Showing posts with label கும்பமுனி. Show all posts
Showing posts with label கும்பமுனி. Show all posts

பதினெண் சித்தர்கள் - 1. அகத்தியர்

 


பதினெண் சித்தர்கள் -  அகத்தியர்


சித்தர்களில் முதலானவரும் ஈசனுக்கு இணையானவரும் தமிழை தந்த

அகத்தியர் பற்றி பார்ப்போம். அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார்

ஈசனுக்கு இணையானரான  தமிழை தந்த அகத்தியர் பற்றி பார்ப்போம்.

குறிப்பு

பெயர் அகத்தியர் அல்லது   அகஸ்தியர்,  குடமுனி,  கும்பயோகி,  கும்பமுனி, பொதிகை முனி

குரு:   சிவபெருமான்

வாழ்நாள்:  4 யுகம் 48 நாட்கள்

சீடர்கள்: போகர், மச்சமுனி

பிறந்த மாதம்: மார்கழி

பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம்

மனைவி: லோப முத்ரா  (விதர்ப நாட்டு மன்னனின் மகள்)

மகன்: சங்கரன் (அ) இத்மலாகன்

சமாதி: அனந்தசயனம் (திருவனந்தபுரம்), கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில் (இரண்டு வகையாகக் கூறப்படுகிறது)

 

அகத்தியர் மித்திர வருணன் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். 18 சித்தர்களில் முதன்மையானவர். சித்தர்களின் தலைவர். தமிழுக்கு பல சித்த மருத்துவ முறைகளை வழங்கியவர். கடும் தவமியற்றி பல சித்திகளை பெற்றவர். தமிழ் இலக்கிய விதிமுறையாக அகத்தியம் எனும் நூலை எழுதியவர். போகர், மச்சமுனி இவரின் சீடர்களாவர். அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

தமிழுலகில் நன்கு அறிமுகமான பெயர் அகத்தியர். இவர் பொதிகையில் தவம் செய்தால் “பொதிகை முனி” என்றும், கும்பத்தில் பாய்ந்ததால் “கும்பமுனி” என்றும், அகத்தினுள்ளே ஈசனைக் கண்டதால் ‘அகத்தியர்” என்றும் அழைக்கப்படுகிறார். இவர் பற்றி தமிழிலும், வடமொழியிலும் பல புராணக் கதைகள் உள்ளன. இவர் பேராற்றல் கொண்ட முனிவராகவும், இலக்கியம், இலக்கணம், இசை, கூத்து, மருத்துவம், ஜோதிடம், உளவியல் முதலான பல்கலை வல்லுநராகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவர் பெயரால் பல மருத்துவ நூல்களும்,  ஜோதிட சாஸ்திரங்கள் உள்ளன.

இவர் முருகக் கடவுளின் ஆணைப்படி முத்தமிழுக்கு இலக்கணமாக இயற்றியதாகவும், அதை அகத்தியம் என்று சொல்லப்படுகிறது. இதனைப் பேரகத்தியம் என்றும் கூறுவர். இதில் 12000 சூத்திரங்கள் இருந்தன என்பர். சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் அகத்தியர்” என்று சொல்லலாம்.

தோற்றம்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரான இவர், பழந்தமிழ் பாடல்களிலும், தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புகள் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகள் கூறப்படுகின்றன. 

இந்திரன் செய்த தவறால் அவரை அழிக்க துவட்டா என்ற அசுரன் ஒரு  வேள்வித்தீயை செய்ய அதில் இருந்து விருத்திகாசுரன் என்னும் அசுரன் தோன்றினான். இந்திரனால் அவனை எதிர்க்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினான். இதன்பின், விண்ணுலகை கைப்பற்றிய விருத்திகாசுரன், தன் கொடுங்கோல் ஆட்சியை தொடங்கினான். இந்திரனின் தவறால், அவன் மட்டுமல்ல தேவலோகம் மற்றும் பூலோகம்  பாதிப்படைந்தது. விருத்திகாசுரன் மற்றும் தாரகன் முதலிய அசுரர்களின்  தலைமையில் உள்ள அரக்கர்கள்  உலகை துன்புறுத்தினர்.  இந்நிலையில், இந்திரன்  பிரம்மதேவரிடம் சென்று முறையிட, அவர் இதற்குரிய தீர்வை மகாவிஷ்ணுவே தரமுடியும் என்றார். எனவே அனைவரோடும் வைகுண்டத்துக்கு சென்றனர். விஷ்ணு பகவான் இந்திரனின் தவறுகளை மன்னித்து உபயம் அளித்தார்.

அதாவது ததீசி என்னும் முனிவரின் முதுகெலும்பை ஆயுதமாக செய்தால் அது வஜ்ராயுதத்தை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த ஆயுதம் ஆகும். எனவே அவரிடம் செல்லும்படி விஷ்ணு அருள் பாவித்தார். தியாக மனம் படைத்த முனிவர் யோக நிலையில் அமர்ந்து தன் உயிரை உடலில் இருந்து பிரிந்து தனது முதுகெலும்பை தந்தார்.

வஜ்ராயுதத்தை விட ஆயிரம் மடங்கு பலம் வாய்ந்த ஆயுதத்துடன் அசுரர்களை அழிக்க இந்திரன், வருணன், வாயு பகவான்கள் வந்தால் அசுரர்கள் அச்சம் அடைந்து கடலுக்குள் தஞ்சம் அடைந்தார்கள்.

தாரகனை பின் தொடர முடியாத இந்திரனுக்கு கோபம் வந்தது. இந்திரனால் கடலுக்குள் செல்ல முடியவில்லை. இதற்கு தீர்வு காண இந்திரன் முதலில் அக்னி பகவானை அழைத்து, உன் வெப்பத்தால் இந்த கடலை ஆவியாக்கி விடு என்று கூறினார். ஆனால் அக்னி பகவான்  “கடல் நீர் இருந்தால் தான் மழை பெய்யும். தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவராசியும் பூமியில் வாழ முடியாது. இந்த பாவத்தை நான் செய்ய மாட்டேன்.” என்று கூறிவிட்டார். இரண்டாவதாக இந்திரன் வாயு பகவானை அழைத்தார். வாயு பகவானின் வறண்ட காற்றினால் கடலை வற்றும்  படி செய் என்று  கூறினார். ஆனால் வாயு பகவானும், அக்னி தேவன் கூறிய காரணத்தையே  கூறி முடியாது என்று கூறிவிட்டார்.\

இதனால் கோபமடைந்த இந்திரன் வாயு பகவானுக்கும், அக்னி பகவானுக்கும் பூமியில் மனிதனாக பிறந்து மானிட வாழ்க்கை வாழுமாறு சாபத்தை  அளித்தார். அக்னி பகவான் மித்ரா என்ற பெயரில், வாயு பகவான் வர்ணன் என்ற பெயரில் பூமியில் மனிதனாக பிறந்தார்கள். இந்த சமயத்தில் ஊர்வசி தேவலோகத்தில் செய்த தவறினால் இந்திரனின் சாபத்துக்கு ஆளாகி விட்டு பூலோகம் வந்து இருந்தாள். அவள் ஒரு குளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது, மித்திரனும், வருணனும் அவளை கண்டனர். இப்படிப்பட்ட பேரழகியை அவர்கள் கண்டதில்லை. அப்போது அவர்களிடம் இருந்து வீரியம் வெளிப்பட்டது. மித்திரர் தன் கையில் இருந்த கும்பத்தில் வீரியத்தை வெளியிட்டார். வர்ணன் தன் வீரியத்தை தண்ணீரில் விட்டார். கும்பத்தில் இருந்து அவதரித்தவர் தான் அகத்திய முனிவர். தண்ணீரில் இருந்து அவதரித்தவர் தான் வசிஷ்ட முனிவர். எனவே இவர்கள் சகோதர்கள் ஆவார்கள்.  அகத்தியர் குடத்தின் அளவு இருந்தார். அசுரன் தாரகன் “குடத்தின் அளவு உள்ள ஒருவரால் தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும்” என்ற வரத்தைப் பெற்றவன்.\

அசுரர்கள் கடலில் புகுந்தால்,  தேவேந்திரன் அகத்தியரிடம் உதவி கேட்க  தாரகனை அழிக்க அகத்தியர் 12 ஆண்டுகள் தண்ணீரின் மேல் தவம் செய்தார். மேலும் அவரின்  வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் என அகத்தியர் தோற்றத்தை பற்றி  என்று புராண கதைகள் கூறுகின்றன.

சிவனின் கட்டளை

கைலையில்  சிவபெருமான் – பார்வதி  திருமணத்தின் பொருட்டு முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் கைலையம் வந்து அடைத்தார்கள். எனவே  அவர்களின் பரம் தாங்க முடியாமல்  வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது.  எனவே இதை சரி செய்ய அகத்தியர் ஒருவர் போதும் என்று அறிந்த சிவபெருமான்  தென் திசைக்கு அகத்தியரை  செல்லுமாறு கட்டளையிட்டார்.

அவரின் கட்டளை ஏற்று அவரும் தென்திசை வந்து அடைந்தார். யாரையும்  மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. பிறகு அவர் மீண்டும் இங்கு வரும் வரை பணிந்து தாழ்ந்து இருப்பதாகவும் வாக்கு அளித்தது. ஆனால் அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை என்று புராணங்கள் சொல்கிறது. முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகள் நிகரானவர் என்று அவரின் பெருமையை உலகிற்கு உணர்த்தினார் சிவ பெருமான். மேலும் அகத்தியருக்கு தம்பதி சமேதராக காட்சி அளித்து அருள் பாவித்தார் என்றும் சொல்லப்படுகிறது 

அகத்தியரின் பற்றிய புலஸ்தியர் மகரிஷி 

அகத்தியரின் தலைமைச் சித்தரான புலஸ்தியர் மகரிஷி அகத்தியரை பற்றி கூறப்பட்டது யாதெனில் 

  • அகத்தியர் அணிந்து இருக்கும் பூணூலின் பெயர் "திரிபுரணம்" ஆகும். இது விபூதி கலந்த நிறத்தில் இருக்கும். மேலும் இதை கெளதம முனிவரால் அவருக்கு கிடைக்கப் பெற்றது. 
  • வன்னி, வில்வம், துருக்கத்தி, செம்பாலை ஆகிய நான்கு விதமான மலர்கள் உடைய மாலையை அகத்தியரும் அவரது மனைவியாகிய லோபமுத்ரா அன்னையும் அணிவார்கள். இதை தொடுத்து கொடுத்தவர் பர்வதனி ஆவார். அவர் லோபமுத்ரா அன்னையின் தோழி ஆவார் 
  • அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து, அவ்வரசன் மகள் லோபமுத்ராவை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
  • மிக மகத்துவம் வாய்ந்த அகத்தியரின்  திருமணம்  பொதிகை மலையில் உள்ள வடகிழக்கு பகுதியில் இருக்கும் ‘பூமண் மேடு’ என்னும் இடத்தில் தான் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது.  
  • லோபமுத்ரா தேவியானவர் ஶ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மிகப் பெரிய சக்தி உபாசகி  அம்பாள் மிகப் பெரிய சிஷ்யையான லோபமுத்ரா தேவியைப் பற்றி ‘லலிதா திரிசதை’ யில் கூறப்பட்டுள்ளது. ஶ்ரீ வித்யா உபாசனை செய்பவர்கள் சிவப்பு நிற பட்டு உடுத்துவர். அதனால் சிவப்பு நிற பட்டு தான் லோபமுத்ரா அன்னைக்கு திருமண ஆடையாக நெய்யப்பட்டது.
  • லோபமுத்ரா அன்னை அம்பாளையே அடைய வேண்டி நின்றதால் ‘லோபா’ என்று பெயர் வந்தது. ‘முத்ரா’’ என்றால் ஆனந்தத்தைப் பெற்றவள் என்று பொருள்
  • லோபமுத்ரா அன்னை காலில் அணிந்திருக்கும் மெட்டி  ‘சரளி’ எனப்படும் ஒரு அபூர்வ வகையான வைரக்கல்  ஆன அணிகலனாகும். அகத்தியர் தான் தன் மனைவிக்கு அதை  கொடுத்தார்.
  • லோபமுத்ரா அன்னையின் அருகில் உள்ள மயில் , அவரது தோழியான ‘சேதத்தரணி’ என்பவராவார்.
  • அகத்தியர் அருகில் உள்ள மான், அவரின் முதன்மைச் சீடரான புலஸ்தியர் மகரிஷி ஆவார்.
  • லோபமுத்ரா அன்னையின் தோளில் அமர்ந்திருக்கும் கிளியானது மிகவும் விசேஷமானது. அன்னையின் கண்டறியப்பட்ட மகாவித்தை ஒன்று உண்டு. அது ‘ஹாதி வித்தை’. அந்த வித்துக்குரிய தேவியே லோபமுத்ரா  தான். அந்த வித்தையை உபாசனை செய்து யோக நிலையில் வந்த ஒரு பெண் தான் ‘மயூஷினி’. அவர் கிளி உருவத்தில் அமர்ந்திருக்கிறார்.
  • லோபமுத்ரா அன்னையின் கையில் உள்ளது ‘அமிர்தகலசம்’ இருக்கும். இது சிவ பெருமானால்  கொடுக்கப்பட்டது.
  • அன்னை அவர்கள் தனது  கூந்தலில் ‘பொற்காந்தல்’ எனப்படும் மலர் சூடி இருப்பார்கள்.