ஆயில்யம்

நட்சத்திரம் - ஆயில்யம்


ஆயில்யம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 9 வது பிரிவு ஆகும். ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசியில் வருகிறது.

இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி ஆயிலிய நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ஆயில்யம் நட்சத்திரக் கூட்டத்தின் (δ, ε, η, ρ, and σ Hydrae) பெயரைத் தழுவியது. ஆயில்யத்தின் சமஸ்கிரத பெயரான ஆஷ்லெஷா (Ashlesha) என்பது "ஒன்றுடன் ஒன்று பிணைதல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு ஒன்றோடோன்று பிணைந்த பாம்புகளின் வடிவம் ஆகும். இது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் காணும் குண்டலினி சக்தியை குறிப்பதாகக் கருதப்படுகிறது. பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்த வடிவமும் ஆறு நட்சத்திரங்களையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று சில பண்டைய நூல்களில் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையா என்ற பல கேள்விகள் இன்றும் உள்ளது. இது தவறான கருத்தே ஆகும்


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

 நுரையீரல், வயிறு கல்லீரல்

பார்வை

கீழ்நோக்கு

பாகை

 106.40 - 120.00

தமிழ் மாதம்

ஆடி

நிறம்

சிவப்பு.

இருப்பிடம்

குப்பை, பொட்டல் காடு

கணம்

தாருணம்/தீக்ஷணம், ராக்ஷச கணம்

குணம்

தாமசம், தீட்சண்யம்.

மிருகம்

ஆண் பூனை

பறவை

கிச்சிலி

மரம்

பாலுள்ள புன்னை மரம்.

மலர்

நீலக் குவளை

தமிழ் அர்த்தம்

வளம் பெருக்குவது

தமிழ் பெயர்

கட்செவி

நாடி

சமான நாடி அதாவது சிலேத்தும நாடி (கபம்), வாம பார்சுவ நாடி

ஆகுதி

தயிர், எள்.

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

கொழுக்கட்டை

தேவதை

விஷ்ணு

அதி தேவதை

மகாவிஷ்ணு, நாக தேவதைகள் (ஆதிசேஷன்)

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

பெண் நட்சத்திரம்

உருவம்

பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்து திகழும் வடிவத்துடன் கூடிய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமைப்பு.

மற்ற வடிவங்கள்

சர்ப்பம்,அம்மி

மற்ற பெயர்கள்

பணி, பாம்பு, கட்செவி, புயங்கம், கெளவை

வழிபடவேண்டிய தலம்

திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் 

அதிஷ்ட எண்கள்

1, 5, 6.

வணங்க வேண்டிய சித்தர்

ஜடுகர்ணா,  அகத்தியர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

டி, டு, டே, டோ.

அதிஷ்ட நிறங்கள்

வெளிர் சிவப்பு, கரும் பச்சை

அதிஷ்ட திசை

வடக்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், புதன்

அணியவேண்டிய நவரத்தினம்

மரகதப் பச்சை

அதிஷ்ட உலோகம்

பித்தளை

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

 தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்

குலம்

நீச்ச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

பூசம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்கு உரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வாழ்வில் எந்த ஒரு விஷயத்திலும் சுலபத்தில் அஞ்சாமல், மன உறுதியுடன் எதிர்த்து போராடி வெற்றி பெறுவார்கள். மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இந்த நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள்.

சமூகத்தில் முக்கிய பிரமுகராக இருப்பார்கள். புகழ் பெற்ற பல பெரிய மனிதர்களின் நட்பை பெற்றிருப்பார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் சகல யோகங்களும் உண்டாகும்


குடும்ப வாழ்க்கை

பெரும்பாலான பூசம் நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் காதல் போன்ற விஷயங்களில் ஈடுபட்டு அதில் தோல்வி அடைகிறார்கள். எனினும் தங்களுக்கு வருகின்ற வாழ்க்கைத்துணையிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். சற்று சபல புத்தி இருந்தாலும் ஒழுக்கக் கேடான செயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை அதிகம் விரும்புவார்கள். தங்களுக்கு உற்றார், உறவினர்கள் செய்த உதவிகளை ஒருபோதும் மறவாமல், தக்க சமயத்தில் அவர்களுக்கு பதில் உதவி செய்வார்கள். எப்படிப்பட்ட உணவு என்றாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதில் இன்பம் காண்பார்கள். வாழ்வில் வசதியான வீடு, வாகனம் ஆகியவை அமையப் பெறுவார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர். உறவினர்களும் நண்பர்களும் வந்துவிட்டால், நண்பர்களுக்கே முக்கியத்துவம் தருவார்கள். உற்றார், உறவினர் சூழ பெரிய குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும். ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நட்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும். ஒரு சிலர் தங்களின் உழைப்பால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள். சமூகத்தில் உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால் மிகுதியான ஆதாயமடைவார்கள். திரைப்படத்துறை, இரும்பு சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, கப்பல் துறை பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் துறைகளில் ஈடுபட்டு அதிகம் வருமானம் பெறுவார்கள்.


தசா பலன்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சனி தசை:
சனி தசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நல்லது அடைய முடியும்.
புதன் தசை:
இரண்டாவதாக வரும் புதன் தசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை பெற முடியும்.
கேது தசை:
மூன்றாவதாக வரும் கேது தசை காலங்களில் அதாவது 7 வருடங்கள் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிரன் தசை:
அடுத்ததாக வரும் நான்காவது தசை சுக்கிர தசை ஆகும் இது 20 வருடங்கள் நடைபெறும். இந்த காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.
சூரியன் தசை:
ஐந்தாவதாக வரும் சூரிய தசை ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஓர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
அடுத்து வரும் சந்திர தசையும் ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும்.


பொது பரிகாரம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்

பூசம்

நட்சத்திரம் - பூசம்




பூசம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் ஆகும். இது மேற்கத்திய வானியலின் கடகம் நட்சத்திர கூட்டத்தில் அமைந்துள்ள γ, δ மற்றும் θ கான்சரி நட்சத்திரங்களுக்கு ஒப்பானதாகும்.

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். இது பூசம் நட்சத்திரம் பெருமையை விளக்குகிறது.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு 

பார்வை

மேல்நோக்கு

பாகை

93.2 & 120.00

தமிழ் மாதம்

ஆடி

நிறம்

பொன்னிறம்

இருப்பிடம்

மனை, கிராமம்

கணம்

க்ஷிப்ரம்/லகு, தேவ கணம்

குணம்

தேவ கணம்

மிருகம்

ஆண் ஆடு

பறவை

 நீர்க் காக்கை

மரம்

பாலுள்ள அரச மரம்

மலர்

பன்னீர் மலர்

தமிழ் அர்த்தம்

திரும்ப கிடைத்த ஒளி

தமிழ் பெயர்

காற்குளம்

நாடி

 பித்தம் (மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி)

ஆகுதி

பாயசம்

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

பாயசம்

தேவதை

சிவன், குரு

அதி தேவதை

எமதர்மராஜா, சுப்பிரமணியன்

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

ஆண் நட்சத்திரம்

உருவம்

மாலை போன்ற தோற்றமுடைய எட்டு நட்சத்திரங்களின் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

 புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி

மற்ற பெயர்கள்

காற்குளம், தை, கொடி,குருநாள், மதி

வழிபடவேண்டிய தலம்

திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் 

அதிஷ்ட எண்கள்

5, 6, 8

வணங்க வேண்டிய சித்தர்

பரத்வாஜா, கமல முனி சித்தர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஹீ, ஹே, ஹோ, ட

அதிஷ்ட நிறங்கள்

ஆரஞ்சு, இளஞ்சிவப்பு

அதிஷ்ட திசை

தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

முத்துகள் சூழ்ந்த பவழம்

அதிஷ்ட உலோகம்

 தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

அத்ரி மகரிஷி, பரதன், சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், விஜயநகர சாம்ராஜ்ஜியத்தைத் தோற்றுவிக்கக் காரணமான சுவாமி வித்யாரண்யர், சுவாமி சின்மயானந்தர்

குலம்

சூத்திர குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

புனர்பூசம் - 2

நட்சத்திரம் -புனர்பூசம்

நட்சத்திரம் -புனர்பூசம்


பொதுவான குணங்கள்

புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும், பொய் பேசாத குணமும், நல்ல வாக்கு வன்மையும் இருக்கும். உண்மை பேசுவதால் தங்களுக்கு லாபம் இல்லை என்றாலும் உண்மையை பேசுவார்கள்.நன்றி மறக்காதவர்கள். பிறருக்கு நன்மை செய்யும் குணம் இருக்கும். அழகான அங்க லட்சணங்கள் அமைந்திருக்கும். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள். எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். சாந்தமான சாத்விக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். யாருக்காகவும் உங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். சுய கௌரவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு என்றாலும் பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலை தியாகம் செய்வார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகச் சிறப்பான திருமண வாழ்க்கை அமையும். பெண் குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாக இருப்பார்கள். பெண் தெய்வங்களை அதிகம் விரும்பி வழிபடுபவர்கள். சிக்கனமானவர் என்றாலும் வாழ்க்கை துணை, பிள்ளைகளின் தேவையறிந்து, உணர்வுகளை புரிந்து கொண்டு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். குடும்பத் தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள். 37 வயதில் இருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.்

நண்பர்கள்

நண்பர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள் அதாவது காலச்சக்கரத்தில் நல்ல நெருங்கிய நண்பராக இருப்பவர், ஏதாவதொரு காரணத்தினால் இவரை விட்டுப் பிரிந்து செல்வார். அது வேலை காரணமாக அல்லது தொழில் நிமித்தமாக, திருமணம் போன்ற காரணங்களாக இருக்கும். ஆனால் நட்பு முறியாது. மீண்டும் புதிய, ஆழமான நட்பு ஏற்படும்.

நட்பு நட்சத்திரங்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம். ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

நண்பர்களாக சேரக்கூடாத, வாழ்க்கைத் துணையாக சேர்க்க கூடாத நட்சத்திரங்கள் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகும்

தொழில்

ஏட்டறிவு, எழுத்தறிவு இவற்றைக் காட்டிலும் அனுபவ அறிவு இவர்களிடம் அதிகமாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களை விட, தனியார் துறையில் பணியாற்றுபவார்கள். யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள். கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட், பைனான்ஸ் போன்ற துறைகளிலும், வங்கி, வர்த்தக துறை, நீதித்துறை மதம் சார்ந்த கல்வித்துறை போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கதை கவிதை எழுதுவதிலும் கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால் இதனால் சம்பாதிக்கும் யோகம் உண்டு மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள். உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

தசா பலன்கள்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை முதல் திசையாக வரும்.குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் குரு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு தசை:
குரு பலம் பெற்று அமைந்து பிறந்தவர்கள் குரு தசையில் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியவர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.
சனி தசை:
இரண்டாவதாக வரும் தசை சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் இந்த தசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம், பூமி மனை வாங்கும் யோகம், செய்யும் தொழிலில் உயர்வு சமுதாயத்தில் பெயர் புகழ் மேன்மை அடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.
புதன் தசை:
மூன்றாவதாக வரும் புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும். புதன் ராசி அதிபதி ஆவார்.
கேது தசை:
அடுத்து வரும் நான்காவது தசை கேது தசை ஆகும், இது 7 வருடங்கள் நடைபெறும். கேது தசை நல்லது செய்யாவிட்டாலும் இந்த தசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும். ஆனால் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.
சுக்கிரன் தசை:
ஐந்தாவதாக வரும் சுக்கிர தசை 20 வருட காலங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.

பொது பரிகாரம்

புனர்பூசம் நட்சத்திரத்தின் ஸ்தல விருட்சம் மூங்கிலாகும். இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

விவாகம், சீமந்தம், பூ முடித்தல், புதிய ஆபரணம் வாங்குதல், பெயர் சூட்டுதல், பந்த கால் நடுதல் கிரகப்பிரவேசம், வியாபாரம் தொடங்குதல், மாடு வாங்குதல், அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல், வேத சாஸ்திரங்களை கற்றல் போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திராடம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்



4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

புனர்பூசம் 1ம்பாதம்:
நட்சத்திர அதிபதி குரு
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்

புனர்பூசம் நட்சத்திரத்தின் முதலாவது பாதத்தை அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவான் ஆள்கிறார். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் தாய் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். விருப்பத்தை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவார்கள். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களுடன் கூடியிருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், சொற்பொழிவுகளிலும் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள். சகோதர சகோதரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்வார்கள். இவர்களுக்கு தந்தை வழி உறவினர்களிடம் மதிப்பும் அவர்களால் தக்க சமயங்களில் உதவிகளும் கிடைக்கும். எப்பொழுதும் உண்மைக்காக பாடுபடுபவர்களாக இருப்பார்கள். பருத்த உடலுடன், ஆசைகள் அதிகம் கொண்டவராகவும், காது சற்று மந்தமாகவும், சற்று சுறுசுறுப்பு குறைந்து மனதை விட்டு வெளிப்படையாக பேசாமலும் இருப்பார்கள்

புனர்பூசம் 2ம் பாதம்:
நட்சத்திர அதிபதி குரு
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன் வருகிறார். எனவே சோம்பேறியாகவும், ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் தெய்வ பக்தி குறைந்தும், ஆடம்பர குணத்தோடு இருப்பார்கள். எதிரிகளிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்கள். சொகுசு வாகனங்கள் வாங்குவதையும், அதில் பயணிப்பதையும் மிகவும் விரும்புவார்கள். பூர்வீக சொத்துக்களை காப்பாற்ற நீதிமன்றங்கள் செல்லவும் தயங்க மாட்டார்கள். தங்களின் பெற்றோர் வாழ்க்கை துணைமற்றும் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்கள். வாழ்க்கை துணையால் அதிஷ்டகரமான திருப்புமுனைகள் ஏற்படும். அடிக்கடி ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியவராக காணப்படுவார்கள்

புனர்பூசம் 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி குரு
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

புனர்பூச நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தை ஆளும் கிரகம் புதன் பகவான் ஆவார். இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான தோற்றம் கொண்டிருந்தாலும் செயல்படுவதில் சூரர்களாக இருப்பார்கள். சிறந்த அறிவாற்றல் இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு உயரிய விஷயத்திற்கான தேடலில் இருப்பார்கள். ஊர் சுற்றும் குணத்துடனும், நீண்ட ஆயுளுடனும், பிறரை நன்றாக புரிந்து கொள்ளும் குணத்துடனும் இருப்பார்கள். சுயநலத்துடன் செயல்படுபவர்களை இவர்களுக்கு அறவே பிடிக்காது.

புனர்பூசம் 4ம் பாதம்:
நட்சத்திர அதிபதி குரு
ராசி அதிபதி சந்திரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்

புனர்பூசம் நட்சத்திரத்தின் நான்காவது பாதம் கடக ராசியில் வருவதால் இந்த ராசியின் அதிபதி சந்திரன் ஆவார். மேலும் நவாம்ச அதிபதியும் மனசுக்காரன் ஆகிய சந்திரனே ஆவார். அழகான உடல் அமைப்புடன், சற்று உயரம் குறைந்து இருப்பார்கள். தான, தர்ம காரியங்களில் அதிக விருப்பம் இருக்கும்.பிறகுக்கு நன்மை செய்யும் குணம் மற்றும் நன்றி மறவாத குணமும் பெற்று இருப்பார்கள். தெய்வீக வழிபாட்டில் அதிக ஆர்வமும், பல புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி சென்று வழிபடும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளை போன்ற உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பதை விரும்புவார்கள்.

முதல் பக்கத்தை அறிய அமுக்கவும்