ஆயுள் கணிப்பு :
இலக்கினம், மூன்றாம் வீடு, எட்டாம் வீடு ஆகிய வீடுகள் மூலம் ஆயுளை ஆராய்ந்து கணிக்க முடியும் .
- ஆயுள் 30 வயதுக்குள் இருந்தால் அது அற்பாயுள்
- 30முதல் 60 வயது முடிய நடுத்தர ஆயுள்
- 60 வயதுக்குமேல் அது தீர்க்காயுள்
தீர்க்க ஆயுளையுடைய கிரக நிலைகள்:
- லக்கினதிபதி தன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் , 8ம் வீட்டிலோ இருந்தால்
- ஆயுள் ஸ்தானமான 8-ம் வீட்டில் சனியோ அல்லது குருவோ இருந்தால்
- சந்திரனும் லக்கினமும் நல்ல கிரங்கங்களின் சேர்க்கை பெற்று இருந்தால்
- சந்திரனும் , லக்கினாதிபதியும் கேந்திரவீடுகளிலோ அல்லது திரிகோண வீடுகளிலோ இருந்தால்
- 8க்குயுடையவன் 8-ம் வீட்டிலோ அல்லது லக்கினத்திலோ இருந்தால்
- 8க்குயுடையவன் 8-ம் வீட்டையோ அல்லது லக்கினத்தியோ பார்த்தால்
- சந்திரனும், லக்கினாதிபதியும் சேர்ந்து இருந்தாலோ அல்லது குருவும் சேர்ந்து இருந்தால்
- குரு, சனியையோ அல்லது 8-ம் வீட்டையோ பார்த்தால்
வராஹமிஹிரர் நமக்கு அருளிய பிருஹத் ஜாதகம் போன்ற நூலும் , மந்திரேஸ்வரர் அருளிய பலதீபிகை என்னும் சோதிட நூலும் ஆயுள் பாவத்தைப் பற்றி விரிவாக விளக்கி உள்ளனர்
அற்ப ஆயுளைக் காட்டுபவை :
8-ம் வீட்டில் சனியைத்தவிர பாபகிரகங்கள் இருந்தாலும்
6, 12 வீடுகளில் செவ்வாயும், சனியும் இருந்தாலும் அற்ப ஆயுள்தான்.
லக்கினத்தில் சந்திரனோடு பாபிகள் சேர்ந்து இருத்தல்
லக்கினத்தில் செவ்வாய் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தாலும்,
6, 8-ம் வீடுகளில் சனியிருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்,
லக்கினம், மூன்றாம் வீடு, 8-ம் வீடு ஆகியவற்றில் பாவிகள் இருந்து சுபர் பார்வை இல்லாதிருப்பதும்
1. ஆயுளைக் குறிப்பது 1, 3, 8-வது வீடுகள் ஆகும். இவற்றிற்கு 12-வது 12, 2, 7 வது வீடுகள் ஆகும். இவைகள் ஒருவரைக் கொல்லும் வல்லமை படைத்தவை. ஆகவே இவர்களை மாரகர்கள் என்றழைக்கலாம்.
7-வது வீட்டின் திசை கல்யாணவயதில் போது திருமணத்தைக் கொடுத்த 7-ம் வீட்டின் அதிபர் ஒருவருக்கு ஆயுளை முடிக்கும்போது அவர் மரணத்தையும் கொடுப்பார்.
2. ராசிகளில் மேஷம், கடகம், துலாம் , மகரம் ஆகியவை சரராசிகளுக்கு 11-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும். 11-ம் வீட்டு அதிபதியும், அதில் உள்ள கிரகங்களும் மரணத்தைக் கொடுக்கும்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகியோருக்கு 9-ம் வீடு பாதகத்தைக் கொடுக்கும்
உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றிற்கு 7-ம் வீட்டின் அதிபதி பாதகாதிபதியாகிறார்.
எனவே ஆயுள் முடியும் போது தங்கள் தசா, புக்திக் காலங்களில் மரணத்தைக் கொடுப்பார் என்று ஜோதிட நூல் கூறுகிறது .
இது அனைத்தும் ஜோதிட நூல்களின் கருத்துக்களே . மேலும் ஒருவரின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து தான் ஆயுள் கணிக்க முடியும். மிக கடினமான ஒன்று.