Showing posts with label திருமண வாழ்க்கை. Show all posts
Showing posts with label திருமண வாழ்க்கை. Show all posts

மிதுன லக்கினத்தின் பொது பலன்கள்




குருவும் சனியும் சேருமாயின் அவயோகமாகும்.

சந்திரன் துதியாதிபத்திய தோஷம் இருந்தாலும் மாரகம் கொடுக்க மாட்டான் என்றும் சொல்வர்.

குருவும், சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

மிதுனம் லக்கினம்- சுப சேர்க்கை

  • சூரியன்+புதன்
  • சூரியன்+சனி
  • சூரியன்+சுக்கிரன்
  • புதன்+சுக்கிரன்
  • புதன்+சனி
  • சுக்கிரன்+சனி

மிதுனம்  லக்கினம்-  தசைகள் 

  • மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.
  • மிதுன லக்கின சுபராக சுக்கிரனும்  அசுபராக குரு, செவ்வாய், சூரிய கிரகங்களும் மற்றும் சனி, சந்திரன் கொஞ்சம் குறைந்த அளவு நன்மை தருபவர், அதுதவிர இவருக்கு  அசுபராக  வருபவர் திசை நடக்கும் பொழுது மாரகம் நிகழும் என்று ஜாதக அலங்காரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது

பொது பலன்கள் 

  • இனிய வார்த்தை பேசுபவர் , கபடி, மைதுன பிரியர், வாழ்க்கை துணை (பொதுவாக ஆண்கள்  மனைவி)சொல் கேள்பவர், புகழை உடையவர் . கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உடையவர். 
  • மிதுன லக்கின ஜாதகர் குணங்கள் தனித்துப் பெற்றாலும் அவற்றோடு (லக்கினத்தோடு)சேர்ந்த கிரகங்கள் சுபத்துவ அதி வலுப்பெற்றால் அவர்களின் செயல்பாடு மற்றும் புகழ் நன்றாக வெளிப்படும்.
  • இராட்டையர் சின்னம்:  இரவு வானில் விண்மீன் கூட்டங்களில் உள்ள பொலிவான விண்மீன் கூட்டங்களில் மிதுனமும் ஒன்று. 
  • ரிஷப லக்கினகாரர்கள் பொதுவாக மிக அழகானவர்கள். அறிவாளிகள் என்பதால் சாதுரியமான செயல்கள் செய்வார்கள், இளமையானவர்கள், பேச்சாளி, கணக்கில் ஆர்வ மிக்கவராகவும், அறிவு மிக்க சிறப்பான செயல் திறனாளி, வீடு, வாகனம், பணவரவு அதிகம் உண்டு அதற்கேற்ற செலவு, முயற்சி இருக்கும்.
  •  புகழ், அம்மாவிடம் அன்பு,  பல தொழில் செய்பவராகவும், சுறுசுறுப்பும் அதேநேரம் எடுத்த காரியத்தை முடிப்பார்கள்.
  • நுண்கலை வல்லுநர்கள், கதை ஆசிரியர்கள், சிற்பியாக, அதிகாரமிக்க வேலை அமையும்,  எதாவது ஒரு கலைகளில் வல்லுநராக இருப்பார்கள்.
  • உபய லக்கினகாரர்கள் உபய ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு மிகவும் நிதானமானவர்கள். மேலும் இது காற்று  ராசி ஆகியதால் கெட்டிக்கார தனமும் நல்ல குணமும் நிறைந்து இருக்கும். 
  • மாநிறமானவர்கள். நல்ல கம்பீரமான, எடுப்பான தோற்றமுடையவராகவர்கள் சூது நிறைந்தவர்கள்.  மற்றவர்களுக்கு உதவக்கூடிய  குணத்துடன் கவிதையுள்ளமும் நிறைந்தவர்கள். 
  • நல்ல உணவை, மிகவும் விரும்புகிறவர். ஞான ரீதியில் எதையும் அணூகும் மனப்போக்குடையவர். 
  • ஆரம்ப காலத்தில், உங்களுக்கு சில பிரச்சனைகள் அல்லது தொல்லைகள் இருக்கலாம் ஆனால் வாழ்க்கையின் பிற்பகுதியில் நல்ல மகிழ்ச்சி கிடைக்கும். அதாவது  32, 35 ஆம் வயதிலிருந்து, அதிருஷ்டவசமான ஒரு காலகட்டத்தில் செல்லும் யோகம் உண்டாகும்.
  • பல வசதிகளையும் சுகபோகங்களையும் அனுபவிப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். பல புத்தகங்களையும் படிப்பதில் விருப்பம் கொண்டவர்கள்  புகழை  தேடி ஓயாமல் பாடுபவார்கள்.  நீண்ட உடல் உறுப்புக்கள் இருக்கும்.
  • ப்ளூயன்சா காய்ச்சல், மார்ச்சளி போன்ற நோய்கள் வாராமல் பார்த்து கொள்ளவது அவசியம். உணவில் கட்டுப்பாடு இருக்கும். இருந்தாலும் கட்டுபாட்டை கடைபிடிப்பது நல்லது.
  •  நல்ல, சிறப்பான உடல்வாகும் உறுதியான மனநிலையும் கொண்டவர்கள். நேரத்தில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 
.

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 24

ரிஷப & மிதுன லக்கினம்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


பொருள்:

இப்பாடலில் ரிஷபம் மற்றும் மிதுனம் லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“ரிஷபம் மற்றும் மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் உண்டு. ஆனால் குரு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 வீடுகளில் இருந்தால்  நல்லதல்ல. அவரால் செல்வம் நாசம் அடையும். மேலும் அரசால் கெடுதலும், நோயும் உண்டாகும். ஆனால்  குருவும் சந்திரனும் திரிகோணமாகிய 1, 5, 9 இருந்தால் நன்மை நடக்கும்.“

 விளக்கம்:

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாக கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குரு பகவான் கேந்திரத்தில் நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம். எவ்வாறெனில், பூமி, பொருள், தனம் நாசமடையும். அது மட்டுமல்லாமல் அன்றலர்ந்த மலர்மாலை அணியும் அரசர்களின் துவேஷமும் ஏற்படும். நோய் முதலிய துன்பம், உண்டென்று கூறுவாய் எனினும் குருபகவானும் சந்திரனும் திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக


திருமண வாழ்க்கை

  • 7குடைய குருவும் நல்லவர் இல்லை. அது போல் உபய ராசி என்ற வகையில் குரு யோகமிள்ளதவரே. வாழ்க்கை துணை  அமைத்து கொள்ளும் பொது கவனம் தேவை. இல்லை என்றால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் 
  • வாழ்க்கைத் துணை நல்ல தெய்வ பக்தி , ஞானம் , ஒழுங்குபடுத்தப்பட்ட வீரம் , கட்டுப்படுத்தப்பட்ட காமம் என்று இருப்பார்கள். மேலும் எல்லாமே ஒழுங்கு முறைப்படிதான் இருக்க வேண்டும்என்ற எண்ணம் இருக்கும் . ஏனெனில் , தனுசு என்பது தெய்வீக நெருப்பு ராசி.
  • வாழ்கை துணையுடன் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வந்தாலும் , லக்ன 7 – ஆம் அதிபதிகள் சுப ராசி ஆதலால் பொறுத்துப்போய் விடுவர்.
  • திருமணத்திற்கு பிறகு தொழில் மேம்படும். சில பேருக்கு அப்புறம் தான் தொழிலே அமையும் 
  • காதல் திருமணம் செய்து கொள்ளும் லக்கினத்தில் மிதுனம் முதல் இடம் என்றால் மிகையாகாது.  
  • திருமணக் காலத்தில் எதனையாவது விட்டுக் கொடுப்பார். சமயச் சம்பிரதாயங்கள், சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுக் கொடுத்தே திருமணம் அமையும்

தொழில்

  • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.
  • கூட்டுத் தொழிலில் ஈடுபடாமல் தனித்து செயல்பட்டால்தான் லாபத்தை பெற முடியும்.
  • இந்த லக்னக்காரர்கள் பொதுவாக வங்கி அல்லது பணம் கொடுக்கல் வாங்கல் ஆகிய துறைகளில் பணிபுரிவார்கள். மக்களுக்கு சேவை செய்யக்கூடிய இடங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும் 
  • சூரியன் நன்றாக இருந்தால் மக்களுக்கு தொண்டு செய்ய தக்க மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் போன்ற பொறுப்பான பதவிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். 
  • சிறந்த அறிவாற்றல் கொண்டவராக, பள்ளி - கல்லூரிகளில் உயர்வான பொறுப்புகளில், பிறரை வழிநடத்தக் கூடிய, உயர்ந்த திறமை கொண்டவர்களாக விளங்குவர்.
  • இந்த லக்னகாரர்களுக்கு, குரு வலு குறைந்து, அதனுடன் சனி  அல்லது ராகு போன்ற தீய கோள்கள் சேர்க்கை பெற்றால், நிலையற்ற வருவாய் கொண்டவர்களாக வாழ நேரிடும்.
  • குரு, சனி  சுக்கிரனுடன் சேர்ந்து  இருக்கும் மிதுன லக்கினக்காரர்கள் , வண்டி வாங்கி விற்பது அல்லது போக்குவரத்து தொடர்புடைய தொழில் செய்வர்.  சிலர் கடல்கடந்த வெளிநாட்டு தொடர்பு ஏற்படுத்தி அதில் பெரும் செல்வம் ஈட்டுவர்.
  • குரு பகவான் செவ்வாய் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் பூமி மனை, ரியல் எஸ்டேட் துறைகளில் அனுகூலங்கள் உண்டாகி சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும். அதிகாரமிக்க பதவிகளை அடையும் வாய்ப்பும் உண்டாகும். 
  • குரு சந்திரனுடன் சேர்க்கைப் பெற்றால் ஏஜென்ஸி, கமிஷன், உணவு வகைகள், ஜல தொடர்புடைய தொழில்களில் பணிபுரியும் வாய்ப்பு ஏற்படும்
  • குருவுடன் சந்திரன் இணைந்து உடன் புதன் அல்லது செவ்வாய் இருந்தால் கடல் சார்ந்த துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு, உணவகம் நடத்தும் வாய்ப்பு அமையும்.
  • பொடி வைத்து பேசுவதில் நிபுணர், சத்ருக்களை நேரடியாக எதிர்க்காமல் உறவாடி தந்திரமாக அழிப்பவர், ஜோதிட நிபுணர், கார்டூன், துணுக்கு எழுதுதல், ஸ்டெனோ கிராபர், ஆசிரியர், ஆடிட்டர், டெலிபோன், பத்திரிக்கை தொழில், தபால் துறை, சங்கீதம் முதலிய தொழில் செய்வார்.
  • தனக்காரகன் குரு என்றாலும் மிதுன லக்னத்திற்கு குரு பாதகாதிபதி என்பதால் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கிரகங்கள்  

  • சூரியன் : 3ம்  வீட்டுக்கு உரியவர் எனபதால் சூரியன் சமம் ஆனவர். சூரியன் நன்றாக இருந்தால் அரசு உயர் பதவிகள் தருவார். ஆனாலும் இவர் யோகமில்லதவர் உங்களுக்கு என்பதும் உண்மை. 
  • சந்திரன் : 2ம் வீட்டுக்கு உரியவர். சந்திரன் சமம் நிலை அடைகிறார். இவர் மாராகதிபதி என்று சில நுல்களும், கொல்லான் என்று சில நுல்களும் சொல்கின்றான. ஆனாலும் அவர்களின் திசை, புத்தியில்  மாரகத்திற்கு ஒப்பான பாதகம் உண்டாக்கும் .
  • புதன் : இவர்  1 மற்றும் 4 க்கு உடையவர். மிக நல்லவர். மிகவும் நல்லதே செய்வார். இவர்களை “இரண்டு தாய்களிடத்தில் வளர்பவன்” என்று சில ஜோதிட நுல் சொல்கிறது. 
  • செவ்வாய்: 6, 12க்கு உடையவர். குறைந்த எண்ணிக்கையிலான சகோதர்களை பெற்று இருப்பார்கள். செவ்வாய் நல்லவர் இல்லை உங்களுக்கு.
  • குரு: இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார் 
  • சுக்கிரன்: சுக்கிரன் 5, 12க்கு உடையவர். எனவே நல்லைதியும் கெட்டதையும் கலந்தே தருவார். ஆனாலும் நல்லவரே. 
  • சனி: சனி 8, 9க்கு உடையவர். சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர்

தசா பலன்கள் - சூரியன் 

ரிமிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சூரியன் சமம்.  சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
  • சூரியன் மிதுன லக்கினகாரர்க்கு யோகமில்லதவர். மேலும் 3க்கு உடையவர்.   
  • மிதுனம் ஜன்ம லக்னமாகி இதில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் தர்ம காரியங்களில் அதிகமாக ஈடுபடுவார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இவர்களுடைய கதவைத் தட்டும்.  கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும் எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள்.. 
  • தாய், தாய் சார்ந்த விஷயம், வீடு, வீடு சார்ந்த விஷயம் பிரச்சனை இருக்கும்   
  • பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். சூரியன் திசையின் முதல் பகுதியில் சிறப்பாக இருக்கும். 
  • இளைய சகோதர, குழந்தைகளால் வகையில் நன்மை   உண்டாகும். தொழிலில் partnership வகையில் பிரச்சனை உண்டாகலாம்  
  • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

    சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்
    • மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன்க்கு சந்திரன் பகை என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
    • புதனுக்கு சந்திரன் பகை என்றாலும் சந்திரனுக்கு புதன் நட்பு ஆகும். மேலும் 2ம் வீட்டுக்குரியவர் ஆகையால் நன்மையை தருவார்.
    • தனஸ்தானாதிபதி என்பதால் இந்த திசை வரும் போது பணம் சேர்க்கை உண்டாகும். ஆனால் சந்திரன் வளர்பிறையாக இருத்தல் வேண்டும் 
    • இந்த திசை வரும் போது திருமணத்திற்கு எதிர்பார்த்தல் திருமணமும், குழந்தை பேறுக்கு எதிர்பார்த்தால் குழந்தை கிடைக்கும் 
    • பேச்சு சம்மந்தப்பட்ட தொழில் உதாரணமாக வக்கீல் உள்ளவர்கள் சிறப்பு அடைவார்கள்.  ஜல தொழில் செய்பவர்களுக்கும் நல்லது தான் இந்த திசை செய்யும் .
    • தாய், தாய் வழி சொந்தங்களால் லாபம் உண்டாகும். 
    • பயணத்தால் நன்மை தான். தொழில் சம்மந்தப்பட்ட் பயணம் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 

      மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். செவ்வாய் பகை மேலும் செவ்வாய் 6, க்கு உடைவன் . செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
      • இது யோகமான திசை இல்லை. கோபத்தை கட்டுபடுத்த வேண்டும். இல்லை எனில் பல பிரச்னைகளை பார்க்க நேரிடும். 
      • முதல் திருமணம் முறிந்து 2வது திருமண செய்ய சூழ்நிலை உள்ளவர்களுக்கு 2வது திருமணம் கைக்கூடும் 
      • முத்த சகோதர சகோதிரியால் நன்மை உண்டு. எதிரிகள் அழிவார்கள் அல்லது அடங்குவார்கள் 
      • பயணங்களில் கவனம் தேவை. இரத்த காயங்கள் உண்டாகும் அல்லது உண்டாக்குவிர்கள் 
      • வீடு, வீடு சார்ந்த விஷயம் அவ்வளவு சாதகமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
      • குடும்ப வாழ்க்கையுலும் கவனம் தேவை வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பு உண்டு. கோபம் குறைக்க விட்டால் பிரிவில் தான் முடியும் 
      • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
      தசா பலன்கள் -  புதன் 
        மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
        • புதன் ரிஷப லக்கினத்திற்கு 2, 5 ஆம் அதிபன் ஆகிய யோகாதிபதி ஆவார். 
        • தாய், தாய் வழியில் ஆதாயம். சொத்து சம்மந்த பட்ட விசயங்களும் ஆதாயமே. 
        • புதன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லதே செய்வார். ஆனாலும் புதன் 4ம் வீட்டில் தனித்து இருந்தால்  கேந்திர ஆதிபத்திய தோஷம் உண்டாகும். புதன் 4ல் தனித்திருக்க கூடாது.
        • உடல் ஆரோக்கியம் மேம்படும். புகழ் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்விர்கள். சேமிப்பு அவசியம் என்பதை மறக்க வேண்டும்  
        • சகோதர வழியில் சில தொல்லைகள் , செலவுகள் உண்டாகும். தொழில் Partnership பிரச்சனைகள் தலை தலை தூக்கும்  
        • படிப்பு மேம்படும். அறிவால் செய்யக்கூடிய வேலை, படிப்பு  கிடைக்கும்.  வெளி நாட்டு படிப்பு, தொழில் அமைய வாய்ப்பு உண்டாகும் 
        • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

         தசா பலன்கள் -  குரு  

        மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதனுக்கு குரு பகை  என்ற நிலையில் இருக்கிறது. குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். . 
        • இவர்  7 மற்றும் 10 க்கு உரியவர். குரு ரிஷபத்திற்கு நல்லவர் அல்ல. இவர் மாரகதிபதி ஆவார்
        • தாய்க்கு உடல் கெடுதல், சகோதர வழியில் தொல்லை, குடும்பத்தில் பிரச்சனை என்று இருக்கும் 
        • தொழில் சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்வெளிநாட்டு வேலை விசயங்கள் அலைச்சல் இருந்தாலும் நன்மையாக இருக்கும்.
        • குழந்தைகளால் நன்மை உண்டு. உல்லாசத்தை மனம் நாடும். மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். இதனால் குடும்பத்தில் பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளவும் 
        • வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வரும். எதிர்களின் பலம் கூடும் கவனம் தேவை.
        • தொழிலில் முன்னேற்றம் இருக்கும் ஆனாலும் தொழிலில் செலவு கூடும்.  உல்லாசத்தில் மனம் நாட்டம் இருக்கும் போது கவனம் இல்லை என்றால் தொழிலும் நஷ்டம் உண்டாகும் 
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். சுக்கிரன் புதன் நட்பு. சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • சுக்கிரன் 5, 12 க்கு உடையவர். 5 க்கு உரியவர்.
          • 5 க்கு உடையவன் என்ற வகையில் புதனுக்கு நட்பு கிரகம் என்றா வகையில் இந்த திசை மிக நல்ல திசை தான் என்பதில் ஐயம் இல்லை. 
          • திருமண வயதில் வந்தால் திருமணமும், குழந்தைக்காக ஏங்கும் போது வந்தால் திருமணம் அல்லது குழந்தை பேறு கிடைக்கும் 
          • அனனவரிடமும் அன்பாக இருப்பிர்கள் 
          • சுக்கிரன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்லதே நடக்கும்.
          • 12குரியவர் என்ற வகையில் சுப செலவுகள் உண்டு. வீடு வாங்குதல், திருமணம், குழந்தை பேறு , வாகனம் வாங்குதல் ஆகியவற்றால் செலவு உண்டு.
          • 12குரியவர் என்ற வகையில் இந்த திசை முடிவதற்குள் ஒரு பெரிய உண்மை புரிய வைப்பார் 
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். புதன் சனி நட்பு. சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • மிதுன லக்னத்திற்கு சனிபகவான் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதி ஆவர். 
            • 9க்குடையர்வர் என்ற வகைகில் வயது ஏற்ப நல்ல பலன் தரும். செல்வம் பெருகும். குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும் 
            • தந்தையால் நன்மை, தந்தைக்கு நன்மை உண்டாகும் 
            • திடீர் என்று யோகம், அதிஷ்டம் உண்டாகும் வாழ்க்கை துணையுடன் சந்தோஷமாக இருக்கும் அமைப்பு உண்டாகும். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உண்டாகும்
            •  எட்டுக்கு  உரியவர் என்ற வகையில் உடலில் அக்கறை வேண்டும். ஆனாலும் கெடுதல் நடக்காது. 
            • சனி சம்மந்தப்பட்ட வேலை செய்பவர்களுக்கு இந்த திசை நல்ல பலனே தரும். வேலை பளு இருந்தாலும் நல்லதே.
            • வெளிநாடு சம்மந்தப்பட்ட விசயங்களில் நல்லதே நடக்கும். பொதுவாக மிதுன ராசி அல்லது இலக்கின காரர்களுக்கு சனி திசை நல்லதே செய்யும்   
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • ராகு திசை மிக நல்ல திசை இவர்களுக்கு. இந்த திசை வரும் பொது இவர்கள் ஆசை பட்ட வாழ்க்கை அமையும் 
              • வெளி நாடு சம்மந்தப்பட்ட விசயங்கள் நல்லதே நடக்கும். வெளி நாடு செல்லும் யோகமும் உண்டாகும் . அங்கு தங்கி இருக்கும் சூழல் அமையும். 
              • உழைக்காமல் வருமானம் கிடைக்கும் கிடைக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்பு கட்டாயம் உண்டு. 
              • மிதுன லக்கினத்திற்கு ராகு முழுமையான யோக கிரகம் ஆகும். ஏன் எனில் மிதுனம், துலாம் மற்றும் கும்பம் ஆகிய திரிகோண ஸ்தானத்தில் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, ஸ்வாதி மற்றும் சதயம் நட்சத்திரம் முழுமையாக உள்ளது. மிதுன லக்கினத்திற்கு முழு யோகம் செய்யும் கிரகமாக ராகு வருகிறார்.
              •  மிதுன லக்கினகாரார்களுக்கு அவர் வீட்டின் அதிபதி போல் நல்லது செய்வார்.
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                மிதுன  லக்னத்திற்கு அதிபதி புதன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • முதல் 3 வருடங்கள் நல்லதே செய்வார். அடுத்து நல்லது நடக்கும்
                • இளைய சகோதரால் நன்மை அல்லது இளைய சகோதரக்கு நன்மை உண்டாகும். பயணங்களால் நன்மை உண்டு.
                • சிலருக்கு கரும செய்யும் அமைப்பு ஏற்படும். அதாவது இறப்பு போன்ற விசயங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.
                • குழந்தைகளால் பல சிரமங்களை சந்திக்க் நேரிடும்.
                • தொழிலில் நல்ல வாய்ப்பு, சூழல் உருவாகும். வேளையில் முன்னேற்றம் உண்டு.
                • கடன் வாங்கும் சூழல் உருவாகும். இல்லை என்றால் உடல் நலம் பாதிக்கும். 
                • உல்லாசத்தில் மனம் ஈடுபடும் அதனால் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உண்டாகும். கெட்ட பழக்கம் அதிகரிக்கும் அல்லது புதிதாக உண்டாக வாய்ப்பு உண்டு கவனம் தேவை 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                மிதுனம் லக்கினம்  – நட்சத்திரம் 

                மிதுனத்தில் உள்ள நட்சத்திரங்கள் மிருகசீரிஷம் 3, 4-ம் பாதங்களும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தின் 1,2,3 ம் பாதங்கள் ஆகியவை அடங்கும். இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம் 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

                மிதுனம் லக்கினம்  – மிருகசிரிஷம்  3,4 பாதங்கள்  

                மிருக சிரிஷம் 3,4  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  சுக்கிரன், செவ்வாய்  தாக்கத்துடன் இருப்பார்.
                மிருகசீரிஷம் நட்சத்திரத்துக்கு செவ்வாயானவர் ஆதிக்கம் செலுத்துகிறார், இவற்றின் வடிவம் மானின் தலை கொண்டது. இந்த நட்சத்திரத்தில் பொதுவான குணநலன்கள் என்றால் சுறுசுறுப்பானவர், மன அழுத்தம் மிக்கவர், ஞாபக சக்தி உள்ளவர்கள், பிடிவாத குணம், எதாவது ஒரு துறையில் சிறப்பறிவு உடையவர்கள், உள்ளத்தில் பகையுணர்ச்சி உடையவர்கள், உள்ளுணர்வுகளைப் பதுக்கி வைப்பவர்கள் முக்கியமாக வெளியில் தெரியாத அளவு கோபம் இருக்கும், உள்ளங்கையில் வேல் போன்ற ஆயுத ரேகை உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், யாருக்கும் பயப்படாதவர்கள், கீழ்ப்படியாதவர்கள், சுய சிந்தனையாளர்கள், வசீகரமான தோற்றம் கொண்டவர்கள், பிறர் பொருள் மீது கொஞ்சம் ஆசை இருக்கும், தர்மவான், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், பிறருக்கு உபதேசம் செய்வார்கள்.

                மிதுனம் லக்கினம்  – திருவாதிரை

                திருவாதிரை   நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சுக்கிரன், ராகு   தாக்கத்துடன் இருப்பார்.
                திருவாதிரை நட்சத்திரத்துக்கான குறியீடு  மனித தலை, வைரம் வடிவம், கண்ணீர்த்துளி ஆகும். என் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். திருவாதிரையில் ராகுவின் ஆதிக்கம் உண்டு அதன்படி லக்கின புள்ளியின் பொதுவான குண நலன்கள் - உடல் பலமானவர்கள்,  முரட்டுப் பிடிவாதம், பண விஷயத்தில் சாதூர்யமானவர்கள், உண்மைக்குப் புறம்பானவர், உயரமானவர்கள், கண்டிப்பானவர், புத்தாடையில் அவ்வளவு நாட்டம் இருக்காது, தற்புகழ்ச்சியைப் பிடிக்கும், கலகம் மற்றும் ஆத்திரம் இருக்கும், எதிலும் அவசரமாக முடிவெடுப்பார்கள், ஏதாவது நோய் இருந்துகொண்டிருக்கும் முக்கியமாக மூட்டு வியாதி இருக்கும். பல்வேறு நட்புகள் உண்டு, பந்துகள் விரோதம் இருக்கும், சாடல் என்று யோசனை வந்துகொண்டேயிருக்கும், நீதி நேர்மை குறைவானவர்கள், எந்த வேலையும் செய்யும் திறன் கொண்டவர்கள், தனம் ஈட்டுவதற்காக நாட்டம் கொண்டவர்கள், ஆன்மீக வழிபாடு செய்வார்கள்.

                மிதுனம்  லக்கினம்  –புனர்பூசம்  1,2,3 பாதங்கள்   



                மந்திரம் 

                மிதுன  லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய பெருமாள் துதி மனதார சொல்லி வருவது நல்லது  

                                                    திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
                                                    அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
                                                    பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
                                                    என்னாழி வண்ணன்பால் இன்று !
                                                    தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
                                                    சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
                                                    திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
                                                    இரண்டுருவு மொன்றாய் இசைந்து !

                 ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்


                மேஷ லக்கினத்தின் பொது பலன்கள்

                 

                அதிபதிசெவ்வாய்
                யோககாரகர்கள்குரு, சூரியன்
                யோகமில்லாதவர்கள்புதன், சுக்கிரன், சனி
                மாரக அதிபதிசுக்கிரன்
                நோய்அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
                ஆயுள்சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

                சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் மாரகபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 

                சுக்கிரன் 2, 7-க்குடையவன் என்ற வகையில் சுபாவ மாராகன்  அதாவது இரு மாறாக ஆதிபத்தியம் உள்ளவன். மாரகம் கொடுக்க மாட்டான் என்பது விதி.

                 மேஷம் லக்கினம்- சுப சேர்க்கை

                  • சூரியன்  &  சந்திரன்
                  • சூரியன் & செவ்வாய்
                  • சூரியன் & குரு
                  • செவ்வாய் & குரு
                  • செவ்வாய் & சந்திரன்
                  • குரு & சனி

                மேஷம் லக்கினம்- ஆகாத தசைகள் 


                • புதன் தசை முழுவதும் சனி தசை, பிற்பாதி லாபம் என்றாலும் மாரகன் என்ற வகையில் தீங்கு செய்யும்.
                • லக்னாதிபதி மற்றும் ஆயுள்காரகன் வலுத்தால் 100 வயது வரை வாழ்வார்
                • பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

                பொது பலன்கள் 

                • தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் , புத்திமான், அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன்.
                • செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்
                • ஆடு சின்னம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பழைய நூல்களில் அது போல் குறிப்பு இருப்பாதாக தெரியவில்லை. மேஷ லக்கினகாரர்கள் கொஞ்சம் ஆட்டின் குண நலன்கள் மற்றும் அதன் செயல்கள் இருக்கும். 
                • மேஷ லக்கினகாரர்கள் நீண்ட கழுத்துடையவர், மெலிந்த தேகம்,  மத்திம உயரம், சிலபேருக்கு சிவந்த கண், புஜசாலியாகவும், சுறுசுறுப்பாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.
                • மேஷ லக்கினகாரர்கள் சர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு துடுக்குதனமும் வேகமும் இருக்கும்
                • நெருப்பு ராசி என்பதால் அதிகமான ஆவேசம் மற்றும் கோபத்தினால் தடுமாற்றம் இருக்கும் 
                • குறைந்த அழகு கொண்டவராகவும், பேச்சுதிறமை, தர்ம மிக்கவர் எழுத்துத்திறமை உடையவர், பிடிவாதம் மிக்கவர், மனஉறுதி வலிமை மிக்கவர்,  எடுத்த காரியத்தைத் திறமையாக முடிப்பவர்.
                • சிலர் பொறாமை குணம் மிக்கவராக இருப்பார்கள் .
                • அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். 
                • தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை, கவலைகளை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ லக்கினகாரர்கள்  மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

                புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

                மேஷ (மேட) லக்கினம்

                கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

                கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

                ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

                அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

                கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

                கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

                தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

                தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


                பொருள்:

                இப்பாடலில் மேஷ(மேட) லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

                “மேஷ லக்னகாரர்களுக்கு சனி தொல்லை தருவார். ஆனால் அந்த சனி வீடு, செல்வம் தருகிறார் என்றால் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு என்று பொருள். சனி திரிகோணமாகிய  5, 9 யில் இருந்தால்  நன்மையையும், கேந்திரத்தில் இருந்தால் கெடு பலனையும் தன்  தசா புத்தியில்  தருவார்.“

                 விளக்கம்:

                மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள் குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாக கேந்திரத்தில்  இருந்தால் கெடு பலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது தசா புத்திகளில் சொல்க.

                குறிப்பு:

                மேஷம் என்பது கால புருஷனுக்கு தலை மற்றும் தலைமையான சூரியன் மேஷத்தில் உச்ச்மாவதால் அவரின் பலம் நிறைந்திருக்கும். சூரியன் மகனான சனி 10, 11 பாவத்திற்கு உரியவர். மேஷத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் மேலும் மேஷத்தில் சனி நீசம் அடைகிறது.எனவே மேஷ லக்கின காரருக்கு சனி அவ்வளவாக நம்மை செய்ய மாட்டார். ஆனால் சனி மறைவு, நீசம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன் மாறுபடும்.

                திருமண வாழ்க்கை

                • மேஷ இலக்கின காரர்களுக்கு வாய்க்கும் துணை குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராக இருப்பார்கள் .
                • வாழ்கை துணையின் தலையிட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக எந் மேஷ இலக்கின பெண்களுக்கு பொருந்தும்
                • மண வாழ்க்கையில் அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும் ஆனாலும் குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
                • திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் .
                • ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்கள் .
                • சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் அழகான வாழ்க்கை துணை அமையும் 
                • சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
                • வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
                •  2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.
                • வாழ்க்கை துணை அழகு குறைந்து உள்ளவராகவும் ,புண்ணிய காரியங்களில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த உடல்  உடையவராக அமையவர்கள் 

                தொழில்

                • மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். 
                • மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை - குதிரை பேரம் - பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்தல் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்கனத்தை கொண்டவர்கள், நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
                • பொதுவாக இரும்பு, நிலம், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள்.
                • பெரும்பாலும் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை மேற்கொள்வர்.  அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றி உறுதியாக பெறுவர்கள்.
                • லக்கனத்துடன் புதன் அல்லது சுக்கிரன் சேர்ந்து  இருக்கும் மேஷ இலக்கினகாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து, பல பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் மேற்கொள்வர்கள்
                • லக்கனத்துடன் குரு வலுவுடன் சேர்ந்து இருந்தால் கடல்கடந்த தொழில் செய்யும்  அமைப்புகள் பெற்று இருப்பார்கள் அல்லது  சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த தொழிலை கொண்டிருப்பர்கள் 

                கிரகங்கள்  

                சூரியன் : 5ம் வீட்டுக்கு உரியவர். அதாவது மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சூரியன் அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்

                சந்திரன் : 4ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் நன்மை செய்யும் கிரகம் ஆகும். மேலும் வளர்பிறை சந்திர என்றால் நல்ல நண்பன் போன்றவர் 

                புதன் : இவர் 3 மற்றும் 6க்கு உடையவர். யோகமில்லாதவர். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பின்னடைவான பலன்களை தரக் கூடியவர் புதன்.

                குரு: இவர் 9 மற்றும் 12க்கு உரியவர். குரு வலிமையடைந்தால்  ஜாதகருக்கு சொத்துக்கள் பெருமளவில் சேரும். ஆனால் பெரும் செலவாளியாக இருப்பர்கள். சிலசமயம் சொத்துக்கள் கரைந்து போகவும் வாய்ப்பிருக்கும். அதாவது பொதுவாக இரு ஆதிபத்ய கிரகங்கள் வலிமையடைந்தால் இரண்டு வீட்டு பலன்களையும் கலந்தே கொடுப்பார்
                சுக்கிரன்: சுக்கிரன் நல்லவன் இல்லை. தன் திசையில் மாராகம் அல்லது மாராகத்திற்கு ஒப்பான துன்பத்தை தருவார். நன்றாக இருந்தால் பலன் நிவர்த்தி கிடைக்கும் 

                சனி: மேஷ லக்னத்திற்கு சனி பலம் பெறாமல் இருப்பது விசேடம். மேஷ லக்னத்திற்கு 10 என்னும் தொழிலையும் 11 என்னும் லாபத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. ஆனால் சனி இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே  தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்

                ராகு & கேது: மேஷ லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

                கிரகங்கள்- சுக்கிரன்    

                • லக்னத்தின் 2 மற்றும் 7ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.  
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாம் வீட்டில்   ஆட்சி பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 7ல் சுக்கிரன் பலம் பெறுவது நலமான அமைப்பல்ல.
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீடு என்னும் கணவன் மனைவி உறவென்னும்  மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
                • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர லக்ன மாரகாதிபதி சுக்கிரனே ஆவார். ஆனால் இவர் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை.
                • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெறாமல் மிதமான பலத்தில்  இருப்பது விசேடம். ரிஷபம், கடகம், தனசு, மீனம்  வீடுகளில் இருந்தால் நலம் தரும். 

                கிரகங்கள்- புதன்

                • மேஷ இலக்கினகாரர்களுக்கு  புதன் எந்தவிதத்திலும் உதவி நினைக்காதவர். 

                • மேஷ லக்னத்திற்கு புதன் எங்கிருந்தாலும் எதாவது ஒரு பிரச்னை தந்து விடுவார். குறிப்பாக இவர் 2 என்னும் குடும்பத்தில் அமர்ந்தாலும் 7 என்னும் களத்திர பாவத்தில்  அமர்ந்தாலும் 10 என்னும் தொழிலில்  அமர்ந்தாலும் மொத்தமாக பாதித்து விடுவார்.

                • மேஷ லக்னத்திற்கு புதன் மிதுனம் கன்னி விருச்சிகம்  ஆகிய இடங்களில் அமர்ந்தால் மிதமான பலன்களை வெளிப்படுத்தக் கூடியவர்.

                சூட்சுமங்கள்  

                • மேஷ லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் எதுவும் இல்லை. அதாவதுசெவ்வாய் புதன் சனி மூவரும்  6 வீடுகள் பலன்களை பலமிழக்க செய்து விடுகிறார்கள்.
                • குரு சுக்கிரன் தனது பங்கிற்கு 4 வீடுகளின்  பலன்களை  செய்கிறது ஆனால் குரு சுக்கிரன் பலம் பொருத்து மாறுபடும்.
                • இறுதியாக சூரியன் சந்திரன் நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஆனால் சந்திரனுக்கு 10 வருடமும் சூரியனுக்கு 6 வருடமும் ஆக  மொத்ததம்  16 வருடங்கள் தான். ஆனாலும்  இவர்கள் பலம் பெற இருத்தல் வேண்டும் .

                தசா பலன்கள் - சூரியன் 

                மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சூரியன்  நட்பு மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • அரசு உதவிகள் அல்லது அரசு வேலைகள் சிரமம் இன்றி நடக்கும்
                • தைரியம் அதிகரிக்கும் 
                • பூர்வீக சொத்துக்களால் லாபம் மேலும் தந்தைவழி மற்றும் புத்திரர்கள் வழிகளில் ஆதாயம் கிட்டும்
                • மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்
                • சுயதொழில் எண்ணிய லாபம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்
                • ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
                • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

                 தசா பலன்கள் - சந்திரன் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு  சந்திரன் நட்பு, சமம் என்ற நிலையில் இருகிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  செவ்வாய் 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி, 8க்கு உரியவரும் செவ்வாய். தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் தோற்றம் பொலிவு மேம்படும்.செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்
                • ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்
                • பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்
                • மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
                • வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்
                • சுய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்
                • குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
                • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
                தசா பலன்கள் -  புதன் 
                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்
                • முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்
                • வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்
                • உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்
                • உயர் கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல் அதிகரிக்கும்
                • கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களுடன் கேளிக்கை ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                 தசா பலன்கள் -  குரு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
                • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
                • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
                • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
                • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
                • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
                • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
                • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

                தசா பலன்கள் - சுக்கிரன்  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
                • தொழிலில் பிரச்சனை வரலாம். 
                • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
                • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
                • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
                • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
                • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
                • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் - சனி 

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சனி செவ்வாய்க்கு பகை. சனி  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • வரவும் உண்டு. செலவும் உண்டு. ஆனால் செலவு அதிகரிக்கும் 
                • தொழிலில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் 
                • வாழ்க்கை துணையின் வழியில் நல்ல உதவி உண்டு. ஆனாலும் வாழ்க்கை துணை செலவுகள் அதிகம் செய்யும் சூழல்  அமம்யும் 
                • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அதாவது பரமத்து பணிகள் வர கூடும்.
                • ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. 
                • பொருளாதாரம், குடும்பம், குழந்தைகள் கவனம் தேவை
                • மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் 
                • முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்
                • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  ராகு  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். ராகு  செவ்வாய்க்கு பகை. ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
                • வழக்கு தொடர்பான விஷயங்களிலும், செய்யும் செயல்களிலும் கவனம் தேவை
                • நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் 
                • நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும் 
                • நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
                • எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாகும்
                • நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்
                • உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்
                • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                தசா பலன்கள் -  கேது  

                • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். கேது  செவ்வாய்க்கு பகை.  கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
                • செயல்படும் தன்மைகளில் மாற்றம் உண்டாகும். அஞ்ஞான சிந்தனைகள் தோன்றி மறையும் 
                • மனதில் எழும் ஆசைகள் குறையும். பல்துறை பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் 
                • மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும் 
                • குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும் 
                • புதுவிதமான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும் 
                • பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும் 
                • தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும் 
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் அஸ்வினி, பரணி, கிருத்திகை பாதம் – 1 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம். 

                மேஷம் லக்கினம்  – அஸ்வனி 

                அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், கேது தாக்கத்துடன் இருப்பார்.
                அஸ்வினி நட்சத்திரம் தேவ குணம் கொண்டவர்கள், தெய்வீக அருள் கொண்டவர், ஜோதிட சாஸ்திரங்களில் மற்றும் இதிகாசம் ஆர்வ மிக்கவர். இவர்கள் கடமை தவறாதவர், கருமமே கண்ணாக திகழ்பவர்கள், பெண்கள் மீது அன்பு காட்டுவார்கள், தன்னலமற்றவர்கள், பராக்கிரமம் உடையவர்கள், உண்மை பேசுபவர், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அணிகலன் மீது ஆசை கொண்டவர். நற்பெயர் பெற்றவர், கொஞ்சம் கோபக்காரர் ஆனால் வெளியே தெரியாது, சாதுர்யம் மிக்கவர், புத்திசாலித்தனம் கொண்டு புகழையும் பொருளையும் ஈட்டுவார், எதிர்கால திட்டம் புரிபவர், பரிசுத்தமானவன், அமைதியானவர், தெளிப்படுத்தி பின்பு வழக்கை நடத்துபவர், நல்லதே நினைப்பவர், ஒருசிலர் புறம் பேசுவார், உடல் உஷ்ணத்தால் நோய் பிறவியில் இருக்கும், நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு இருப்பார். அழகில் சுமாராக இருப்பார்கள், பெரியவர்களிடம் கேட்டு நடப்பவர்.

                மேஷம் லக்கினம்  – பரணி 

                பரணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.
                பரணி நட்சத்திரம் மனுஷ குணம் கொண்டவர், வசதிமிக்கவன், தான் மனதையும் நற்பெயரும் காத்து வாழ்க்கை நடத்திச்செல்வர்கள். பேச்சில் உறுதி, மனைவியின் பேச்சை கேட்பவன், பெற்றோருக்கு மகிழ்வு தருவானாக, அறச்செயல் செய்பவன், எப்பொழுதும் கோபமாக இருப்பான், தூக்கம் குறைவு, மெய்யறிவு மற்றும் நன்நெறி மிக்க நீதிமான், தான தர்மம் செய்பவர், தெய்வ அருள் கொண்டவர், சுலபத்தில் வெற்றி அடைவார், பிடிவாத மிக்கவர், பருத்த தோற்றமிக்கவர், மனதில் வஞ்சகம் இருக்கும், நன்றியறிவுள்ளவர், பலசாலி, சோம்பல் உடையவர், சாஸ்திரப்படி இருப்பான், உடல் பருமனானவர், அரசுப் பணி செய்பவர் மற்றும் குணம் மாறுபட்டு கொண்டு இருக்கும்.

                மேஷம் லக்கினம்  – கிருத்திகை  


                கிருத்திகை நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சூரியன்  தாக்கத்துடன் இருப்பார்.
                கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் இரு நெருப்பு கிரகங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் குணம் கோபம், ஆக்ரோஷமாக, சிலர் இதனால் ரத்த அழுத்தப் பாதிப்புடன் இருப்பார்கள், இரவில் தூக்கமில்லாதவர்கள், புலனின் விஷயங்களில் ஆர்வம் மிக்கவர், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவான், பேச்சில் சாமர்த்திய மிக்கவர், தெளிவானவர்,  ஆசாரமுள்ளவர், வித்துவான், சூரன், புத்திமான், நிலம் வீடு, மாடு கன்று பாக்கியம் கொண்டவர், சாஸ்திரங்களை சம்பிரதாயங்கள் 

                மந்திரம் 

                மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய  தாயுமானவ சுவாமி பதிகத்தை மனதார சொல்லி வருவது நல்லது 

                அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
                அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
                பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
                பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
                துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
                தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
                நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
                நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்