ஆயில்யம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்ற அறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகான கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மென்மையான மனம் உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பொலிவான தோற்றம் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள்


குடும்ப வாழ்க்கை

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால் நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும், சகல வித்தைகளையும் கற்ற அறியக்கூடிய ஆர்வமும் இருக்கும். அழகான கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள், மென்மையான மனம் உடையவர்களாக இருப்பார்கள். கல்வி கற்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். மேலும் மேலும் படிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பொலிவான தோற்றம் கொண்டிருப்பார்கள். ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள். இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது. இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு. மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள்


நண்பர்கள்

எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள். தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள்.


நட்பு நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நடப்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

மிமிக்ரி செய்யும் கலையை வரமாக பெற்றிருப்பார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யும் அளவுக்கு உயர்ந்த பதவியில் இருப்பார்கள். வேலை செய்யும் இடத்துக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள்


தசா பலன்கள்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதன் தசை முதல் திசையாக வரும். புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் புதன் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

புதன் தசை:
முதல் திசையாக வரும் புதன் தசை காலங்களில் கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.
கேது தசை:
இரண்டாவதாக வரும் கேது தசை ஆனது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும். பொதுவாக கேது தசை யாருக்கும் நன்மை தராது.
சுக்கிரன் தசை:
மூன்றாவதாக வரும் சுக்கிர தசை 20 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். ஆனால் சுக்கிரன் கெட்டு இருந்தால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும்.
சூரியன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சூரியன் 6 வருடம் நடைபெறும் இத்தசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்
சந்திரன் தசை:
ஐந்தாவதாக வரும் சந்திர தசை ஆகும். சந்திரன் ராசியாதிபதி ஆவார். பொதுவாக இந்த தசை நன்மையை தான் செய்யும். ஆனால் பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்


பொது பரிகாரம்

ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் புன்னை மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

நவகிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது. மூலம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே
சர்ப்ப ராஜாய தீமஹி
தந்நோ அனந்த ப்ரசோதயாத்