அகத்தியரின் பெருமைகள்

 

சிறப்புப் பெயர்கள்:

 ●          தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)

●          மாதவ முனிவர் (அதிக தவம் செய்தால்)

●          மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)

●          குருமுனி (முனிவர் களுக்கெல்லாம் குருவானவர்)

●          திருமுனி (உயர்வு உரியவர்)

●          முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)

●          பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)

●         அமர முனிவன் (இன்று வரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)

●          பொதியவரை முனிவர் (பொதிகை மலை)

●          குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

 

அகத்தியரின் சிடர்கள்:

 

1.    அதங்கோட்டு ஆசான்

2.    துராலிங்கன்

3.    செம்பூண்சேய்

4.    வையாபிகன்

5.    வாய்ப்பிகன்

6.    பனம்பாரன்

7.    கழாரம்பமன்

8.    அநவிநயன்

9.    பெரிய காக்கைபாடினி

10.   நத்தத்தன்

11.   சிகண்டி

12.   தொல்காப்பியன்

 

ஆகிய 12 பேரும் அகத்தியரின் மாணவர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை இயற்றினார்.

பெருமைகள்

 தமிழகத்தில் வாழ்ந்த  மாபெரும் சித்தரானவர் அகத்தியர். பழந்தமிழ் பாடல்களில், தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களில், வேதங்களில், இவர் பற்றிய பல குறிப்புகள் கிடைத்து உள்ளன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படும் அகத்தியர் குறித்து எண்ணற்ற செவிவழி கதைகள் கூறப்படுகின்றன

 

●          அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார்.

●          அகத்தியர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்கள் இயற்றியவர்

●          அகத்தியரால் இராமபிரானுக்கு வெற்றி கிடைக்கும் பொருட்டு அகத்தியரால் உபதேசிக்கப்பட்டது "ஆதித்ய ஹிருதயம்" எனும் ஸ்லோகம் ஆகும். இதை பாராயணம் செய்த பிறகு இராமபிரான் இலங்கையை வென்றார் என்றும் சொல்லப்படுகிறது.

●        ராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.

●  சுவேதன் என்பவன் பிணம் தின்னும் சாபம் பெற்று இருந்தான். அதை அகத்தியர்  போக்கினார்.

●        அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றினார். தொல்காப்பியத்திற்கு முன் வந்தது.

●          சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது நான்கு வேதங்களிலும் அகத்திய முனிவரை பற்றிய தகவல்கள் உள்ளன என்பது   குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை இப்படி தமிழில் உள்ள பெரும்பாலான நூல்களிலும் அகத்தியர் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன. காலத்தை கடந்து பல நூல்களில் அகத்தியரின் குறிப்புகள் இருப்பதால் அவரின் பெருமைகள் அன்றைய காலகட்டத்தில் உலகறிந்த ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று நமக்கு புரிகிறது .

●          அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கு மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன

● மகாபாரதத்தில் கண்ணை  சந்தித்து பதினெண்குடி வேளிரையும் துவாரகையிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகத்தியர் அழைத்து வந்ததாக நச்சினார்க்கினியர் அவர் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

●      சமணர்களால் போற்றப்படுபவர்கள் பட்டியலிலும் அகத்தியர் இருக்கிறார் என்றால் அவர் தன் சிறப்பு நமக்கு புரிகிறது.  (ஜாவா, சுமத்திரா தீவுகளுக்கு சென்று சைவ சமயத்தை போதித்த சிவ குருவாகவும் அகத்தியர் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.)

●          "அகத்தியர் தேவாரத் திரட்டு" என்று ஒரு நூல், தேவாரம் ஒரு லட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைப்பவை 797 தான். மற்றவை மறைந்து போயின.

●          ஆழ்வார்களின் பாடல்களை தொகுத்து நாதமுனிகளும், அகத்தியர் ஆணைபெற்றே நாலாயிரப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்ததாக வைணவர்கள் கூறுவார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

●          திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் மேல் உள்ளது அகத்தியர் அருவி. அதற்கு மேல் கல்யாணதீர்த்தம், பாணதீர்த்தம், பழங்குடி மக்கள் இப்போதும் வாழும் இஞ்சிக்குழி, தண்பொருநை நதி மூலம்-பொதிகைத் தென்றல் புறப்படும் பூங்குளம், அதற்கு மேல் அகத்தியர் மொட்டை எனும் பொதிகை மலை உச்சி. மூன்று நான்கு நாள் பயணம் செய்து மலையேறி அகத்தியரைப் பார்க்கப் போகிறார்கள். பொதிகை மலை, தமிழுக்கும் மருத்துவத்துக்கும் பிறப்பிடம் என்றும் நம்பப்படுகிறது.

●          மொழி, இனம், மதம், நாடு கடந்து இந்திய கலாச்சார வரலாற்றின் படிமமாக இந்தியா முழுவதற்குமான ஒட்டுமொத்த ஒரே படிமமாக அகத்தியர் மட்டுமே தென்படுவது வியப்பையும் பெருமிதத்தையும் நமக்கு தருகிறது என்றால் மிகையாகாது.

●          அகத்தியர் வண்டு உரு கொண்டு புஷ்பங்களில் இருந்து தேனை எடுத்து சிவ பூஜை செய்தால் ஈங்கோய் மலை எனும் ஸ்தலம் உண்டாயிற்று ( திருசெங்கோட்டு புராணம் )

●          தூங்கு எயில் எழுந்து தொடித்தோள் செம்பியன் எனும் மன்னன் காலத்தில் அவன் ஆண்டகாவேரி  பூம்பட்டினத்தின் அகத்தியர் இந்திர விழாவை எடுத்தார்  என மணிமேகலை கூறுகிறது.

●          அகத்தியர் எனும் பெயருக்கு பொருள் விந்திய மலையை அடக்கியவர் என்பதாகும்

●          இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறமையால்  வென்றார் அகத்தியர்.

●          அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்ற போது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

●          வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர்கள் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்துக்கு அழைத்து வாதாபியைக் கறியாக சமைத்து படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க, அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

●          வீரசோழிய ஆசிரியர் அவர்கள்  ‘அகத்தியன் பவனிக்கு இயம்பிய தண்டமிழ்’  என்று புகழ்ந்து உள்ளார்

●          “அகத்திய சம்ஹிதா” என்ற நூலில் அகத்தியர் மின்னோட்டத்தை ஏற்படுத்தும் மின்கலம் தயாரிப்பு பற்றியும் நீரை பிராண வாயு மற்றும் எரிவாயு போன்ற அனு கூறுகளாக பிரிக்க இயலும் என்ற மாபெரும் அறிவியல் உண்மை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தனது நூலில் எழுதி உள்ளார். (மின்கல சிந்தனை ஐரோப்பாவில் 1748 ல் பெஞ்சமின் பிராங்க்ளின் மூலம் அறிமுகமானது. ஆனால் அதே சிந்தனையை மிக நேர்த்தியாக அகத்திய மாமுனிவர் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் வழங்கி மின்னோட்டத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார்.)

●          அகத்தியம்:  அகத்தியம் என்று இங்கு சொல்ல வருவது அகத்தியரை பூஜித்தல் ஆகும். அகத்தியரை வணங்க நம்முள் அன்பு பெருகும். அன்பு  பெருக கருணை மிகும். இந்த அன்பும், கருணையும் கொண்ட நிலையே அகத்தியம். அகத்தியர் அடியார்கள் ஒவ்வொருவரும் அன்பும், கருணை உடையவராக  இருப்பார்கள் என்பது உறுதி.  இந்த அகத்திய நிலை எய்திய பின், ஒவ்வொருவரும் தங்களை சமூக சேவையில் ஈடுபட்டு, பிறவியின் பலனை அனுபவிப்பார்கள்.

●          அகத்தியர் அருளிய "அகத்தியர் 12000” என்ற நூலில் ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் காணப்படுகிறது. இந்த ஆரூட முறையில் 64 கட்டங்கள் கொண்ட ஒரு யந்திரம் பயன்படுகிறது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில் கீறி கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். (அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல்படுத்த முடியாது. இந்த இயந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையான தாகும். எட்டுக்கு எட்டு அளவில் சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்ப பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை ஆகும். இந்த ஆருட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம் என்று சொல்லப்படுகிறது.)

     அகத்தியர் நாடி ஜோதிடம் , அகத்தியர்  ஆரூடம் என்றும் நடைமுறையில் உள்ளது.

அகத்தியர் எழுதிய நூல்கள்:

 

அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

 

1.    அகத்தியர் வெண்பா

2.    அகத்தியர் வைத்தியக் கொம்மி

3.    அகத்தியர் வைத்திய ரத்னாகரம்

4.    அகத்தியர் வைத்தியக் கண்ணாடி

5.    அகத்தியர் வைத்தியம் 1500

6.    அகத்தியர் வைத்திய சிந்தாமணி

7.    அகத்தியர் கர்ப்பசூத்திரம்

8.    அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்

9.    அகத்தியர் வைத்தியம் 4600

10.   அகத்தியர் செந்தூரம் 300

11.   அகத்தியர் மணி 4000

12.   அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு

13.   அகத்தியர் பஸ்மம் 200

14.   அகத்தியர் நாடி சாஸ்திரம்

15.   அகத்தியர் பக்ஷணி

16.   அகத்தியர் கரிசில் பஸ்யம் 200

17.   சிவசாலம்

18.   சக்தி சாலம்

19.   சண்முக சாலம்

20.   ஆறெழுத்தந்தாதி

21.   காம வியாபகம்

22.   விதி நூண் மூவகை காண்டம்

23.   அகத்தியர் பூசாவிதி

24.   அகத்தியர் சூத்திரம் 30

 

போன்ற நூல்களை இவர் எழுதியதாக கூறப்படுகிறது. மேலும்

 

அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம், அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் பல  நூல்களை அகத்தியர் எழுதப்பட்டவை. வெவ்வேறு காலங்களில் வாழ்ந்த புலவர்கள் தம்முடைய படைப்புகளை அகத்தியரின் பெயரால் வெளியிட்டு இருக்கின்றனர்.