பூரம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை அணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் நாட்டம் இருக்கும். பிறக்கும்போதே சுக்கிர தசை எனவே தந்தைக்கு யோகத்தை ஏற்படுத்தும்.

“தத்துவங்களைக் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தாய், தந்தையரைப் பேணக்கூடியவர்கள்” என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது. பொதுவாக பூர நட்சத்திர ஆண்களும் பெண்மையின் சாயலுடன் காணப்படுவார்கள்

காம உணர்வு அதிகம் இருப்பதால் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக்கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள். குறுக்கு வழியில் பணம் சேர்வதற்கான வாய்ப்புகளும், எண்ணங்களும் உண்டு.


குடும்ப வாழ்க்கை

பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. ஆனால் பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளை நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். மேலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.


நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் அமைவதும், வாழ்க்கை துணை அமைவதும் மிகப்பெரிய அதிஷ்டம் ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பூர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகும். இந்த 3 நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் அவர்களால் துரோகத்தை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையாக இந்த நட்சத்திரக்காரர்கள் அமைந்தால், வாழ்க்கை மொத்தமும் நிம்மதியே இருக்காது. பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.


தொழில்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசு உத்தியோகம் மற்றும் சொந்த தொழில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் ஆர்வம் அதிகமாக இருக்கும்


தசா பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். சுக்கிர தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

சுக்கிரன் தசை:
இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்கள் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். மேலும் இளமையில் வரும் சுக்கிரன் தந்தைக்கு நல்லது செய்யும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
சூரியன் தசை:
இரண்டாவதாக வரும் சூரிய தசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்தசை காலங்களில் சிறு சிறு உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்
சந்திரன் தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
ராகு தசை:
நான்காவதாக வரும் ராகு தசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்தசை காலங்களின் முற்பாதி யானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையும் மேலும் சிலருக்கு மாரகத்தை ஏற்படுத்தும்.
குரு தசை:
ஐந்தாவதாக வரும் குரு தசை ஆகும். குரு நல்ல பலத்துடன் இருந்தால் மட்டுமே நல்லது வயதான காலத்தில் நன்மைகள் பிள்ளைகளால் நடக்கும்


பொது பரிகாரம்

பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது, வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்br>
பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திரட்டாதி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஸம் பூஜயாமி அர்ய மானம்
பல்குனி தார தேவதாம் தூம்
ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்