
சனி பெயர்ச்சி- 2025
இந்த வருடம் சனி பெயர்ச்சி எப்பொது என்ற மிக பெரிய கேள்விக்கு பதில் March 29, 2025 அன்று நடைப்பெறுகிறது. என்றாலும் சில குழப்பம் உண்டு. சில ஜோதிடர்கள் March 29, 2025 சனி பெயர்ச்சி இல்லை மேலும் அது 2026 வருடம் தான் வருகிறது என்றும் சொல்கிறார்கள். இந்த பிரச்னைக்கு காரணம் திரு கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகை பஞ்சாங்கம் ஆகும்
- பொதுவாக சனி பெயர்ச்சி பொறுத்தவரை எந்த தேதியில் பெயர்ச்சியாகிறது என்பது பற்றிய சில குழப்பங்கள் ஏற்படும். இதற்குக் காரணம் திரு கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் என்ற இரண்டு வகை பஞ்சாங்கம் ஆகும். தற்போது அதாவது 2025ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் இந்த இரு பஞ்சாங்கத்தால் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
- தொழில் நுட்பத்தை பயன்படுத்தி , திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் தான் திருக்கணித பஞ்சாங்கம் ஆகும். அந்த அடிப்படையில் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025 சனிப்பெயர்ச்சி மார்ச் 29ம் தேதி அன்று நடைபெறுகிறது. அதன்படி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகிறார்.
- வாக்கிய பஞ்சாங்கம் என்பது நமது முன்னோர்கள் கணித்து அளித்த காலக்கணக்கின் வாக்கை அடிப்படையாக கொண்டது. இது முக்கியமாக கோவில்களில் பயன்படுத்த படுகிறது. கோவில்களில் பின்பற்றப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், சனிப்பெயர்ச்சி 2026ம் ஆண்டு தான் நடை பெறும்.
பொது கண்ணோட்டம்
கோவில்களில் சனி பெயர்ச்சியின் பூஜைகளும் பரிகாரங்களும் வாக்கிய பஞ்சாங்கம் படி நடைபெற்றால் கூட, திருக்கணித பஞ்சாங்கப்படி, பலன்கள் ஜோதிட பரிகாரங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குழப்பத்தை விடுத்து மார்ச் 29ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சி பற்றி பாப்போம். அதாவது மார்ச் 29, 2025 அன்று மதியம் 22:07 மணிக்கு மீன ராசியில் சனி பிரவேசிக்கிறார். இத்துடன் மகர ராசிக்காரர்களின் ஏழரை சனி முடிந்து மேஷ ராசிக்காரர்களின் ஏழரை சனி தொடங்கும்.
ஆன்மீகம் மற்றும் மோட்சத்துடன் தொடர்புடைய வீடு என்று சொல்லப்படும் மீன ராசி சனி பெயர்ச்சி ஆவதால் பலரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது. மேலும் கர்ம கிரகமாக, சனியின் தாக்கம் பலரை ஆன்மீக நடைமுறைகளுக்கு இட்டுச் செல்லும், மேலும் சிலர் சைவ வாழ்க்கை முறைக்கு மாறவும் செய்யவார்கள். மார்ச் 29, 2025 முதல் ராகு மற்றும் சனியின் சேர்க்கையின் காரணமாக ஜோதிடம், ஆன்மீகம், யோகா, தியானம் மற்றும் பிற முழுமையான நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இருக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தைகள் நிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனியின் நிலை மற்றும் 12 ராசிகள்
- மேஷ ராசி - விரைய சனி
- ரிஷப ராசி- லாப சனி
- மிதுன ராசி - கர்ம சனி
- கடக ராசி - பாக்கிய சனி
- சிம்ம ராசி - அஷ்டம சனி
- கன்னி ராசி கண்டக சனி
- துலாம் ராசி - ரோக சனி
- விருச்சிக ராசி -பஞ்சம சனி
- தனுசு ராசி - அர்த்தாஷ்டம சனி
- மகர ராசி - சகாய சனி
- கும்ப ராசி - பாத சனி
- மீன ராசி - ஜென்ம சனி
சரி இந்த சனி பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்று பாப்போம்
மேஷம்,, ரிஷபம்,, மிதுனம் ,, கடகம்,, சிம்மம்,, கன்னி,, துலாம்,, விருச்சிகம்,, தனுசு,, மகரம்,, கும்பம்,, மீனம்