Showing posts with label தசா புத்தி. Show all posts
Showing posts with label தசா புத்தி. Show all posts

துலாம் லக்கினத்தின் பொது பலன்கள்






  • துலா லக்னத்திற்க்கு சனி தன் பரி பூர்ண ஆசியை வழங்கி, எல்லா நன்மைகளையும் செய்வாா். சனியின் பூர்ண அருளை இவர்கள் பெறுவதால் துலா லக்னத்தாருக்கு தீர்க்காயுள் உண்டு.
  • கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் ஞாயிற்றுக்கிழமை சூரிய உதயத்தில் மரணமடைவார்.
  • துலா ராசிக்காரர்களுக்கு இரண்டு, ஏழுக்குடை செவ்வாய் பலமாக அமைந்தால் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். பொதுவாக இவர்களில் பலருக்கு சுய தொழில் அமைய சிரமப்பட வேண்டி இருக்கும்.
  • சந்திரன் ஆட்சி, உச்சம், கேந்திரம் என பலமாக அமைந்தால் இவர்களின் கணக்குகள், திட்டங்கள் எல்லாம் வெற்றியடையும். 
  • சனியும்,புதனும் சாதகமாக இருந்தால் உயர் உச்ச தொழில் அதிபர்களாக வலம் வருவார்கள்.
  • லக்னத்திலேயே செவ்வாய், ராகு மற்றும் குருவின் நட்சத்திரங்கள் இருப்பதால் செவ்வாய்க  கொல்ல மாட்டார் என்று சில நூல்கள் சொல்கின்றன
  • புதனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து, கேந்திர திரிகோணங்களில் இருந்தால் இந்த லக்கினக்காரர்களுக்கு ராஜ யோகத்தைக் கொடுக்கும்

பொது பலன்கள் 

  • தராசு  சின்னம்: துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள், நியாயத்தையும் தர்மத்தையும் உணர்த்தும் தராசுச் சின்னத்தைப் போன்றவர்கள்
  •  இவர்கள் எங்கேயும் எப்போதும் நீதியையே பார்ப்பார்கள். தங்களைச் சுற்றி இவர்கள் ஒரு லட்சுமணக் கோடு போட்டிருப்பார்கள். அதைத் தாண்டி வரவே மாட்டார்கள். இதனாலேயே ‘பிழைக்கத் தெரியாவர் அவர்’ என்று சுற்றத்திலும் நட்புகளிடையேயும் இவர்களைப் பற்றி சொல்வார்கள்.
  • நல்ல குணம், புத்தி, அறிவு, பொறுமை, புகழ் உடையவர், தனவான் , இரக்கம் உடையவர், ஜனப்பிரியர் , சுகவான். 
  • இனப்பற்று மிக்கவர், செல்வந்தர், அலங்காரப் பொருட்கள், வாசனை திரவியங்கள் இவற்றின் மேல் ஆசையுடையவர்கள்
  • பெண்களைக் கவர்பவர், பெண்ணாக இருந்தால் ஆண்களை அடிமை கொள்ளும் அழகுடையவர். தெய்வ பக்தி உள்ளவர். கலை, இசை, நாடக நடனம் இவற்றில் அதிகத் தேர்ச்சி பெறுவர். கற்பனை திறன் அதிகம்.
  • மிகுந்த ஆசை இருந்தாலும் ஆசைகள் எல்லை தாண்டும்போது இவர்களை இவர்களே கட்டுப்படுத்திக்கொள்ளும் விவேகத்தோடு இருப்பார்கள் 
  • குழந்தைப் பருவத்தில் சில கஷ்டங்களும், வேதனைகளும் ஏற்பட்டாலும் வாழ்க்கையின் பிற்பகுதியில்  மிகுந்த சந்தோஷமாக  இருக்கும்  31, 32 வயதுக்கு மேல்  வாழ்க்கையில் முன்னேறுவார்கள். 
  • இந்த லக்கினக்காரர்களுக்கு சுக்கிரனின் சரியான இடத்தில் இருந்தால் அவர்களுக்கு இன்பத்தை தரும் தேவையான அனைத்து சுகங்கள், செல்வமும், நல்ல மனைவியும் குடும்பமும் கிட்டும் என்பது உண்மை.
  • இவர் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் தன்மை கொண்டவர் என்று சில ஜோதிட நூl கள் சொல்ல்கின்றன 
  • துலா லக்கினகாரர்கள் வசீகர தோற்றம் கொண்டவர்கள், மற்றவர்களுக்கு மரியாதையை கொடுப்பவர்கள், இனிமையான குரல் கொண்டவர்கள், பேராசை கொஞ்சம் வெளிப்படும், சகோதரர்கள் நண்பர்களால் சந்தோஷம் அடைவார்கள். குழந்தைகள் மேலுயர உதவார்கள்.
  •  சந்தோஷம் துக்கம் சேர்ந்து இருக்கும், கடன் இருந்துகொண்டு இருக்கும், அமைதியானவர்கள், கலையிலும் இசையிலும் மிகுந்த ஆர்வமும், முயற்சியால் முன்னுக்கு வருபவர், வேலை மாற்றம் இருந்துகொண்டு இருக்கும்.
  •  படிப்பு வைத்திய செலவு  அவ்வப்பொழுது ஏற்படும், பயணம் இவர்களின் பொழுதுபோக்கு, புத்திசாலி மிக்கவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எடைபோட்டு பழகுவார்கள், அழகிய கவர்ச்சியானவர்கள், வெற்றியாளர்கள்,  அரசாங்கத்தால் அவ்வளவு நன்மை பெறமாட்டார்கள். 
  • சங்கீதத்தில் மிகுந்த நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். வாசனை திரவியத்தில் நாட்டம் இருக்கும் 

  • புலிபாணி ஜோதிடம்- பாடல் - 28

    துலாம் லக்கினம்

    கூறினேன் கோலுட யில்லு மாகில்

    கொற்றவனே கதிரவனும் கோணமேற

    சீரின் சென்மனுக்கு யோகம்மெத்த

    சிவசிவா சிவபதவி கிட்டும் செப்பு

    மாறினேன் மற்றவிடந் தன்னில்நிற்க

    மார்த்தாண்டன் திசையுமது ஆகாதப்பா

    தேரினேன் போகருட கடாக்ஷத்தாலே

    திடமான புலிப்பாணி தெரிவித்தேனே


    பொருள்:

    இப்பாடலில் துலா லக்கினத்தை பற்றி புலிப்பாணி விவரிக்கிறார். அவர் இந்த பாடலின் மூலம் சொல்வது என்ன என்றால்

    “துலா லக்கினத்தில் பிறந்தவர்கள் திரிகோண ஸ்தானங்களில் (1, 5, 9) சூரியன் இருந்தால் மிக நல்ல ராஜ யோகத்தை தருவார். ஆனால் வேறு இடங்களில் இருந்தால் அவரது தசா புத்தியில் தொல்லைகள் தருவார் என்று திடமாக அறிந்து சொல்கிறார்.“


     விளக்கம்:

    கன்னியா லக்கினத்தில் உதித்த பேருக்கு குருவினால் வெகு துன்பம் வாய்த்திடும் உண்மையாகும். எவ்வாறெனில் பூர்வீக சொத்துகளும், நிலமும் சேதமாகும் என்பது உண்மையே, ஆனால் குருவும் மதியும் திரிகோண ஸ்தானத்தில் அமைவதில் பலனுண்டா? என நினைப்பின் எனக்கு சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் இத்தகைய ஜென்மனுக்கு வேட்டல் உண்டு என்பதும் உண்மையேயாமன்றோ? எனினும் திருமகள் கணவனான திருமாலும் அவனது திருவான தேவியும் அவன் மனையில் வாழ்வார். அவர் தம் மனையில் தெய்வம் வாழும். எனவே இதனால் குற்றமில்லை என்பதை போகரது மாணாக்கனான புலிப்பாணி ஆகிய நான் இதைக் குறித்துச் சொன்னேன்.

    லக்கினம் துலாம் ஆக இருக்க அவ்விலக்கினத்திற்குத் திரிகோண ஸ்தானமான சூரியன் நிற்கப் பிறந்த ஜாதகருக்கு மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் பேரருளால் கிட்டும் என்பதையும் திடமாகக் கூறுவாயாக வேறு இடங்களில் மாறி நிற்பின் அவனது திசாபுத்திகள் மிகவும் தொல்லை தருவனவே ஆகும். இதுவே என் குருநாதர் போகரது அருட்கருணை கொண்டு திடமாக நான் அறிந்து கொண்ட காரணத்தால் நீ தேர்ச்சி பெற எடுத்துச் சொன்னேன். உணர்க!

    குறிப்பு:

    1, 5, 9-இல் சூரியன் இருந்தால்  மிகவும் சிறந்த ராஜ யோகங்கள் கடவுளின் பேரருளால் கிட்டும்.

    திருமண வாழ்க்கை

    • துலா லக்கினத்தில் பிறந்தவருக்கு மேஷ ராசி ஏழாமிடமாக வருவதால் வாழ்க்கை துணை  இவர்களை மிஞ்சி சில காரியங்களில் இறங்குவர். மேலும்  சிறு சிறு விஷயங்களில் எல்லாம் பெரிதாகக் குற்றம் கண்டு பிடிப்பார்.
    •  துலாம் லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே செவ்வாயும்  சுக்கிரனோடு சேர்ந்திருந்தால் வாழ்க்கைத் துணைக்கு அளவுக்கு அதிகமாக விட்டுக் கொடுத்து பிறகு கவலை படுவார்கள். ஆனாலும் பூமி லாபம், வாகனம் ஆகியவை திருமணத்திற்குப் பிறகு ஏற்படும். 
    • இவர்களின் வாழ்க்கை துணை மிகுந்த தைரியசாலியாகவும், மனதில் பட்டதை உடனடியாக வெளியில் சொல்லக் கூடியவர்களாகவும், தீர்க்கமான கொள்கை கொண்டவர்களாகவும், எந்த ஒரு விஷயத்திலும் தீர ஆலோசித்து முடிவு எடுப்பவராகவும் வாழ்க்கைத்துணை இருப்பார். 
    • வரக்கூடிய வாழ்க்கைத் துணை குடும்பம் சம்பந்தமான விஷயங்களில் எந்த ஒரு முடிவிலும் வாழ்க்கை துணையிடம் அடங்கிப் போவது சிறந்தது. 
    • உங்கள் வாழ்க்கை துணைக்கு  தொழில் மாற்றம் வரும். திருமணம் நடந்த பிறகு வாழ்க்கை துணைக்கு சொத்து உங்களுக்கு கிடைக்கும்
    • பொதுவாக திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் உள்ளவர்களாக இருப்பார்கள்.

    தொழில்

    • துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ம் அதிபதி சந்திரன். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.
    • பொதுவாக இரும்பு எந்திரம், டிரான்ஸ் போர்ட், கட்டிட கான்ட்ரக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பார்கள். பெரும்பாலோர் வியாபாரத்துறையில் ஈடுபடுவர்கள்.
    • எக்காரியத்திலும் மிகமிக நிதானமாக ஈடுபடுவார்கள். ஆழ்ந்த ஆலோசனை செய்து முடிவுக்கு வருவார்கள். 
    • அரசாங்கம் மற்றும் சமுக விவகாரங்களில் மகத்தான வெற்றி கிடைக்கும் . சிலர் தொழில் திட்டங்களுக்குத் தலைமை தாங்குவார்கள்  மேலும்  சமுகப் பணியில் ஆர்வம் கொண்டவர். 
    • சொந்த தொழில் மூலம் வருமானம் குறைவு. கூட்டு தொழில்  நன்மை இல்லை அதனால் பணம் இழப்பு இருக்கும்.
    • Shipping ஷிப்பிங் தொழில், ஏற்றமதி மற்றும் இறக்குமதி தொழில்கள் சிறப்பாக இருக்கும் 
    • மேலும் தண்ணிர் சம்மந்தப்பட்ட தொழில் அமையும்.  உயர் தர துணி வியாபாரம் செய்வது இவர்களுக்கு சிறப்பாக இருக்கும் 
    • வக்கீல், ஜோதிடர், ஆராய்ச்சியாளர் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
    • பல நாடுகளுக்கு சென்றாலும் சிலருக்கு வெளி நாட்டு இருந்து  தொழில் செய்யும் அமைப்பு இருக்காது. 
    • சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9, 12க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில்,உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்தியநாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும். இந்த ஜாதகர்கள் நிறைய பேருக்கு விவசாயம் மற்றும்  ஆசிரியராக இருப்பார்கள்.
    •  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன் உண்டாகும்.
    • தேய்பிறை சந்திரனாக இருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.
    • சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில்  செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
    • சுக்கிரன் பலம் பெற்று கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.
    • சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

    கிரகங்கள்  

    சூரியன் :   துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் 11 ம் அதிபதியாக  இருந்தாலும் சூரியன் இங்கு நீசம் பெறுவதால் பொருளாதார பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். ஏதாவது ஒரு விதத்தில் கடன் என்பது இவர்கள் வாழ்வில் தவிர்க்க இயலாதது. 

    சந்திரன் : 10ம் வீட்டுக்கு உரியவர். சுக்கிரனுக்கு பகை ஆயினும் நல்லதே செய்வார். தொழில் ஸ்தானாதிபதி என்ற வகையில் நல்லதே செய்வார். 
    புதன் : இவர் 12 மற்றும் 9 க்கு உடையவர். மேலும் புதன் வீடு கன்னியில் நீசம் அடைந்தாலும் இவர் யோககாரரே ஆவார் 

    செவ்வாய்: செவ்வாய் 2 , 7 உரியவர். பகைவர் மேலும் மராகதிபதி ஆவார். செவ்வாய் பலம் பெற்றால் மட்டுமே நல்லது. இல்லை என்றால் மரகத்திற்கு ஒப்பான தொல்லையை தரவார்.

    குரு: குரு 3, 6 க்கு உரியவர். சுக்கிரன் மீனத்தில் உச்சம் அடைகிறார். பகை கிரகம் என்றாலும் பெரிய அளவு கெடுதல் செய்ய மாட்டார். ஆனால் யோகமில்லாதவர். 

    சுக்கிரன்: துலாம் லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். நல்லதையும் கெட்டதையும் கலந்தே தருவார் 

    சனி: சனி என்பவர் 4, 5க்கும் உரியவராக இருந்து நன்மை அளிப்பார். நல்ல யோகத்தை தருபவர். யோககாரர் ஆவார்  

    சூட்சுமங்கள்  

    • இவர்களுக்கு 8க்கு உரியவர் ஆனாலும் சுக்கிரன் யோகாரரே. தான் இருக்கும் நிலை பொறுத்து நன்மையையோ  தீமையையோ  கொடுப்பார்.
    • துலா  லக்கின என்றால் சனி (5அதிபதி என்பதால் ),  புதன் (9 அதிபதி என்பதால் ) நன்மைகள் அதிகம் செய்வார்கள். 
    • துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் பாதக அதிபதி ஆவார். அவர் 8 இல் மறைந்து குரு மற்றும் புதன் உடன் இணைந்து இருப்பது நல்ல அமைப்பு. இருப்பினும் சூரிய திசை மற்றும் புத்தி வரும்பொழுது பணம் சம்பந்தபட்ட விஷயத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்
    • துலாம் லக்கினத்திற்கு லக்கினாதிபதியே 8 ஆம் வீட்டிற்கும் அதிபதியாக வருகிறார். எனினும் லக்கினாதிபதிக்கு அட்டமாதிபத்ய தோஷம் இல்லை. எனவே சுக்கிரன் 8 இல் ஆட்சி பெற்று இருப்பது ஜாதகருக்கு நன்மை தான்.
    • துலாத்திற்கு சனி உச்சமாகும் நிலையில் சூட்சும வலுவோ அல்லது சுபர் பார்வையோ பெறும் நிலையில் மட்டும்தான் நல்ல பலன்களைத் தருவார். இவைகள் இல்லாமல் அவர் உச்சம் மட்டும் பெறுவது அவரது தசையில் நன்மைகளைத் தராது.
    • துலாம் லக்னத்திற்கு நான்காம் இடத்தில் ஆட்சி பெற்று சச யோக நிலையில் இருக்கும் சனி  சூட்சும வலுப் பெறாமல் வெறும் ஆட்சி பலத்தை மட்டுமே அடைந்திருக்கும் நிலையில் நான்காமிடத்தின் முக்கிய செயல்பாடுகளான வீடு, வாகனம், தன் சுகம், கல்வி, அம்மா ஆகியவற்றில் கெடுதல்களைச் செய்வார்

    தசா பலன்கள் - சூரியன் 

      துலாம்   லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சூரியன் தசையினால் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்.  
      • துலாம் லக்கினத்திற்கு 11 வீடு சிம்மம்.  ஆனால் சூரியன் பகை. மேலும் சூரியன் பலமிழந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு இருக்கும்.
      • சூரிய தசாவின் சுயபுக்தி காலங்களில் ஜனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம், நட்பு மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். 
      • ராகு லக்னத்திற்கு 8, 12-ல் அமையப் பெற்று, பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றிருந்தால் சூரிய தசை காலத்தில் பகைவர்களால் பிரச்சினை, கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு, பண விரையம் ஏற்படக்கூடிய நிலை, விபத்தினால் கண்டம், அலர்ஜி பாதிப்பு, தேவையற்ற பழக்க வழக்கங்கள் உண்டாகக் கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும்
      • புதன் ஆட்சியோ, உச்சமோ பெற்று இருந்தாலும், சுபர் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் சூரிய தசை காலத்தில் நல்ல தைரியம், துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வ பக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி, தொழில் வியாபாரத்தில் ஈடுபடும் உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். 
      • சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்

     தசா பலன்கள் - சந்திரன் 

    துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். சந்திர தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
    • துலாம்  லக்கினக்காரர்களுக்கு கடகம்  10 ம் இடம்,  சந்திரன் பகை என்றாலும்  நல்ல பலனே கிடைக்கும் எனலாம் 
    • தொழிலுக்கு முயற்சி செய்பவருக்கு புது தொழிலும், தொழிலில் இருப்பாவருக்குமுன்னேற்றமும் உண்டாகும் 
    • ஜாதகத்தில் சந்திரன் நன்றாக இருந்துவிட்டால் அம்மாவின் அசையாச் சொத்து, அறிவுச் சொத்து எல்லாமுமே உங்களை வந்து சேரும். அதே சந்திரன் பாவ கிரகங்களோடு சேர்க்கை பெற்றிருந்தாலோ, தேய்பிறை சந்திரனாக இருந்தாலோ அதாவது கெட்டு இருந்தால்  எதையுமே எளிதாக அடைய முடியாமல் அவஸ்தைப்படுவார்கள் 
    • வளர்பிறையில் பிறந்து, ராகு, கேது, சனி சம்பந்தப்படாமல் இருந்தால் சுகமான வாழ்க்கை அமையும் என்பது உண்மை ஆகும் 
    • செவ்வாய் பலம் பெற்று இருந்தாலும்  எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் திறனும், வீரம், விவேகமும், எதிரிகளை வெல்லும் ஆற்றலும், பெயர், புகழ், உயர கூடிய வாய்ப்பும் உண்டாகும்.
    • சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கள்கிழமை தோறும் சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதி தேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

    தசா பலன்கள் -  செவ்வாய் 


    துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். செவ்வாய் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 

    • செவ்வாய் 2 மற்றும் 7 க்கு உரியவர் என்பதால் ஒரளவுக்கு அனுகூலத்தைக் கொடுத்தாலும், 2, 7ம் பாவங்கள் மாரக ஸ்தானம் என்பதால் சில உடம்பு பாதிப்புகளை உண்டாக்குவார். 
    • திருமணத்திற்கு எதிர்பார்வருக்கு திருமணம் உண்டாகும். பிரிந்து இருந்த குடும்பம் ஒன்று சேரும் 
    • செவ்வாய் பலவீனமாக இருந்து புத்தி நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, வியாதியால் கவலை, கஷ்டம், உற்றார்- உறவினர்களிடம் கலகம், புத்திர பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.
    •  ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை  நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும்.
    • பொதுவாக நன்மையும் தீமையும் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் நிலை பொறுத்து நன்மை மற்றும் தீமையின் அளவு மாறுபடும் .
    • பெண் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தால் கணவருக்கு முன்னேற்றக் குறைவு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறையும். அரசு பணி, அரசு ஆதரவில் தடை தாமதம் ஏற்படும்.
    • செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் ஓரையில் முருகப்பெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
    தசா பலன்கள் -  புதன் 
      துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். புதன் தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்

      • புதன் துலா லக்கினத்திற்கு 9, 12 க்கு உடையவர். மேலும் புதன் வீடு கன்னியில் நீசம் அடைந்தாலும் இவர் யோககாரரே ஆவார் 
      • 9க்கு உரியவர் என்பதால் நல்ல பலனையே தருவார். படிக்கும் வயதில் நல்ல கல்வி, திருமண வயதில் திருமணம் ஆகிய நல்லவைகள் அமையும் 
      • தந்தைக்கு நல்லது மேலும் தந்தையால் நன்மை உண்டாகும். 
      • அறிவு பெருகும். சொத்துகள் வாங்குதல், தொழிலில் முன்னேற்றம் ஆகியவை உண்டாகும்.
      • வரவும் இருக்கும். செலவும் அதிகமாக இருக்கும். அது சுப செலவாக கூட இருக்கலாம் 
      • வெளிநாடு நாடு, வெளி மாநிலம் அல்லது வெளி இடத்தில் தங்கும் சூழல் வரலாம். அது படிப்பு அல்லது தொழில் சம்மந்தப்பட்டாதகவும் இருக்கலாம் 
      • போலஆனால் புதன் தீய கிரகத்துடன் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் நல்லது நடக்கும் என்று சொல்ல முடியாது.
      • மேற்படிப்பு இந்த திசை சிலருக்கு உதவும். தாய்மாமனுக்கும் சிறப்பாக இருக்கும். அவர்களாலும் நன்மை சிலருக்கு உண்டாகும் 
      • புதன் திசையில் வரும் பிரச்சனையை குறைக்க புதன்கிழமை தோறும் புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

       தசா பலன்கள் -  குரு  

        துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். குரு  தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
        • இவர்  4 மற்றும் 7 க்கு உரியவர். குரு பகை கிரகம்.  பொதுவாக கன்னி லக்கினகாரர்களுக்கு குரு தசை அவ்வளவு சிறப்பாக இருக்காது. கட்டாயம் யோக பலனைத் தரமாட்டார். எனினும் குரு முழு சுப கிரகம் என்பதால் நல்ல பலன்களைத் தராவிட்டாலும், பெரியளவில் எந்த ஒரு கெடு பலனையும் தரமாட்டார்
        • கன்னி லக்கனத்தில் பிறந்தவர்களுக்கு குரு மறைதல் மிகவும் நல்லது. மேலும் லக்கினாதிபதி அல்லது யோக கிரகத்தின் பார்வை பெறும் போது குரு தசையின் பாதிப்பு குறையும் 
        • தொழிலுக்காக கடன் வாங்கும் சூழல் வரும். விரயம் இருப்பதால் கவனத்துடன் கையாள வேண்டும் .
        • விரயம், கடன் ஏற்படும். முத்த சகோதர சார்ந்த விசயங்களில் நல்லது நடக்கும். வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை வராது. ஆனால் கடன் வாங்கி செலவு சூழல் வரும் 
        • குரு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வியாழக்கிழமை தோறும் குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

        தசா பலன்கள் - சுக்கிரன்  

          கன்னி லக்னத்திற்கு அதிபதி புதன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
          • துலாம் லக்னக்காரர்களுக்கு, சுக்கிரன் லக்னாதிபதியாகவும் அஷ்டமாதிபதியாகவும் இருக்கிறார். அஷ்டம ஸ்தானாதிபதியாக மறைவு ஸ்தானத்தில் வருவதால், வெளிநாட்டுக்கு அனுப்பி சொந்த ஊரில் இருக்க முடியாமல் செய்வது, அல்லது வழக்கு, நீதிமன்றம் என அலைய விட்டுவிடுவது போன்றவற்றைச் செய்வார்.
          • அதிக முயற்சிகள் இந்த திசையின் முதல் பகுதியில் எடுப்பபார்கள். அது நன்மையில் முடியும்.
          • இளைய சகோதர, சகோதிரிகள் உதவார்கள். சொத்துகள் சேரும்.
          • வீடு, டவர்ஸ் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் பிரச்சனை பார்க்க நேரிடும்.
          • உல்லாசமாக இருக்க விரும்புவார்கள். அது போல் சூழ்நிலையும் அமையும். அதிக உல்லாசம் ஆபத்தை தரும் என்பதை நினைவில் வைக்க வேண்டும் 
          • மனைவி மற்றும் பெண்களால் அனுகூலம், அசையா சொத்து சேர்க்கை, சந்தோஷம், பகைவரை வெற்றிகொள்ளும் அமைப்பு, வியாபாரம், தொழிலில் உயர்வு, கலை உலகில் சாதனை செய்யும் ஆற்றல், இசையில் நாட்டம் போன்ற சிறப்பான பலன்கள் உண்டாகும்.
          • சுக்கிர திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமைதோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

          தசா பலன்கள் - சனி 

            துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன்.  சனி தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம். 
            • துலாம் லக்னத்திற்கு சனி பகவான் நான்காம் இடம் மற்றும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக வருவதால் அதாவது திரிகோணம் மற்றும் கேந்திராதிபதியாக வருவதால் அவரை துலா லக்னத்திற்கு யோக காரகன் ஆகின்றார் 
            • சனி திசையில் இந்த கெடுபலன்கள் அதிகமாக ஏற்பட்டால் ஜாதகர் செல்கின்ற பாதை அல்லது சென்ற பாதை சரியான பாதையாக இருந்திருக்காது. அவருடைய எண்ணங்கள் செயல்கள் ஒத்துப்போகாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையில் இருந்தாலும் அடுத்தவர்களை தான் ஆதிக்கம் செலுத்தி அதன் மூலம் பயன்பெறும் பெறும் எண்ணம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் தீய பலன்களை சந்திக்க நேரிடும்.
            • ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் சுகபோக வாழ்க்கை, பகைவரை வெல்லும் ஆற்றல், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும் அமைப்பு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத தனவரவுகள், வெளியூர் பயணங்களால் சம்பாதிக்கும் யோகம், போன்ற அனுகூலமான பலன்கள் உண்டாகும்
            • பொதுவாகவே சனிபகவான் நல்ல பலன்களைக் கொடுப்பார் என்பதில் எந்த ஐயமில்லை.
            • சனி பலமாக இருந்தால் ஆரோக்கிய மேம்பாடு, நோயற்ற வாழ்வு, புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு, தன சேர்க்கை உண்டாகுதல், எதிர்பாராத லாபம் ஏற்படும்.
            • சனி  திசையில் வரும் பிரச்சனையை குறைக்க சனிக்கிழமைதோறும் சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபமேற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

            தசா பலன்கள் -  ராகு  

              துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். ராகு தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
              • சுக்கிரனுக்கு ராகு நட்பு.  அந்த வகையில் பார்த்தால் ராகு திசை நல்ல திசை என்று தான் சொல்ல வேண்டும். ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று அமைந்து விட்டால் அதிகம் சம்பாதிக்கும் யோகம்
              • வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஒரு உயர்ந்த நிலைக்கு செல்ல கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு, ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும்
              • ராகு அசுப பலம் பெற்று, ராகு நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்து ராகு தசா நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை, உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை, மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும்.
              • ராகு பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
              • மத்திம பருவத்தில் நடைபெற்றால் ஸ்பெகுலேஷன் மூலம் எதிர்பாராத தன சேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடிவரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும்
              • ராகு திசையில் வரும் பிரச்சனையை குறைக்க வெள்ளிக்கிழமை தோறும் ராகு ஓரையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

              தசா பலன்கள் -  கேது  

                துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். கேது தசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பார்ப்போம்
                • சுக்கிரனுக்கு  கேது  நட்பு . என்ற வகையில் கேது(Ketu Dasa) நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் பெயர், புகழ் உயரும் அமைப்பு, அரசு வழியில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்கும் யோகம், எடுக்கும் காரியங்களில் வெற்றி, தருமம் செய்யும் மனப்பான்மை, ஆலய தரிசனங்களுக்காக பயணங்கள் கொள்ளும் வாய்ப்பு, ஆன்மிக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு, நல்ல நண்பர்களின் சேர்க்கை உண்டாகும்.
                • கேது நின்ற வீட்டதிபதி பலமிழந்திருந்தால் மனநிலை பாதிப்பு, கொடூர செயல்களை செய்யும் நிலை, உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களால் வம்பு வழக்குகளை சந்திக்கும் நிலை, இல்வாழ்வில் ஈடுபாடு குறைவு, கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு போன்றவை உண்டாகும்.
                • கேது தசையில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் திருமண சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, குடும்பத்தில் ஒற்றுமை, லட்சுமி கடாட்சம், உத்தியோகத்தில் உயர்வு, அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத செல்வ சேர்க்கை, பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
                • இந்த தசையில் சந்திரன் பலவீனமாக இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு நோய், தண்ணீரால் கண்டம், வயிற்றுக்கோளாறு, நீர் தொடர்பான உடல் உபாதைகள், மனக்குழப்பங்கள், தாய்க்கு கண்டம், தாய் வழி உறவுகளுடன் பகை, வீடு, மனை வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும்..
                • கேது திசையில் வரும் பிரச்சனையை குறைக்க  அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும் 

                துலாம்  லக்கினம்  – நட்சத்திரம் 


                துலாம்  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: சித்திரை 3, 4ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.
                இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும். 
                அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்


                துலாம்  லக்கினம்  – சித்திரை 3, 4   பாதம்   

                சித்திரை  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  செவ்வாய், சுக்கிரன் தாக்கத்துடன் இருப்பார்.

                சித்திரையின்  அதிபதி சூரியன் ஆவார். புகழும் ஆற்றலுமிக்கவர்கள், திறமைசாலிகள், மற்றவர் குணமறிந்து நடப்பவர்கள், வெற்றியாளர்கள், தைரியசாலி,  செல்வமிக்கவர், பரந்த நல்ல நோக்கமும் கொண்டவர்கள், மெய்யறிவாளிகள், அறநெறியில் வாழ்க்கை நடத்துபவர்கள், எதிர்த்துவரும் பகையாளிகளை பணிய வைத்திடுவார்கள், தன்மானம் இவர்கள் உயிர் நாடி

                துலாம்  லக்கினம் – சுவாதி  

                சுவாதி   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் ராகு,சுக்கிரன்  தாக்கத்துடன் இருப்பார்.

                இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். கல்வியாளன், அஞ்சா நெஞ்சம் கொண்டவன், சாந்தசொருபி, முன் கோபி, பேச்சில் இனிமை, தேவ கணம் கொண்டவர்கள், ரகசியமிக்கவர், கோபத்தை வெளிகாட்டமாட்டான், ஒருசிலர் காமமிக்கவர், மற்றவர்கள் நோக்கமறிந்து நடப்பவர், குறிக்கோள் மிக்கவர்கள், மற்றவர்களை சந்தோஷத்தப்படுத்துபவர்கள், நற்குணமும் கொண்டவர், நற்செயல் செய்பவர், பெரிய மனித சகவாசம் உண்டு, திட தேகம் கொண்டவர்கள், நேர்மை மிக்கவர், பன்மடங்கு யோசனை மற்றும் செயல் இருக்கும், கலக்கமிக்கவர், ஒரு சிலருக்கு திருட்டுத்தனம் மற்ற கெட்ட எண்ணம் இருக்கும், கௌரவத்தை உண்டுபண்ணுவார்கள்

                துலாம்  லக்கினம்   – விசாகம் 1, 2 

                விசாகம்  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  சுக்கிரன் தாக்கத்தில்  இருப்பார்.

                விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். வாய்மையாளன், புத்திமான், விகடகவி, வியாபாரி, கல்வியால் ஊக்கமிக்கவர், ஜோதிட சாஸ்திரம் கொஞ்சம் தெரியும், வியாதியஸ்தன், தர்மநெறி நடப்பவன், இடம் பொருள் ஏவல் நடப்பான், சங்கீத ஞானம் இருக்கும், கபடதாரி, புகழ்ச்சி இவர்களுக்கு பிடிக்கும், களிப்புடையவன், சூழ்ச்சி மிக்கவன், தன்னை பற்றி உயர்த்தி பேசுபவன், ஏமாற்றும் குணமுண்டு, திறமைசாலிகள்,  சாதிக்க முயற்சிப்பவர்கள்.


                மந்திரம் 

                துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய ராகவேந்திரர் துதி மனதார சொல்லி வருவது நல்லது 


                நெஞ்சத்திலே என்றென்றும் நிலைக்கின்ற ஆலயம்
                நாவினிக்கப் பாடி நின்றால் நலமளிக்கும் ஆலயம்
                பஞ்சம்பசி துடைக்கின்ற பாராளும் ஆலயம்
                பரந்தாமன் அருள்பெற்ற புண்ணியனின் ஆலயம்
                கொஞ்சுதமிழ்ப் பாவினிலே கோபுரமாம் ஆலயம்
                காவியுடை போர்த்திநின்ற கண்கொள்ளா ஆலயம்
                வஞ்ச நெஞ்சம் உடையோரை மாற்றிடுமே ஆலயம்
                மாந்தர்குறை தீர்க்கின்ற மகிமை மந்த்ராலயம் !
                 

                ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்