கேந்திரம்:
லக்கினத்தை முதல் வீடாக கொண்டு முதல்வீடு, நாலாம் வீடு, ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகியவை கேந்திரம் ஆகும் .
திரிகோணம்:
லக்கினத்தை முதல் வீடாக கொண்டு முதல்வீடு, ஐந்தும் வீடு , ஒன்பதாம் வீடுகள் திரிகோணம் ஆகும். ( கேந்திரம், திரிகோணம் மிக நல்ல வீடுகளாக அழைக்கப் படுகின்றன. இங்கே நல்ல கிரகங்கள் தங்கி இருப்பார்களேயானால் அவைகள் நல்லவைகளையே செய்யும். கெட்ட கிரகங்கள் தங்கி இருந்தால் அவைகள் அந்த வீட்டைக் கெடுத்து விடுகின்றன.)
திரிகோண ஸ்தான பலன்கள்
1. திரிகோண பாவங்களாகிய 1, 5, 9 மூன்று இடங்களும்
- ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசு உயர் பதவியும், சொகுசான வாழ்க்கையும் அமையும்.
- உச்சம் பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசனுக்கு இணையான வாழ்க்கை அமையும். அரசியலில் அழியாப் புகழ் கூடும்
- நட்பு, சமம் என்ற நிலையில் மூன்றிலும் கிரகங்கள் இருந்தால், நல்ல வாய்ப்புகள் தானாக வந்து உயர்வு தரும். முயற்சிக்கு உரிய பலன் கைமேல் கிடைக்கும்
- பகை, நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால், வாழ்க்கையே போராட்டமாக அமையும். கடின உழைப்பால் மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்
- இதை தர்ம ஜாதகம் என்பர்