அகத்தியரை வழிபட வேண்டிய பூஜை முறை


வழிபட வேண்டிய  பூஜை முறை:

 தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.

 

பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுள் கண்மூடி மனதார கூற வேண்டும்

 

தியானச் செய்யுள்:

 

ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே

சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே

கடலுண்ட காருண்யரே

கும்பமுனி குருவே சரணம் சரணம்.

 

பிறகு பின்வரும் பதினாறு போற்றிகள் சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

 

பதினாறு போற்றிகள்:

 

1.    தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!

2.    சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!

3.    தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!

4.    விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!

5.    கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!

6.    சித்த வைத்திய சிகரமே போற்றி!

7.    சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!

8.    இசைஞான ஜோதியே போற்றி!

9.    உலோப முத்திரையின் பதியே போற்றி!

10.   காவேரி தந்த கருணையே போற்றி!

11.   அகத்தியம் தந்த அருளே போற்றி!

12.   இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!

13.   அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!

14.   அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!

15.   இசையால் இராவணனை வென்றவரே போற்றி!

16.   இன்னல்கள் போக்கி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

 

நிவேதனம்

 

இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூஜை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

 

அகத்திய முனிவரின் பூஜை பலன்கள்: 

●          இசையிலும் கவிதையிலும் மேன்மை உண்டாகும்.

●          கல்வித்தடை நீங்கும்.

●          புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.

●          முன்வினை பாவங்கள் அகலும்.

●          பித்ரு சாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.

●          பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.

●          பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

●          சகலவிதமான நோய்களும் தீரும்.

●          குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

 

 அகத்தியர் மூல மந்திரம் 

ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே

சாப பாவ விமோட்சனம்

ரோக அகங்கார துர் விமோட்சனம்

சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்

சற்குருவே ஓம் அகஸ்திய

கிரந்த கர்த்தாய நம


அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றி கூறியுள்ளார்.

 

மூல மந்திரம்:

                 ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி