நட்சத்திரம் - ஆயில்யம்
ஆயில்யம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 9 வது பிரிவு ஆகும். ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசியில் வருகிறது.
இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களை தழுவி இடப்பட்டவை. இதன்படி ஆயிலிய நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் ஆயில்யம் நட்சத்திரக் கூட்டத்தின் (δ, ε, η, ρ, and σ Hydrae) பெயரைத் தழுவியது. ஆயில்யத்தின் சமஸ்கிரத பெயரான ஆஷ்லெஷா (Ashlesha) என்பது "ஒன்றுடன் ஒன்று பிணைதல்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு ஒன்றோடோன்று பிணைந்த பாம்புகளின் வடிவம் ஆகும். இது முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் காணும் குண்டலினி சக்தியை குறிப்பதாகக் கருதப்படுகிறது. பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்த வடிவமும் ஆறு நட்சத்திரங்களையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.
ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது என்று சில பண்டைய நூல்களில் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையா என்ற
பல கேள்விகள் இன்றும் உள்ளது. இது தவறான கருத்தே ஆகும்
நட்சத்திர காரத்துவம்
ஆளும் உறுப்புகள் |
நுரையீரல், வயிறு கல்லீரல் |
பார்வை |
கீழ்நோக்கு |
பாகை |
106.40 - 120.00 |
தமிழ் மாதம் |
ஆடி |
நிறம் |
சிவப்பு. |
இருப்பிடம் |
குப்பை, பொட்டல் காடு |
கணம் |
தாருணம்/தீக்ஷணம், ராக்ஷச கணம் |
குணம் |
தாமசம், தீட்சண்யம். |
மிருகம் |
ஆண் பூனை |
பறவை |
கிச்சிலி |
மரம் |
பாலுள்ள புன்னை மரம். |
மலர் |
நீலக் குவளை |
தமிழ் அர்த்தம் |
வளம் பெருக்குவது |
தமிழ் பெயர் |
கட்செவி |
நாடி |
சமான நாடி அதாவது சிலேத்தும நாடி (கபம்), வாம பார்சுவ நாடி |
ஆகுதி |
தயிர், எள். |
பஞ்சபூதம் |
நீர் |
நைவேத்யம் |
கொழுக்கட்டை |
தேவதை |
விஷ்ணு |
அதி தேவதை |
மகாவிஷ்ணு, நாக தேவதைகள் (ஆதிசேஷன்) |
அதிபதி |
புதன் |
நட்சத்திரம் தன்மைகள் |
பெண் நட்சத்திரம் |
உருவம் |
பாம்பைப் போன்ற வளைந்து நெளிந்து திகழும் வடிவத்துடன் கூடிய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமைப்பு. |
மற்ற வடிவங்கள் |
சர்ப்பம்,அம்மி |
மற்ற பெயர்கள் |
பணி, பாம்பு, கட்செவி, புயங்கம், கெளவை |
வழிபடவேண்டிய தலம் |
திருவெண்காடு, நாகர்கோவில் நாகராஜர் |
அதிஷ்ட எண்கள் |
1, 5, 6. |
வணங்க வேண்டிய சித்தர் |
ஜடுகர்ணா, அகத்தியர் |
பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் |
டி, டு, டே, டோ. |
அதிஷ்ட நிறங்கள் |
வெளிர் சிவப்பு, கரும் பச்சை |
அதிஷ்ட திசை |
வடக்கு |
அதிஷ்ட கிழமைகள் |
திங்கள், புதன் |
அணியவேண்டிய நவரத்தினம் |
மரகதப் பச்சை |
அதிஷ்ட உலோகம் |
பித்தளை |
வெற்றி தரும் நட்சத்திரங்கள் |
அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி. |
நட்சத்திரங்களில் தோன்றியவர்கள் |
தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன் |
குலம் |
நீச்ச குலம் |
புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள் |
தர்மம் |