Showing posts with label γ. Show all posts
Showing posts with label γ. Show all posts

விசாகம்

நட்சத்திரம் - விசாகம்


விசாகம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 16 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி விசாக நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் துலை விண்மீன் கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட விசாக நட்சத்திரத்தின் (α, β, γ, ι லிப்ராய்) பெயரைத் தழுவியது. விசாகத்தின் சமஸ்கிருத பெயரான விஷாக்க (Vishakha) என்பது "கிளைத்த வடிவம்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "குயவர் சில்லு" ஆகும் இதன் 1, 2, 3ம் பாதங்கள் துலா ராசியிலும் 4ம்பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்து இருக்கும். இது முருகப்பெருமானின் அவதார நட்சத்திரம். குயவனின் மண்பாண்ட சக்கரத்தைப் போல் அமைந்துள்ள ஐந்து நட்சத்திரங்களின் கூட்டம் இது. மேலும் குருபகவானை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவதாக இருப்பது விசாகம்

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1, 2, 3-ம் பாதங்கள்- வயிற்றின் கீழ்ப்  பகுதி, சிறுநீர்ப் பை, சிறுநீரகங்கள் 4-ம் பாதம்-சிறுநீர்ப் பை, பிறப்பு  உறுப்பு, குதம், சிறுகுடல்.

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

200.00 - 213.20

தமிழ் மாதம்

1, 2, 3-ம் பாதங்கள் - ஐப்பசி, 4-ம் பாதம்- கார்த்திகை

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

வெட்டவெளி

கணம்

ராஷச கணம்

குணம்

மிஸ்ரம் - சாதாரணம்

மிருகம்

பெண் புலி

பறவை

பச்சைக் கிளி

மரம்

பாலில்லாத விளா மரம்

மலர்

தெச்சி

தமிழ் அர்த்தம்

பிளவுபட்டது

தமிழ் பெயர்

கழை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

வாம பார்சுவ நாடி

ஆகுதி

பால் சாதம்

பஞ்சபூதம்

நெருப்பு

நைவேத்யம்

வெல்லம்

தேவதை

இந்திரன், தேவ புரோகிதன் அக்னி

அதி தேவதை

சக்ராக்னி, சுப்பிரமணியன்

அதிபதி

குரு

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம்

உருவம்

மண்பாண்டத்தைத் தயாரிக்க உதவும் சக்கர வடிவத்தில் திகழும் ஐந்து நட்சத்திரக் கூட்டம்

மற்ற வடிவங்கள்

முறம்,தோரணம்,குயவன் சக்கரம்

மற்ற பெயர்கள்

வைகாசி, முற்றில், முறைக்கு, கழகு

வழிபடவேண்டிய தலம்

முத்துக்குமாரசுவாமி, திருநெல்வேலி

அதிஷ்ட எண்கள்

1, 3, 9

வணங்க வேண்டிய சித்தர்

கபி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

தி, து, தே, தோ

அதிஷ்ட நிறங்கள்

பழுப்பு, ஆரஞ்சு

அதிஷ்ட திசை

கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், ஞாயிறு

அணியவேண்டிய நவரத்தினம்

கார்னெட் (garnet)

அதிஷ்ட உலோகம்

செம்பு

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

நம்மாழ்வார், சுவாமி முக்தானந்த பரமஹம்சர், கௌதம புத்தர், அன்னிபெசன்ட் அம்மையார், ஞானதேசிக நாச்சியப்ப சுவாமி, சுவாமி ராமதீர்த்தர், ஸ்ரீசத்குரு சாந்தானந்த சுவாமி.

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

அஸ்தம்

நட்சத்திரம் - அஸ்தம்


அஸ்தம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 13 வது பிரிவு ஆகும்.

இதுநடசத்திரகூட்டத்தில் கோர்வசு நட்சத்திர கூட்டத்தில் காணப்படும். ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட அத்தத்தின் (அஸ்த) (α, β, γ, δ, ε கோர்வசு) பெயரைத் தழுவியது. அத்தத்தின் சமஸ்கிருத பெயரான ஹஸ்த (Hasta) என்பது "கை" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கை" ஆகும்.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறுநீர்ப்பை, குடல், சுரப்பிகள்

பார்வை

சமநோக்கு.

பாகை

1600 & 173.20

தமிழ் மாதம்

புரட்டாசி

நிறம்

கருமை.

இருப்பிடம்

நகரம்

கணம்

தேவ கணம்

குணம்

எளிமை, க்ஷிப்ரம்/லகு, ராஜசம்

மிருகம்

பெண் எருமை

பறவை

பருந்து

மரம்

பாலுள்ள வேலம், அத்தி

மலர்

சிவப்பு அரளி

தமிழ் அர்த்தம்

கை

தமிழ் பெயர்

கை

நாடி

தட்சிண பார்சுவ நாடி,  வாதம்

ஆகுதி

தயிர்

பஞ்சபூதம்

அக்னி

நைவேத்யம்

அப்பம்

தேவதை

ஏழு வண்ணமுடைய குதிரைகள் பூட்டிய ரதத்தில் பவனி வரும் சூரிய பகவான்.

அதி தேவதை

ஸ்ரீ காயத்ரிதேவி, அர்க்கன்/சாவித்ரி

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

சவ்விய நட்சத்திரம், ஆண் நட்சத்திரம்

உருவம்

உள்ளங்கை வடிவமுடைய ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

கை

மற்ற பெயர்கள்

அங்கை, ஐம்மீன், கைம்மீன், உத்தமன், களிறு, பிரபலன், ஆரோகி

வழிபடவேண்டிய தலம்

கிருபாகூபாறேச்வரர், கோமல், நாகப்பட்டினம்

அதிஷ்ட எண்கள்

 2, 6, 7

வணங்க வேண்டிய சித்தர்

மாண்டவ்யா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

பூ, ஷ, ந, ட

அதிஷ்ட நிறங்கள்

வெளிர் நீலம், வெள்ளை

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

பெரிடாட் (Peridot)

அதிஷ்ட உலோகம்

பித்தளை

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அர்ஜுனன், நகுலன், சகாதேவன், கூரத்தாழ்வார், எரிபத்த நாயனார், இலங்கை முன்னாள் அதிபர் திருமதி பண்டாரநாயகா

குலம்

வைசியகுலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

பூசம்

நட்சத்திரம் - பூசம்




பூசம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் நட்சத்திர கூட்டத்தில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி நட்சத்திரங்களுக்கு ஒப்பானதாகும்.

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இது பூசம் நட்சத்திரம் பெருமையை விளக்குகிறது.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு 

பார்வை

மேல்நோக்கு

பாகை

93.2 & 120.00

தமிழ் மாதம்

ஆடி

நிறம்

பொன்னிறம்

இருப்பிடம்

மனை, கிராமம்

கணம்

க்ஷிப்ரம்/லகு, தேவ கணம்

குணம்

தேவ கணம்

மிருகம்

ஆண் ஆடு

பறவை

 நீர்க் காக்கை

மரம்

பாலுள்ள அரச மரம்

மலர்

பன்னீர் மலர்

தமிழ் அர்த்தம்

திரும்ப கிடைத்த ஒளி

தமிழ் பெயர்

காற்குளம்

நாடி

 பித்தம் (மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி)

ஆகுதி

பாயசம்

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

பாயசம்

தேவதை

சிவன், குரு

அதி தேவதை

எமதர்மராஜா, சுப்பிரமணியன்

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

ஆண் நட்சத்திரம்

உருவம்

மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

 புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி

மற்ற பெயர்கள்

காற்குளம், தை, கொடி,குருநாள், மதி

வழிபடவேண்டிய தலம்

திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் 

அதிஷ்ட எண்கள்

5, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

பரத்வாஜா, கமல முனி சித்தர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஹீ, ஹே, ஹோ, ட

அதிஷ்ட நிறங்கள்

ஆரஞ்சு, இளஞ்சிவப்பு

அதிஷ்ட திசை

தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

முத்துகள் சூழ்ந்த பவழம்

அதிஷ்ட உலோகம்

 தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அத்ரி மகரிஷி, பரதன், சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவிக்கக் காரணமான சுவாமி வித்யாரண்யர், சுவாமி சின்மயானந்தர்

குலம்

சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்