ஜோதிட குறிப்புகள் -பாகம் -4

ராசியின் தன்மைகளின் தொடர்ச்சி.....




    சர, ஸ்திர, ராசி :




    சர ராசி :
      • சரம் என்பது நகரும்  குறிக்கும்
      • இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். 
      • மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். 
      • எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள்.
      • சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
    ஸ்திர ராசி : 
      • ஸ்திரம் என்பது நிலையாக இருக்கும் தன்மையை குறிக்கும்
      • மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள்.
    உபய ராசி :
      • உபயம் என்பது இரு தன்மைகளையும் குறிக்கும்
      • உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். 
      • சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். 
      • கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். 
    பஞ்சபூதங்கள்:

    ராசி மண்டலம் முழுவதும் ஆகாயத்தில் இருப்பதால் ராசிகளை பஞ்சபூதங்களான நெருப்பு, பூமி, காற்று மற்றும் நீர் என்ற 4ல் மட்டும் அடங்குவர். பஞ்சபூத தன்மையையும் தொழில், வானிலை அறிதல் போன்ற விஷயங்களுக்கு பயன்படுவர் . 


    நன்மை பயக்கும் ராசிகள்(Fruitful Signs) : 

    ரிஷபம், துலாம், தனுசு, மகரம் ஆகியவை ஆகும் (எல்லா ஜல ராசிகளும்  நன்மை பயக்கும் ராசிகளே )

    வறண்ட ரசிகள் (Barren Signs) : 

    மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகியவை வறண்ட ராசிகள் ஆகும் . (இ.ந்த ராசியிலுள்ள கிரகங்கள் நன்மையான பலன்களைக் கொடுக்காது. நன்மை பயக்கும் ராசிகளுக்கு  எதிர் மறையான ராசிகள் )

    ஊமை ராசிகள் : 

     கடகம், விருச்சிகம், மீனம் (எல்லா ஜல ராசிகளும்)ஊமை ராசிகள் ஆகும் .
    (ஒருவரின்  ஜாதகத்தில் 2-ம் வீடு பேச்சு, நாக்கு வன்மையைக் குறிக்கிறது.  குழந்தைகள் நன்றகப் பேசுவார்களா அல்லது பேசமாட்டார்களா என்று 2-ம் வீட்டையும், இந்த ஊமை ராசிகளயும் வைத்துக் கொண்டு சொல்லிவிடலாம். அதற்குத்தான் இந்த ராசிகள் பயன் படுகின்றன.)

    நான்கு கால் ராசிகள் : 

    மேஷம், ரிஷபம், சிம்மம், மகரம் ஆகியவை நான்குகால் ராசிகள் எனப்படும். 
    ஆடு (மேஷம்), காளை (ரிஷபம்), சிங்கம் (சிம்மம்), ஆடு (மகரம்), ஆகியவை 4-காலுள்ள உயிரினங்கள் எனவே இந்த ராசிகளை  நாலுகால் ராசிகள் என்று அழைக்கின்றனர் . (வண்டி வாகனங்கள் வாங்குவதற்கு உதவும் . 

    இரட்டை ராசிகள் :

    மிதுனம், தனுசு, மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் எனப்படும். (இது  ஒருவருக்கு இரண்டு மனைவிகளா? குழந்தை இரட்டையாகப் பிறக்குமா? இரட்டை வருமானம் ஒருவருக்கு வருமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த ராசியை வைத்துக் கொண்டு பதில் முடியும்)

    முரட்டு ராசிகள்:

    மேஷமும், விருச்சிகமும் முரட்டு ராசிகள் ஆகும் . இந்த ராசிகளின் அதிபதி  செவ்வாய் . செவ்வாய் ஒரு முரட்டு கிரகம் ஆகும். அதனால் அந்த ராசிகளுக்கு முரட்டு ராசிகள் கூறப்படுகின்றன 

    மலட்டு ராசிகள்:

    மேஷம், மிதுனம்,சிம்மம், கன்னி ராசிகள் மலட்டு ராசிகள் எனபர் . (குழந்தை பிறக்கும் தன்மை கண்டு அறிய உதவும்)