உத்திரம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மை பேசும் குணமும், கல்வி கேள்விகளில் சிறந்தவராகவும், நல்ல அறிவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். திறமைசாலிகள். கல்வியறிவும், சமயோசித புத்தியும் கொண்டவர்கள். ஆசாபாசங்கள் அதிகமிருந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற தர்ம சிந்தனை இருக்கும். கோபம் இருந்தாலும், தன்னடக்கமும் இருக்கும். ‘தான் நினைத்ததுதான் சரி’ என்ற பிடிவாத குணமும் உண்டு.

இலக்கியங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று இருப்பார்கள். அடிக்கடி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள்.


குடும்ப வாழ்க்கை

மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கரை உடையவராக இருப்பார்கள். வாழ்க்கைத்துணையிடம் பணிந்து போவார்கள். இன்னும் சொல்லப்போனால் உத்திர நட்சத்திரக்காரர்கள் ஆண்களாக இருந்தால் மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக கூட இருப்பார்கள். இல்லையென்றால் மாமனார் குடும்பத்தை தன்னோடு வைத்துக் கொள்வார்கள்.

உத்திர நட்சத்திரக்காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறையும் பாசமும் கொண்டிருப்பார்கள். முன்கோபத்தால் சிறுசிறு வாக்கு வாதங்கள் எதிர்கொள்ள நேரிட்டாலும் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். இளமை காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டியிருந்தாலும், முப்பது வயதிலிருந்து செல்வம், செல்வாக்கு யாவும் சேரும். பூர்வீக சொத்துக்கள் அதிகமிருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியால் வீடு மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை சேர்ப்பார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். சிறு வயதிலேயே தாய் அல்லது தந்தையை இழக்க வேண்டியிருக்கும்.


நண்பர்கள்

உத்திர நட்சத்திரக்காரர்களின் வளர்ச்சி பலருக்கும் கண்ணை உறுத்தும். உறவினர்கள், நண்பர்கள் என எவரும் உங்கள் முகத்திற்கு நேராக சிரித்துப் பேசுவார்கள். முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவார்கள். இவர்கள் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்கள்


நட்பு நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்கள்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரங்களை உத்திர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டும்.


தொழில்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனோதிடமும் அறிவாற்றலும் அதிகம் இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்பவர்களாகவோ அல்லது பெரிய பெரிய நிறுவனங்களை அமைத்து அதில் பல ஆட்களை வைத்து வேலை வழங்குபவராக இருப்பார்கள். தொழிலாளி முதலாளி என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல மனம் உள்ளவர்கள் என்று பெயர் எடுப்பார்கள். யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவார்கள். வேத சாஸ்திரம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்றவற்றாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டாகும். எந்த ஒரு போட்டி பொறாமைகளையும் தவிடு பொடியாக்க கூடிய அளவிற்கு மனோதிடம் பெற்றவர்கள்.


தசா பலன்கள்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய தசை முதல் தசையாக வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சூரியன் தசை:
சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் குடும்பத்தில் சுபிட்சம், தந்தைக்கு முன்னேற்றம் கொடுக்கும். பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும்.
சந்திரன் தசை:
இரண்டாவதாக வரும் தசை சந்திர தசை ஆகும் இந்த காலங்களில் ஜல தொடர்புடைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு மேலும் கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உண்டாக்கும்.
செவ்வாய் தசை:
மூன்றாவதாக வரும் செவ்வாய் தசையிலும் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படாது என்றாலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற்றத்தை அடைந்து விட முடியும். செவ்வாய் பலம் பொருந்தி இருந்தால் முன்னேற்றம் நிச்சயம் உண்டு எனலாம்.
ராகு தசை:
அடுத்து வரும் நான்காவது தசை ராகு தசை ஆகும். இது மொத்தம் 18 வருட காலங்கள் நடைபெறும். ராகு இருக்கும் வீட்டின் அதிபதி நல்ல பலம் பெற்று இருந்தால் பலவகையில் யோகத்தை தரும்.
குரு தசை:
ஐந்தாவதாக வரும் குரு தசையும் நல்ல ஏற்றத்தை தரும்.
சனி தசை:
6வதுதாக வரும் சனி தசை காலங்களில் சனி பகவான் நல்லப்படி அமைந்து இருந்தால் உயர்வான அந்தஸ்தினை அள்ளிக் கொடுக்கும்.


பொது பரிகாரம்

உத்திர நட்சத்திர காரர்களின் ஸ்தல மரம் அலரி மரம் மற்றும் இலந்தை மரம் ஆகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

உத்திர நட்சத்திரத்தில், பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், சீமந்தம், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், விதை விதைத்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல் குளம் கிணறு வெட்டுதல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்

பொருந்தா நட்சத்திரங்கள்:

கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் மஹாதேவ்யை சவித்மஹே
விஷ்ணுபத்ன்யை ச தீமஹி
தன்னோ லஷ்மி பிரசோதயாத்

உத்திரம்

நட்சத்திரம் - உத்திரம்


உத்திரம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 12 வது பிரிவு ஆகும். உத்திர நட்சத்திரம் லியோ விண்மீன் கூட்டத்தின் வால் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட உத்திரத்தின் (டெனெபோலா (Denebola)) பெயரைத் தழுவியது. உத்தரத்தின் சமஸ்கிருத பெயரான உத்தர பால்குனி (Purva Phalguni) என்பது "பிந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடும் "கட்டிலின் நான்கு கால்கள்" தான் ஆகும். (பூரம் நட்சத்திரமும் இதே அடையாள குறியீடு ஆகும்.) மேலும் இது இரட்டை நட்சத்திரம். பூர நட்சத்திரம் போலவே இரு கண் விழிகள் போல் அமைந்தவை. நேர் கோட்டில் அமையாமல், சற்று ஏற்றத்தாழ்வுகளுடன் அமைந்தவை. இதன் முதல் பாதம் சிம்ம ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் கன்னி ராசியிலும் அமையும்.

நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

1-ம் பாதம் - முதுகெலும்புப் பகுதி; 2, 3, 4-ம் பாதங்கள் - குடல், சிறுநீர்ப்பை, கல்லீரல்

பார்வை

மேல்நோக்கு.

பாகை

146.40  &1600

தமிழ் மாதம்

1பாதம் ஆவணி, மற்ற 2,3,4 பாதங்கள் புரட்டாசி

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

சூன்யம்

கணம்

மனுஷ கணம்

குணம்

உறுதி, உக்கிரம்/குரூரம்,  ராஜசம்

மிருகம்

எருது

பறவை

கிளுவை

மரம்

பாலுள்ள அலரி

மலர்

தங்க அரளி

தமிழ் அர்த்தம்

சிறப்பானது

தமிழ் பெயர்

உத்திரம்

நாடி

தட்சிண பார்சுவ நாடி, வாதம்

ஆகுதி

எள், உளுந்து

பஞ்சபூதம்

ஆகாயம்

நைவேத்யம்

எள் சாதம்

தேவதை

சூரியனின் அம்சமும் புகை நிற மேனியை உடையவரும் சக்தி ஆயுதத்தை ஏந்தியவருமான அர்யமான்

அதி தேவதை

ஸ்ரீ மகா லஷ்மி

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

கட்டில் கால்களைப் போன்ற வடிவத்தில் இரண்டு பிரதான நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டம்.

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை

மற்ற பெயர்கள்

குளம், ஏரி, தடாகம், வாவி, பாற்குளம், கடை, சனி, பங்குனி

வழிபடவேண்டிய தலம்

அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வர், காஞ்சிபுரம்

அதிஷ்ட எண்கள்

1, 5, 6

வணங்க வேண்டிய சித்தர்

உபசிவா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

டே, டோ, ப, பி

அதிஷ்ட நிறங்கள்

மெரூன், வெளிர் பச்சை

அதிஷ்ட திசை

வடகிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

புதன், ஞாயிறு.

அணியவேண்டிய நவரத்தினம்

பச்சைக் கல் (ஜேட்)

அதிஷ்ட உலோகம்

பிளாட்டினம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

 மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

மஹாலக்ஷ்மி,குரு

குலம்

பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

பூரம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை அணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் நாட்டம் இருக்கும். பிறக்கும்போதே சுக்கிர தசை எனவே தந்தைக்கு யோகத்தை ஏற்படுத்தும்.

“தத்துவங்களைக் கற்பதில் ஆர்வம் உள்ளவர்கள். தாய், தந்தையரைப் பேணக்கூடியவர்கள்” என்று காக்கேயர் நாடி என்ற நூல் கூறுகிறது. பொதுவாக பூர நட்சத்திர ஆண்களும் பெண்மையின் சாயலுடன் காணப்படுவார்கள்

காம உணர்வு அதிகம் இருப்பதால் மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக்கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள். குறுக்கு வழியில் பணம் சேர்வதற்கான வாய்ப்புகளும், எண்ணங்களும் உண்டு.


குடும்ப வாழ்க்கை

பொதுவாக சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கையானது திருப்திகரமாக அமைவதில்லை. ஆனால் பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். காதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளை நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். மேலும் அனைவரையும் தன் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள்.


நண்பர்கள்

நண்பர்கள் மத்தியில் புகழோடு வாழ்வர்.


நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் அமைவதும், வாழ்க்கை துணை அமைவதும் மிகப்பெரிய அதிஷ்டம் ஆகும்


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

பூர நட்சத்திரக்காரர்கள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் - ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகும். இந்த 3 நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமைந்தால் அவர்களால் துரோகத்தை சந்திக்க வேண்டி வரும். வாழ்க்கைத் துணையாக இந்த நட்சத்திரக்காரர்கள் அமைந்தால், வாழ்க்கை மொத்தமும் நிம்மதியே இருக்காது. பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.


தொழில்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அரசு உத்தியோகம் மற்றும் சொந்த தொழில் சம்பாதிக்கும் யோகம் உண்டு. நடிப்புத் துறையில் சிறந்து விளங்குவார்கள். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் ஆர்வம் அதிகமாக இருக்கும்


தசா பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். சுக்கிர தசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

சுக்கிரன் தசை:
இளம் வயதில் சுக்கிர தசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர தசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்கள் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். மேலும் இளமையில் வரும் சுக்கிரன் தந்தைக்கு நல்லது செய்யும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.
சூரியன் தசை:
இரண்டாவதாக வரும் சூரிய தசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்தசை காலங்களில் சிறு சிறு உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்
சந்திரன் தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்தசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.
ராகு தசை:
நான்காவதாக வரும் ராகு தசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்தசை காலங்களின் முற்பாதி யானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையும் மேலும் சிலருக்கு மாரகத்தை ஏற்படுத்தும்.
குரு தசை:
ஐந்தாவதாக வரும் குரு தசை ஆகும். குரு நல்ல பலத்துடன் இருந்தால் மட்டுமே நல்லது வயதான காலத்தில் நன்மைகள் பிள்ளைகளால் நடக்கும்


பொது பரிகாரம்

பூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது, வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம்br>
பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது. உத்திரட்டாதி வேதை ஆகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஸம் பூஜயாமி அர்ய மானம்
பல்குனி தார தேவதாம் தூம்
ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூரம்

நட்சத்திரம் - பூரம்


பூரம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளில் 11 வது பிரிவு ஆகும். நட்சத்திர கூட்டத்தின் பின் பகுதியில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரத்தின் (δ, θ லியோனிசு) பெயரைத் தழுவியது. பூரத்தின் சமஸ்கிருத பெயரான பூர்வ பால்குனி (Purva Phalguni) என்பது "முந்திய சிவந்த நிறத்தது" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "கட்டிலின் இரண்டு கால்கள்" ஆகும். மேலும் இரண்டு கண்களின் கருமணிகள் போல் அமைந்த இரண்டு நட்சத்திரங்கள் இதில் அடங்கும். “பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்” என்று ஒரு வாக்கு இருக்கிறது.



நட்சத்திர காரத்துவம்

ஆளும் உறுப்புகள்

முதுகெலும்பு, இதயம்

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

133.20 &  146.40

தமிழ் மாதம்

ஆவணி

நிறம்

 வெண்மை.

இருப்பிடம்

கிராமம்.

கணம்

மனுஷ கணம்

குணம்

உக்கிரம்/குரூரம்,  ராஜசம்

மிருகம்

பெண் எலி

பறவை

பெண் கழுகு

மரம்

பாலுள்ள பலா மரம்

மலர்

வெள்ளை அரளி

தமிழ் அர்த்தம்

பாராட்டத்தகுந்தது

தமிழ் பெயர்

கணை

நாடி

மத்திம நாடி, பித்தம்

ஆகுதி

பச்சைப் பயறு

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

சியாமக அன்னம்

தேவதை

தேவர்களில் ஒருவரும், பத்ரி நாராயணனின் அம்சமுமான பகன்.

அதி தேவதை

ஸ்ரீகாஞ்சி காமாட்சி

அதிபதி

சுக்கிரன்

நட்சத்திரம் தன்மைகள்

அப சவ்விய நட்சத்திரம், பெண் நட்சத்திரம்

உருவம்

கட்டில் கால்களைப் போன்ற இரண்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.

மற்ற வடிவங்கள்

கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை

மற்ற பெயர்கள்

எலி, உமை,கணை,இடைசளி, துர்க்கை, நாவிதன்

வழிபடவேண்டிய தலம்

அக்னீசுரர் கற்பகாம்பிகை, கஞ்சனூர்

அதிஷ்ட எண்கள்

1, 4, 6

வணங்க வேண்டிய சித்தர்

பராசரா

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

மோ, ட, டி, டு

அதிஷ்ட நிறங்கள்

இளஞ் சிவப்பு, வெள்ளை

அதிஷ்ட திசை

தென்கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, செவ்வாய்

அணியவேண்டிய நவரத்தினம்

சிர்கான் (Zircon).

அதிஷ்ட உலோகம்

வெள்ளி (Sliver)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

 ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்


மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

மகம் தொடர்ச்சி

பொதுவான குணங்கள்

கலைத் திறமை உள்ளவர்கள். தலைமை தாங்கும் இயல்புகளும், விருப்பம் கொண்டவர்கள். கோபம், ஆத்திரம், பிடிவாதம், ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் ஆகியவை இந்த நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள். புகழுக்காக எதையும் இழக்க துணிந்தவர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர்கள். சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள். மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள்.

எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள். இளமையிலேயே சுக்கிர தசை வருவதால், சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பார்கள். அனுபவ அறிவு அதிகம். கல்வியில் தடை ஏற்படும்.


குடும்ப வாழ்க்கை

கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பார்கள். சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள். குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.

இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்கையில் செல்வம் செல்வாக்கு அதிகமிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசம் இருக்கும். மேலும் உங்கள் குழந்தைகள் அதிஷ்டசாலிகளாக இருப்பார்கள்


நண்பர்கள்

சில நண்பர்கள் மட்டும் இந்த நட்சத்திர காரர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக அமைவது மற்றும் நண்பர்கள் இருப்பது மிகுந்த நன்மைகளைத் தரும்.


நட்பு நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்தில் பிறந்தவர்களுக்கு நன்மை செய்யும் நட்சத்திரங்கள் ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை ஆகும்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்களின் நட்பு மிகவும் நன்மை தரும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நண்பர்களாக இருந்தால் வேண்டாத சிக்கல்களில் சிக்கி சீரழிய வேண்டியது வரும். பொதுவாக, மகம் நட்சத்திரக்காரர்கள் எந்த பிரச்சனை வந்தாலும், அதிலிருந்து எப்படியும் தப்பிவிடுவார்கள். மேலும் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி நடப்பை தவிர்ப்பது நல்லது.


தொழில்

மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடிப்பது உடன் பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள்.

பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புராண, இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள். வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி, மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள். தோல்வியை இவர்களால் தாங்க முடியாது. சிறந்த பேச்சாளர்கள், வாதத் திறமை மிக்கவர்கள்.


தசா பலன்கள்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது தசை முதல் திசையாக வரும். கேது தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

கேது தசை:
இத்தசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளும், கல்வியில் மந்த நிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும். கேது தசை நன்மை செய்வது இல்லை.
சுக்கிரன் தசை:
இரண்டாவதாக வரும் தசை வரும் சுக்கிர தசை மொத்தம் இருபது வருடங்கள் நடைபெறும் இளம் வயதிலேயே சுக்கிர தசை வருவதால் திருமண வாழ்க்கையும் இளம் வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்லற வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்.


சூரியன் தசை:
மூன்றாவதாக வரும் சூரிய தசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ணம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் மற்றும் தந்தையாருக்கும் சில கெடுபலன்கள் உண்டாகும்.
சந்திரன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை சந்திர தசை ஆகும் இது மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும்.. குடும்பத்தில் நிம்மதி குறையும். சந்திரன் நல்லவர் பார்வை பெற்றால் வெளிநாடு யோகங்கள் உண்டாகும் ஆனாலும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும்.
செவ்வாய் தசை:
ஐந்தாவதாக வரும் செவ்வாய் தசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் தசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.


பொது பரிகாரம்

மக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரம் ஆகும். இந்த மரத்தினை வழிபாடு செய்தால் நற்பலனை அடைய முடியும்.


செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.


பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வனி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், சித்திரை 1 2, அனுஷம், மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

அஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)


சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாஸஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸீர்ய ப்ரசோதயாத்