ரோகிணி

நட்சத்திரம் -ரோகிணி


ரோகிணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ஆகும். இது ரிஷப ராசியிலுள்ள பெரிய சிவப்புப் பேருரு நட்சத்திரம். இதனுடைய அறிவியற் பெயர் வழக்கிலுள்ள பொதுப்பெயர் அல்டிபாரன் (Aldebaran) ஆகும். இதை வானில் எளிதில் கண்டுபிடிக்க முடியும். Orion Belt என்று சொல்லப்படும் மூன்று நட்சத்திரங்களில் இடமிருந்து வலம் (வட அரைகோளத்தில்) சென்று அதே நேர்கோட்டில் முதலில் காணப்படும் பிரகாசமான நட்சத்திரம் ரோகிணி தான்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. ரோகிணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

உரோகிணியுறுமீ னேற்றரியேகம்
முரண்மிகுகிங்கம் மூன்றேமீனும்

பொருள் : ரோகிணி உச்சத்திற்கு வரும்போது சிங்கராசியில் 3 1/4 நாழிகை யளவு தொடுவானத்திற்கு மேலே வந்திருக்கும் 

நட்சத்திர காரத்துவம்:

ஆளும் உறுப்புகள்

முகம், வாய், நாக்கு, கழுத்து

பார்வை

மேல்நோக்கு

பாகை

40.00 - 53.20

தமிழ் மாதம்

வைகாசி

நிறம்

மஞ்சள்

இருப்பிடம்

நிலம்

கணம்

மனுஷ கணம்

குணம்

ஸ்திரம்

மிருகம்

ஆண் நாகம்

பறவை

ஆந்தை

மரம்

பாலுள்ள நாவல் மரம்

மலர்

தாமரை

தமிழ் அர்த்தம்

சிவப்பானது

தமிழ் பெயர்

சகடு

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

சரம்

நாடி

கபம், வாம பார்சுவ நாடி

ஆகுதி

நவதானியங்கள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பால்

தேவதை

ஸ்ரீ கிருஷ்ணன், பிரம்மா

அதி தேவதை

பிரஜாபதி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

அதிபதி

சந்திரன்

நட்சத்திரம் தன்மைகள்

சர நட்சத்திரம்

உருவம்

 தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்

மற்ற வடிவங்கள்

ஐம்மீண்

மற்ற பெயர்கள்

சகடு,  பார், உருள், வையம், சாகாடு, பண்டி

வழிபடவேண்டிய தலம்

பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில், காஞ்சீபுரம், ஜம்புநாதர் திருக்கோயில், நெல்லிக்கேடு,  ஜம்பு கேஸ்வரர் ஆலயம், செம்பாக்கம்

அதிஷ்ட எண்கள்

2, 7, 8

வணங்க வேண்டிய சித்தர்

அனுரோஹி, மச்சமுனி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

ஓ,வ,வி, வு 

அதிஷ்ட நிறங்கள்

 வெள்ளை, வெளிர் நீலம்

அதிஷ்ட திசை

மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

திங்கள், புதன்

அணியவேண்டிய நவரத்தினம்

முத்து

அதிஷ்ட உலோகம்

வெள்ளி

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கிருஷ்ணன்,பீமசேனன்

குலம்

க்ஷத்திரிய குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்


பொதுவான குணங்கள்

ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும் தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து ஆகும் சகல கலைகளுக்கும் உரிய சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஆடம்பர கிரகமான சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியின் ஆளுகையின் கீழ் வருகிறது. சந்திரனின் சாரம் பெற்றுள்ள இந்த நட்சத்திரம், பால்வெளியில் அதிகம் ஒளிரும் தன்மையுடையது.

சுதந்திரமானவர்கள் ஆனால் மற்றவர்களைச் சார்ந்து வாழ்பவார்கள். மிகவும் பாசமுள்ளவர்கள். பெண்கள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகவும் பொன் பொருள் மீது அதிக ஆசை உடையவர்களாகவும் இருப்பார்கள். அதி நுட்ப மதியுடனும் தெளிந்த அறிவுடனும் எந்த வொரு செயலையும் செய்வார்கள். பகைவர்களை கூட நண்பர்களாக்கி கொள்ளும் ஆற்றல் இருக்கும். இனிமையான பேச்சாற்றலும் பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிவும் திறனும் உண்டு. பேச்சில் ஒளிவு மறைவு என்பதை இருக்காது. எப்பொழுதும் நேர்மையாக வாழ விரும்புவதால் தவறுகள் செய்ய தயங்குவார்கள். விட்டு கொடுக்கும் மனப்பான்மை அதிலும் எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டே இருப்பார்கள். சுகபோக வாழ்க்கையை விரும்பும் இவர்களுக்கு சோம்பேறி தனமும் உடன்பிறந்ததாகும்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். எனவே சந்திரன் ரோகிணி மீது கொண்ட ஆசை காரணமாக துன்பம் அடைந்தது போல இவர்களும் சில சமயம் தங்கள் ஆசைகள் காரணமாக துன்பம் அடைவார்கள் 

குடும்ப வாழ்க்கை

வாழ்க்கை துணை அழகானவராகவும்,புத்திசாலியாகவும், மிகுந்த எதிர்பார்ப்புகள் உடையவர்களாகவும், உணர்ச்சி வசப்படுபவராக இருப்பார். கருத்து ஒற்றுமை அதிகம் இருக்கும். உங்களது குணம் மற்றவர்களை கவரும் வகையிலும் மென்மையாகவும் இருக்கும். உங்களது குடும்பத்தினர் மேல் அக்கறை காட்டுவார்கள். வீட்டு வேலைகள் அனைத்தையும் சிறப்பாக செய்வார்கள். இதனால் குடும்ப வாழக்கை இனிமையானதாக இருக்கும்.

இந்த நட்சத்திர காரர்களுக்கு விட்டு கொடுக்கும் குணம் உண்டு என்பதால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சண்டையே வந்தாலும் இனிமையாக பேசி சமாளித்து விடுவீர்கள். காதலிலும் விடாபடியாக கடைசி வரை நின்று திருமணம் செய்வார்கள். பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பார்கள். 

நண்பர்கள்

தங்கள் எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்கள் பேச்சில் ஒளிவு மறைவு என்பதே இருக்காது. இரக்கம் குணம் உள்ளவர்கள். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு பார்க்காதவர்கள். பொதுவாக ரோகிணி நடசத்திரகார்களை நண்பர்களாக பெற்றால் அவர்களிடமிருந்து அதிக உதவிகளையும் நன்மைகளையும் பெற்றிடலாம். 

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் இந்த நட்சத்திரக்காரர்களால் அதிக நன்மைகளும் உதவிகளும் கிடைக்கும். 

மேலும் வாழ்க்கை துணையாக கார்த்திகை மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரங்களை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை வரும் போது கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், ரிஷப ராசி கார்த்திகை அதாவது கார்த்திகை 2,3, 4 மற்றும் ரிஷப ராசியில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரகாரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். 

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த மூன்று நட்சத்திரங்களையும் அருகில் கூட சேர்க்கக் கூடாது. இந்த மூன்று நட்சத்த்திர நாட்களில் பயணங்கள் கூடாது. எந்த ஒன்றையும் தொடங்கக்கூடாது, ஒப்பந்தங்கள் போடக்கூடாது. முக்கிய சந்திப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கவேண்டும்.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் ஒரு சதவீதம் கூட லாபம் இருக்காது. ஆனால் மற்றவர்கள் உங்கள் பேரைச்சொல்லி லாபம் அடைவார்கள்.

அஸ்வினி, மகம், மூலம் இந்த மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை இவர்களைத் தவிர்ப்பது நல்லது. பழகினால் ஏதாவதொரு சூழ்நிலையில் உங்களை சிக்கலில் சிக்கவிட்டுவிடுவார்கள். இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்த வேலையும் உங்களுக்கு எதிராகத் திரும்பும், முக்கியமாக வழக்குகள் இந்த நட்சத்திர நாட்களில் நடத்தினால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பும். 

தொழில்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை இருக்காது. ஆனாலும் பெரிய தொழிலதிபர்களாக இருப்பார்கள். முதலாளியாக இருந்தாலும் சிறிதும் கர்வம் கொள்ளாமல் தொழிலாளர்களையும் தங்களுக்கு சமமாக நடத்துவார்கள். திறமையான சிற்பிகளாகவும், நடனம் மற்றும் இசை கலைஞர்களாகவும், படைப்பாற்றல் இயக்குநர்களாகவும், சமையல் கலை நிபுணர்களாகவும் இருப்பார்கள். விற்பனை செய்தல் போன்ற துறைகளிலும் இவர்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. விளம்பர துறை, கதை எழுதுதல், மார்க்கெட்டிங் மற்றும் நகை வடிவமைத்தல் உட்பட தொழில்களில் மிகப்பெரிய உச்சங்களை தொடுவும் வாய்ப்பு உண்டு

தசா பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை முதல் திசையாக வரும். சந்திர தசை மொத்தம் 10 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சந்திர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம

சந்திர தசை: 

சந்திர தசை காலங்களில் பிறப்பதால் உடல் நிலையில் ஜல சம்மந்தப்பட்ட பாதிப்புகள், வலி உண்டாக்கும் வியாதிகள், தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகலாம். 

செவ்வாய் தசை:

7 வருடங்கள் நடக்கும் இந்த தசை காலங்களில் கல்வியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சற்று முன் கோபமும் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகளும் உண்டாகும். சிலருக்கு சொத்து நாசம் உண்டாகும். இந்த தசை முடிவு சிறப்பாக இருக்கும்.

ராகு தசை: 

மூன்றாவது திசையாக வரும் ராகு தசை காலங்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று பொதுவாக சொல்ல முடியாது. நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். கல்வியில் தடை, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிய அமைப்பு கொடுக்கும். தேவையற்ற நட்புகளாலும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். முன் கோபமும் பிடிவாத குணமும் இருக்கும். ஆனால் ராகு நல்ல நிலையில் இருந்தால் இந்த நிலை மாறும்.

குரு தசை:

அடுத்தாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த 4-வதாக வரும் குரு தசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். இந்த தசை காலங்களில் வாழ்வில் பல சாதனைகள் செய்யும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர் புகழ் உயர கூடிய வாய்ப்பு, ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்யும் அமைப்பு, பொருளாதார மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். எடுத்த காரியங்கள் கை கூடும்.

சனி தசை: 

5வதாக வரும் சனி தசை நல்லதசை என்றுதான் சொல்ல வேண்டும் குரு தசை மொத்தம் 19 வருட காலங்கள் நடைபெறும் இத்தசை காலங்களில் பல சாதனைகளை செய்ய வைக்கும். சமுதாயத்தில் பெயரும் புகழும் உயரும். செல்வம் செல்வாக்கு பெருகும். ஆடை ஆபரண சேர்க்கை, அரசாங்கத்தால் நன்மை உண்டாகும் 

புதன் தசை: 

அடுத்தாக வரும் தசை அதாவது ஆறாவதாக வரும் புதன் தசை மாரகதசை என்றாலும் புதன் பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையுடனிருந்தால் நற்பலனை அடைய முடியும். மேற்கூறிய தசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரி கோணங்களில் சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால் நற்பலனை அடையலாம். இல்லையெனில் சில சங்கடங்களை வாழ்வில் சந்திக்க வேண்டியிருக்கும


மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

ரோகிணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் நாவல் மரம். இம்மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களைப் பெற முடியும். .

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

ரோகிணி நட்சத்திர நாளில் அதாவது ரோகிணி நட்சத்திரத்தில் பெண் பார்த்தல், தாலிக்கு பொன் உருக்குதல், பூ முடித்தல், திருமணம் சம்மந்தம் செய்தல், குழந்தையை தொட்டிலில் இடல், பெயர் சூட்டுதல், வாசக்கால் வைத்தல், புது மனை புகுதல், வங்கி கணக்கு தொடங்குதல், மாடுகள் வாங்குதல், கதிர் அறுத்தல், கல்வி கற்றல், புத்தகம் வெளியிடல், விதை விதைத்தல், நவகிரக சாந்தி செய்தல், புனித யாத்திரை செல்லுதல் நல்லது. 

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகியவை பொருந்த நட்சத்திரங்கள். சுவாதி வேதை ஆகும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

பிரஜாபதி சதுர்பாஹீ ; 

கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ; 

ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே 



கார்த்திகை / கிருத்திகை

நட்சத்திரம் -கார்த்திகை


இருபத்தேழு நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமாகவும், சூரியனின் முதல் நட்சத்திரமாக வருவது கார்த்திகை ஆகும். இந்திய ஜோதிடப்படி கால்பகுதி மேஷ ராசியிலும், முக்கால் பகுதி ரிஷப ராசியிலும் வருகிறது. அதாவது கிருத்திகை நட்சத்திரத்தின் 1ம் பாதம் மேஷ ராசியிலும் 2, 3, 4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். மேலும் எளிதில் யாரும் வெறும் கண்ணால் பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடியது. இதனுடைய அறிவியல் பெயர் எம்45 ஆகும். சாதாரண வழக்கில் பேசப்படும் பெயர் பிலேயடாசு ஆகும்.

பொருள்: கார்த்திகை ஆறு நட்சத்திரங்களைக் கொண்டது. அது உச்சத்தில் வரும்போது சிங்கராசி (கீழ்வானத்தில்) தோன்றி ஒரு நாழிகையாகி இருக்கும்.

வடமொழியிலும் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. கார்த்திகை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       கார்த்திகை யறுமீன் ஏற்றரியேகம்.

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


நட்சத்திர காரத்துவம்


ஆளும் உறுப்புகள்

1 - ம்: முகம், கழுத்து, தாடை.2, 3, 4 பாதங்கள்: - முகம், கழுத்து, தாடை.

பார்வை

கீழ்நோக்கு.

பாகை

26.40 - 40.00

நிறம்

சிவப்பு

இருப்பிடம்

சூன்யப் பிரதேசம், காடு

கணம்

ராக்ஷஸ கணம்

குணம்

மிஸ்ரம்/சாதாரணம்

மிருகம்

பெண் ஆடு

பறவை

மயில்

மரம்

பாலுள்ள அத்தி மரம்

மலர்

மல்லிகை

தமிழ் அர்த்தம்

வெட்டுவது

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

வாம பார்சுவ நாடி, அந்த்யா நாடி

ஆகுதி

அன்னம்

பஞ்சபூதம்

நிலம்

நைவேத்யம்

தயிர் சாதம்

தேவதை

முருகன்

அதி தேவதை

அக்னி (இரண்டு முகங்களும் நான்கு கரங்களும் சிவந்த நிறமும் வாய்த்த அக்னி பகவான்)

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம்

அதிபதி

சூரியன்

நட்சத்திரம் தன்மைகள்

பெண் நட்சத்திரம், மிஸ்ர நட்சத்திரம், அந்தரங்கம் நட்சத்திரம்

உருவம்

கத்தி,கற்றை, வாள், தீஜ்வாலை, சவரக்கத்தி, சாவி, மண்வெட்டி

மற்ற வடிவங்கள்

தீக்கொழுந்துகள் எரிவது போன்ற வடிவமுடைய ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட நட்சத்திரக் கூட்டம்.

மற்ற பெயர்கள்

எரி, அங்கி, ஆரல், அளவு, இனால், அழல், அறுமீன் 

வழிபடவேண்டிய தலம்

 காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில், கஞ்சா நகரம்

அதிஷ்ட எண்கள்

 1, 6, 9

வணங்க வேண்டிய சித்தர்

ரோமரிஷி சித்தர்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

அ, இ, உ, எ

அதிஷ்ட நிறங்கள்

 மெரூன், வெளிர்சாம்பல்

அதிஷ்ட திசை

கிழக்கு

அதிஷ்ட கிழமைகள்

ஞாயிறு, வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

ரூபி

அதிஷ்ட உலோகம்

தங்கம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

ரோகிணிஅஸ்தம்திருவோணம்சுவாதி. சதயம்பூசம்உத்திரட்டாதிஅசுவினிமகம்மூலம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கார்த்திகேயன்

குலம்

 பிரம்ம குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

பொதுவான குணங்கள்:

”‘தேஜஸ்வி...” அதாவது அழகானவர்கள் என்று யவன ஜாதகப் பாடலும், 'மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்' என்று பிருகத் ஜாதக நூலும், ‘கொள்ளும் ரச வர்க்கத்தில் பிரியன்; அற்ப நித்திரையன்; கூறுஞ் செஞ்சொல்...’ அதாவது இனிப்பை விரும்பி உண்பவர், ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர், அரசர்களுக்கு பிரியமானவர் என்று ஜாதக அலங்கார நூலும் இந்த நட்சத்திரத்தின் குணத்தை கூறுகிறது. கனவுலகத்தில் சஞ்சரிப்பது எல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள். தன் சக்திக்கு எது முடியுமோ அதை மட்டும் செய்து முடிப்பார்கள். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலித்தனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். காரசாரமான விவாதங்களில் இவர்களுக்கு நிகர் இவர்களே. பசியை கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். உணவு வகைகளை ரசித்து ருசித்து உண்பார்கள்.


குடும்ப வாழ்க்கை:

இந்த நட்சத்திரக்காரர்கள் காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். பொதுவாக காதல் விவகாரத்தில் ஒதுங்கியே இருப்பார்கள். திருமண வாழ்க்கையில் கராராக நடந்து கொள்வார்கள். ஆனால் வாழ்க்கை துணையிடம் அதிக நம்பிக்கை வைத்து இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு மனமொத்த வாழ்க்கைத் துணையே அமையும். வாழ்க்கை துணை, பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்பார்கள். தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். அதிகமாக தெய்வ பக்தி உண்டு. ஆனால், தெய்வ பக்தியை காட்டிலும் தாய், தாய் நாடு, தாய்மொழியின் மீது அதிக பாசம் இருக்கும். 33 வயதிற்கு மேல் வாழ்வில் நல்ல ஏற்றம் உண்டாகும்.


நண்பர்கள்:

நண்பர்களிடம் மிக உண்மையாக இருப்பார்கள். அதேசமயம் நண்பர்கள் துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தாலும் அவர்கள் சுயநலகாரர்களாகவே அமைவார்கள்.


நட்பு நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் அதிக நன்மைகளை தரும். இந்த நட்சத்திரக்காரர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் இந்த ஆறு நட்சத்திரங்களும் நன்மை தருவதாக இருக்கும்

திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திர நாட்களில் சொத்துக்கள் வாகனங்கள் வாங்கவும். லாபகரமாக விற்பதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு சிறந்தது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் தொழில் தொடங்க தேவையான கடன் உதவி பெறவும், வீட்டுக் கடன் வாங்கவும், கடன்களை திரும்ப அடைக்கவும் நல்லது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.


தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்:

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரகாரர்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாழ்க்கைத் துணையாக வந்தாலும் அவஸ்தைகள் உடன் வாழ வேண்டும். இந்த நட்சத்திர நாட்களில் புதிய முயற்சிகள் செய்யக்கூடாது, பயணங்கள் மேற்கொள்ளக்கூடாது. அறுவை சிகிச்சை செய்யக்கூடாது.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இந்த நட்சத்திரகார்களுக்கு உங்களால் நன்மை அவர்களுக்கு உண்டு ஆனால் இவர்களுக்கு அவர்களால் எந்த நன்மையையும் கிடைக்காது. ஆயில்யம், கேட்டை, ரேவதி இவர்களுடன் ஏன் பழகினோம் என்று வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படும்.

வேதை என்னும் நெருப்பாய் இம்சை தரும் நட்சத்திரம்- விசாகம். முழுமையாக தவிர்க்க வேண்டும்.


தொழில்:

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். எனவே வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், நாட்டுக்காக அர்பணிக்கும் தொழிகளை செய்யலாம். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் செய்ய மாட்டார்கள்.


தசா பலன்கள்

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய தசை வரும். சூரிய தசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம்.

சூரிய தசை:
சூரிய தசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களையும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் பாதிப்புகள் குறையும்.
சந்திர தசை:
இரண்டாவது தசையாக வரும் சந்திர தசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறுபாடு மற்றும் ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் சுபர் பார்வை சேர்க்கையுடன் சந்திரன் இருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய் தசை:
3வதாக வரும் தசை செவ்வாய் தசை, இது 7 வருடங்கள் நடைபெறும். இந்த தசா காலத்தில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும். ஆனால் முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.
ராகு தசை:
ராகு தசை 18 வருடங்கள் நான்காவது தசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஆனால் பொதுவாக சூரியனுக்கு ராகு பகை. எனவே இந்த காலகட்டத்தில் ஆரோக்கிய பிரச்சினை, மருத்துவ செலவுகள் போன்றவை அனுபவிக்க வேண்டி வரும். ராகு நல்ல பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றால் மிகுந்த நல்ல பலன்களை வாரி வழங்குவார் என்பது உண்மை.
குரு தசை:
குரு தசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆனாலும் நோய்கள், சிலருடன் விரோதங்கள், வீட்டில் சிறு சிறு சண்டைகள் ஏற்படும்
சனி தசை:
ஆறாவதாக வரும் சனி தசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்பது எந்த ஐயமும் இல்லை.
பொது பரிகாரம்

கார்த்திகை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

கிருத்திகை அதாவது  கார்த்திகை நட்சத்திரத்தில் கடன்களை பைசல் செய்ய, சிலம்பாட்டம் பயில சுரங்கம் வெட்ட, செங்கல் சூளைக்கு நெருப்பிட துப்பாக்கி சுடும் பயிற்சி மேற் கொள்ள பழைய வாகனங்களை விற்க நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது கார்த்திகை நட்சத்திரத்திற்கு

பொருந்தும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி, பரணி, திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம் சதயம், உத்திரட்டாதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசிரீஷம், புனர்பூசம், ஆயில்யம், கேட்டை, அவிட்டம், புரட்டாதி, ரேவதி பொருந்தா நட்சத்திரங்கள் ஆகும். விசாகம் வேதையாகும்.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

சண்முக காயத்திரி மந்திரம் ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத்


4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

கார்த்திகை 1ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


முதல் பாதத்திற்கு நவாம்ச அதிபதியாக குரு இருப்பதால், இதில் பிறந்தவர்கள் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். ஆனால் செல்வத்தையும், புகழை விரும்புபவர்கள். அதையும் சேர்ப்பார்கள். நல்ல ஞானத்துடன் தந்திரத்தால் வெல்பவர்கள். ஆனால் கல்வியில் அதிக பற்று இருக்காது. சுய கௌரவம் அதிகமாக இருக்கும். முன் கோபம் அதிகமாக இருக்கும்.

கார்த்திகை 2ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


நராசி நாதனாக சுக்கிரன் ஆள்வதால் இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் பரந்த மனதுடன் பழகுவார்கள். எல்லோரையும் எளிதாக நம்புவார்கள். அதனால் ஏமாறவும் செய்வார்கள். இந்தப் பாதத்திற்கு சனி பகவானின் அம்சம் உண்டு. இதில் பிறந்தவர்கள் ஆசை, பாசம், பற்றுள்ளவர்கள். உயரிய நோக்கங்களை அடைய போராடுபவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள். ஆசார அனுச்டங்களிலும், வேத சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் நம்பிக்கை இல்லாதவர்கள். சிலர் மிகுந்த மூர்க்க தனத்துடன் இருப்பார்கள். கல்வி, கலைகளை பயிலுவதில் ஆர்வம் இருக்கும்

கார்த்திகை 3ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி


இந்த பாதமும் சனி பகவானின் அம்சம் உடையது. இதில் பிறந்தவர்களுக்கு பேராசை, பணவெறி, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும். பிறருக்கு உபத்திரம் செய்யும் குணமும், மெதுவான குணமும் (புத்தி குறைவு) இருக்கும். வேடிக்கை, விளையாட்டில் இளமை கழிப்பார்கள். கூடா பழக்கவழக்கங்களுக்கு ஆளாக நேரும்.

கார்த்திகை 4ம்பாதம்:

நட்சத்திர அதிபதி சூரியன்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு


இந்த பாதம் குருவின் ஆதிக்கம் உடையது. அடக்கம், ஒழுக்கம், நட்பு, பாசம் போன்ற நல்ல இயல்புகள் இதில் அடங்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும், தெய்வ பக்தியும் ஆகியவை இருக்கும். ஆனால் ஏழ்மை, ஆரோக்கிய குறைபாடு இருக்கும். மற்றும் பிறருடன் சண்டை செய்பவராகவும், கல்வியில் ஊக்கம் குறைந்தும் காணப்படும்.

இவையாவையும் பொது குணங்களே. இவை நல்ல கெட்ட கிரக பார்வைகளாலும், சேர்க்கைகளாலும் மாறுபடும். மேலும் லக்கினத்தை வைத்து தான் முழுவதையும் கணிக்க முடியும்

பரணி

நட்சத்திரம் - பரணி


பரணி என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் ஆகும். இது ஒரு மங்கலான நட்சத்திரம். பரணி நட்சத்திரம் மூன்று நட்சத்திரங்களுடன் முக்கோண வடிவத்தில் காணப்படும்

வடமொழியில் 27 வாய்பாடுகள் இருக்கின்றன. அதனில் பரணி குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:

                       பரணி மும்மீன் அடுப்புப் போல,
                       திரண்மிகு கடகத்தொரு நாற்காலாம்

பொருள்: மூன்று நட்சத்திரங்கள் அடுப்பு போல அமைந்திருக்கும். இது உச்சத்திற்கு வரும் போது கடக ராசி உதித்து நான்கு நாழிகை ஆகியிருக்கும்.


  1. ஆளும் உறுப்புகள்: தலை, மூளை, கண் பகுதி

  2. பார்வை: கீழ்நோக்கு

  3. பாகை: 13.20 - 26.40

  4. தமிழ் மாதம: ் சித்திரை

  5. நிறம்: வெண்மை

  6. இருப்பிடம்: கிராமம்.

  7. கணம்: மனுஷ கணம்

  8. குணம: ் உக்கிரம்

  9. மிருகம: ் ஆண் யானை

  10. பறவை: காக்கை

  11. மரம்: பாலில்லாத நெல்லி

  12. மலர்: கருங்குவளை

  13. தமிழ் அர்த்தம்: தாங்கிப்பிடிப்பது

  14. தமிழ் பெயர் : அடுப்பு

  15. சராதி நட்சத்திரப்பிரிவுகள்: ஸ்திரம்

  16. நாடி: மத்திம நாடி, பித்தம்

  17. ஆகுதி: தேன், எள்

  18. பஞ்சபூதம்: பூமி

  19. நைவேத்யம்: வெல்ல அப்பம்

  20. தேவதை: சூரியனுக்கும், சாயா தேவிக்கும் பிறந்த தர்மதேவன் - எமன்.

  21. அதி தேவதை: துர்கையம்மன்

  22. அதிபதி: சுக்கிரன்

  23. நட்சத்திர தன்மைகள்: பெண் நட்சத்திரம், சவ்விய நட்சத்திரம்

  24. உருவம்: முக்கோண வடிவ நட்சத்திரக் கூட்டம்.

  25. மற்ற வடிவங்கள்: யோனி,அடுப்பு,முக்கோணம்

  26. மற்ற பெயர்கள்: அட்டுதல், சுதிதலம்,தாழி, தராசு, பூதம், சுங்கல், கிழவன், சேறு

  27. வழிபடவேண்டிய தலம்: தன்வந்திரி, ஸ்ரீ ரங்கம்

  28. அதிஷ்ட எண்கள்: 2, 6, 9.

  29. வணங்க வேண்டிய சித்தர்: ரிஷிபத்தன்யா

  30. பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள் : லீ, லு, லே, லோ

  31. அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வெள்ளை

  32. அதிஷ்ட திசை: தென்கிழக்கு

  33. அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

  34. அணியவேண்டிய நவரத்தினம்: வைரம்

  35. அதிஷ்ட உலோகம் : வெள்ளி

  36. வெற்றி தரும் நட்சத்திரங்கள் : உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

  37. நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்: துரியோதனன், மகேந்திரவர்ம பல்லவன்.

  38. குலம்: நீச்ச குலம்

  39. புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்: ஆர்த்தம்

பொதுவான குணங்கள்

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவர்களை கவர கூடிய உடலமைப்பும், பேச்சாற்றலும் இருக்கும். நட்சத்திர மாலை எனும் நூலில், ‘தானங்கள் பலவுஞ் செய்வான்; தந்தை தாய்தனைப் பேணும்...’ என்று பரணி நட்சத்திரக்காரர்கள் குணத்தை குறிப்பிடுகிறது. தாயையும் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காப்பார்கள். மேலும் அதாவது தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும் ஆனால் சுயநலம் அதிகமாக இருக்கும். வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம், தோல்வியைத் தாங்கமுடியாத பயம், பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகிய குணங்களை பெற்று இருப்பார்கள்.

அழகாக உடை உடுத்துவது, அணிகலன்களை அணிந்து கொள்வது மற்றவர்களின் பார்வை எப்பொழுதும் தான் மீது படும்படி நடந்து கொள்வது போன்றவற்றில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். நடனம், பாட்டு, இசை இவற்றிலும் அதிக ஈடுபாடு இருக்கும்.

எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர் என்பதால் ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்க கூடிய இயல்பு கொண்டவர். பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கு போனாலும் சமயம் வரும்போது சரியாக காலை வாரி விடுவார்கள். சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பார்கள். புத்தகப் புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் அதிகமுண்டு.


குடும்ப வாழ்க்கை

“பரணி, தரணி ஆளும்” என்ற பழமொழிக்கு ஏற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். வாழ்க்கை துணை, பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல பாதுகாப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதோடு சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது

குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். மேலும் அவர்கள் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க விரும்ப மாட்டார்கள் குடும்பத்தாரின் தேவைகளை தீர்ப்பதையே முக்கியமாக கருதி அதிக பணத்தை செலவழிப்பார்கள். வாழ்க்கை துணையிடம் இருந்து அன்பு, ஆதரவு மற்றும் நம்பிக்கையை பெற்று அழகான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

நண்பர்கள்

நண்பர்களை விட குடும்பத்தை அதிகம் நேசிப்பார்கள். சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைப்பார்கள். உல்லாசப் பயணம் போவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றியும் போவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் ஆதாயம் தரக்கூடிய, ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களாக அமைவார்கள்.

மிருகசீரிடம், சித்திரை நட்சத்திர நண்பர்களால் லாபம் தரக்கூடிய நட்பு சாத்தியமாகும் என்பது உறுதி.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கை துணையாக வருவது மிகுந்த நன்மையைத் தரும். நட்பாக இருந்தாலும் மிக உத்தமமான பலன்களும் பலமும் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி,சதயம். இவர்கள் உங்களிடம் பழகுவதே உங்களிடம் ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே. ரோகிணி, அஸ்தம், திருவோணம். தவிர்ப்பதே நல்லது. பூசம், அனுஷம், உத்திரட்டாதி இந்த நட்சத்திரக்காரர்கள் நெருங்கிய உறவாக, வாழ்க்கைத் துணையாக இருந்துவிட்டால் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

தொழில்

பெரிய பதவியை எளிதாக அடைவார்கள். உங்களுக்குக் கீழே இருப்பவர்களை சாதுர்யமாக வேலை வாங்குவதுடன் சலுகைகளை வாரி வழங்குவார்கள். மூடக்கூடிய நிலையில் உள்ள நிறுவனமாக இருந்தாலும், பொறுப்புடன் போராடி அதனை நல்ல உயர்நிலைக்கு கொண்டு வருவார்கள். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.

வயதான காலத்திலும் கௌரவப் பதவிகள், சமூகப் பொறுப்புகள் வரும்

தசா பலன்கள்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர தசை முதல் தசையாக வரும். மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் சுக்கிர தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சுக்கிர தசை:
பிறக்கும் போதே சுக்கிர தசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியில் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.

சூரிய தசை:
இரண்டாவது தசையாக வரும் சூரிய தசை 6 வருட காலங்களில் சுமாரான நற்பலன்களைப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள்

சந்திர தசை:
மூன்றாவதாக வரும் சந்திர தசை 10 வருடம் நடைப் பெறும். இந்த தசையில் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும்.

செவ்வாய் தசை:
7 வருடங்கள் வரும் செவ்வாய் தசையில் பூமி மனை வாங்கும் யோகம் வாழ்க்கை துணை வழியில் அனுகூலம் உண்டு. இது மிகவும் நல்ல தசை என்றே கூறலாம்

ராகு தசை:
ராகு தசை 6வது தசையாக 18 வருடங்கள் நடைபெறும் ராகு தசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

குரு தசை:
ஆறாவது தசையாக வரும் குரு திசை. இதை பரணி நட்சத்திரகாரர்களுக்கு மாரக தசை ஆகும். ஆனால் குரு தசை காலங்களில் குரு முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு சிறப்பாக இருந்தால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

மேற்கூறிய அனைத்து தசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். அப்படி இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பொது பரிகாரம்

பரணி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் நெல்லி மரமாகும். நெல்லி மரத்தை வழிபாடு செய்தால் நற்பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

பரணி நட்சத்திர நாளில் அதாவது பரணி நட்சத்திரத்தில் இசை, ஓவியம், நடனம், ஆகியவற்றை பயில தொடங்குதல், செங்கல் சூளைக்கு நெருப்பிடுதல், நடன அரங்கேற்றம் செய்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், மூலிகை செடிகளை பயிரிடுதல் மற்றும் ரோஜா உள்ளிட்ட முற் செடிகளை நடுவது போன்றவை மிகவும் நல்லது.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது அஸ்வனி நட்சத்திரத்திற்கு


பொருந்தும் நட்சத்திரங்கள்:

அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், மகம், சித்திரை 3, 4, விசாகம், மூலம், உத்திராடம், ரேவதி


பொருந்தா நட்சத்திரங்கள்:

பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரஜ்ஜு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
சன்ய குமாரி தீமஹி
தள்நோ துர்கி பிரசோதயாத்



4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

பரணி1ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்


பருத்த உடலுடன், நல்ல குணம் மற்றும் நல்ல செய்கையுடனும், நன்றியுடனும் இருப்பார்கள். எதிரிகளை சுலபமாக வெற்றி கொள்வார்கள். ஆனால் காம பிரியராகவும், அகங்கார குணத்துடனும் இருப்பார்கள்.

நவாம்ச அதிபதியாக சூரியன் இருப்பதால் ராஜ தந்திரம் அதிகம் இருக்கும். மேலும் தெரியாத விஷயமாக இருந்தாலும் அறிந்தவரை போல அதனுடைய சிறப்பை விளக்கி மற்றவர்களை நம்ப வைத்துவிடும் சாமர்த்தியம் இருக்கும்.

பரணி2ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்


நல்ல திறமைகள், மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மை, நல்ல பழகும் குணத்துடன் இயல்பாகவே தானம் தர்மம் செய்யும் குணத்தை பெற்று இருப்பார்கள். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பெற்று இருப்பார்கள். மேலும் மற்றவர்களால் புகழும், கீர்த்தியும் பெறுவார்கள்.

நவாம்ச அதிபதியாக புதன் இருப்பதால் எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார்கள். கல்வியில் சிறந்து விளங்குவதுடன் புத்தி கூர்மையால் எந்த வேலையையும் செய்து முடிக்கும் வல்லமை பெற்று இருப்பார்கள். ஆனாலும் சோம்பலுடன் அதாவது சோம்பேறியாக இருப்பார்கள்.

பரணி3ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்


அதிஷ்ட தேவதைகளின் அருளினால் எக்காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள். சந்தோஷங்களுடன் செளகர்யங்களுக்கு குறைவில்லாமலும் திடகாத்திர உடலுடனும், பெரிய கண்களுடனும் சிவந்த நிறத்துடனும் இருப்பார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் பணம் செலவழிப்பார்கள். 30 வயது வரை அதிகமாக செலவழித்து விட்டு, அதன் பிறகு சேமிக்கத் தொடங்குவீர்கள். 40 வயதுக்கு மேல் புகழ்பட வாழ்வார்கள். பெற்றோரை அதிகம் நேசிப்பார்கள்.

பரணி4ம் பாதம்

நட்சத்திர அதிபதி சுக்கிரன்
ராசி அதிபதி செவ்வாய்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சந்திரன்


பருத்த உடலுடனும் தோற்றத்துடனும், துன்மார்க்க குணத்துடனும், பிடிவாத சுபாவத்துடனும், வஞ்ச நெஞ்சம் பெற்றவராக இருப்பார்கள். அடிமை வாழ்க்கை அல்லது சாதாரண தொழில் அல்லது வேலை செய்பவராகவும் இருப்பார்கள் ஆனாலும் தன்னுடைய காரியங்களை சாதிக்கும் சாமர்த்தியம் இருக்கும்

அடுத்தவர்களின் வளர்ச்சியை அவர்களின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். வாழ்க்கை துணையிடம், பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் பதில் உதவி செய்யாவிட்டால் வருத்தப்படுவார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுவார்கள். எதற்கும் அஞ்சமாட்டார்கள். 37 வயதுக்கு மேல் நல்லது நடக்கும். சிறு வயதில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் முதுமையில் யாரையும் நம்ப மாட்டார்கள்.