Showing posts with label சூட்சுமங்கள். Show all posts
Showing posts with label சூட்சுமங்கள். Show all posts

மேஷ லக்கினத்தின் பொது பலன்கள்

 

அதிபதிசெவ்வாய்
யோககாரகர்கள்குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள்புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதிசுக்கிரன்
நோய்அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
ஆயுள்சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் மாரகபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் 

சுக்கிரன் 2, 7-க்குடையவன் என்ற வகையில் சுபாவ மாராகன்  அதாவது இரு மாறாக ஆதிபத்தியம் உள்ளவன். மாரகம் கொடுக்க மாட்டான் என்பது விதி.

 மேஷம் லக்கினம்- சுப சேர்க்கை

    • சூரியன்  &  சந்திரன்
    • சூரியன் & செவ்வாய்
    • சூரியன் & குரு
    • செவ்வாய் & குரு
    • செவ்வாய் & சந்திரன்
    • குரு & சனி

மேஷம் லக்கினம்- ஆகாத தசைகள் 


  • புதன் தசை முழுவதும் சனி தசை, பிற்பாதி லாபம் என்றாலும் மாரகன் என்ற வகையில் தீங்கு செய்யும்.
  • லக்னாதிபதி மற்றும் ஆயுள்காரகன் வலுத்தால் 100 வயது வரை வாழ்வார்
  • பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.

பொது பலன்கள் 

  • தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் , புத்திமான், அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன்.
  • செவ்வாயின் ஆதிபத்தியம் இருப்பதால், சிறிய காயங்கள் மற்றும் பெறும் விபத்துக்கள் ஏற்படாமல் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்
  • ஆடு சின்னம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை ஒன்றாம் பாதம் வரை - வானவெளி கூட்டத்தில் ஆடு உருவம் தெரியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் பழைய நூல்களில் அது போல் குறிப்பு இருப்பாதாக தெரியவில்லை. மேஷ லக்கினகாரர்கள் கொஞ்சம் ஆட்டின் குண நலன்கள் மற்றும் அதன் செயல்கள் இருக்கும். 
  • மேஷ லக்கினகாரர்கள் நீண்ட கழுத்துடையவர், மெலிந்த தேகம்,  மத்திம உயரம், சிலபேருக்கு சிவந்த கண், புஜசாலியாகவும், சுறுசுறுப்பாக கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.
  • மேஷ லக்கினகாரர்கள் சர ராசி என்பதால் எல்லாவற்றிலும் ஒரு துடுக்குதனமும் வேகமும் இருக்கும்
  • நெருப்பு ராசி என்பதால் அதிகமான ஆவேசம் மற்றும் கோபத்தினால் தடுமாற்றம் இருக்கும் 
  • குறைந்த அழகு கொண்டவராகவும், பேச்சுதிறமை, தர்ம மிக்கவர் எழுத்துத்திறமை உடையவர், பிடிவாதம் மிக்கவர், மனஉறுதி வலிமை மிக்கவர்,  எடுத்த காரியத்தைத் திறமையாக முடிப்பவர்.
  • சிலர் பொறாமை குணம் மிக்கவராக இருப்பார்கள் .
  • அற்ப ஆசைகள் இல்லாதவர் வாக்கு வன்மை, கோபம், முரட்டு சுபாவம், வேடிக்கையாகப் பேசும் குணம், வாக்கு திறமையால் பிறரை திணறும்படி செய்து தான் செய்த தவறை அப்படியே மறைத்து விடுவது , பார்வைக்கு வெகுளி போல காணப்பட்டாலும் எதையும் கூர்ந்து கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். 
  • தீர்காயுளும், தெய்வ பக்தி, எந்தவித இடையூறுகளையும் பொறுமையுடன் தாங்கி அதை முடித்தும் தன்மை, கவலைகளை உடனுக்குடன் மறந்து போவது, ஆற்றலும் நல்ல திறமையும் இருந்தாலும் அகங்கார குணமும் சுயேச்சையாக முடிவு எடுக்கும் சுபாவத்தால் மேஷ லக்கினகாரர்கள்  மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிப்பர். திடீரென்று மன அமைதியை இழந்து விடுவார்கள்

புலிபாணி ஜோதிடம்- பாடல் - 23

மேஷ (மேட) லக்கினம்

கேளப்பா மேடத்தில் செனித்தபேர்க்கு

கெடுதிமெத்த செய்வனடா கதிரோன்பிள்ளை

ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்

அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு

கூறப்பா கோணத்தி லிருக்கநன்று

கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா

தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே

தனவானாய்வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே


பொருள்:

இப்பாடலில் மேஷ(மேட) லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

“மேஷ லக்னகாரர்களுக்கு சனி தொல்லை தருவார். ஆனால் அந்த சனி வீடு, செல்வம் தருகிறார் என்றால் அந்த ஜாதகருக்கு ஆயுள் குறைவு என்று பொருள். சனி திரிகோணமாகிய  5, 9 யில் இருந்தால்  நன்மையையும், கேந்திரத்தில் இருந்தால் கெடு பலனையும் தன்  தசா புத்தியில்  தருவார்.“

 விளக்கம்:

மேடத்தை இலக்கினமாகப் பெற்று ஜனித்த ஜாதகருக்கு சூரிய பகவானின் பிள்ளையான சனிபகவான் மிகுந்த தொல்லை தருவான். அவ்வாறில்லாமல் அவன் வீடும், பொருளும், நிலபுலன்களும் தருவானேயானால் அச்சாதகன் ஆயுள் குறையும் என்பதையும் உணர்வாயாக. மேலும் அச்சனிபகவான் திரிகோணத்தில் இருந்தால் மிகுந்த நன்மை விளையும். அதற்கு மாறாக கேந்திரத்தில்  இருந்தால் கெடு பலனே விளையுமாதலால் அவ்வாறிருத்தல் ஆகாதப்பா, போக மகா முனிவரின் கருணையாலே மிகவும் லட்சுமி கடாட்சத்துடன் தனலாபம் பெற்று வாழ்வான். இதனை அவனது தசா புத்திகளில் சொல்க.

குறிப்பு:

மேஷம் என்பது கால புருஷனுக்கு தலை மற்றும் தலைமையான சூரியன் மேஷத்தில் உச்ச்மாவதால் அவரின் பலம் நிறைந்திருக்கும். சூரியன் மகனான சனி 10, 11 பாவத்திற்கு உரியவர். மேஷத்தின் அதிபதி செவ்வாய்க்கு சனி பகை கிரகம் மேலும் மேஷத்தில் சனி நீசம் அடைகிறது.எனவே மேஷ லக்கின காரருக்கு சனி அவ்வளவாக நம்மை செய்ய மாட்டார். ஆனால் சனி மறைவு, நீசம் அல்லது வக்கிரம் பெற்றால் பலன் மாறுபடும்.

திருமண வாழ்க்கை

  • மேஷ இலக்கின காரர்களுக்கு வாய்க்கும் துணை குடும்ப பொறுப்பேற்று நடத்துவதில் அக்கறை கொண்டவராக இருப்பார்கள் .
  • வாழ்கை துணையின் தலையிட்டை விரும்ப மாட்டார்கள். பொதுவாக எந் மேஷ இலக்கின பெண்களுக்கு பொருந்தும்
  • மண வாழ்க்கையில் அவ்வப்போது சில மனா கஷ்டங்கள் ஏற்பட்டு விலகும் ஆனாலும் குடும்பம் கெளரவமாகவே காட்சியளிக்கும்.
  • திருமணத்திற்கு முன்பாக வாழ்க்கை திட்டங்களை தீட்டிக் கொண்ட பின்னரே திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் .
  • ஆடல்-பாடல்-விநோதங்களில் மனதை பறிகொடுப்பர்கள் .
  • சுக்கிரன்-சுப கிரஹ சேர்க்கை பார்வை பெற்றால் அழகான வாழ்க்கை துணை அமையும் 
  • சுக்கிரன்-பாவ கிரக சேர்க்கை -பார்வை பெற்றால் சிறு வழக்கு வியாஜ்ஜியங்கள் தலை தூக்கலாம்.
  • வீட்டு வேலைகளை சரிவர கவனிக்க முடியாதபடி உடல் பலவீன படும்.
  •  2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும்.
  • வாழ்க்கை துணை அழகு குறைந்து உள்ளவராகவும் ,புண்ணிய காரியங்களில் ஆர்வமும், தர்ம பற்று, பெருத்த உடல்  உடையவராக அமையவர்கள் 

தொழில்

  • மேஷ ராசியினரின் தைரியம் மற்றும் துணிச்சாலும் இருப்பதால் மீட்பு பணியாளர், காவல்துறை அதிகாரிகள் (police) ஆகிய தொழில்களில் அமையும். வெளிப்படை தன்மை காரணமாக மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறையில் நல்ல பெயர் கிடைக்கும். அரசாங்கம், அரசியல், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ஆகிய துறைகளில் சிறப்பாக வேலை செய்யலாம். 
  • மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், எந்தச் சூழ்நிலையிலும், பங்குச் சந்தை - குதிரை பேரம் - பரிசுச் சீட்டு போன்றவற்றில் முதலீடு செய்தல் கூடாது. அதாவது நிலையற்ற தன்மை கொண்ட எந்த தொழிலை அல்லது முதலீட்டை மேற்கொள்ள கூடாது. அதாவது, மேஷ இலக்கனத்தை கொண்டவர்கள், நிலையான மற்றும் தெளிவான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்
  • பொதுவாக இரும்பு, நிலம், இயந்திரங்கள், வண்டிகள், பழைய பொருட்களை வாங்கி விற்றல் போன்ற தொழில்களைச் செய்தால் சிறந்த வருவாய் ஈட்டுவார்கள்.
  • பெரும்பாலும் மேஷ லக்கினத்தில் பிறந்தவர்கள், உடலுழைப்பு சார்ந்த, வேர்வை சிந்தும் தொழிலை மேற்கொள்வர்.  அத்தகைய தொழில் செய்வோர் தமது வாழ்வில் பொருளாதார வெற்றி உறுதியாக பெறுவர்கள்.
  • லக்கனத்துடன் புதன் அல்லது சுக்கிரன் சேர்ந்து  இருக்கும் மேஷ இலக்கினகாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்து, பல பேரை வேலைக்கு அமர்த்தி, பெரிய அளவிலான தொழில் மேற்கொள்வர்கள்
  • லக்கனத்துடன் குரு வலுவுடன் சேர்ந்து இருந்தால் கடல்கடந்த தொழில் செய்யும்  அமைப்புகள் பெற்று இருப்பார்கள் அல்லது  சட்ட ஆலோசகர், நிதித்துறையின் ஆலோசகர், பாதுகாப்பு ஆலோசகர் என பிறருக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கான சிறந்த தொழிலை கொண்டிருப்பர்கள் 

கிரகங்கள்  

சூரியன் : 5ம் வீட்டுக்கு உரியவர். அதாவது மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சூரியன் அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்

சந்திரன் : 4ம் வீட்டுக்கு உரியவர். மிகவும் நன்மை செய்யும் கிரகம் ஆகும். மேலும் வளர்பிறை சந்திர என்றால் நல்ல நண்பன் போன்றவர் 

புதன் : இவர் 3 மற்றும் 6க்கு உடையவர். யோகமில்லாதவர். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பின்னடைவான பலன்களை தரக் கூடியவர் புதன்.

குரு: இவர் 9 மற்றும் 12க்கு உரியவர். குரு வலிமையடைந்தால்  ஜாதகருக்கு சொத்துக்கள் பெருமளவில் சேரும். ஆனால் பெரும் செலவாளியாக இருப்பர்கள். சிலசமயம் சொத்துக்கள் கரைந்து போகவும் வாய்ப்பிருக்கும். அதாவது பொதுவாக இரு ஆதிபத்ய கிரகங்கள் வலிமையடைந்தால் இரண்டு வீட்டு பலன்களையும் கலந்தே கொடுப்பார்
சுக்கிரன்: சுக்கிரன் நல்லவன் இல்லை. தன் திசையில் மாராகம் அல்லது மாராகத்திற்கு ஒப்பான துன்பத்தை தருவார். நன்றாக இருந்தால் பலன் நிவர்த்தி கிடைக்கும் 

சனி: மேஷ லக்னத்திற்கு சனி பலம் பெறாமல் இருப்பது விசேடம். மேஷ லக்னத்திற்கு 10 என்னும் தொழிலையும் 11 என்னும் லாபத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. ஆனால் சனி இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே  தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்

ராகு & கேது: மேஷ லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

கிரகங்கள்- சுக்கிரன்    

  • லக்னத்தின் 2 மற்றும் 7ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.  
  • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாம் வீட்டில்   ஆட்சி பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 7ல் சுக்கிரன் பலம் பெறுவது நலமான அமைப்பல்ல.
  • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
  • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீடு என்னும் கணவன் மனைவி உறவென்னும்  மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,
  • மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர லக்ன மாரகாதிபதி சுக்கிரனே ஆவார். ஆனால் இவர் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை.
  • மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெறாமல் மிதமான பலத்தில்  இருப்பது விசேடம். ரிஷபம், கடகம், தனசு, மீனம்  வீடுகளில் இருந்தால் நலம் தரும். 

கிரகங்கள்- புதன்

  • மேஷ இலக்கினகாரர்களுக்கு  புதன் எந்தவிதத்திலும் உதவி நினைக்காதவர். 

  • மேஷ லக்னத்திற்கு புதன் எங்கிருந்தாலும் எதாவது ஒரு பிரச்னை தந்து விடுவார். குறிப்பாக இவர் 2 என்னும் குடும்பத்தில் அமர்ந்தாலும் 7 என்னும் களத்திர பாவத்தில்  அமர்ந்தாலும் 10 என்னும் தொழிலில்  அமர்ந்தாலும் மொத்தமாக பாதித்து விடுவார்.

  • மேஷ லக்னத்திற்கு புதன் மிதுனம் கன்னி விருச்சிகம்  ஆகிய இடங்களில் அமர்ந்தால் மிதமான பலன்களை வெளிப்படுத்தக் கூடியவர்.

சூட்சுமங்கள்  

  • மேஷ லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் எதுவும் இல்லை. அதாவதுசெவ்வாய் புதன் சனி மூவரும்  6 வீடுகள் பலன்களை பலமிழக்க செய்து விடுகிறார்கள்.
  • குரு சுக்கிரன் தனது பங்கிற்கு 4 வீடுகளின்  பலன்களை  செய்கிறது ஆனால் குரு சுக்கிரன் பலம் பொருத்து மாறுபடும்.
  • இறுதியாக சூரியன் சந்திரன் நல்ல பலன்களை கொடுப்பார்கள். ஆனால் சந்திரனுக்கு 10 வருடமும் சூரியனுக்கு 6 வருடமும் ஆக  மொத்ததம்  16 வருடங்கள் தான். ஆனாலும்  இவர்கள் பலம் பெற இருத்தல் வேண்டும் .

தசா பலன்கள் - சூரியன் 

மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சூரியன்  நட்பு மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் அடைகிறார். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • அரசு உதவிகள் அல்லது அரசு வேலைகள் சிரமம் இன்றி நடக்கும்
  • தைரியம் அதிகரிக்கும் 
  • பூர்வீக சொத்துக்களால் லாபம் மேலும் தந்தைவழி மற்றும் புத்திரர்கள் வழிகளில் ஆதாயம் கிட்டும்
  • மக்கள் தொடர்பான துறைகளில் கீர்த்தி உண்டாகும்
  • சுயதொழில் எண்ணிய லாபம் உண்டாகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்
  • ஆன்மீகப் பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்
  • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

 தசா பலன்கள் - சந்திரன் 

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு  சந்திரன் நட்பு, சமம் என்ற நிலையில் இருகிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
  • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
  • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
  • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
  • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
  • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
  • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
  • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
  • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

தசா பலன்கள் -  செவ்வாய் 

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி, 8க்கு உரியவரும் செவ்வாய். தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • உடல் தோற்றம் பொலிவு மேம்படும்.செய்யும் செயல்களில் கீர்த்தி உண்டாகும்
  • ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும்
  • பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்
  • மனதில் புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள்
  • வெளியூர் பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்
  • சுய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்
  • குடும்ப பொருளாதாரம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்
  • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
தசா பலன்கள் -  புதன் 
  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்
  • முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும்
  • வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்
  • உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்
  • உயர் கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். புதிய ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல் அதிகரிக்கும்
  • கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களுடன் கேளிக்கை ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
  • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

 தசா பலன்கள் -  குரு  

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு குரு நட்பு என்ற நிலையில் இருக்கிறது. சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்
  • வீடு மனை யோகங்கள் உண்டாகும். மனதுக்குப் பிடித்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்
  • தொழில் திறமையால் லாபகரமான சூழல் உண்டாகும்
  • மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும் 
  • ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் 
  • நீர்ப்பாசனம் தொடர்பான செயல்பாடுகள் லாபம் அதிகரிக்கும்
  • வெளியூர் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்
  • தாய் வழியிலிருந்து வந்த சொத்து தொடர்பான பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும்
  • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

தசா பலன்கள் - சுக்கிரன்  

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாய்க்கு சமம். சுக்கிர  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • வெளிநாடு பயணங்கள், வெளிநாட்டு கல்வி சார்ந்த விசயங்கள் ஆதாயமாக இருக்கும்
  • தொழிலில் பிரச்சனை வரலாம். 
  • இளைய சகோதர சகோதரி வழியில் சில பிரச்னைகள் தோன்றும் 
  • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அல்லது வழக்கு வர வாய்ப்பு உண்டு 
  • உடலில் இருந்த சோர்வு நீங்கி  சுறுசுறுப்பு  உண்டாகும்.
  • பொருளாதாரம், குடும்பம் மற்றும் தொழில் கவனம் தேவை
  • தொழில் விரயம் தவிர்க்க கவனம் தேவை. 
  • உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்த்த பதவி உயர்வு உண்டாகும். பணியில் பிரச்னைகள் தோன்றும் 
  • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

தசா பலன்கள் - சனி 

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். சனி செவ்வாய்க்கு பகை. சனி  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • வரவும் உண்டு. செலவும் உண்டு. ஆனால் செலவு அதிகரிக்கும் 
  • தொழிலில், வியாபாரம் சிறப்பாக இருக்கும் 
  • வாழ்க்கை துணையின் வழியில் நல்ல உதவி உண்டு. ஆனாலும் வாழ்க்கை துணை செலவுகள் அதிகம் செய்யும் சூழல்  அமம்யும் 
  • வீடு சார்ந்த விசயங்களில் பிரச்சனை அதாவது பரமத்து பணிகள் வர கூடும்.
  • ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. 
  • பொருளாதாரம், குடும்பம், குழந்தைகள் கவனம் தேவை
  • மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும் 
  • முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்
  • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

தசா பலன்கள் -  ராகு  

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். ராகு  செவ்வாய்க்கு பகை. ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • மனதுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
  • வழக்கு தொடர்பான விஷயங்களிலும், செய்யும் செயல்களிலும் கவனம் தேவை
  • நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் 
  • நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் கவனம் வேண்டும் 
  • நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள் 
  • எளிதில் முடியும் என்று எதிர்பார்த்த சில செயல்கள் காலதாமதமாகும்
  • நெருக்கமானவர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்
  • உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்
  • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

தசா பலன்கள் -  கேது  

  • மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய். கேது  செவ்வாய்க்கு பகை.  கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
  • செயல்படும் தன்மைகளில் மாற்றம் உண்டாகும். அஞ்ஞான சிந்தனைகள் தோன்றி மறையும் 
  • மனதில் எழும் ஆசைகள் குறையும். பல்துறை பற்றி அறிந்து கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள் 
  • மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பமான சூழல் உண்டாகும் 
  • குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்லவும் 
  • புதுவிதமான செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும் 
  • பணிகளில் சாதகமற்ற சூழல் உண்டாகும் 
  • தொழில் நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும் 
  • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் என்றால் அந்த லக்கினம் அஸ்வினி, பரணி, கிருத்திகை பாதம் – 1 என்ற இந்த முன்று நட்சத்திரத்தில் இருக்கலாம். 

மேஷம் லக்கினம்  – அஸ்வனி 

அஸ்வினி நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், கேது தாக்கத்துடன் இருப்பார்.
அஸ்வினி நட்சத்திரம் தேவ குணம் கொண்டவர்கள், தெய்வீக அருள் கொண்டவர், ஜோதிட சாஸ்திரங்களில் மற்றும் இதிகாசம் ஆர்வ மிக்கவர். இவர்கள் கடமை தவறாதவர், கருமமே கண்ணாக திகழ்பவர்கள், பெண்கள் மீது அன்பு காட்டுவார்கள், தன்னலமற்றவர்கள், பராக்கிரமம் உடையவர்கள், உண்மை பேசுபவர், மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அணிகலன் மீது ஆசை கொண்டவர். நற்பெயர் பெற்றவர், கொஞ்சம் கோபக்காரர் ஆனால் வெளியே தெரியாது, சாதுர்யம் மிக்கவர், புத்திசாலித்தனம் கொண்டு புகழையும் பொருளையும் ஈட்டுவார், எதிர்கால திட்டம் புரிபவர், பரிசுத்தமானவன், அமைதியானவர், தெளிப்படுத்தி பின்பு வழக்கை நடத்துபவர், நல்லதே நினைப்பவர், ஒருசிலர் புறம் பேசுவார், உடல் உஷ்ணத்தால் நோய் பிறவியில் இருக்கும், நீதி, நேர்மை என்று பேசிக்கொண்டு இருப்பார். அழகில் சுமாராக இருப்பார்கள், பெரியவர்களிடம் கேட்டு நடப்பவர்.

மேஷம் லக்கினம்  – பரணி 

பரணி  நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.
பரணி நட்சத்திரம் மனுஷ குணம் கொண்டவர், வசதிமிக்கவன், தான் மனதையும் நற்பெயரும் காத்து வாழ்க்கை நடத்திச்செல்வர்கள். பேச்சில் உறுதி, மனைவியின் பேச்சை கேட்பவன், பெற்றோருக்கு மகிழ்வு தருவானாக, அறச்செயல் செய்பவன், எப்பொழுதும் கோபமாக இருப்பான், தூக்கம் குறைவு, மெய்யறிவு மற்றும் நன்நெறி மிக்க நீதிமான், தான தர்மம் செய்பவர், தெய்வ அருள் கொண்டவர், சுலபத்தில் வெற்றி அடைவார், பிடிவாத மிக்கவர், பருத்த தோற்றமிக்கவர், மனதில் வஞ்சகம் இருக்கும், நன்றியறிவுள்ளவர், பலசாலி, சோம்பல் உடையவர், சாஸ்திரப்படி இருப்பான், உடல் பருமனானவர், அரசுப் பணி செய்பவர் மற்றும் குணம் மாறுபட்டு கொண்டு இருக்கும்.

மேஷம் லக்கினம்  – கிருத்திகை  


கிருத்திகை நட்சத்திரத்தில் லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் செவ்வாய், சூரியன்  தாக்கத்துடன் இருப்பார்.
கிருத்திகை நட்சத்திரம் ராக்ஷஸ கணம் கொண்டவர்கள். கார்த்திகை ஒன்றாம் பாதத்தில் இரு நெருப்பு கிரகங்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் குணம் கோபம், ஆக்ரோஷமாக, சிலர் இதனால் ரத்த அழுத்தப் பாதிப்புடன் இருப்பார்கள், இரவில் தூக்கமில்லாதவர்கள், புலனின் விஷயங்களில் ஆர்வம் மிக்கவர், வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவான், பேச்சில் சாமர்த்திய மிக்கவர், தெளிவானவர்,  ஆசாரமுள்ளவர், வித்துவான், சூரன், புத்திமான், நிலம் வீடு, மாடு கன்று பாக்கியம் கொண்டவர், சாஸ்திரங்களை சம்பிரதாயங்கள் 

மந்திரம் 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய  தாயுமானவ சுவாமி பதிகத்தை மனதார சொல்லி வருவது நல்லது 

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

 

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்