பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்கு உரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் சுலபத்தில் அஞ்சாமல், மன உறுதியுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள்.
சமூகத்தில் முக்கிய பிரமுகராக இருப்பார்கள். புகழ் பெற்ற பல பெரிய மனிதர்களின் நட்பை பெற்றிருப்பார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் சகல யோகங்களும் உண்டாகும்
குடும்ப வாழ்க்கை
பெரும்பாலான பூசம் நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள். எனினும் தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணையிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சற்று சபல புத்தி இருந்தாலும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அதிகம் விரும்புவார்கள். தங்களுக்கு உற்றார், உறவினர்கள் செய்த உதவிகளை ஒருபோதும் மறவாமல், தக்க சமயத்தில் அவர்களுக்கு பதில் உதவி செய்வார்கள். எப்படிப்பட்ட உணவு என்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதில் இன்பம் காண்பார்கள். வாழ்வில் வசதியான வீடு, வாகனம் ஆகியவை அமையப் பெறுவார்கள்.
நண்பர்கள்
நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். உறவினர்களும் நண்பர்களும் வந்துவிட்டால், நண்பர்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். உற்றார், உறவினர் சூழ பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்
நட்பு நட்சத்திரங்கள்
பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்
பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நட்பை தவிர்ப்பது நல்லது.
தொழில்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும். ஒரு சிலர் தங்களின் உழைப்பால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால் மிகுதியான ஆதாயமடைவார்கள். திரைப்படத்துறை, இரும்பு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் துறை பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் துறைகளில் ஈடுபட்டு அதிகம் வருமானம் பெறுவார்கள்.
தசா பலன்கள்
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சனி தசை:
சனி தசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நல்லது அடைய முடியும்.
புதன் தசை:
இரண்டாவதாக வரும் புதன் தசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை பெற முடியும்.
கேது தசை:
மூன்றாவதாக வரும் கேது தசை காலங்களில் அதாவது 7 வருடங்கள் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிரன் தசை:
அடுத்ததாக வரும் நான்காவது தசை சுக்கிர தசை ஆகும் இது 20 வருடங்கள் நடைபெறும். இந்த காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.
சூரியன் தசை:
ஐந்தாவதாக வரும் சூரிய தசை ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஓர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
அடுத்து வரும் சந்திர தசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும்.
பொது பரிகாரம்
புனர்பூசம் நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.
பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:
திருமணம் பொருத்தம் பார்க்கும் போது
பொருந்தும் நட்சத்திரங்கள்:
அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி
பொருந்தா நட்சத்திரங்கள்:
பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.
(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்