கலைத் திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பம் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள்.
எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள். இளமையிலேயே சுக்கிர தசை வருவதால், சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பார்கள். அனுபவ அறிவு அதிகம். கல்வியில் தடை ஏற்படும்.
குடும்ப வாழ்க்கை
கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பார்கள். சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள். குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு அதிகமிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் அதிஷ்டசாலிகளாக இருப்பார்கள்
நண்பர்கள்
சில நண்பர்கள் மட்டும் இந்த நட்சத்திர காரர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக அமைவது மற்றும் நண்பர்கள் இருப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.
நட்பு நட்சத்திரங்கள்
பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.
தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நண்பர்களாக இருந்தால் வேண்டாத சிக்கல்களில் சிக்கி சீரழிய வேண்டியது வரும். பொதுவாக, மகம் நட்சத்திரக்காரர்கள் எந்த பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து எப்படியும் தப்பிவிடுவார்கள். மேலும் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நடப்பை தவிர்ப்பது நல்லது.
தொழில்
மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடிப்பது உடன் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள்.
பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராண, இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள். வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது. சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள்.
தசா பலன்கள்
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
கேது தசை:
இத்தசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும். கேது தசை நன்மை செய்வது இல்லை.
சுக்கிரன் தசை:
இரண்டாவதாக வரும் தசை வரும் சுக்கிர தசை மொத்தம் இருபது வருடங்கள் நடைபெறும் இளம் வயதிலேயே சுக்கிர தசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம் வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்லற வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.
சூரியன் தசை:
மூன்றாவதாக வரும் சூரிய தசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் தந்தையாருக்கும் சில கெடுபலன்கள் உண்டாகும்.
சந்திரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை ஆகும் இது மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும்.. குடும்பத்தில் நிம்மதி குறையும். சந்திரன் நல்லவர் பார்வை பெற்றால் வெளிநாடு யோகங்கள் உண்டாகும் ஆனாலும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும்.
செவ்வாய் தசை:
ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் தசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.
பொது பரிகாரம்
மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரம் ஆகும். இந்த மரத்தினை வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.
பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:
திருமணம் பொருத்தம் பார்க்கும் போது
பொருந்தும் நட்சத்திரங்கள்:
அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி
பொருந்தா நட்சத்திரங்கள்:
அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி
(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்