நட்சத்திரம் - பூசம்
பூசம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் நட்சத்திர கூட்டத்தில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி நட்சத்திரங்களுக்கு ஒப்பானதாகும்.
தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இது பூசம் நட்சத்திரம் பெருமையை விளக்குகிறது.
நட்சத்திர காரத்துவம்
ஆளும் உறுப்புகள் |
நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு |
பார்வை |
மேல்நோக்கு |
பாகை |
93.2 & 120.00 |
தமிழ் மாதம் |
ஆடி |
நிறம் |
பொன்னிறம் |
இருப்பிடம் |
மனை, கிராமம் |
கணம் |
க்ஷிப்ரம்/லகு, தேவ கணம் |
குணம் |
தேவ கணம் |
மிருகம் |
ஆண் ஆடு |
பறவை |
நீர்க் காக்கை |
மரம் |
பாலுள்ள அரச மரம் |
மலர் |
பன்னீர் மலர் |
தமிழ் அர்த்தம் |
திரும்ப கிடைத்த ஒளி |
தமிழ் பெயர் |
காற்குளம் |
நாடி |
பித்தம் (மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி) |
ஆகுதி |
பாயசம் |
பஞ்சபூதம் |
நீர் |
நைவேத்யம் |
பாயசம் |
தேவதை |
சிவன், குரு |
அதி தேவதை |
எமதர்மராஜா, சுப்பிரமணியன் |
அதிபதி |
சனி |
நட்சத்திரம் தன்மைகள் |
ஆண் நட்சத்திரம் |
உருவம் |
மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம். |
மற்ற வடிவங்கள் |
புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி |
மற்ற பெயர்கள் |
காற்குளம், தை, கொடி,குருநாள், மதி |
வழிபடவேண்டிய தலம் |
திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் |
அதிஷ்ட எண்கள் |
5, 6, 8 |
வணங்க வேண்டிய சித்தர் |
பரத்வாஜா, கமல முனி சித்தர் |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
ஹீ, ஹே, ஹோ, ட |
அதிஷ்ட நிறங்கள் |
ஆரஞ்சு, இளஞ்சிவப்பு |
அதிஷ்ட திசை |
தெற்கு |
அதிஷ்ட கிழமைகள் |
செவ்வாய், வியாழன் |
அணியவேண்டிய நவரத்தினம் |
முத்துகள் சூழ்ந்த பவழம் |
அதிஷ்ட உலோகம் |
தங்கம் |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி. |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
அத்ரி மகரிஷி, பரதன், சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவிக்கக் காரணமான சுவாமி வித்யாரண்யர், சுவாமி சின்மயானந்தர் |
குலம் |
சூத்திர குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
தர்மம் |