12 லக்கினத்தின் பொது பலன்கள் -2

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


கடக லக்கினம்:
அதிபதி சந்திரன்
யோககாரகர்கள் குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதி சனி
நோய் சுரம்
ஆயுள் சுபர் பார்க்க 90 வயது வரை இருப்பர்

(சூரியன் கொல்லான் )
பொது பலன்கள் :

தனவான் , பிதாவுக்கு அடங்காதவன், குறு விசுவாசி, கபடம் உள்ள அவமானான களத்திரகாரகன், தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை உடையவன், அற்ப புத்திரன் உடையவன்.


சிம்ம லக்கினம்:
அதிபதி சூரியன்
யோககாரகர்கள் சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன்
மாரக அதிபதி சனி
நோய் சுரம்
ஆயுள் சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர் )
பொது பலன்கள் :

கம்பிரமானவன், நல்ல பசியுடையவன் , திட புத்தியுள்ளவன், பக்தியுடையவன், கபடி, வசியமுடையவன், கோபமுடையவன், தைரியவான்


கன்னி லக்கினம்:

அதிபதி    புதன்
யோககாரகர்கள் புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள் சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி செவ்வாய்
நோய் சுரம் , தோல் வியாதி (வைசூரி )
ஆயுள் சுபர் பார்க்க 77 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் )
பொது பலன்கள் :

அடக்கமானவன், தர்மவான், திறமைசாலி, ஆசாரமுடையவன், பிறால் தொழில் பெற்றவன், சனப்பிரியன், பின் வயதில் அதிக தனம் சம்பாத்தியமுடையவன், மனோவஞ்சகன், நன்மையையும், தீமையும் செய்ப்பவன்

12 லக்கினத்தின் பொது பலன்கள் -1


இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


மேஷம் லக்கினம்:
அதிபதி செவ்வாய்
யோககாரகர்கள் குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதி சுக்கிரன்
நோய் அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
ஆயுள் சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் )

பொது பலன்கள் :
தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் ,புத்திமான் ,அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன் .
பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.



ரிஷப லக்கினம்:
அதிபதி சுக்கிரன்
யோககாரகர்கள் சூரியன், சனி, புதன்
யோகமில்லாதவர்கள் குரு, சந்திரன்
மாரக அதிபதி சந்திரன்,குரு , செவ்வாய்
நோய் காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
ஆயுள் சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

(சனி ஒருவனே மேலாண் ராஜயோகத்தை கொடுப்பார் )
(சில ஜோதிட நூல்கள் சந்திரன்,குரு , செவ்வாய் கொல்வர் என்று கூறுகிறது )

பொது பலன்கள் :

சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்


மிதுன லக்கினம்:
அதிபதி புதன்
யோககாரகர்கள் சுக்கிரன்
யோகமில்லாதவர்கள் சூரியன், செவ்வாய், குரு
மாரக அதிபதி சந்திரன், சனி
நோய் வயிற்று நோய், கண் சம்மந்தப்பட்ட நோய்
ஆயுள் சுபர் பார்க்க 65வயது வரை இருப்பர்

[குருவும் சனியும் சேருமாயின் அவயோகமாகும் . சந்திரன் துதியாதிபத்திய தோஷம் இருந்தாலும் மாரகம் கொடுக்க மாட்டான் என்றும் சொல்வர். .குருவும், சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர் ]

பொது பலன்கள் :
இனிய வார்த்தை பேசுபவர் , கபடி, மைதுன பிரியர் மனைவி சொல் கேள்பவர், புகழை உடையவர் . கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உடையவர் .


ஆயுள் கணிப்பு

இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகிய வீடுகள் மூலம் ஆயுளை ஆராய்ந்து  கணிக்க முடியும் .

  • ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள்
  • 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள் 
  • 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள் 

(ஜோதிடத்திலேயே மிகவும் கடினமானது இந்த ஆயுள் கணிப்புதான்).


தீர்க்க ஆயுளையுடைய கிரக நிலைகள்:

  • லக்கினதிபதி தன் சொந்த வீட்டில்  அல்லது உச்ச வீட்டில்  , 8ம் வீட்டிலோ இருந்தால் 
  • ஆயுள் ஸ்தானமான  8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருந்தால்
  • சந்திரனும் லக்கினமும் நல்ல கிரங்கங்களின் சேர்க்கை பெற்று இருந்தால்
  • சந்திரனும் , லக்கினாதிபதியும்  கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருந்தால்
  • 8க்குயுடையவன் 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருந்தால்
  • 8க்குயுடையவன் 8-ம் வீட்டையோ  அல்லது லக்கினத்தியோ பார்த்தால் 
  • சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருந்தால்
  • குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தால்

வராஹமிஹிரர் நமக்கு அருளிய பிருஹத் ஜாதகம் போன்ற நூலும் , மந்திரேஸ்வரர் அருளிய பலதீபிகை என்னும் சோதிட நூலும் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக விளக்கி உள்ளனர் 

அற்ப ஆயுளைக் காட்டுபவை :

8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும்
6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்

1. ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் ஆகும். இவற்றிற்கு  12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம்.  7-வது வீட்டின் திசை கல்யாணவயதில்   போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார். 2. ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம் ஆகியவை சரராசிகளுக்கு  11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும். ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம்  வீடு பாதகத்தைக் கொடுக்கும்

உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார்.  எனவே ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார் என்று ஜோதிட நூல் கூறுகிறது .


[இதில் இருக்கும் குறிப்புகள் நான் பல புத்தகத்தில் படித்தது. மேலும் இது எல்லா ஜாதகத்திற்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. தங்களின் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது ]

இது அனைத்தும் ஜோதிட நூல்களின் கருத்துக்களே . மேலும் ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து தான் ஆயுள் கணிக்க முடியும். மிக கடினமான ஒன்று.

ஜோதிட குறிப்புகள் - பாகம் 7


கிரகங்களின் காரத்துவம்

கிரகங்கள் தத்துவம்:

ஆண் கிரகங்கள்:

  1. சூரியன்
  2. செவ்வாய் குரு
பெண் கிரகங்கள்:

  1. சந்திரன்
  2. சுக்கிரன்
  3. ராகு
அலி கிரகங்கள் :

  1. புதன்
  2. சனி
  3. கேது

    1. மேலும் படிக்க...

ஜோதிட குறிப்புகள் -பாகம் -6


நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்கள் சவ்விய நட்சத்திரங்கள் என்றும் அபசவ்விய நட்சத்திரங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன

சவ்விய நட்சத்திரங்கள் -15:

  1. அஸ்வினி
  2. பரணி
  3. கார்த்திகை
  4. புனர்ப்பூசம்
  5. பூசம்
  6. ஆயில்யம்
  7. ஹஸ்தம்
  8. சித்திரை
  9. ஸ்வாதி
  10. மூலம்
  11. பூராடம்
  12. உத்திராடம்
  13. பூரட்டாதி
  14. உத்திரட்டாதி
  15. ரேவதி


மேலும் படிக்க...

ஜோதிட குறிப்புகள் - பாகம் 8

கிரகங்களின் விவரங்கள்

சமித்துகள்  &   சுவைகள்  

பஞ்சபூத கிரகங்கள்   &   நாடி

ஜோதிட குறிப்புகள் -பாகம் -5

கேந்திரம்:
லக்கினத்தை முதல் வீடாக கொண்டு முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரம் ஆகும் .

திரிகோணம்:
லக்கினத்தை முதல் வீடாக கொண்டு முதல்வீடு, ஐந்தும் வீடு , ஒன்பதாம் வீடுகள் திரிகோணம் ஆகும். (மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன.)

மேலும் படிக்க...

ஜோதிட குறிப்புகள் -பாகம் -4

சர ராசி :

    • சரம் என்பது நகரும் குறிக்கும்
    • இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். 
    • மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். 
    • எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள்.
    • சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
ஸ்திர ராசி : 
  • ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்
  • மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள்.


மேலும் படிக்க...

ஜோதிட குறிப்புகள் -பாகம் -3



ஏழு கிரகங்களுக்கும் நம் உடலின் சிலவற்றை குறிக்கின்றது

சூரியன் -      ஆத்மாவிற்கு
சந்திரன் -      மனதிற்கு
செவ்வாய் -      உடல் வலிமைக்கு
புதன்         -      பேச்சுக்கு
வியாழன்   -      மகிழ்ச்சிக்கு
சுக்கிரன் -      உணர்ச்சிகளுக்கு
சனி         -       வறுமைக்கு


ஏழு கிரகங்களும் மேற்கூறியவற்றிற்குக் காரகம் வகிக்கின்றன. இவைகள் எல்லாம் பலன் சொல்லப் பயன் படும். ஒரு கிரகம் வலுத்து இருந்தால் அந்த காரகத்துவம் நன்றாக இருக்கிறது எனப் பொருள்


ராசியின் தன்மைகள்  

மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்குப் பல குணங்கள் உண்டு. இவை ஜாதகத்தின் பலன் சொல்ல உதவும்


மேலும் படிக்க...

ஜோதிட குறிப்புகள் -பாகம் -2


லக்கினம்:

சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் எனப்படும்.
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

ராசி:

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம் தான்  ராசி, அதாவது  பிறந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுதான் ராசி என்பர். சில ஜோதிடர்கள் அதை சந்திர ராசி எனபர் .

நவாம்சம் :

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.

ஜோதிட குறிப்புகள் - பாகம் 1

9 கிரகங்கள்:
    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது
12 ராசிகள் :
    1. மேஷம்
    2. ரிஷபம்
    3. மிதுனம்
    4. கடகம்
    5. சிம்மம்
    6. கன்னி
    7. துலாம்
    8. விருச்சிகம்
    9. தனுசு
    10. மகரம்
    11. கும்பம்
    12. மீனம்