கேட்டை

நட்சத்திரம் - கேட்டை


Astrology

கேட்டை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 18 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி கேட்டை நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக விண்மீன் கூட்டத்தில் காணப்படும் மூன்று நட்சத்திரங்களை கொண்ட கேட்டை நட்சத்திரத்தின் (α, σ, τ இசுக்கோர்ப்பியோனிசு) பெயரைத் தழுவியது. கேட்டையின் சம்ஸ்கிருதப் பெயரான ஜியேஷ்ட்டா (Jyeshta) என்பது "மூத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "காதணி"யும் "குடை"யும் ஆகும்.

கேட்டைய வெண்கொற்றக் குடை போல் திகழும் மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு தான். விருச்சிக ராசியை சேர்ந்து ஆகும்.


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறு குடல், குதம், பிறப்பு உறுப்புகள், கருப்பை

பார்வை

சமநோக்கு

பாகை

226.40 - 240.00

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

வெட்டவெளி

கணம்

ராட்ஷ கணம்

குணம்

உக்கிரம்

மிருகம்

கலைமான்

பறவை

சக்கரவாகம்

மரம்

பாலுள்ள பராய் மரம்

மலர்

புடலை பூ

தமிழ் அர்த்தம்

மூத்தது

தமிழ் பெயர்

துளங்கொளி

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

 உபயம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி

ஆகுதி

சேனைக் கிழங்கு

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

சித்ரான்னம்

தேவதை

தேவேந்திரன்

அதி தேவதை

ஸ்ரீவராகர்

அதிபதி

புதன்

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

குண்டல வடிவத்திலிருக்கும்     மூன்று நட்சத்திரங்களின் தொகுப்பு

மற்ற வடிவங்கள்

குடை,குண்டலம்,ஈட்டி

மற்ற பெயர்கள்

அளிகீடம், அதம், வல்லாரை, ஒளி,நாழி

வழிபடவேண்டிய தலம்

வரதராஜப்பெருமாள், தஞ்சாவூர்

அதிஷ்ட எண்கள்

1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

கௌசிகா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள்

நோ, யா, யீ, யூ

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ஆரஞ்சு

அதிஷ்ட திசை

வடக்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, ஞாயிறு

அணிய வேண்டிய நவரத்தினம்

ஜேட்

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

தொண்டரடிப்பொடி ஆழ்வார், கலிய நாயனார், கோட்புலி நாயனார்

குலம்

 வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

ஆர்த்தம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

அனுஷம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

அனுஷ நட்சத்திர அதிபதி சனி பகவான் என்பதால் எப்பொழுதும் மாறுபட்ட மனநிலை கொண்டிருப்பார்கள். எறும்புக்கும் தீமை நினைக்க மாட்டார்கள் என்றாலும் கொண்ட கொள்கைக்காக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டார்கள். பலருக்கு சுமை தாங்கியாக விளங்கினாலும், தங்களுடைய மனக்குறைகளை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். யார் தவறு செய்தாலும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என தயங்காமல் எடுத்துரைப்பார்கள்.

பெற்றோரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்கள். கடைசிவரை அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். தெய்வபக்தி மிகுந்தவர்களாக காணப்படுவார்கள். சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பார்கள். அப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று தங்கள் குடும்பத்தினரையும் வலியுறுத்துவார்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு. ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.

சட்டென கடின வார்த்தைகளை பேசினாலும் உடனே அதை சரி செய்து விடுவார்கள். எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பசியை பொறுக்க மாட்டார்கள். இரவு பகல் பாராது உழைப்பார்கள். ஜாதி, மதம், இனம் இவற்றையெல்லாம் கடந்து அனைவரிடத்திலும் அன்பாக பழகுவார்கள் கவர்ச்சியான தோற்றத்தால் அனைவரையும் கவர்ந்து இழுப்பார்கள்.. பேச்சில் வித்தகர்கள். தெளிவாக பேசுவார்கள். தாம்பூல பிரியர்கள்.


குடும்ப வாழ்க்கை

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். வாழ்க்கை துணைக்கு மரியாதை கொடுப்பார்கள். பெற்றோரை பேணி காப்பார்கள். உடன் பிறந்தவர்களுக்கு எதையும் விட்டுக் கொடுப்பார்கள். பெரியவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு சம உரிமை கொடுப்பார்கள்

ஆண்களாக இருந்தால் பெண்களாலும், பெண்களாக இருந்தால் ஆண்களாலும் விருப்பப்படுவார்கள். இவர்களின் குணநலன்களில் தொடர்ந்து முரண்பாடுகளும், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இவர்களுக்கு காதலில் நம்பிக்கை அதிகம் இருக்கும் அதற்காக எதையும் தியாகம் செய்வார்கள். காதலில் இவர்களுக்குள் எப்பொழுதும் மறைமுக ஆர்வம் அதிகம் இருக்கும்


நண்பர்கள்

இந்த நட்சத்திரக்காரர்கள் நிரந்தர நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமையாது. பல நேரங்களில் தான் நினைப்பது போல் நடப்பதால் அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைப்பது இல்லை.


நட்பு நட்சத்திரங்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம் ஆகியவை நட்பு நட்சத்திரம் ஆகும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பரணி, பூசம், பூராடம், உத்திரட்டாதி, பூரம் நட்சத்திரக்காரர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கு இரவு பகல் பாராமல் உழைப்பார்கள். பலர் நாட்டிய பேரொளி களாகவும், சிறந்த பாடகர் மற்றும் வசன கர்த்தாவாகவும் இருப்பார்கள். வாய் பேச்சில் வித்தகர்கள். மருத்துவம், வங்கி, காவல்துறை, தீயணைப்பு துறை, உளவுத்துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். ஒரு சிலர் கட்டிடக்கலை, காண்ட்ராக்ட் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். அடுத்தவரிடம் வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள்.


தசா பலன்கள்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தசை முதல் திசையாக வரும். சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சனி தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.


சனி தசை:
சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் மேன்மை, பெற்றோருக்கு உயர்வு, அசையா சொத்து சேர்க்கை அமையும். பலமிழந்திருந்தால் குடும்பத்தில் சோதனையும் பெரியவர்களிடம் கருத்து வேறுபாடும் கல்வியில் மந்த நிலையும், சோம்பல் உண்டாகும்.
புதன் தசை:
இரண்டாவதாக வரும் புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமும், கல்வியல் மேன்மையும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.
கேது தசை:
மூன்றாவதாக வரும் கேது தசை காலங்களில் அவ்வளவு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. உடல் நிலையில் பாதிப்பு, திருமண வாழ்வில் பிரச்சனை வாழ்வில் முன்னேற்றம் இல்லதா நிலை உண்டாகும்.
சுக்கிரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சுக்கிரன் தசை. இந்த தசை நடக்கும் 20 வருட காலங்களில் நல்ல மேன்மைகளை அடைய முடியும். பொருளாதார உயர்வு அசையும் அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். பொன் பொருள் சேரும்.
சூரியன் தசை:
ஐந்தாவதாக வரும் சூரிய தசை 6 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் சற்று ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். தந்தைக்கு சோதனைகள் ஏற்படும்.


பொது பரிகாரம்

இந்த நட்சத்திர காரர்களின் ஸ்தல மகிழம்பூ மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

அனுஷ நட்சத்திர நாளில் மஞ்சள் நீராட்டுதல், திருமணம், சீமந்தம் வாஸ்து படி வீடு கட்ட தொடங்குதல், புது ஆடை ஆபரணம் அணிதல் உபநயனம் செய்தல், கல்வி கற்க தொடங்குதல், புது மனை புகுதல், தானியம் சேர்த்தல், விதை விதைத்தல், கதி வறுத்தல், தெய்வ பிரதிஷ்டை செய்தல் வாசற் கால் வைத்தல் போன்றவற்றை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம், கேட்டை, சதயம், ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம்,சுவாதி ஆகும்

பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், பூராடம்,உத்திரட்டாதி, பூரம் ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. பரணி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு பிரசோதயாத்

அனுஷம்

நட்சத்திரம் - அனுஷம்


அனுஷம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 17 வது பிரிவு ஆகும். இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் நட்சத்திர பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்கள் தழுவி இடப்பட்டவை. இதன்படி அனுஷ நட்சத்திர பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் விருச்சிக (விண்மீன்) நட்சத்திர கூட்டத்தில் காணப்படும் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட அனுச நட்சத்திரத்தின் (β, δ, π இசுக்கோர்ப்பீ) பெயரைத் தழுவியது. அனுசத்தின் சமஸ்கிருத பெயரான அனுராத (Anuraadha) என்பது "தெய்வீக ஒளியின் சீடர்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "தாமரை" ஆகும். மேலும் அனுஷ நட்சத்திரத்திற்கு ம்ருதுதாரா என்ற பெயரும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம் என்று கூறுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்கு சொந்த மானதாகும்


நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

சிறுநீர்ப் பை, பிறப்பு உறுப்பு, குதம், இடுப்புப் பகுதி எலும்புகள்.

பார்வை

சமநோக்கு

பாகை

213.20 - 226.40

தமிழ் மாதம்

ஐப்பசி

நிறம்

வெண்மை

இருப்பிடம்

பட்டினம்

கணம்

தேவ கணம்

குணம்

சுபம்

மிருகம்

பெண் மான்

பறவை

வானம்பாடி

மரம்

பாலில்லாத மகிழ மரம்

மலர்

செந்தாமரை

தமிழ் அர்த்தம்

வெற்றி

தமிழ் பெயர்

பனை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

மத்திம நாடி

பஞ்சபூதம்

வாயு

நைவேத்யம்

நெய்ப் பாயசம்

தேவதை

துவாதச ஆதித்தர்களில் ஒருவரும் சூரியனின் அம்சமுமான மித்ரன். 

அதி தேவதை

ஸ்ரீலட்சுமிநாராயணன்

அதிபதி

சனி

நட்சத்திரம் தன்மைகள்

அபசவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

கவிழ்ந்த தாமரை மலரைப் போன்ற   வடிவமுடைய மூன்று நட்சத்திரத் தொகுப்பு.

மற்ற வடிவங்கள்

குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்

மற்ற பெயர்கள்

புல், பனை, நீலம், தாழி, போந்தை,பெண்ணை, தேன்

வழிபடவேண்டிய தலம்

மகாலட்சுமீஸ்வரர், திருநின்றியூர்

அதிஷ்ட எண்கள்

1, 6, 9.

வணங்க வேண்டிய சித்தர்

மைத்ரேயா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ந, நி, நு, நே

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், ரோஸ்

அதிஷ்ட திசை

தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

வியாழன், சனி

அணியவேண்டிய நவரத்தினம்

ஸ்பினல் (Spinel)

அதிஷ்ட உலோகம்

பிளாட்டினம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பூசலார் நாயனார், ஸ்ரீமந் நாதமுனிகள், நந்தனார், காஞ்சி மகாபெரியவர், தாதாபாய் நௌரோஜி, நீல்ஆர்ம்ஸ்ட்ராங், லியோ டால்ஸ்டாய், ஜார்ஜ் பெர்னாட்ஷா, ரொனால்ட் ரீகன்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

 தர்மம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

விசாகம் தொடர்ச்சி


பொதுவான குணங்கள்

விசாகம் நட்சத்திர அதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பார்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குண சாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துரைப்பார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும்.

எந்தப் பாகுபாடும் பார்க்காமல், எவர் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவருக்கு ஆதரவு தருவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மன அடக்கமும் புலனடக்கமும் கொண்டிருப்பார்கள். மற்றவர்களை கவரும் அழகிய தோற்றம் பெற்றிருப்பார்கள். கொண்ட கொள்கையில் இருந்து எவருக்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். வேத சாஸ்திரங்களில் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் சிலர் ஆன்மீக வாதிகளாகவும் பிரசித்தி பெற்று விளங்குவர். ஒரு விஷயத்தைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார்கள். பல துறைகளிலும் ஞானம் பெற்றிருந்தும் தன்னடக்கத்துடன் இருப்பர்கள். எப்போதும் சத்தியத்தையே பேசுவர்கள். சொல்ல வரும் விஷயத்தை மிகத் தெளிவாகவும் மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் படியும் பேசுவர்கள்


குடும்ப வாழ்க்கை

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை (ஆண்களாக இருந்தாலும்) திருமணம் செய்ய கூடிய நிலையும், ஏற்கனவே மணமானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். ஆனாலும் வாழ்க்கை துணையையும் குழந்தைகளையும் அதிகம் நேசிப்பார்கள். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டை போட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்சனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.


நண்பர்கள்

எப்போதும் உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் சேர்ந்திருக்க விரும்புவார்கள்.. அனைவரிடமும் நட்பு பாராட்டும் குணம் கொண்டவர் ஆதலால் உங்களுக்கு நண்பர்கள் அதிகம் இருப்பர். மற்றவர்களிடம் நேசத்துடனும்,மரியாதையுடனும் பழகுவர்கள். உங்கள் உதவி ஒருவருக்கு தேவைப்பட்டால் தயங்காமல் சென்று உதவுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

கிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், பூரட்டாதி ஆகியவை தவிர்க்க வேண்டிய நட்சத்திரம் ஆகும்.


தொழில்

விசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும். அடிக்கடி வேற்று மாநிலம், வேற்று நாடுகளுக்குச் சென்று வருவார்கள். வாழ்க்கையின் முற்பகுதியைவிட பிற்பகுதியில் பட்டம், பதவி, பணம் யாவும் இவர்களைத் தேடி வரும். ்கள்.


தசா பலன்கள்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குரு தசை முதல் திசையாக வரும். குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் குரு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

குரு தசை:
பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் தசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியவர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.
சனி தசை:
இரண்டாவதாக வரும் சனி தசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும். சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்ப்பட நேரிடும்.
புதன் தசை:
மூன்றாவதாக வரும் புதன் தசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
கேது தசை:
நான்காவது கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.
சுக்கிரன் தசை:
ஐந்தாவதாக வரும் சுக்கிரன் தசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்தசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.


பொது பரிகாரம்

விசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம் மரம் உள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

விசாகம் நட்சத்திரத்தில் கிணறு தோண்டுதல், கழிவுநீர் பாதைகள் அமைத்தல், சுரங்கப்பாதை அமைத்தல், எண்ணெய் தோண்டுதல், புவியியல் ஆய்வு நடத்துதல், அடித்தளம் அமைத்தல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.

நிலத்தடி நீர் சார்ந்த படிப்பு, மரங்கள் மற்றும் விவசாயத்துறை சார்ந்த வேலைகளைத் தொடங்கலாம்.

சுரங்கத் தொழில், எண்ணெய் தோண்டுதல், புவியியல் ஆய்வு போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

அரசியல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் போன்ற துறைகளிலும் ஈடுபடலாம்.

சந்திரன் நீசமடையும் நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தில் நெல் நாற்று நடுதல், விதை விதைத்தல் மற்றும் சந்திரன் தொடர்பான பயிர்களை நடுவது கூடாது என்று கூறப்படுகிறது.

கிணறுகளை சுத்தம் செய்வது அல்லது கிணறு வெட்டுவது போன்ற செயல்களைச் செய்வதும் நல்ல பலன்களைத் தராது என்று சொல்லப்படுகிறது.

சந்திரன் நீசமடையும் நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தில் நெல் நாற்று நடுதல், விதை விதைத்தல் மற்றும் சந்திரன் தொடர்பான பயிர்களை நடுவது கூடாது என்று கூறப்படுகிறது.

கிணறு தோண்டுவது நல்லது என்றாலும் கிணறுகளை சுத்தம் செய்வது போன்ற செயல்களைச் செய்வது நல்ல பலன்களைத் தராது என்றும் சொல்லப்படுகிறது. சில நூல்களில் கிணறு தோண்டுவது அல்லது வெட்டுவது நல்லது அல்ல என்றும் சொல்லப்பட்டு உள்ளது.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

கார்த்திகை, உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திராடம் வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே

மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி

தன்னோ விசாகா ப்ரசோதயாத்