12 லக்கினத்தின் பொது பலன்கள் -1


இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


மேஷம் லக்கினம்:
அதிபதி செவ்வாய்
யோககாரகர்கள் குரு, சூரியன்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதி சுக்கிரன்
நோய் அஜீரணம், எச்சில், தேமல் மற்றும் வேறு சரும நோய்கள் இருக்கக்கூடும்
ஆயுள் சுபர் பார்க்க 100 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் )

பொது பலன்கள் :
தைரியவான் , மூர்க்கன், அடிமையுள்ளவன் , சமர்த்தியவான் , அறிவும், துணிவும், நம்பிக்கையும் உள்ளவன் ,புத்திமான் ,அற்ப புத்திரன் உடையவன், முன்கோபகரன் .
பெளர்ணமி திதி, வியாழகிழமை, ரோகினி நட்சத்திரத்தில் இரவு நேரத்தில் தலையில் ஏற்படும் நோயால் மரணம் ஏற்படலாம்.



ரிஷப லக்கினம்:
அதிபதி சுக்கிரன்
யோககாரகர்கள் சூரியன், சனி, புதன்
யோகமில்லாதவர்கள் குரு, சந்திரன்
மாரக அதிபதி சந்திரன்,குரு , செவ்வாய்
நோய் காய்ச்சல் ,கழுத்தில் வியாதி, சிரங்கு, நுரையீரல், ஆஸ்த்மா, இருமல், மூச்சு திணறல்இருக்கக்கூடும்.
ஆயுள் சுபர் பார்க்க 77வயது வரை இருப்பர்

(சனி ஒருவனே மேலாண் ராஜயோகத்தை கொடுப்பார் )
(சில ஜோதிட நூல்கள் சந்திரன்,குரு , செவ்வாய் கொல்வர் என்று கூறுகிறது )

பொது பலன்கள் :

சூரியன், சனி ஒன்று சேர்ந்து,கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ராஜ யோகத்தைக் கொடுக்கும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு, ஆடம்பர பிரியன், பொறுமைசாலி , பிறர் சொத்தை அபகரிக்க வல்லவன், கபடி, அகிமையுள்ளன, பிற்பகுதியில் புத்திரன் உடையவன், எதிர்ப்பால் நட்புகளை விரும்புபவன்


மிதுன லக்கினம்:
அதிபதி புதன்
யோககாரகர்கள் சுக்கிரன்
யோகமில்லாதவர்கள் சூரியன், செவ்வாய், குரு
மாரக அதிபதி சந்திரன், சனி
நோய் வயிற்று நோய், கண் சம்மந்தப்பட்ட நோய்
ஆயுள் சுபர் பார்க்க 65வயது வரை இருப்பர்

[குருவும் சனியும் சேருமாயின் அவயோகமாகும் . சந்திரன் துதியாதிபத்திய தோஷம் இருந்தாலும் மாரகம் கொடுக்க மாட்டான் என்றும் சொல்வர். .குருவும், சனியும் தருமகருமாதிபதி ஆகையால் அவர்களும் யோகக்காரர் ஆவர் ]

பொது பலன்கள் :
இனிய வார்த்தை பேசுபவர் , கபடி, மைதுன பிரியர் மனைவி சொல் கேள்பவர், புகழை உடையவர் . கற்பனா சக்தியும், கணிதத்தில் வல்லமையும் உடையவர் .