அஷ்டலட்சுமி - மஹா லக்ஷ்மி

அஷ்டம் + லக்ஷ்மி = அஷ்டலக்ஷ்மி

வடமொழிச் சொல் 'அஷ்டம்' எனில் எட்டு எனப் பொருள். மகாவிஷ்ணுவின் பத்தினி மகாலட்சுமி செல்வங்களை வாரி வழங்கும் தெய்வம்...அத்தகைய செல்வங்கள் எட்டு ஆகும்...ஒவ்வொரு செல்வத்திற்கும் உரியவராய் தனித்தனியாக எட்டுத் தோற்றங்களில் அருள் பாலிக்கும் மகாலட்சுமியே அஷ்டலட்சுமி எனக் கொண்டாடப்படுகிறார்.

இந்தியாவில் சென்னை பசந்த் நகரிலும் மற்றும் மும்பாய் நகரிலும் உள்ள அஷ்டலட்சுமிக் கோயில்கள் மிகப் புகழ் வாய்ந்தவை. இக்கோவில்களில் எட்டு சன்னதிகளில் எட்டு லட்சுமிகள் எழுந்தருளியுள்ளனர்.

அஷ்டலட்சுமி அல்லது எண்திரு என்பது திருமகளின் எட்டு வெவ்வேறு தோற்றங்களைக் குறிப்பிடும் பதம் ஆகும்


செல்வத்தை மட்டுமல்ல அனைத்து வகை தன தான்ய ஐஸ்வர்ய சம்பத்துக்களை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவரின் அஷ்ட வடிவங்கள் ஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கயலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி,விஜயலட்சுமி, வித்யாலட்சுமி.

எட்டு லட்சுமிகளின் பெயர்களும் அவர்கள் அருளும் பேறுகளும்


    ஆதிலட்சுமி...நோய்நொடி அற்ற உடல்நலம்பெறுதல்

   தான்யலட்சுமி...உணவுத் தானியங்கள் தாராளமாகக் கிடைத்து பசிப்பிணி நீங்கல்

    தைரியலட்சுமி...வாழ்வில் ஏற்படும் எத்தகைய இடர்ப்பாடுகளையும் எதிர்கொண்டு சமாளிக்க தைரியம் பெறுதல்.

   கஜலட்சுமி...வாழ்வில் அனைத்து நற்பாக்கியங்களையும் பெறுதல்.

   சந்தானலட்சுமி... குழந்தைப்பேறு சித்தித்தல்.

   விஜயலட்சுமி...கைக்கொண்ட நற்காரியங்களில் வெற்றி ஈட்டல்.

   வித்யாலட்சுமி... கல்வியும் ஞானமும் பெறுதல்.

   தனலட்சுமி... செல்வம் பெருகிச் சேர்தல்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்