ஜோதிட குறிப்புகள் -பாகம் -2



லக்கினம்:

சூரியன் முன்பு பூமி சுற்றுகிறது என உங்களுக்குத்தெரியும். பூமியின் ஏதோ ஒரு பக்கம் சூரியன் முன் எப்போதும் உதயம் ஆகும் என உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பூமியின் எந்தப் பாகம் உதயம் ஆகிறதோ அதுவே அந்த நேரத்திற்கு லக்கினம் எனப்படும்.

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

ராசி:

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம் தான்  ராசி, அதாவது  பிறந்த நட்சத்திரம் எந்த ராசியில் உள்ளதோ அதுதான் ராசி என்பர். சில ஜோதிடர்கள் அதை சந்திர ராசி எனபர் .

நவாம்சம் :

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம். குறிப்பாக திருமணத்தின் போது இந்த கட்டத்தை பார்ப்பார்கள் அதாவது இது கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்.


கோச்சாரம் (கோள் சாரம் ):


         ஒவ்வொரு கிரகங்கள்  வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோச்சாரம்  எனபர் 


தசபுத்தி:

நமது இந்து மதம் மறு பிறவியை வலியுறுத்துகிறது. உடலுக்குத்தான் அழிவே தவிர ஆன்மாவிற்கு இல்லை. உடலில் இருந்து உயிர்போன பின்பு உடல் அழிக்கப் படுகிறது.ஆனால் ஆன்மாவோ வேறு வடிவம் எடுக்கிறது. இது தான் நமது இந்து மத தர்மம். இந்தப் பிறவியில் நாம் வாழ்வதோ தாழ்வதோ போனபிறப்பில் செய்த பாவ புண்ணியங்களைப் பொருத்தே அமைகிறது. நாம் அனுபவிக்கும் நல்லது, கெட்டதை தான்  ஊழ்வினை என்பர்.

ஒரு ஜாதகர் பிறக்கும்  நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசை தான் அந்த ஜாதகரின்  ஆரம்ப தசை ஆகும்  பிறகு  தசை சில ஆண்டுகள் அல்லது மாதங்களில் அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் . ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்


 நட்சத்திரத்திங்களின் அதிபதிகள் திசைகளாக வரும்