விருச்சிக ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

 

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 




இந்த பெயர்ச்சியில்  ராகு, விருச்சிக   ராசிக்கு 4ம்  வீடான கும்பத்திற்கும், கேது, விருச்சிக  ராசியின்  10ம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த ராகு கேதுவின் பெயர்ச்சி காரணமாக பலவிதத்தில் உங்களுக்கு சாதக பலன்கள் உண்டாகும். உங்கள் செயலில் அதிர்ஷ்டம் துணை நிற்கும். உங்கள் வாழ்க்கையில் சில போராட்டமான சூழ்நிலை இருந்தாலும் லாபம் அதிகமாக கிடைக்கும். 
  • வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளது. புதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் விருப்பம் நிறைவேறும்.
  • இந்த பெயர்ச்சி உங்கள் உறவில் ஒற்றுமை ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. மேலும் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகவும் நேர்மறையான சூழ்நிலை காணப்படும்.
  • உடன் பிறப்புகளுடன் உங்களில் உறவு சிறப்பாக  இருக்கும். மேலும் தந்தையுடனான உங்கள் உறவு சுமுகமாக இருக்கும். என்றாலும் உரையாடல்களைத் தவிர்ப்பது நல்லது.
  • 4 ஆம் இடத்தில் ராகு இருப்பதுடன்  குரு பார்வையை ராகு பெறுவதால் பண சேமிக்கும் அளவுக்கு வருமானம் இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.
  • பொதுவாக இந்த பெயர்ச்சியில் செல்வத்தை சேர்க்க முன்னுரிமை கொடுப்பிர்கள். முதலீடுகள் மூலம் நல்ல வருவாயைக் காணலாம்.
  • செய்யும் வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். என்றாலும் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.
  • உத்தியோக வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அரசு பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு வரும்.
  • உத்தியோகத்தில் உங்களின் செயல் திறன் அங்கீகரிக்கப்படும். மேலும் பாராட்டும் கிட்டும்.
  • உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் வயதில் முத்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தாக்க கூடும். எச்சிரிக்கை தேவை.
  • மேலும் மன அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், ஆனால் அது பெரிய பின்னடைவை ஏற்படுத்தாது.
  • விருச்சிக ராசி மாணவர்களின் கல்வி திறன் சற்று மெதுவாக இருக்கும். தேர்வில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவை. உங்கள் திறமையில் நீங்கள் சந்தேகம் கொள்ளாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு நான்காம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். எனவே இந்த ராகு பெயர்ச்சி, உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வை  ஏற்படுத்தும்.
  • உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம்  மோதல்களைத் தவிர்த்து, தெளிவான தகவல்தொடர்பைப் பேணு வேண்டும்.
  • தொழில்  காரணமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரியும் சூழ் நிலை வரலாம்.எனவே குடும்ப உறுப்பினர்களிடையே இடைவெளி அதிகரிக்கலாம்.
  • ரியல் எஸ்டேட் அல்லது முதலீடுகள் மூலம்  நல்ல ஆதாயங்கள் உண்டு. என்றாலும் திடீர் நிதி முடிவு எடுக்க வேண்டாம்.
  • செலவுகள் அதிகரிக்கும் எனவே சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சொந்த வீட்டில் இருப்பவர்களை காட்டிலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள, சற்று அதிகமான மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
  • தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் உங்களுக்கு பலன்களை தரும். ஏதாவது ஒரு இடத்தில் கமிஷன் வாங்கிக்கொண்டு வேலை செய்யும் அமைப்புன் உண்டு எனலாம்.
  • இந்த பெயர்ச்சியின் விளைவு காரணமாக, மார்பு சம்மந்த பட்ட  தொற்றுகள்  அல்லது பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யலாம்.

  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் ராசியிலிருந்து பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும்.
  • குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருந்தாலும் பரஸ்பர அன்பின் மகிழ்ச்சி நிலைத்து இருக்கும்.
  • உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தை கேது கெடுக்கலாம்.அவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.
  • இந்த கேது பெயர்ச்சியால் வேலை செய்பவர்களுக்கு மிக சிறப்பான  நிலை உண்டாகும். பணியிடத்தில் சில மோசமான நிலைகள் வந்தாலும் உத்தியோகத்தில் நல்ல  யோகம் உண்டாகும்.
  • வேலை தேடுபவர்களுக்கு வேலை  கிடைக்கும் என்றாலும்  விருப்பம் படி  வேலை அமையாது. எனவே ஏமாற்றத்திற்கு உள்ளவீர்கள். 
  • சொந்த வியாபாரம் செய்ய நினைக்கும் விருச்சிக ராசிகாரர்களுக்கு முயற்ச்சிக்கு ஏற்ப வெற்றி கட்டாயம் கிடைக்கும்.
  • அதிகப்படியான உழைப்பைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவு முறைகளை பரமாரிக்க வேண்டும்.
  • உயர்கல்வி அல்லது தொழில்முறை பயிற்சி கல்வியில் உள்ள விருச்சிக ராசி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் எனலாம்

துலா ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, துலா    ராசிக்கு 5ம்  வீடான கும்பத்திற்கும், கேது, துலா  ராசியின்  11ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த பெயர்ச்சியால் , துலா ராசிகாரர்களுக்கு பல வகைகளிலும் திடீர் யோகங்கள் ஏற்படும். புது வாகனம், சொந்த வீடு அமையும். 
  • இந்த பெயர்ச்சிக் காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  மேலும் உங்களின் தேவைகளை புரிந்து கொண்டு உங்களுக்கு உதவுவாரகுள். தம்பதியினருக்கு இடையிலான தொடர்பு மேம்படும்.
  • துலாம் ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியின் தாக்கத்தினால், ஆரோக்கியம் மேம்படும். நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவாக குணமடையவும் வழிவகுக்கும். மேலும்  புதிய சிகிச்சை செய்ய விரும்புவருக்கு இது சரியான நேரம் எனலாம். வீட்டில் உள்ள முதியவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். 
  • அத்துடன்  வருமானமும் நன்றாக இருக்கும்.. தடைபட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
  • கடன், நோய், மன உளைச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் விலகும். இரவு தூக்கமின்றி தவித்தவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றாலும் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். விபத்துகள் நடக்க வாய்ப்பு உண்டு.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்ப பெரியவர்கள் மூலம் பண ஆதாயம் உண்டாகும். சமூகத்திலும், வீட்டிலும் மதிப்பு மரியாதை கூடும். பணியிடங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர் பயணம் மூலம் ஆதாயமும், லாபம் உண்டாகும். குழந்தைகள் வழியில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பிள்ளைகள் கல்வி சார்ந்து முன்னேற்றம் அடைவார்கள். பெற்றோர்கள் பிள்ளைகள் மூலம் பாக்கியம் பெறுவீர்கள்.
  • திருமணத்திற்கு தயாராக இருக்கும் துலா ராசிகாரர்களுக்கு திருமணம் கை கூடும். காதலில் இருப்பவர்களுக்கு கல்யாண செய்யும் எண்ணம் இருந்தால், அது சிறப்பாக ஈடேறும்.
  • இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக குடும்ப செலவுகளை அதிகமாகலாம். மேலும் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.
  • தொழில் மற்றும் குடும்ப உறவுகளில் இதுவரை இருந்து வந்த மன உளைச்சல்கள் தீரும். பணியிடங்களில் இருந்து வந்த சிக்கல்கள் மற்றும் பிரச்னைகள் படிப்படியாக நீங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளை பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள்  கிடைக்கும். 
  • உங்களின் அணுகுமுறை எதிர்கால வெற்றிக்கான வலுவான அடித்தளங்களுக்கு வழிவகுக்கும்.என்றாலும்  யோசிக்காமல் முடிவெடுப்பது மற்றும் உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது .
  • அரசு ஊழியர்களுக்கு, இடமாற்றம் இருக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம், இட மாற்றம், உத்யோக மாற்றம், ஊர் மாற்றம் உண்டாகும். 
  • சிலருக்கு குடும்பத்துடன் சுற்றலா செல்ல வாய்ப்பு உண்டு. ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக பயணத்திற்கும் செல்லவும்  வாய்ப்பு உண்டு. 
  • வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சில தாமதங்களை சந்திக்க நேரிடும். மனம் தளர வேண்டாம்.   ஆசிரியர் அல்லது அனுபவம் வாய்ந்த நபர்களிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கும். மேலும் இந்த காலகட்டத்தில் பெற்றோரின் ஆதரவு முக்கியமானது.
  • பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்வதுடன்,  குரு பார்வையும் பெற்று இருப்பதால் துலா ராசிக்கு  ராஜ யோகம் ஏற்படும். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.  வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் கிடைக்கும்.
  • கடன் பிரச்னைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். ராகு கேது பெயர்ச்சியால் அதிகளவு பயன்பெற போவது துலாம் ராசியினர் தான்.
  • நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு பயணத்தால் மாற்றம் ஏற்படும். என்றாலும் வேற்று மொழி நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசிக்கு ராகு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சிப்பதும் சில நல்ல பலன்களைத் தரும்.

உங்களின் அறிவுத்திறன் , ஞாபக சக்தி கூர்மையாக மாறும். எனவே தோல ராசி மாணவர்கள்  கல்வியில் சிறப்பாக செயல்பட முடியும். 

இந்த ராகு பெயர்ச்சியால் காதல் உறவு சிறப்பாகவும், இனிமையாகவும் இருக்கும். ஆனால் தேவையில்லாத பொய்களை சொல் வேண்டாம்.

இந்த நேரத்தில், உங்கள் மனம் பங்குச் சந்தையை நோக்கிச் செல்லக்கூடும் மற்றும் அதில் முதலீடு செய்வதன் மூலமும் லாபம் ஈட்டலாம். என்றாளுன் பந்தயம், சூதாட்டம், லாட்டரி போன்றவற்றியில் சிறப்பாக இருக்காது. கவனம் தேவை.

எந்த வேலை கடினமாக இருந்தாலும் அதை எளிதாக செய்து முடிப்பீர்கள். 

வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும். சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

ராகுவின் பெயர்ச்சியால் , சில நேரங்களில் உங்கள் மனதில் தவறான எண்ணங்கள் வரலாம். கவனம் தேவை 

5ம் வீட்டில் ராகு வருவதால் , காதலில் உள்ளவருக்கு சிறப்பாக இருக்கும். மேலும் சிலர் காதலிக்க ஆரம்பிக்கலாம்.  மேலும் 5ம் வீட்டு ராகுவால்  தவறான புரிதல் வர வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையும், பரஸ்பர புரிதலும் கட்டாயம் தேவை.

துலாம் ராசிக்கு கேது  பதினொன்றாவது வீட்டில் பெயர்ச்சிக்கும். பதினொன்றாவது வீட்டில் கேதுவின் பெயர்ச்சி பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த கேது பெயர்ச்சியால் நன்மைகளு உண்டாகும்.

உங்கள் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புகளை உருவாக்கும். உங்கள் ஆசைகளை வரம்பிற்குள் வைத்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி கட்டாயம் வெற்றி உண்டு.

கேது பெயர்ச்சி 2025 காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்காது, எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறிய பிரச்சினை கூட உங்களுக்கு  இடையே வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளுக்கு வழிவகுக்கும். கவனம் அவசியம்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

மூத்த உடன்பிறப்புகளுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் அவர்களுக்கு  உடல்நலப் பிரச்சினைகள் வரும்.

11 ஆம் வீட்டில் உள்ள கேது உறவினர்கள்  அல்லது நட்புகளிடம் இருந்து சில  பிரிவினைகள் வர வாய்ப்பு உண்டு.

இந்த காலகட்டத்தில் கடந்த கால முதலீடுகள் அல்லது பரம்பரை சொத்துக்களிலிருந்து எதிர்பாராத லாபங்கள் ஏற்படலாம்

கன்னி ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, கன்னி   ராசிக்கு 6ம்  வீடான கும்பத்திற்கும், கேது, கன்னி  ராசியின்  12ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • இந்த பெயர்ச்சியால் , பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட  கன்னி ராசிகாரர்களுக்கு நல்ல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
  • கன்னி ராசிக்கு கடந்த கால மனக்கசப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அதே வேளையில் இரவு தூக்கத்திற்கு  மிக கவனம் செலுத்த வேண்டும். 
  • திருமணம் தடை இருந்தவர்களுக்கு அது நீங்கி திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.  சிலருக்கு காதல் திருமணம் கைக்கூடும்.
  • பழைய  கடன் சுமை முழுமையாக விலகும். உங்கள் நிதி நிலை மேம்படும்.
  • எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வேலை செய்பவர்களுக்கு நல்ல காலம் இருக்கும். 
  • சேவை சார்ந்த தொழில்கள், சுகாதாரம் அல்லது சட்டம் ஆகியவற்றில் இருப்பவர்கள் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் உங்களை எதிர்த்தவர்கள் எல்லாம் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். என்றாலும் குரு பத்தாம் வீட்டுக்கு வருவதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் அவசியம். அதாவது பணிச்சுமை அதிகரிக்கும்.
  • கேது விரய ஸ்தானத்தில் அமர இருப்பதால் பணியிட மாற்றம் இருக்கும். ராகு ஆறாம் இடத்துக்கு வருவதால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். 
  • கன்னி ராசி மாணவர்களுக்கு , போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் .
  • புதிய வீடு கட்டுவது, இருக்கும் வீட்டை புனரமைப்பது போன்ற சுப செலவுகள் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்  அமையும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்கள் நிகழும். அனைத்து காரியத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.
  • பெண்களுக்கு கருப்பை சம்மந்தப்பட்ட  சின்ன சின்ன பிரச்னைகள் வந்து சரியாகும். கவனம் அவசியம் .

  • கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு ஆறாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஆறாவது வீட்டில் ராகு பெயர்ச்சிப்பது சாதகமாக கருதப்படுகிறது. 
  • ராகுவின் இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால்  வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் குறையும். ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு காண்பதில் வெற்றி கிட்டும்.
  • ராகு பெயர்ச்சி 2025 போது உத்தியகத்தில் இருக்கும் கன்னி ராசிக்காரர்கள் தங்களுடன் பணிபுரியம் நண்பர்களுடன் சற்று எச்சிரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால்  அவர்கள் உங்கள் முதுகுக்குப் பின்னால் துரோகம் செய்யலாம். 
  • நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது உங்களுக்கு சாதகமாக வரும். 
  • பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். செலவுகள் குறையும், பண வரவு கூடும்.  முன்பு செய்த முதலீடுகளிலிருந்தும் பலன்களைப் பெறலாம்.
  • பழைய  கடன்களை அடைப்பதற்கு இது சரியான நேரம் என்று சொல்லாம்.
  • 6 ஆம் வீட்டில் ராகு இருப்பதால், குறிப்பாக திருமண அல்லது நெருங்கிய குடும்ப உறவுகளில் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் அல்லது தவறான புரிதல்கள் ஏற்படக்கூடும்.
  • ராகு 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உடல்நலம் மேம்படும். கடந்த கால நோயில் இருந்தும் விடுபடுவீர்கள்.
  • கன்னி ராசி மாணவர்களுக்கு உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த படிப்புகளைத் தொடர வாய்ப்பு உண்டு.
  • 6 ஆம் வீட்டில் ராகுவருவதால் , தொழிலில்  செயல்பாட்டுத் திறனை மேம்படும். சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். 
  • வணிக கூட்டாளி மற்றும் வாடிக்கையார்ர்களை திருப்திபடுத்தும் முயற்றி நல்ல வெற்றியை தரும். இந்த ராகு பெயர்ச்சியில், ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

  • கன்னி ராசிக்காரர்களுக்கு கேது  பன்னிரண்டாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இந்த பெயர்ச்சி சாதகமாக இருக்காது. எனவே நீங்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
  • இந்த பெயர்ச்சியால் செலவுகள் அதிகரிக்கும். மேலும் திடீர் செலவுகள் உண்டாகும். மனம் ஆடம்பரத்தை நாடுவதால் மேலும் செலவுகள் உண்டாகும். எனவே சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  • பணியிடத்தில் சில சமயங்களில்  அலட்சியமமாக இருப்பீர்கள் . கவனம் வேண்டும்.
  • இந்த பெயர்ச்சியில் உடல்நலப் பிரச்சினைகள் வர வாய்ப்பு உண்டு. காய்ச்சல், கடுமையான தலைவலி தூக்கமின்மை மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட  தொந்தரவுகள் வரலாம். எனவே உங்கள் உடல்நலத்தை குறித்து  அலட்சியமாக இருக்க வேண்டாம்.
  • கேதுவின்  பெயர்ச்சியால் உங்கள் மனதில் ஆன்மீக எண்ணங்கள் அதிகரித்து, தியானம், சாதனா போன்றவற்றில் அதிக நேரத்தை செலவீடுவீர்கள்.புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டாம். அவர்களுக்கு நேரத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும். 

சிம்ம ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

 


இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த பெயர்ச்சியில்  ராகு, ரிஷப சிம்ம ராசிக்கு   ராகு 7ம்  வீடான கும்பத்திற்கும், கேது சிம்ம ராசிக்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் வீண் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துப் பேச வேண்டும். என்றாலும் 8ம் வீட்டில் இருந்த ராகு, 2ம் வீட்டில் இருந்து கேது கொடுத்த சிரமம்த்தை ஒப்பிடும்போது இது சற்று சிரமம் குறைவாகவே இருக்கும். மேலும் ராகுவை குரு பார்ப்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்தில்  உங்களின் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அதை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த சிக்கலை தீர்க்கும் முன் அதன் எதிர் வினைகளை ஆராய வேண்டும்.

இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். முந்தைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணமும் கிடைக்கும், மேலும் நாள்பட்ட நோய்கள் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.

தொழில் மற்றும் சில காரணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம். என்றாலும்  ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால்  குடும்பத்தின்  அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது.

புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சமுகத்தில் அதாவது சங்கம் போன்றவற்றில் புதிய பொறுப்புகள் வரலாம். ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். அதனால் வீண் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் தவிர்ப்பது நல்லது. சிந்தித்துப் பேச வேண்டும். என்றாலும் 8ம் வீட்டில் இருந்த ராகு, 2ம் வீட்டில் இருந்து கேது கொடுத்த சிரமம்த்தை ஒப்பிடும்போது இது சற்று சிரமம் குறைவாகவே இருக்கும். மேலும் ராகுவை குரு பார்ப்பதால் பெரிய பிரச்சனைகள் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

குடும்பத்தில்  உங்களின் மேல் அதிக நம்பிக்கை வைப்பார்கள். அதை காப்பாற்றி கொள்ள வேண்டும். எந்த சிக்கலை தீர்க்கும் முன் அதன் எதிர் வினைகளை ஆராய வேண்டும்.

இந்த பெயர்ச்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு சாதகமாக இருக்கும். முந்தைய உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து நிவாரணமும் கிடைக்கும், மேலும் நாள்பட்ட நோய்கள் சமாளிக்கும் வகையில் தான் இருக்கும்.

தொழில் மற்றும் சில காரணங்களால் சிம்ம ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் நிலை வரலாம். என்றாலும்  ஏழாம் வீட்டில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால்  குடும்பத்தின்  அன்யோன்யத்தை பெரிதாக பாதிக்காது.

புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. சமுகத்தில் அதாவது சங்கம் போன்றவற்றில் புதிய பொறுப்புகள் வரலாம். ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு ஏழாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. ஏழாவது வீட்டில் ராகுவின் பெயர்ச்சி  சிம்ம ராசிக்கு சற்று கலவையான பலன்களைத் தரும். 

இந்த பெயர்ச்சியால் வாழ்க்கை துணையுடன் பல தவறான புரிதல்கள் அதிகரிக்கக்கூடும். இதனால் முடிந்தளவு உங்கள் வாழ்க்கை துணையிடம் உண்மையை பேசவும் மேலும் எதையும் மறைக்காமல் இருக்க வேண்டும்.

வாழ்க்கை துணையுடன் உண்டாகும் பிரச்சனைக்கு எந்த மூன்றாவது நபரின் உதவி வேண்டாம்.  இல்லையெனில் சிக்கல் வர வாய்ப்பு உண்டு.

ராகுவின் இந்த பெயர்ச்சியின் போது, ​​வியாபாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நெறிமுறையற்ற அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்ய வேண்டாம். 

ராகுவால் தொழிலில் சில  தவறான புரிதல்கள் அல்லது மோதல்களையும் உருவாக்கக்கூடும். கவனம் அவசியம். என்றாலும் வணிகம் தொடர்பாக சில புதிய திட்டங்களை தீட்டி அதை செயல் படுத்துவீர்கள்.

வியாபரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் உருவாகும்.முதலீடுகளைச் செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருப்பதும் தக்க  ஆலோசனைகளை பெற்று செயல்படுதல் நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.

7வது வீட்டில் ராகு சஞ்சரிப்பதல்  தொழிலில்  அல்லது குடும்ப உறவுகளால்  மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். 

உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி சாதகமாக தான் இருக்கும். என்றாலும் கல்வியில் கவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். முடிந்தளவு நண்பர்களுடன் சேர்ந்து படிப்பதை தவிர்க்கலாம். கெட்ட பழக்கத்திற்கு ஆளாக நேரிடும். 

7 ஆம் வீட்டில் ராகுவால், சமூகம் சார்ந்த ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு கேது உங்கள் முதல் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. எனவே  கேது பெயர்ச்சிப்பது உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்பதால், கேது பெயர்ச்சி 2025 போது உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிறிய பிரச்சனைகள் அல்லது தொற்றுநோய்களுக்கு கூட  மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்

மேலும் இந்த நேரத்தில், மனதில் பற்றின்மை உணர்வு எழும்.உங்களை சுற்றி உள்ளவரால்  அதிகரிக்கலாம். 

வணிகத்தில் இருப்பவர்கள் புதிய வணிக முடிவுகளை எடுக்கும் முன்  அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுதல் நல்லது. என்னென்றால் ராசியில் இருக்கும் கேதுவால் முடிவெடுக்கும் திறன் பாதிக்க படலாம். என்றாலும் தனிப்பட்ட  தொழில் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த கேது உதவார்

1 ஆம் வீட்டில் கேது,  ஆடம்பர செலவுகளை அதிகரிக்க செய்வார். இந்த கேது  பெயர்ச்சி சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

 

கடக ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த ராகு , கேது பெயர்ச்சியில்  ராகு,  கடக ராசிக்கு   8ம்  வீடான கும்பத்திற்கும், கேது ,,கடக ராசியின்  2ம் வீடான சிம்மத்திற்கும்  செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • ஜோதிட சாஸ்திரத்தின் படி ,   8ல் ராகு மற்றும் 2ல் கேது  பெயர்ச்சி ஆவது  நல்லதாக கருத படுவது கிடையாது. வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உண்டாகும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். மற்றும்,உறவில் ஒற்றுமை நீடிக்க வெளிப்படையாக கருத்துகளை பரிமாறுவது நல்லது.தகவல்தொடர்புகளில் கவனம் செலுத்துங்கள். 
  • திருமணத்திற்கு தயாராக உள்ள கடக ராசிகாரர்களுக்கு தக்க துணைகண்டு அறிய அதிக முயற்சி தேவைபடும்.
  • என்றாலும் உங்கள் பெற்றோரிடமிருந்து, குறிப்பாக  தந்தையின் ஆதரவை நன்றாக இருக்கும் . கடந்த கால பிரச்சனைகளில் இருந்து  விடுபடுவீர்கள். இரத்த உறவுகளுக்குள் தொடர்பு மற்றும் புரிதல் மேம்படும், மேலும் இது  வலுவான பிணைப்பை வளர்க்கும். இந்த பெயர்ச்சி குடும்பத்தில் நெருக்கம் மற்றும் ஆதாரவை வளர்க்கும் என்று தான் சொல்ல வேண்டும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும்
  • 8 விட்டிற்கு ராகு வருவதால் ,ஆன்மீக சிந்தனை வளரும். இறை வழிபாடு மற்றும் சித்தர் வழிபாடுகளை மேற்கொள்வீர்கள். 
  • பொருளாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். கடன்  வாங்குவதையும், பிறர்க்கு கொடுப்பத்தையும் தவிர்த்தல் நல்லது.
  • கடக ராசிக்காரர்கள் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும், சாலை விபத்துகளில் சிக்க வாய்ப்பு உண்டு. வண்டியில் சாகசம் செய்ய ஆர்வமுடைய கடக ராசிக்காரர்கள் முடிந்தவரை வண்டியை தொடாமல் இருப்பது நல்லது.
  • ஊக முதலீடுகளில் எச்சிரிக்கை கட்டாயம் தேவை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நல பிரச்சினை ஏற்பட்டு செலவுகள் வரலாம்.
  • கடக ராசிக்கு தன ஸ்தானத்தில் கேதுவின் சஞ்சாரம் செய்வதால், வியாபாரம் செய்யபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.. பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும். வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றி பெறுவதற்கான சூழல் உருவாகும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • இந்த பெயர்ச்சி கடக ராசி மாணவர்கள், தங்கள் கல்வியில் கவனம் மற்றும் விடாமுயற்சி அவசியம் ஆகும். மாணவர்கள் படிப்பில் மெதுவான முன்னேற்றம் அல்லது தெளிவின்மை இருக்கும்.ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருக்கும் மாணவர்களுக்கு இது சாதகமான நேரமாக இருக்கும். 
  • கடக ராசிக்காரர்களுக்கு ராகு எட்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இந்த  ராகுவின் பெயர்ச்சி பொறுத்தவரை  சாதகமானது இல்லை என்றாலும் சில சமயங்களில் திடீரென்று நல்ல பலனைத் தரும். 
  • சரியான இல்லாத  உணவுப் பழக்கம் உள்ள கடக ராசிகாரர்களுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்படலாம் அல்லது உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். சரியான நேரத்தில் மருத்துவம் செய்து பெரிய சிக்கலில் இருந்து வெளி வர முடியும்.
  • மேலும் எட்டாவது வீட்டிற்கு வரும் ராகுவால் திடீர் என்று உடல் நல தொந்தரவுகள் வர வாய்ப்பு உண்டு. மேலும் செரிமானம் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் உண்டாகலாம்.
  • வாழ்க்கை துணையின் சொந்தங்களிடம் இருந்து சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. என்றாலும் உற்றார் உறவினர்களுடன் நல்ல உறவு இருக்கும்.
  • பங்குச் சந்தையில் முதலீடு  செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும்.  இல்லையெனில், நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். 
  • என்றாலும் இந்த பெயர்ச்சியால்  எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறலாம். மேலும் சில சொத்துக்கள் அல்லது பரம்பரை சொத்து அடையும் வாய்ப்பு உண்டாகும்.மேலும்  எதிர்பாராத சில வழிகளில் பணம் வரவு உண்டு. 
  • ஆராய்ச்சி, காப்பீடு, அமானுஷ்ய அறிவியல் அல்லது நிதித்துறையில் உள்ளவர்கள் எதிர்பாராத முன்னேற்றங்களைக் காணலாம். என்றாலும் மறைமுக எதிரிகள் அல்லது தவறான புரிதல்கள் வர வாய்ப்பு உண்டு.
  • 8 ஆம் வீட்டில் ராகுவால் கடக ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனச்சிதறல் வரும். எனவே கல்வியில்  முழு கவனம் செலுத்த வேண்டும்.
  • ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். இது உங்களின் மன அழுத்ததை குறைக்க உதவும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு கேது  ராசியிலிருந்து இரண்டாவது வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறது. இரண்டாவது வீடு என்பது பணம், பேச்சு மற்றும் குடும்பத்தை குறிக்கும் வீடு ஆகும்.  இந்த வீட்டில் கேது பெயர்ச்சியால்  வாழ்க்கை  சில ஏற்றத் தாழ்வுகள் நிறைந்து இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
  • உங்களின் வார்த்தைகளை கவனம் அவசியம். உங்களின் வார்த்தைகளால் சிலரை நீங்கள் புண்படுத்தலாம். 
  • மேலும் குடும்பத்தை விட்டு விலகி இருக்க விரும்புவீர்கள். என்றாலும் பிரிந்து இருந்த உறவுகள் மீண்டும் இணைய வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
  • இந்த பெயர்ச்சியின் போது, ​​வாய் புண்கள், பல்வலி போன்ற பிரச்சனைகள்  தொந்தரவு செய்யலாம். கேது பெயர்ச்சி 2025 போது, உங்களின் வாழ்க்கை துணைக்கும் உடல்நலப் பிரச்சினைகள்  வர வாய்ப்பு உண்டு  எனவே அவர்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். 
  • போட்டி தேர்வில் பங்கு ஏற்கும் கடக ராசி மாணவர்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும். மேலும் இந்த கேது பெயர்ச்சி மாணவர்களுக்கு  சாதகமானவே இருக்கும். 
  • வியாபாரத்தில் வாடிக்கையார்களிடம்  வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். 


மிதுன ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  

இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 


இந்த ராகு  கேது பெயர்ச்சியில்  ராகு,மிதுன ராசிக்கு   ராகு, 9ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  3ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.


ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்

  • மிதுன ராசியினருக்கு ராகு  கேது பெயர்ச்சியினால் எல்லாத் துறைகளிலும் வெற்றி கிட்டும் . தைரியமும் மன உறுதியும் அதிகரிக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்.  
  • பணியிடத்திலும் கடின உழைப்பிற்கான அங்கீகாரமும் மரியாதை கிடைக்கும். மேலும் வாட்டி வந்த நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் .  குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றத்தின் காலம் தொடங்கும்.
  • மிதுன ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேது அமர உள்ளார். இதன் காரணமாக எல்லா துறைகளிலும் சிறப்பான வெற்றி தேடி வரும். உங்கள் செயலில் வீரமும், தைரியமும் அதிகரிக்கும். 
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காணலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குடும்பத்தனருடன் போதிய நேரத்தை செலவழிப்பீர்கள். வீடு, வாகனம் வாங்கும்  கனவும் நிறைவேறும்.
  • பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அபாயகரமான எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். 
  • நண்பர்கள், உறவினர்கள், உடன்பிறந்தவர்களுடன் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து உங்களின் கருத்துகளை பற்றி பேசவும். குழந்தைப் பேற்றிற்காக திட்டமிடும் தம்பதிகளுக்கு, சிறிது தாமதம் ஏற்படலாம். இந்த பெயர்ச்சியில் ஆரோக்கியம் மேம்படும். 
  • தந்தை மற்றும் இளைய உடன்பிறந்த உறவுகள் தேவையற்ற மோதல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் உண்டு. சற்று விட்டு கொடுத்து போகவும்.
  • பங்கு சந்தை மூலம் நல்ல லாபம் மற்றும் ஆதாயம் உண்டு. இதனால் நிதிநிலை மேம்படும். என்றாலும் ஆடம்பரமாக வாழும் எண்ணம் உண்டாகும். கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்க சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான இது சரியான நேரம் என்று தான் சொல்ல வேண்டும். 
  • கூட்டுதொழில் இந்த காலக்கட்டத்தில் நல்ல பலன் அளிக்கும். என்றாலும் ஆவணம் மற்றும் ஒப்பந்தப் பத்திரங்களில் கையொப்பமிடுவதற்கு முன் யோசித்து செய்ய வேண்டும்.
  • உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டு. சில கூடுதல் பொறுப்புகள் கூட வரலாம். உங்களின் திறமைகளை பயன்படுத்தும் நேரம் இது என்பதால் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வெளிநாட்டு வேலை, உயர்கல்வி அல்லது பயணம் மற்றும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதை உள்ளடக்கிய துறைகளில் வெற்றி உண்டாகும்.
  • சில சமயங்களில் ராகுவின் தாக்கம்  மன அமைதியையும் பொறுமையும் இழக்க செய்யும். இதனால் வழக்கமான பணிகளில் சிரமம் ஏற்படலாம். 3 ஆம் வீட்டில் கேது சில சமயங்களில் சக ஊழியர்களுடன் உறவுகளில்  பிரச்சனைகளை கொண்டு வரலாம். சனி மற்றும் குரு பெயர்ச்சியால் இந்த நிலையில் பெரிய பிரச்சினை இருக்காது. கவலை வேண்டாம்.

  • மிதுன ராசிக்கு ராகு ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், நீண்ட தூரப் பயணங்களுக்குச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன. 
  • இந்த பெயர்ச்சியின் போது தந்தைக்கு சில உடல்நல பிரச்சனைகளால்  தொந்தரவு உண்டாகலாம். எனவே அவரது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்  மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி அவருக்கு சிகிச்சை அளிக்கவும்.
  • மனத்தில்  ஆடம்பர எண்ணங்கள் தோன்றும். எனவே சிக்கனத்தை நாட வேண்டும். இல்லையெனில்,  நிதி ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும்.
  • மேலும் இந்த  ராகுவின் பெயர்ச்சியின் விளைவாக பணித் துறையிலும் சில ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும். சிலருக்கு  விரும்பாத இடத்திற்கு மாற்றப்படலாம். பொறுமையை கடை பிடிக்கவும்.
  • என்றாலும்  குறைவான உழைப்பைக் கொடுத்து அதற்கு இரட்டிப்பான பலன்களைப் பெறும் யோகம் உண்டாகும்.  புதிய வண்டி, புதிய வாகன யோகம் உண்டு.
  • சுபமான செய்தி வரும். வீட்டில்  திருமணம் உள்ளிட்ட   அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். புத்திசாலித்தனமாக  செயல்பட்டு நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். 

  • கேது  மூன்றாம் வீட்டிற்கு  பெயர்ச்சிக்கிறார்.கேது மூன்றாவது வீட்டில் பெயர்ச்சிப்பது சாதகமாக கருதப்படுகிறது. 
  • 3 ஆம் வீட்டில் உள்ள கேது தன்னம்பிக்கை மற்றும் தைரியமும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையையும் முழு நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செய்வீர்கள். 
  • மனம் ஆன்மிகத்தில் ஈடுபடும். எனவே ஆன்மிக சுற்றலாவிற்கு முக்கியத்துவம் கொடுப்பிர்கள்.  மேலும் சில குறுகிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.  
  • உங்கள் பணியிடத்திலும், பணியிலும் மிகவும் ஆர்வம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். 
  • இந்த காலகட்டத்தில், உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு சில உடல் பிரச்சனைகள் வந்து  தொந்தரவு செய்யலாம். எனவே உங்களின் உதவி அவர்களுக்கு தேவை படலாம். 
  • இந்தப் பெயர்ச்சியால்  நீங்கள் ஆசை பட்ட  சொத்துகளை வாங்குவீர்கள் .  மேலும்  3ம் வீட்டில் உள்ள கேது, பொறுப்பான செலவுகள், திட்டமிட்ட முதலீடுகளால் உங்கள் சேமிப்பை அதிகரிக்கும். 
  • வெளிநாட்டு சந்தைகளில் நீண்டகால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள். மேலும் ஊக நிதிகளில் முதலிடு செய்யும் போது மிகவும் கவனம் அவசியம். முடிந்தளவு தவிர்க்கவும்.
  • மேலும் சுவாச அல்லது நரம்பியல் பிரச்சினைகள் உள்ளவர்கள் சற்று  எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


ரிஷப ராசி - ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, ரிஷப  ராசிக்கு 10ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  4ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

ராகு , கேது பெயர்ச்சி 
பொது பலன்கள்


  • இந்த ராகு மற்றும் கேது  பெயர்ச்சி காலக்கட்டத்தில்  ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். பொதுவாக ராகு கேது பெயர்ச்சி ரிஷப ராசிக்கு நன்றாக இருக்கும் என்றாலும் தவறான புரிதல்களால் தாயுடனான உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் அவசியம். மேலும் வாழ்க்கை  துணையைச் அனுசரித்தும் நடந்து கொள்வதின் மூலம் உறவு வலுப்படும். மேலும் தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
  • இந்த பெயர்ச்சி தந்தை மற்றும் அவர்களது உடன்பிறப்புகளுக்கு இடையே அதிக ஆதரவையும் புரிதலையும் தரும்.
  • இந்த பெயர்ச்சியில் , பொருளாதாரத்தை பொறுத்தவரை இந்த பெயர்ச்சி நன்மை தான் தரும் என்று சொல்லாம். என்றாலும் நிலத்தில் முதலீடு செய்யும் முன் யோசிக்கவும். எச்சிரிக்கை அவசியம்.
  • மேலும்  தொழில்  முயற்சிகள் சீராக இயங்கும் மற்றும் இந்த காலகட்டத்தில் லாபம் ஈட்ட முடியும். மேலும் முந்தைய நிதி சிக்கல்களுக்கு இந்த பெயர்ச்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் வெளிநாட்டில் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும் 
  • தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் வெற்றி பெற இரண்டிற்கும் சமமான உரிமையை கொடுக்க வேண்டும்.  ரிஷப ராசி பெண்களுக்கு ஆளுமை திறமை அதிகரிக்கும்.
  • காதல் உறவுகளில் தவறான புரிதள் வர வாய்ப்பு உள்ளது. அதற்கு கட்டாயம் தீர்வு காண வேண்டும். அலச்சியம் வேண்டாம்.
  • ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்களுக்கு இந்தக் காலகட்டம் சாதகமாக  மேலும் தொழில் சார்ந்த கல்வி கற்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் வரும் பயன்படுத்தி கொள்ளவும்.
  • வியாபாரிகள்  தங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதில் கவனம் தேவை. மேலும் வியாபாரத்தில் திடீர் முடிவுகள் தவிர்க்கவும்.
  • மன அமைதிக்கு ஆன்மிகம் உதவும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். மேலும் பொருள் சார்ந்த விஷயத்தில் உங்களின் விருப்பங்களை சமன் படுத்த இது உதவும்.


  • ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு பத்தாம் வீட்டில் பெயர்ச்சிக்கப் போகிறார். பத்தாம் வீட்டில் ராகு இருப்பது நல்ல பலனைத் தருவதாகக் கருதப்பட்டாலும், உங்கள் பணியிடத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
  • மேலும் ராகு உங்களை குறுக்குவழிகளைப் பின்பற்றச் செய்வார். வேலையில் தவறுகள் செய்யும் வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் அவசரமாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மற்றவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டிய அவசியம்.
  • மற்றவர்களுக்கு கடினமான பணி என்றாலும் நீங்கள் எந்த வேலையை எடுத்தாலும், அதை நீங்கள் விரைவாக முடித்துவிடுவீர்கள்
  • ரிஷப ராசிக்கு  2025ல் ராகுவின் மாற்றத்தால் பல விதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
  • வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.  மேலும் பணியிடத்தில் உங்களின் வேலைகள் சிறப்பான வெற்றி இலக்கை அடைய முடியும். 
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். என்றாலும் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.  குடும்பத்துக்கு நேரங்கள் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.நிதி நிலையில் முன்னேற்றம் இருக்கும்.

  • கேது   நான்காவது வீட்டில் பெயர்ச்சிக்கும் போது குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற பதற்றம் மற்றும் தவறான புரிதல்கள் அதிகரிப்பதால், குடும்ப சூழ்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 
  • தாயார் உடல்நலக் குறைவால் சிரமப்படக்கூடும். மேலும் இந்த கேது பெயர்ச்சி போது  மார்பு அல்லது நுரையீரல் தொற்று ஏற்படலாம். கவனம் அவசியம்.
  • 4 ஆம் வீட்டில் கேது சஞ்சரிப்பதால், ரிஷப ராசி மாணவர்களுக்கு கல்வியில் கவனம் செலுத்துவதில் குறைபாடு அல்லது  சில உணர்ச்சி ரீதியான கவனச்சிதறல்கள் ஏற்படக்கூடும், இதனால் மாணவர்கள் ஒழுக்கமாகவும், இலக்கை நோக்கியும் இருப்பது அவசியம். 
  • இந்த  கேது பெயர்சசியால்  வியாபாரத்தில் நீண்டகால வெற்றியைத் தக்கவைக்க வாடிக்கையாளர் திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மேலும் இந்த  கேது  உங்களின் சுயபரிசோதனை, தியானம் மற்றும் உள் அமைதிக்கான தேடலை வளர்க்கிறார் புனித யாத்திரை மேற்கொள்ள இது ஒரு சாதகமான நேரம் ஆகும்.

மேஷ ராசி ராகு - கேது பெயர்ச்சி - 2025

  



இந்த வருடம்  - 2025 ராகு , கேது பெயர்ச்சி  எப்போது?

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்வதாகக் கூறப்படுகிறது. 

திருக்கணிதப்படி 2025 ஆம் ஆண்டு , மே 18 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு ராகு , மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு  பெயர்ச்சி ஆகிறார். 



இந்த பெயர்ச்சியில்  ராகு, மேஷ ராசிக்கு 11ம்  வீடான கும்பத்திற்கும், கேது, மேஷ ராசியின்  5ம் வீடான சிம்மத்திற்கும் செல்கிறார்கள்.

 ராகு , கேது பெயர்ச்சி பொது பலன்கள்

  • இந்த ராகு மற்றும் கேது பெயர்ச்சியை பொறுத்தவரை மேஷ ராசிகாரர்களுக்கு வேலை வாய்ப்பு பொறுத்தவரை  வேலையில் நல்ல முன்னேற்றம், புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 
  • மேலும்  வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைத்து வருமானம் கூடும். எனவே பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.
  • சிலருக்கு சில தடைகள் வரலாம், கவனமாக இருக்க வேண்டும். ம் ராகு கேது பெயர்ச்சி சிலருக்கு சில தடைகள், சவால்களை தரலாம், எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும்  உங்கள் வேலையை சரியாக திட்டமிட்டு செய்வதும், அர்ப்பணிப்புடன் செய்வதும் அவசியம்.
  • 11 ஆம் வீட்டில் ராகு புதிய நட்புகள் அமையும் ,  தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடும். என்றாலும் குருட்டு நம்பிக்கையில் ஆபத்தானா வியாபார முடிவுகளை தவிர்க்க வேண்டும்.
  • 5 ஆம் வீட்டில் கேது இருப்பதால் காதல் உறவுகளில் சில தவறான புரிதால் சற்று  இடைவெளி ஏற்படலாம். குழந்தைகளை கவலைகள் உண்டாகும் 
  • மேஷ ராசியில் உள்ள மாணவர்கள் இந்த பெயர்ச்ச   கலவையான பலன்களை தரும் எனலாம். உயர்கல்வி அல்லது படைப்புத் துறைகளில் ஈடுபடுபவர்கள்.  தங்களின் வேலைகளை  தள்ளிப்போடுவதைத் தவிர்த்தால் சிறந்து விளங்க வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மேஷ ராசி மாணவரகள்  கூடுதல் கவனம் செலுத்துவேண்டும்.
  • உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணை இடையே ஆதரவாகவும் இணக்கமாகவும் இருக்கும். சில தம்பதிகளுக்கு கருத்தரிப்பதில் சிறிது தாமதம் ஆகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கை செழித்தோங்கும் என்றாலும்  காதல் உறவுகள் தற்போது நிறைவாக இருக்காது. காதல் துணையை தேர்ந்து எடுக்கும் போது சற்று கவனம் அவசியம்.

மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராகு பதினொன்றாவது வீட்டில் கும்பத்தில் பெயர்ச்சிக்கிறார். பதினொன்றாவது வீட்டில் ராகு மிகவும் சாதகமாக கருதப்படுவதால், உங்கள் ராசிக்கு மிகவும் சாதகமான பெயர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். 
ராகு  மனதில் உள்ள ஆசை மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற உதவுவார்.   நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த திட்டங்கள் இப்போது சீராக செயல்பட  தொடங்கும். 
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மேலும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதையும் விரும்புவீர்கள் என்று தான் சொல்ல வேண்டும் . புதிய நண்பர்களை ஏற்று கொள்ளும் முன் அவர்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். தவறானவரின் நட்பு வர வாய்ப்பு உண்டு.
குடும்ப வாழ்க்கையை விட உங்கள் நண்பரகளின்  வட்டத்திற்கு அதிக முக்கியத்துவம்கொடுப்பதால்  குடும்பத்தை விட வீட்டிற்கு வெளியே அதிக நேரம்செலவிடுவீர்கள்.
இதனால் உடல்நலத்தில் அக்கறை காட்ட மாட்டீர்கள். எனவே உடல் நிலை பாதிக்க படல்லாம்.
வணிகர்கள் ராகுவின் இந்த பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறலாம் மற்றும் பொருளாதார நிலையம்  வலுவடையும். என்றாலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
வேலைக்கு செல்லும் மேஷ ராசிகாரர்களுக்கு பணியில் பல  வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு . மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை கிடைக்கும்.

மேஷ ராசிக்கு கேது  வீடு ஐந்தாம் வீட்டில் பெயர்ச்சியாக போகிறார். எனவே கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்கு  சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் அன்பு மூலம் ஆன்மீக விழிப்புணர்வை இந்த கேது பெயர்ச்சியால் நடைபெறும் .
தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் மிகவும் உண்மையான மற்றும் நிறைவான முடிவுகளை எடுக்கும் திறனை கேது தருவார்.
என்றாலும் குழந்தைகளின் விஷயத்தில்  எச்சிரிக்கை உணர்வு வேண்டும்.
கேது 5 ஆம் வீட்டில் இருப்பதால் ஆரோக்கியற்ற உணவுகளை உண்ண துண்டும். இதனால் ஆரோக்கியம் பாதிக்கலாம். கவனம் அவசியம்.
கேது பற்றின்மை கொண்ட கிரகம் என்பதால், அனைவருக்கும் சேவை செய்யும் மனபான்மையை  வளர்த்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும்.
.