விசாகம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

விசாகம் நட்சத்திர அதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குண சாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும்.

எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மன அடக்கமும் புலனடக்கமும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பார்கள். கொண்ட கொள்கையில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மீக வாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியும் பேசுவர்கள்


குடும்ப வாழ்க்கை

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை (ஆண்களாக இருந்தாலும்) திருமணம் செய்ய கூடிய நிலையும், ஏற்கனவே மணமானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். ஆனாலும் வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் அதிகம் நேசிப்பார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டை போட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்சனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.


நண்பர்கள்

எப்போதும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.. அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் ஆதலால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர். மற்றவர்களிடம் நேசத்துடனும்,மரியாதையுடனும் பழகுவர்கள். உங்கள் உதவி ஒருவருக்கு தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், பூரட்டாதி ஆகியவை தவிர்க்க வேண்டிய நட்சத்திரம் ஆகும்.


தொழில்

விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அடிக்கடி வேற்று மாநிலம், வேற்று நாடுகளுக்குச் சென்று வருவார்கள். வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும் இவர்களைத் தேடி வரும். ்கள்.


தசா பலன்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை முதல் திசையாக வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் குரு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு தசை:
பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் தசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியவர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
சனி தசை:
இரண்டாவதாக வரும் சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும்.
புதன் தசை:
மூன்றாவதாக வரும் புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
நான்காவது கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
சுக்கிரன் தசை:
ஐந்தாவதாக வரும் சுக்கிரன் தசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.


பொது பரிகாரம்

விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம் மரம் உள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரகப்பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திராடம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்

விசாகம்

நட்சத்திரம் - விசாகம்


விசாகம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 16 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி விசாக நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் துலை விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட விசாக நட்சத்திரத்தின் (α, β, γ, ι லிப்ராய்) பெயரைத் தழுவியது. விசாகத்தின் சமஸ்கிருத பெயரான விஷாக்க (Vishakha) என்பது "கிளைத்த வடிவம்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "குயவர் சில்லு" ஆகும் இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலா ராசியிலும் 4ம்பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்து இருக்கும். இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. மேலும் குருபகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம்

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2, 3-ம் பாதங்கள்- வயிற்றின் கீழ்ப்  பகுதி, சிறுநீர்ப் பை, சிறுநீரகங்கள் 4-ம் பாதம்-சிறுநீர்ப் பை, பிறப்பு  உறுப்பு, குதம், சிறுகுடல்.

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

200.00 - 213.20

தமிழ் மாதம்

1, 2, 3-ம் பாதங்கள் - ஐப்பசி, 4-ம் பாதம்- கார்த்திகை

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

வெட்டவெளி

கணம்

ராஷச கணம்

குணம்

மிஸ்ரம் - சாதாரணம்

மிருகம்

பெண் புலி

பறவை

பச்சைக் கிளி

மரம்

பாலில்லாத விளா மரம்

மலர்

தெச்சி

தமிழ் அர்த்தம்

பிளவுபட்டது

தமிழ் பெயர்

கழை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

பால் சாதம்

பஞ்சபூதம்

நெருப்பு

நைவேத்யம்

வெல்லம்

தேவதை

இந்திரன், தேவ புரோகிதன் அக்னி

அதி தேவதை

சக்ராக்னி, சுப்பிரமணியன்

அதிபதி

குரு

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம்

உருவம்

மண்பாண்டத்தைத் தயாரிக்க உதவும் சக்கர வடிவத்தில் திகழும் ஐந்து நட்சத்திரக் கூட்டம்

மற்ற வடிவங்கள்

முறம்,தோரணம்,குயவன் சக்கரம்

மற்ற பெயர்கள்

வைகாசி, முற்றில், முறைக்கு, கழகு

வழிபடவேண்டிய தலம்

முத்துக்குமாரசுவாமி, திருநெல்வேலி

அதிஷ்ட எண்கள்

1, 3, 9

வணங்க வேண்டிய சித்தர்

கபி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

தி, து, தே, தோ

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, ஆரஞ்சு

அதிஷ்ட திசை

கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், ஞாயிறு

அணியவேண்டிய நவரத்தினம்

கார்னெட் (garnet)

அதிஷ்ட உலோகம்

செம்பு

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

நம்மாழ்வார், சுவாமி முக்தானந்த பரமஹம்சர், கௌதம புத்தர், அன்னிபெசன்ட் அம்மையார், ஞானதேசிக நாச்சியப்ப சுவாமி, சுவாமி ராமதீர்த்தர், ஸ்ரீசத்குரு சாந்தானந்த சுவாமி.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

சுவாதி - தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

சுவாதி நட்சத்திர அதிபதி ராகு பகவான் என்பதால் முன்கோபம் அதிகம் இருந்தாலும் நல்ல அறிவுள்ள திறமைசாலிகள். நற்பண்புகள் உடையவர். மனித உரிமைகளைப் பற்றி அடிக்கடி சட்டம் பேசுவார்கள். பிறருக்காக அதிகம் உதவி செய்வார்கள். அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். சில நேரங்களில் தான் சொல்வது தான் சரி என தவறான வழியையும் காட்டி விடுவார்கள். திடமான புக்தி உடையவர்கள் என்றாலும் அடிக்கடி தன் புக்தியை மாற்றி கொள்வார்கள். எளிதல் பயப்படும் குணம் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமிருந்தும் வித்தியாசப் படுவார்கள் எல்லா நேரமும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். விளையாட்டு குணம் அதிகம் இருக்கும். சுயமரியாதையை இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அதில் தவறுகள் நேர்ந்தால் பகிங்கிரமாக மன்னிப்பையும் கேட்பார்கள்.

அழகும், தெய்வ பக்தியும் மிகுந்தவர்கள். கூரிய அறிவு, ஞாபக சக்தி, கலைகளில் ஆர்வம், தன்னம்பிக்கை, தாராள மனப்பான்மை, இரக்க சிந்தனை கொண்டவர்கள். ஓரளவு தர்ம நியாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள். அதேநேரம் கோபம், பாசம், சுயநலமும் இவர்களிடம் உண்டு. துலாக்கோல் போல நல்லது, கெட்டதை சீர்தூக்கிப் பார்த்து, தீயதை அகற்றி நல்லதைக் கடைப்பிடித்து, வாழ்வில் உயர்வார்கள். வயதான பிறகும் கூட விளையாட்டுப் பிள்ளையாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளுடன் இருப்பதை விரும்புவார்கள். அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளைக் கூட கவர்ந்து விடுவார்கள்.


குடும்ப வாழ்க்கை

பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு இரவு பகல் பாராமல் உழைப்பர்கள். உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சுவையான உணவு வகைகளை ரசித்து சாப்பிடுவார்கள். உங்கள் சுதந்திரத்தில் வெளி நபர்கள் தலையிடுவதை அனுமதிக்க மாட்டார்கள்

உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். மண வாழ்க்கை சற்று தாமதமாகத்தான் அமையும். அதிக பிள்ளைகளை பெற்று கொள்ள விட்டால் பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுப்பதுடன் அவர்களுக்கு தேவையானவற்றை தாராளமாக செய்து கொடுப்பார்கள். முன் கோபம் அதிகம் உடையவர்கள் என்பதால் கணவன் மனைவியிடத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.


நண்பர்கள்

நண்பர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் அனைவரிடமும் சமமாக பழகுவார்கள். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இனிமையாக பழகினாலும் கோபம் வரும் சமயம் துர் வார்த்தைகள் உபயோகிப்பார்கள். அது பல நேரங்களில் நட்பை கெடுத்து விடும்.


நட்பு நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி நட்பு நட்சத்திரங்கள் ஆகும்.


தொழில்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகல விஷயங்களைப் பற்றி தெரிந்து வைத்திருந்தாலும் கற்றது கைமண் அளவு என்பதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளாகவும், மார்கெட்டிங் துறையில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். எப்பொழுதும் சுதந்திரமாகவே செயல்படுவார்கள். சகல சாஸ்திரங்களும் தெரிந்து வைத்திருப்பார்கள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவார்கள்.


தசா பலன்கள்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ராகு தசை:
இளம் வயதில் ராகு தசை நடைபெறும் என்பதால் ராகு நின்ற வீட்டின் அதிபதி பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் கல்வியில் முன்னேற்றமும் பெற்றோருக்கு உயர்வும் உண்டாகும். அதுவே ராகு பாவ கிரக சேர்க்கை உடன் இருந்தால் பேச்சில் வேகம், கல்வியில் மந்த நிலை பிடிவாத குணம், பெரியவர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.
குரு தசை:
இரண்டாவதாக வரும் குரு தசை காலங்களில் வாழ்வில் முன்னேற்றம், கல்வியில் ஈடுபாடு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி. பெற்றோர் பெரியோர்களிடம் ஒற்றுமை குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு, பணவரவுகள் தாராளமாக இருக்கும் யோகம் கொடுக்கும்.
சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை 19 வருட காலங்கள் நடைபெறும். சனி பலம் பெற்றிருந்தால் யோகமும் முன்னேற்றமும், சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு உண்டாகும். பொருளாதாரம் மேம்படும்.
புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது புதன்தசை எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் ஆகும். பொதுவாக கேது தசை யாருக்கு நல்லது செய்வது கிடையாது. உடல் மற்றும் மனதில் பிரச்சினைகள் வரும்.


பொது பரிகாரம்

சுவாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் மருத மரமாகும். இம்மரம் அமைந்துள்ள திரு ஸ்தலங்களை வழிபாடு செய்வது நல்லது


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மாங்கல்யம் செய்தல், திருமணம் செய்தல், பெயர் சூட்டுதல், பூ முடித்தல், முடி களைதல், வீடு வாகனம் வாங்கல், கல்வி ஜோதிடம் மருத்துவம் கற்றல், அன்னதானம் ஆயுத பிரயோகம், சமுத்திர யாத்திரை செய்தல், பயிடுதல், விதை விதைத்தல், தானியம் வாங்குதல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் போன்ற நற் காரியங்களை செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

புனர்பூசம், துலாம், விசாகம், பூரட்டாதி, கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது. ரோகிணி வேதை ஆகும். (குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

உக்ரம் வீரம் மகாவிஷணும்
ஜீவலந்தம் ஸர்வதேமுகம்
ந்ருஸிம்ஹம் பிஷனம் பத்ரும்
ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம்!




சுவாதி

நட்சத்திரம் - சுவாதி


சுவாதி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 15 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி சுவாதி நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பூட்டெசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் சித்திரை நட்சத்திரத்தின் (ஆர்க்ட்டூரசு (Arcturus) பெயரைத் தழுவியது. சித்திரையின் சமஸ்கிரத பெயரான ஸ்வாதி (Swathi) என்பது "வாள்" அல்லது "தங்கியிராமை" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காற்றில் அசையும் ஒற்றைப் புல்" ஆகும்.

தேவ கணத்தைச் சேர்ந்தது. இந்த நட்சத்திரம். மாதுளை முத்து போன்று சிவந்து காணப்படும். இது ஒரு வைரக்கல் நடுவில் ஜொலிப்பது போன்று தோற்றமளிக்கும். இதுவும் ஒற்றை நட்சத்திரம். பௌர்ணமி தினங்களில் ஆக்ஸிஜன் எடுக்க கடலின் மேற்பரப்பில் சிப்பிகள் வரும்போது, விண்ணிலுள்ள பனித் துளிகள் அதில் விழுந்து முத்தாகும் நிகழ்வு, சுவாதி நட்சத்திர நாளில் தான் சாத்தியமாகும் என்று ரஸகுளிகை சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த நட்சத்திரத்தின் 4 பாதங்களும் துலா ராசியில் தான் வருகிறது.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

தோள்பட்டை, சிறுநீரகம்

பார்வை

சமநோக்கு

பாகை

186.40 - 200.00

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

பொட்டல் வெளி

கணம்

தேவ கணம்

குணம்

மென்மை

மிருகம்

ஆண் எருமை

பறவை

தேனீ

மரம்

பாலில்லாத மருத மரம்

மலர்

தாமரை

தமிழ் அர்த்தம்

சுதந்தரமானது

தமிழ் பெயர்

விளக்கு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

தயிர் சாதம்

பஞ்சபூதம்

நெருப்பு

நைவேத்யம்

தயிர் சாதம்

தேவதை

 மான் வாகனத்தில் வீற்றிருப்பவரும் புகை  நிற மேனி உடையவருமான வாயு பகவான்.

அதி தேவதை

ஸ்ரீநரசிம்மமூர்த்தி

அதிபதி

ராகு

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம்

உருவம்

ஒளிரும் வைரம் போன்ற வடிவம்

மற்ற வடிவங்கள்

பவளம்,தீபம்

மற்ற பெயர்கள்

மரக்கால், தீபம், பதுமம், கோகநகம், கமலம், சுடர், தீபம்

வழிபடவேண்டிய தலம்

தாத்திரீஸ்வரர், சித்துக்காடு, சென்னை

அதிஷ்ட எண்கள்

4, 6, 8.

வணங்க வேண்டிய சித்தர்

சித்தர் புலிப்பாணி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ரு, ரே, ரோ, த

அதிஷ்ட நிறங்கள்

வெளிர்ப் பச்சை, கரு நீலம்

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, சனி

அணியவேண்டிய நவரத்தினம்

நீல கல்

அதிஷ்ட உலோகம்

வெள்ளி (Sliver)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

நரசிம்ம மூர்த்தி, சிருங்கேரி பீடாதிபதி அபிநவ வித்யாதீர்த்தர், அழகியசிங்கர், பெரியாழ்வார், மாவீரன் அலெக்ஸாண்டர், கோபர் நிக்கஸ், சித்தரஞ்சன்தாஸ்.

குலம்

 இராட்சஷ குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்