துணையிடம் எப்பொழுதும், பண நடமாட்டம் இருக்கும்.
- சுக்கிரனை, குரு அல்லது புதன் பார்த்தால், வாழ்க்கை துணை அழகும் சொத்தும் மிக்க நாகரிக உடை உடுத்துபவராக இருப்பார்கள்
- விருச்சிக இலக்கின கார்கள் ஆண்ணாக இருக்கும் பட்சத்தில் சுக்கிரன், சனி , ராகு, கேது , செவ்வாய் முபகை நீச்சமடைந்தால் மனைவி வீட்டு வேலைகளை கவனிக்காதவராகவும் , பொறுப்பற்றாகவும் இருப்பார். பெண்ணாக இருக்கும் பட்சத்தில் கணவன் வேலைக்கு கூட போகதவராக இருப்பர்கள்
தொழில்
- 7க்கு உரிய சுக்கிரன் அருள் காரணமாக கூட்டுத் தொழில் கை கொடுக்கும். கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும்.
- இந்த லக்கினகாரர்கள் புதிதாக கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மருத்துவம், மின்சார பொருட்கள் விற்பனை, மின்சாரம் தொடர்பான வேலை, ரசாயனம் தொடர்பான வேலைகள் செய்வது உகந்தது. வெளிநாட்டு வியாபாரம், ஏற்றுமதி, இறக்குமதியில் இவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான லாபம் கிடைக்கும்.
- சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று வலுப்பெற்றால், ஆளுமை திறன் பெருமளவில் கொண்டவராக, பிறரை ஆட்சி செய்பவராக, நிலம் தொடர்பான தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவராக ஜாதகரின் வருவாய் ஈட்டும் அமைப்பு அமையும்.
- சூரியன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று காரி (சனி), ஆட்சியில் உயர்வு நிலை பெற்றால், அரசியலில் வெற்றியாளராக ஜாதகர் வலம் வருவார்..
- சூரியன் அதன் பகை கோள்களான சனி அல்லது ராகு ஆகியவற்றுடன் சேர்க்கை பெற்றால், ஜாதகர் சட்டத்திற்கு எதிரான தொழில்களை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டும் கீழ்த்தரமான நிலை ஏற்படும்.
- சனி அல்லது ராகு ஆகியவற்றுடன் சூரியன் 8 அல்லது 12 ஆகிய மறைவிடங்களில் அமைந்தால், ஜாதகர் நிலையற்ற வருவாயுடன் வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படும்.
- புதுப்புது யோசனைகள் வந்தபடி இருக்கும். ஒரேமாதிரியான விஷயங்களை திரும்பத் திரும்பச் செய்வது பிடிக்காது
- சிலர் கல்வி நிறுவனங்களை வைத்து நடத்துவார்கள். கல்வியில் ஆர்வம் அதிகம்
- இந்த இலக்கின காரர்கள் ஜாதகத்தில் சூரியனுடன் குரு நல்லபடி இருக்கும் பட்சத்தில் அமைச்சர், காவல்துறை அதிகாரி, பேராசிரியர், வங்கி மேலாளர் என்று சிறிய வயதிலேயே பெரிய பதவிகளில் அமர்வீர்கள்
- "தான் உண்டு தன் வேலையுண்டு’ என்று அலுவலகத்தில் ஏதேனும் வேலையைச் செய்தபடி இருப்பார்கள். எதையும் படைப்புத்திறனோடும், வித்தியாசமாகவும் செய்வார்கள்.
- எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் முக்கியமான முதன்மைப் பதவியிலும், நிர்வாகத்திலும்தான் ஈடுபாடு காட்டுவார்கள். உயர்ந்த பதவிகளை நோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்கள்.
- நாட்டின் நலத்திட்டங்கள் அனைத்திலும் பங்கு கொள்ள விரும்புவார்கள். குறைந்தபட்சமாக அதிகார மையத்திற்கு அருகிலாவது இருப்பார்கள்.
கிரகங்கள்
விருச்சிகம் லக்கினம் – நட்சத்திரம்
விருச்சிகம் லக்கினம் – விசாகம் 4
விருச்சிகம் லக்கினம் – அனுஷம்
விருச்சிகம் லக்கினம் – கேட்டை
மந்திரம்
நீருளான் தீயுளான் அந்தரத்துள்ளான்நினைப்பவர் மனத்துள்ளான் நித்தமா ஏத்தும்ஊருளான் எனதுரை தனதுரையாகஒற்றைவெள் ளேறு உகந்தேறிய வொருவன்பாருளார் பாடலோ டாடல் அறாதபண் முரன்றஞ்சிறை வண்டினம் பாடும்ஏருளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் பேணியென் எழில்கொள்வதியல்பே !செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோய செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பல மேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே !