12 லக்கினத்தின் பொது பலன்கள் -2

இவையாவும் பொதுவாக சொல்லப்படுவதே ஆகும். தயவு செய்து குழம்ப வேண்டாம். உங்கள் குழப்பத்திற்கு AstroTamil பொறுப்பு ஏற்காது


கடக லக்கினம்:
அதிபதி சந்திரன்
யோககாரகர்கள் குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன், சனி
மாரக அதிபதி சனி
நோய் சுரம்
ஆயுள் சுபர் பார்க்க 90 வயது வரை இருப்பர்

(சூரியன் கொல்லான் )
பொது பலன்கள் :

தனவான் , பிதாவுக்கு அடங்காதவன், குறு விசுவாசி, கபடம் உள்ள அவமானான களத்திரகாரகன், தான தர்மம் செய்வதில் தாரள மனப்பான்மை உடையவன், அற்ப புத்திரன் உடையவன்.


சிம்ம லக்கினம்:
அதிபதி சூரியன்
யோககாரகர்கள் சூரியன், குரு, செவ்வாய்
யோகமில்லாதவர்கள் புதன், சுக்கிரன்
மாரக அதிபதி சனி
நோய் சுரம்
ஆயுள் சுபர் பார்க்க 80 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் யோகம் என்பர் )
பொது பலன்கள் :

கம்பிரமானவன், நல்ல பசியுடையவன் , திட புத்தியுள்ளவன், பக்தியுடையவன், கபடி, வசியமுடையவன், கோபமுடையவன், தைரியவான்


கன்னி லக்கினம்:

அதிபதி    புதன்
யோககாரகர்கள் புதன், சுக்கிரன்
யோகமில்லாதவர்கள் சந்திரன், குரு, செவ்வாய்
மாரக அதிபதி செவ்வாய்
நோய் சுரம் , தோல் வியாதி (வைசூரி )
ஆயுள் சுபர் பார்க்க 77 வயது வரை இருப்பர்

(சில ஜோதிட நூல்கள் சுக்கிரன் துதியாதிபதியாகினும் கொல்லான் மேலும் சனி கொல்லவர் என்பர் )
பொது பலன்கள் :

அடக்கமானவன், தர்மவான், திறமைசாலி, ஆசாரமுடையவன், பிறால் தொழில் பெற்றவன், சனப்பிரியன், பின் வயதில் அதிக தனம் சம்பாத்தியமுடையவன், மனோவஞ்சகன், நன்மையையும், தீமையும் செய்ப்பவன்