மீன லக்கினத்தின் பொது பலன்கள்

 



q  சித்திரை மாதம் பஞ்சமி திதியும், திருவாதிரை நட்சத்திரமும் கூடிய வியாழக்கிழமை மாலையில் மரணமடையலாம்.

q  மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும் சந்திர தசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்.

q  சந்திரன்  2ல் இருந்தால் தன யோகமாகும்.  சந்திரனும்  செவ்வாயும் கடகத்திலிருந்தால் சந்திர தசை யோகத்தை அளிக்கும். பஞ்சமாதிபதியாக மனோகாரகன் சந்திரன் வருவதால் சிந்தனை மேலோங்கும். பொதுவாக புத்தி கூர்மையுள்ள புத்திரம் உண்டு. பெண் குழந்தைகளுக்கு வாய்ப்பு அதிகம்

q  செவ்வாய் குருவுடனும் சந்திரனுடனும் அல்லது இவர்களில் யாராவது ஒருவருடன் சேர்ந்தால் ராஜயோகமாகும்

பொது பலன்கள்

q  இரட்டை மீன் சின்னம்: இவர்கள் மீன்களை போலவே துறு துறு என்று இருப்பவர்கள். தூக்கத்தில் கூட வேலை செய்ய சொன்னால் செய்வார்கள்.

q  ஞானி, பிராமணர், பெரியாரிடத்தில் மரியாதையுடையவன், சத்தியவான், பரிமளபிரியன், இரக்கமுடையவன், குளிர்ச்சியான கண்கள் உடையவன்

q  அழகான கண்களும் அனைவரையும் ஈர்க்ககூடிய தோற்றம் கொண்டவர்கள். தன்னடக்கத்துடனும் அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை கொண்டவர்கள்.இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் மிகக் கம்பீரமான தோற்றத்தையுடையவர்கள்.

q  ஏழை எளியவர்களிடத்தில் மிகவும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். வெகுசீக்கிரத்தில் பிறருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள்.

q  தயாள குணம் நிரம்பியவர்களாகவும், திறமைசாலிகளாகவும் விளங்குவார்கள்.

q  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வாக்குவன்மை பெற்றவர்களாதலால் இவர்களுடன் பேச்சுக் கொடுத்து வெற்றி பெறுவது கடினம். வாய் ஓயாமல் பேசக் கூடியவர் அல்ல வெனினும் இவர்களுடன் மற்றவர்கள் பேசும்போது வெகு ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்.இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகளைக் காட்டிலும் ஆதாயங்களே மிகுந்து காணும்.

q  குடும்பத்தில் உள்ளவர்கள் யாவரும் உங்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், அளிக்க்க் கூடிய அளவிற்கு சிறந்து விளங்குவதோடு பிரியமாகவும், நடந்து கொள்வார்கள்.

q  கடவுளிடம் பக்தியுடையவர்கள் மற்றும் விருந்தோம்பல் இயல்புடையவர்கள். சமய ஈடுபாடு உடையவர்கள். எதிரிகளுக்குக்கூட உதவி செய்யக் கூடியவர்கள். கலை மற்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

q  உணர்ச்சிவசப்படக்கூடியவர். திடீர் திடீரென்று சோர்வுறக் கூடியவர்கள், பிறருடைய மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுடைய திறமை அமுங்கியே இருக்கும். வெளிப்படாது. ஆகையால் பல இன்னல்கள் அல்லது தோல்விகளுக்கு ஆளாவார்கள்.

q  கபடு சூதற்ற வெகுளிகள், தெய்வ பக்தியும் மதப்பற்றும் உள்ளவர்கள், தான தருமம் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.

q  தைரியம் குறைத்தவர்கள். கலை ஆர்வமுள்ளவர்கள். முகஸ் துதிக்கு ஆளாவார்களாதலால் பிறர் எளிதில் இவரைப் புகழ்ந்து பேசியே தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

q  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோரும் இவர்களுக்கு பெரு மதிப்பும், மரியாதையும், கௌரவமும், பிரியமாகவும், நடந்து கொள்வார்கள்.

q  பிறர் செய்கிற வேலைகளில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். இவர்கள் சுகபோகமாக வாழ வேண்டும் என்றே விரும்புவார்கள். தற்புகழ்ச்சி அதிகம் கொண்டவர்கள். இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக பாவிக்கும் மனம் கொண்டவர்கள்.

q  நிறைய பணம் சம்பாதித்தாலும் பெருமளவிற்கு செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். சமய ஈடுபாடு உடையவர்

q  போகம், உணவு, பயணங்கள், ஞானம், மோட்சம் இவைகள் பொதுவாகவே ஜாதகரை ஈர்க்கும். நன்றாக உணவருந்தி இளைப்பாறலை மனம் தேடும்.

q  ஆழ்மன சிந்தனை தியானித்து செயல்படல், ஆலோசனை வழங்கல் முதலிய சிறப்பம்சம்கள் இந்த லக்னத்திற்கு இயல்பாகவே உண்டு.

திருமண வாழ்க்கை

q  தியாக மனப்பான்மை கொண்ட மீன லக்னக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை வந்த பிறகுதான் வாழ்வில் வசந்தம் என்பது ஏற்படும். இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை நுண்ணறிவு உடையவர்களாகவும், சிக்கனம் அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்.

q  மீன லக்ன வாழ்க்கை துணை  பொதுவாக பொறுமை உடையவர்களாகவும் , கோபம் வந்தால் கத்தித் தீர்ப்பவர்களாகவும் இருப்பர்.  வாழ்க்கை துணை நல்ல புத்திசாலிகள் சற்று ஆரோக்கியம் குறைந்தவர்கள் உழைப்பாளிகள் ஆவார்.

q  இவர்களின் 7 – ஆம் அதிபதி உச்சமானால், இவர்களுக்கு மிகப்பெரிய வேலை செய்பவரோ, நல்ல கல்வி கற்றவரோ, தொழிலில் கொடிகட்டிப் பறப்பவரோ வாழ்க்கைத் துணையாக அமைவார்.

q  மிகவும் புத்திசாலியாக இருப்பார் சிலர் வியாபாரத்தில் மிகச்சிறப்பாக இருப்பர்.

q  மீன லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் , மிகக் கஷ்டம் ஏனெனில் மீன லக்ன 7 – ஆம் அதிபதி மீனத்திலேயே நீசமாவார். கல்யாணம் ஆனவுடன் இவர்களுடனே தங்கி இவர்களுக்கு தர்மசங்கடத்தையும், கஷ்டத்தையும் கொடுப்பார். நீசபங்கம் ஆனால் சரியாகி விடும்.

q  மீன லக்கினத்தில் பிறந்தவர்கட்குக் கன்னி ராசி ஏழாமிடமாக வரும். அதனால் வாழ்க்கை துணை உடல் பலவீனப்படும். அடிக்கடி வாழ்க்கை துணை கும் சிறு நோய்கள் வரும்.

q  ராகு, கேது, கன்னியில் இருந்தால் அன்னியத்தில் அமையும். வாழ்க்கை துணை எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பார்.

q  மீன இலக்கினகாரர்கள் ஆண்களாக இருந்தால் இல்லறத்தில் மனைவிகளிடம் திட்டு வாங்குபவர்கள் அதிகமாக இவர்களாகத்தான் இருக்க கூடும்.

q  இருதரா அமைப்பு உள்ள லக்னத்தில் இதுவும் ஒன்று. மீனத்தில் சுக்ரன் உச்சம் பெறும்போதுஏழாம் வீடான கன்னியில் சுக்ரன் நீசம்பெறும் என்பதால்  மீன இலக்கின ஆண்கள் அழகான பெண் அல்லது வெகுளியான பெண்களின் அன்புக்கு அடிமையாகி தனக்காக ஒரு வாழ்க்கையும் ஊருக்காக ஒரு வாழ்க்கையும் வாழ்வார்கள்

தொழில்

q  மீன லக்கினத்திற்கு லக்கினதிபதியும் 10க்கு உடையவனும் குரு என்பதால் பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும்

q  ஓரிடத்தில் அமர்ந்து செய்யும் சிந்தனை சார்ந்த துறையே இவர்களுக்கு வெற்றியை ஈட்டி தரும்

q  பக்திமார்க்கம், ஆராய்ச்சி, சோதிடம், தொல்லியல் வரலாற்று, துறை இவற்றில் ஒன்றினை தேர்ந்தெடுத்தல் சிறப்பு.

q  துறை சார்ந்த ஆராய்ச்சி மனோ பாவம் இருக்கும் எனவே சரியான துறையை தேர்ந்தெடுத்திருந்தால் அதில் மேன்மை அடைய வாய்ப்பு உள்ளது.

q  லக்னாதிபதி குருவே கர்ம ஸ்தானாதிபதியாகவும் வருவதால், ஆசிரியர், நீதிமன்றம், பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் ஆலோசகர் போன்ற உயரிய துறைகள் இயல்பாகவே கைகொடுக்கும்.

q  பெரும்பாலும் இவர்கள் கல்வித்துறை, ஆன்மிகம், மருத்துவம், நீதித்துறை, தூதரகம், வங்கியில் பணி செய்தல், கடற்படை சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவார்கள்

q  மீன லக்னக்காரர்களுக்கு குரு பலம் நல்லபடியாக அமைந்தால் தொழிலதிபர்களாக பிரகாசிப்பார்கள். செவ்வாய், புதன் இருவரின் பலம் ஜாதகத்தில் உடன் சேரும் போது பல தொழில்கள் செய்யும் யோகம் உண்டாகும். கட்டிட கான்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், சூப்பர் மார்க்கெட், தங்கம், நவரத்தின வெள்ளி வகை வியாபாரத்தில் பெரிய டீலராக இருப்பார்கள். புதன் பலம் அதிகமாக இருந்தால் கூட்டுத் தொழில், பங்கு வர்த்தகம் கை கொடுக்கும்.

q  4ல் குரு  இருப்பது சிம்மாசன யோகம், உயர்ந்த பதவி அதிகாரம் அந்தஸ்து கிட்டும். மேலும் அரசியல், அரசு அலுவலகம் கல்வி, நீதிமன்றம், கஜானா, வருவாய்த்துறை, வங்கி, மருத்துவம், சமயம் ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையக்கூடும். கடலை, வாழை, தேன். கரும்பு தங்கம் புஷ்பராகம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்திபெறும்

q  10ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம் பெற்று பலமாக அமைந்து விட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கௌரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும்.

q  10 ல் புதன் அமைந்தால் புதன் 7ம் அதிபதி என்பதால் நெருங்கியவர்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்வது அல்லது உத்தியோகம் செய்வது நல்லது. குறிப்பாக மீன லக்னம் உபய லக்னம் என்பதால் கூட்டுத் தொழில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

q  குரு, சந்திரன், கேது சேர்க்கை பெற்று 10 ல் இருந்தாலும் திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் சமூக நலப் பணிகளில் ஈடுபாடு, மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பணிகள் செய்யும் அமைப்பு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு பணிபுரியும் வாய்ப்பு உண்டாகும்.

q  சூரியன் 10ல் அமைந்தால் அரசு சார்ந்த துறைகளிலும், செவ்வாய் 10 ல் அமைந்தால் நிர்வாகத் தொடர்புடையத் துறைகளிலும் மற்றும் பூமி, மனை, ரியல் எஸ்டேட், போன்றவற்றிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

q  குரு  பகை நீசம் பெற்று பாவ கிரக சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், அஸ்தங்கம் பெற்றிருந்தாலும், 6,8,12 ல் மறைந்திருந்தாலும் நிலையான வருமானம் இல்லாமல் கஷ்ட ஜீவனம் செய்ய வேண்டியிருக்கும்.

q  10ம் வீட்டையோ 10ம் அதிபதி குருவையோ சனி பார்வை செய்தால் தகுதிக்கு குறைவான வேலை கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.

கிரகங்கள்

       சூரியன் :  ரண, குண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்திற்கு அதிபதியானதால் அசுப ஆதிபத்தியம் ஏற்படுகிறது. இவர் குருவுக்கு நண்பர்.ஆனாலும் இவர் வலுத்தால் பலம் பொருந்திய விரோதிகள் ஏற்படுவார்கள். ஆனாலும் அவர்களை வெல்லும் சக்தி ஏற்படும்.6ல் ஆட்சி பெற்றால் வணங்காமுடி என்ற பெயரெடுப்பார். ஆனால் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார். நேரம், காலம், பொருள் ஆகியவற்றை வீணாக்குவார்.

       சந்திரன் :பூர்வ புண்ணிய ஸ்தானாதிபத்தியம் பெறுவதால் சுபராகிறார். இவர் வலுப்பது நல்லது. தனம், புத்தி, மேதாவிலாசம், தீர்க்க தரிசனம், அதிர்ஷ்டம் ஆகியவை அமையும். அறிவுள்ள சத் புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வபக்தியும் தெய்வ பலமும் கிட்டும். இவர் கெட்டால் மேலே கூறிய நற்பலன்கள் கிடைக்காது.

       புதன் : 4, 7 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெற்றுப் பாபியாகிறார். லக்னாதிபதிக்குச் சத்துருவுமாகிறார். ஆனால் சுகம் வித்தை, தாயார், வீடு. வாகனம் ஆகியவைகளையும் வாழ்க்கைத்துணை, தொழிலில் கூட்டாளி, திருமண வாழ்க்கை, சுகம் ஆகிய முக்கிய மானவைகளுக்குக் காரகராகிறார். இவர் குரு,செவ்வாய் போன்றவர்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்று வலுத்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்; இவர் 2.6.8 ஆகிய இடங்களில் இருந்தால் ஆரோக்கியம் கெடும். இவர் 1 அல்லது 7ல் இருப்பது நல்லதல்ல. தோஷம் வலுக்கும். 10ல் இருந்தால் படிப்பும் உத்தியோகமும் சிறப்பாக அமையும்.

       செவ்வாய்: தனஸ்தானமான 2ஆம் இடத்திற்கும் பாக்கியஸ்தானமான 9ஆம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் யோகாதிபதியாகிறார். இவர் வலுத்தால், பணவசதி, அரசாங்க ஆதரவு, அதிர்ஷ்டம், உத்தியோகம் ஆகிய ஏற்றமான பலன்களை அளிப்பார். இவர் கெட்டால் நஷ்டம்.

       குரு: லக்னத்திற்கும் 10ஆம் இடத்திற்கும் அதிபதியான குரு 10ஆம் இட ஆதிபத்தியத்தால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெறுகிறார் என்பது பொதுக் கருத்து. இவர் வலுத்தால் நீண்ட ஆயுள், நல்ல பண்புகள். தனவசதி, அதிகாரம், அந்தஸ்து, உத்தியோகம், அரசால் கவுரவம் ஆகிய நற்பலன்களை அளிப்பார். கெட்டால் மேலே குறிப்பிட்ட பலன்கள்  குறிப்பாகப் பெயரும் பொருளாதாரமும் கெடும்.  7ல் அல்லது லக்னத்தில் இருப்பது நல்லதல்ல

       சுக்கிரன்:  சுக்கிரன் 3,8 ஆகிய இரண்டு கெட்ட ஸ்தானாதிபத்தியம பெற்றதால் பாபியாகிறார். ஆனால் 8, 3 ஆகிய இரண்டு இடங்களும் ஆயுள் பலத்தைக் குறிப்பவை ஆகையால் இவர் வலுப்பது நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும். இவர் வலுத்தால் பொருளாதாரம் நன்றாக இருக்காது. இவர் 8ல் ஆட்சி பெற்றால் சரள யோகமாகும். இவர் லக்னத்தில் உச்சம் பெற்றால் நீண்ட ஆயுள், பெயர், புகழ் கூடும்

       சனி: விரயஸ்தானமான 12ஆம் இடத்திற்கும் உபய லக்னத்திற்கு மாரகஸ்தானமான 11ஆம் இடத்திற்கும் அதிபதியான சனி பாபியாகிறார். இவர் கெட்டால் வருமானக் குறைவும் உடல் நலக் குறைவும் ஏற்படும். இவர் 3, 5, 6, 8, 11ல் இருப்பது நலம்

நட்சத்திர தன்மைகள்

மீன  லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: பூரட்டாதி  3, 4 பாதங்கள், உத்திராட்டாதி, ரேவதி லக்கின புள்ளி இருக்கும் பொது மீன லக்கின பலன்கள்  பார்ப்போம்.

இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.

அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்

மீனம் லக்கினம்  -  பூரட்டாதி  3, 4 பாதங்கள்

 

பூரட்டாதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு தாக்கத்துடன் இருப்பார்.

பூரட்டாதியின்  அதிபதி குரு  ஆவார். ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர்கள். வயதில் சிறியவர்களிடம்கூட மரியாதையுடன் பழகுவார்கள். இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு முடிந்த உதவி செய்வார்கள். சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரும் மதிக்கத்தக்கப் பண்பாளர்களாக இருப்பார்கள். நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிந்து கெட்டவற்றை விலக்கிவிடுவார்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பார்கள்.மற்றவர்கள் செய்த உதவியை மறக்க மாட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவார்கள். தன்னம்பிக் கையும் தைரியமும் கொண்டிருப்பார்கள். தெய்வ நம்பிக்கை மிகுந்தவர்கள். வெளிப்படையாக நடந்துகொள்வார்கள்.

 

மீனம் லக்கினம்  - உத்திராட்டாதி

உத்திராட்டாதி   நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் சனி, குரு தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனி ஆவார். பள்ளியில் படிக்கும் போதே போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவார்கள். அதிகாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள். உண்மையாக நடந்துகொள்வார்கள். மற்றவர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தவறு செய்பவர்களைக் கண்டால் அவர்களைத் திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள்.  மற்றவர்களின் கவனத்தையும் எளிதில் கவர்வார்கள். அன்பா கவும் ஆறுதலாகவும் பேசி மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள்.  உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். தெய்வ பக்தி நிறைந்தவர்களாக இருப்வார்கள். பெற்றோரிடமும், மனைவி, பிள்ளைகளிடமும் அன்பும் கனிவுமாக நடந்துகொள்வார்கள். ஊர்ப்பொது நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்துகொள்வார்கள். எப்போதும் எதையேனும் சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். பிள்ளைகள் தவறு செய்யக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

 

மீனம் லக்கினம்  - ரேவதி

ரேவதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  புதன் தாக்கத்தில்  இருப்பார்.

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் ஆவார். இரக்க சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். 'எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்' என்று விரும்புவார்கள். வயதை கணித்துச் சொல்லமுடியாதபடி இளமையான தோற்றம் பெற்றிருப்பார்கள். பிள்ளைகளுக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள். அதே சமயம் அவர்கள் தவறு செய்தால் கண்டிக்கவும் தயங்க மாட்டார்கள். அனுபவ அறிவால் மற்றவர்களை வழிநடத்துவார்கள். புதுப்புது சிந்தனைகள் உங்கள் மனதில் எழுந்தபடி இருக்கும். இனிமையான பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவார்கள்.  எத்தனை சோதனைகள் வந்தாலும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை இழக்க மாட்டார்கள். அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பழகுவார்கள். எப்போதும் இனிமையாகப் பேசுவார்கள். ஆன்மிகப் பெரியோர்களின் அறிமுகமும் பெற்றிருப்பார்கள்

சொல்ல வேண்டிய மந்திரம்

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய ஸ்ரீரங்கநாதர் துதி மனதார சொல்லி வருவது நல்லது

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா ! அமரரேறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்

இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்,

அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !

வேதநூற் பிராயம் நூறு மனிதர்தாம் புகுவரேனும்,

பாதியு முறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு

பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம்

ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே !

ஊரிலேன் காணியில்லை, உறவுமற் றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

காரொளி வண்ணனே ! ஓ கண்ணனே ! கதறுகின்றேன்

ஆருளர் களைக ணம்மா ! அரங்கமா நகருளானே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

 

 

 

 

 


கும்ப லக்கினத்தின் பொது பலன்கள்

 






v  செவ்வாயும், சுக்ரனும் கூடி இருந்தால் பிரபலமான யோகத்தை கொடுப்பார்கள்.

v  குரு மாரகம் கொடுக்க மாட்டார். செவ்வாய், சந்திரனுடன் கூடி இருந்தால் மாரகம் கொடுப்பார். மாரகதிபதிகள் மாரக ஸ்தானத்தில் இருந்தால் மாரகதிற்கு சமமான கண்டத்தைக் கொடுப்பார்கள்

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புத திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலம் ஆகும்

v  சித்திரை மாதம், பஞ்சமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், வியாழக்கிழமை மாலை மரணம் ஏற்படலாம்.

v  சுக்கிரன், செவ்வாய் சேர்க்கை நல்லது அல்ல. மேலும்   சுக்கிரன், செவ்வாய், ராகு  மற்றும் சுக்கிரன், சூரியன், செவ்வாய்  சேர்க்கை இருந்தால் உடல் நலம் பாதிக்கும்

 பொது பலன்கள்

v  குடம் சின்னம்: கும்பம் என்பது ஒரு பானையிலிருந்து பெருகியோடும் நீரினை குறிப்பதாகும். இதனை நீர் தாங்கி சின்னம் என்றும் சொல்வது உண்டு.

v   பெண்களிடத்தில் பிரியமுடையவன், அகன்ற வயிறுடையவன், தன்னையே புகழ்ந்து பேசுபவன் , பிறர் செய்யும் உதவியை உடனே மறப்பவன் , அற்ப கல்வியுடையவன்.

v  இந்த லக்கினத்தில் பிறந்தவர்கள் பிறருடன் அன்பாகவும்,பெருந்தன்மையுடனும் பழகுவார்கள். நம்பிக்கை மற்றும் நட்புக்கு பாத்திரமானவர்கள். அதிக நினைவாற்றல் உள்ளவர்கள். உள்ளத்தில் தோன்றிதை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார்கள். சிலர் குடும்ப பொறுப்பை சிறு வயதிலே ஏற்பார்கள். வாழ்க்கை வசதி நன்கு அமையும். இவர்கள் ஒரு தத்துவஞானி எந்த ஒரு விஷயத்தையும், துருவிப்பார்த்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள்.

v  பழைய சம்பிரதாயங்களில் ஆர்வம் காட்டாது சமூகசீர்திருத்த கொள்கையில் நாட்டம் கொண்டவர்கள். இவர்கள் எதையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ச்சி செய்து விளக்கம் காண்பவர்கள். எதையும் ஆழ்ந்து நோக்கும் தன்மையும் தீர ஆலோசித்து செயல்படும் தன்மை உண்டு. கும்ப லக்னத்தில் தோன்றியவர்கள் நியாயம் அநியாயம் இவற்றைத் தெளிவாக யாராக இருந்தாலும் பயமின்றி எடுத்துச் சொல்வார்கள்.

v  வாழ்க்கையில் பல ஏற்றதாழ்வுகளை இவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். பெண்களுக்கு கும்ப லக்னம் உகந்தது. இந்த லக்னத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு வாழ்க்கை துணைவியாக கிடைக்க பெற்றால் வாழ்வு சிறக்கும்.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர்

v  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் குறுகிய எண்ணம் கொண்டவர்கள். கல்வியில் தேர்ச்சி இல்லாதவர்கள். நன்றி மறப்பவர்கள், பழி பாவத்திற்கு அஞ்சாத குணம் உடையவர்கள். சிவந்த கண்களையுடையவர்கள்.

v  நேர்மை, ஒழுக்கம், நற்குணம், அறிவுத்திறன், வாக்கு வன்மை இவை உள்ளவர். சிற்றின்ப இச்சையும் அதிகம் உள்ளவர்.

v  பல கஷ்டங்கள் இருந்தாலும் அச்சமின்றி செயல்படுவார்கள் சமயோசிதமாக செயல்படக் கூடியவார்கள். புத்திர, மித்திரர் மேல் பாசம் வைப்பவர். எல்லாரையும் பகைத்துக் கொள்வதால் வேண்டாதவர்களே அதிகம் இருப்பர். கலை, இலக்கியம், நாட்டியப் பயிற்சி, சிற்பக் கலைகளில் தேர்ச்சி பெறுவார். மனித இனத்திற்குச் சேவை செய்யும் மனப்பான்மையும் உண்டு.

v  இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதி வழங்குவதில் சமர்த்தர். இதனால், நீதிபதி போன்ற பதவிகளையும் வகிப்பார். எழுத்துத் தொழில், வேதாந்தம், தத்துவம், ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு உண்டு. விஞ்ஞானத் துறைகளிலும் ஈடுபாடு உண்டு.

v  தியானம், யோகம், ஆசனம், ஜபம், பூஜை, பிராணயாமம் இவற்றில் பற்று அதிகம். மறைமுகமாக யாருக்கும் தெரியாமல் பிறருக்கு உதவி செய்வார்.

v  வலுவான  உடற்கட்டையுடையவார்கள், மிகவும் தாராள சிந்தை கொண்டவார்கள். பலதரப்பட்ட விருந்துகளுக்கும், கிளப்புகளுக்கும் போய்வர விருப்பம் அதிகம்  அதன் விளைவாய் அவப் பெயரும் ஏற்படு வாய்ப்பு உண்டு.

v  வாழ்வின் பிற்பகுதியில் தான் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்த சமயத்தில் செல்வச் செழிப்பும், சொத்துக்கள் வசதியும் கிடைக்கும்.

திருமண வாழ்க்கை

 

v  கும்ப லக்கினத்தில் பிறந்தவருக்கு இல்லறம் இவர்களுக்கு பெரும்பாலும் வெற்றி அடைவதில்லை. விசித்திரமான ஜோடி பொருத்தமற்ற திருமணமே அமையலாம்.

v  இவர்களின் 7-ம் வீடு சிம்மம். அதிபதி சூரியன். இவர்களின் வாழ்க்கைத் துணைவர் மிக கம்பீரமானவராக கோபமுடையவராக யாருக்கும் அஞ்சாதவராக தான் எனும் எண்ணம் கொண்டவராக இருப்பார். மேலும் சிம்ம ராசி வறண்ட ராசியாகும எனவே வாழ்வில் போதிய திருப்தி அமையாது.

v  கும்ப லக்ன ஜாதகரை அவரின் வாழ்க்கைத் துணைவர் அடக்கி ஆள்வார் . கும்ப லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் சொல்ல முடியாத வீரத்தோடும் புகழோடும் செல்வாக்கோடும் இருப்பார். அவரே நீசமாகிவிட்டால் அதிர்ஷ்டம் இல்லாதவராகவும் , திறமை இல்லாதவராகவும் அமைந்துவிடுவார் .

v  பொதுவாக தம்பதியர்க்கு சினிமா, நாடகம், நாட்டியம் முதலிய கலைகளில் ஆர்வம் அமையும். கும்ப லக்கினகாரர்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் மனைவி  நற்குணங்களும், பெருந்தன்மையும் உடையவராகக் கணவனைக் கவர்வார்கள்.

v  இவர்களுடைய வாழ்க்கைத் துணை சற்று உயரமாகவும், எடுத்த முடிவுகளில் மாறாதவராகவும், தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்லக்கூடிய அளவிற்கு தங்களை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்.

v  தான் எந்த அளவு படிப்பிலும் அறிவிலும் உயர்ந்தவராக வேண்டும் என்று எண்ணுகிறாரோ அந்த அளவு தன் வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள்

தொழில்

 

v  செவ்வாய் ஆட்சி, உச்சம், திரிகோணம் போன்ற அமைப்புக்களில் இருந்து குருவின் பார்வையும், சூரியனின் அருளும் இருந்தால் கூட்டுத் தொழில், கான்ட்ராக்ட், ஏஜென்சி, கட்டிட தொழில்களில் நல்ல உயர் உச்ச நிலையை தொடலாம்.

v  கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள்  வேலையின்றி சும்மா உட்கார்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை.

v  எலக்டிரிகல் என்ஜினீயரிங், மருத்துவம், கணிதம், அன்னிய பாஷைகள் ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகளாக விளங்குவர். அத்தகை தொழில் ஆர்வம் இருக்கும்.

v  தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்என்பதால்  தைரியம், வெற்றி, சகோதர அனுகூலம், பெரிய பதவி, ராணுவம், போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றில் உத்தி யோகம், லக்ஷ்மிகடாக்ஷம் ஆகிய சுப பலன்களைக் கொடுப்பார்.

v  அரசு அலுவலகம் காவல், ராணுவம், மருத்துவம். தொழிற்சாலை, தீயணைப்பு படை,கட்டிடத்தொழில் பொறியியல்துறை. வங்கி,தபால், ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையலாம்

v  கும்ப லக்கினக்காரர்கள் பொதுவாக மக்களே ஆட்சி செலுத்தக்கூடிய துறைகளான காவல்துறை, பாதுகாப்புத்துறை போன்றவற்றில் உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்பு கிடைக்கும்

v  செவ்வாய் வலுவாக அமைந்து, சூரியனுடன் சேர்ந்து நல்ல கிரகங்களின் பார்வை பெற்று இருந்தால் உயர் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் உயர் பதவிகள் வகிப்பார்கள். மேலும் இவர் 3 -ல் ஆட்சியானாலூம் 10-ல் ஆட்சியானாலும் நல்ல உத்தியோகம் கிட்டும்.

v  புது புது ஐடியாக்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால தேவைக்கேற்றவாறு செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள்.ஒரே தொழிலில் இல்லாமல் பல வேலைகளில் ஈடுபட விரும்புபவர்கள். எந்த வேலை செய்தாலும் அதில் புதிய நுணுக்கங்களை கண்டறிவதன் மூலம் இவர்களுக்கு புகழ் உண்டாகும்.

v  செவ்வாய் வலுக்க கட்டிடப்பொருள், தீப்பெட்டி, வீட்டுமனை,மண்ணெண்ணெய், மின் தளவாடங்கள், தங்கநகைம் மற்றும் பவழம் ஆகியவற்றின் வியாபாரம்  செய்து விருத்தி அடைவார்கள்

v  செவ்வாய், சூரியன், குரு, சந்திரன் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக இருந்தால் சமுதாயத்தில் மற்றவரால் மதிக்கப்படக்கூடிய அளவில் பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று உடன் சந்திரன் ராகுவும் அமையப் பெற்றால் மருத்துவத்துறையில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக விளங்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

v  செவ்வாய், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறந்த பொறியாளராகும் யோகம், கம்ப்யூட்டர் துறைகளில் சாதனை செய்யக்கூடிய திறன் உண்டாகும்.

v  10ல் ராகு , சனி சேர்ந்து இருந்து நல்ல கிரக பார்வை இல்லை என்றால்  சட்டத்திற்கு எதிரான தொழில்களில் ஈடுபடுவார்கள்.

v  செவ்வாய், ராகு, கேது  சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், செவ்வாய் பலமிழந்திருந்தாலும், சனி பார்வை 10ம் வீட்டிற்கு இருந்தாலும் வாழ்வில் ஒரு நிலையான தொழில் இல்லாமல் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும்

கிரகங்கள்

Ø  சூரியன் : 7க்குடையவர் சனிக்குத் தந்தை என்றாலும் இருவரும் பகைவர்கள் ஆனாலும் கேந்திராதிபதியான இவர் இந்த லக்னத்திற்குச் சுபர் என்பதே பெரும்பான்மையான கருத்து. மேலும் இவர்களுக்கு சூரியன் வலுப்பது நல்லது.

Ø  சந்திரன் : ரண, ருண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்துக்குடைய சந்திரன் பாபியாகிறார். இவர் வலுத்தால் ஆஸ்துமா, மார்பில் சளி, வயிற்றுவலி அப்பண்டிசிடிஸ், சைனஸ் போன்ற வியாதிகள் தொந்திரவு கொடுக்கும். இவர் 10-ல் நீசம் பெறுவது ஒரு விதத்தில் நல்லதே. இவர் லக்னாதிபதி சனியுடன் பரிவர்த்தனையாவது நல்லது என்ற கருத்தும் உள்ளது

Ø  புதன் : இவர் 5 மற்றும் 8 க்கு உடையவர். யோககாரர். ஆனால் புதனு ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானமாக அமைவதால் அசுப ஆதிபத்தியமே வலுப் பெறுகிறது. ஆகையால் புதன் அந்த ஜாதகருக்கு பாபி என்பதே பல ல ஜோதிடரின் கருத்து ஆகும். பொதுவில் இவர் சுபர்களுடைய சம்பந்தம் பெறுவது நல்லது.

Ø  குரு: குரு 2, 11 க்கு உரியவர். தனம், லாபம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களுக்குக் குரு அதிபதியாகிறார். இவரே தனகாரகராவதால் இவரின் முக்கியத்துவம் கூடுகிறது. ஆனாலும் இவரைச் சுபர் என்றோ யோகாதிபதி என்றோசொல்ல முடியாது. குரு தனித்து இருந்தால் நன்மையை செய்ய முடியாது. ஆனால் இவருடன் சேர்ந்தக் கிரகத்தின் காரக பலனையும், இவர் பார்க்கும் பாவத்தையும் விருத்தி செய்வார்

Ø  செவ்வாய்: தைரியஸ்தானமான 3ஆம் இடத்திற்கும், ஜீவன ஸ்தானமான 10ஆம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் சுபராகவே சொல்லப்பட்டுள்ளது.

Ø  சுக்கிரன்: கேந்திர ஸ்தானமான 4ஆம் இடத்திற்கும் திரினேஸ்தானமான 9 ஆம் இடத்திற்கும் அதிபதியாவதால் சுக்கிரன் சிறப்பு விதிப்படி சிறந்த ராஜ யோககாரகராகிறார்.  கேந்திராதிபத்தியமும் கோனாதிபத்தியமும் ஒரே கிரகத்திற்கு ஏற்பட்டால் அந்த கிரகம் பிரபல ராஜயோகத்தைத் தரும். சுக்கிரன் வலுத்தால் நல்லது.

Ø  சனி: லக்னம்,விரயம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் சொந்தமான சனி சுபரே. காரணம் லக்னம் மூல திரிகோணஸ்தானமாக அமைவதே. இவர் வலுத்தால் தேகசுகம், கவுரவம், பெயர், புகழ், வருமானம் ஆகியவை ஏற்றம் பெறும், ஆயுள் விருத்தியடையும். இவர் கெடக்கூடாது

கும்பம்   லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி முதல் 2 பாதங்கள.

இவற்றில் உள்ள ஒன்பது பாதங்களில் எந்த புள்ளியில் லக்கினம் அமைகிறதோ அதற்கேற்ப சூட்சம விதிப்படி எல்லாவித செயல்களும் மாறுபடும்.

அந்த நட்சத்திரத்தின் தன்மையை பார்ப்போம்

கும்பம் லக்கினம் - அவிட்டம் 3, 4 பாதங்கள்

அவிட்ட  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  செவ்வாய், சனி தாக்கத்துடன் இருப்பார்.

அவிட்டத்தின்   அதிபதி செவ்வாய் ஆவார். நல்ல  தோற்றத்துடனும், திடமனதுடன், கோப குணங்களுடன், செல்வமும், செல்வாக்கும் பிறரின்  வழிகாட்டுதலின் உதவியால் வருமானம் பெறுவார்கள். இவர்கள் காரியவாதிகள். இவர்கள்  புத்தி சாதுர்யத்தாலே அல்லது சூழ்ச்சியாலோ தனது காரியத்தில் வெற்றி பெறுவார்கள். நல்ல ஆடைகளை  அணிவார்கள். தனது குழ்ந்த்தையிடன் அன்பாக இருப்பார்கள். படிப்பில் ஆர்வம் இல்லை என்றாலும் பட்டம் பெறும் சாமர்த்தியசாலிகள்.

கும்பம் லக்கினம் சதயம்

சதய  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர் ராகு, சனி  தாக்கத்துடன் இருப்பார்.

இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். இரக்க சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயங்கமாட்டீர்கள். நட்புக்கு மரியாதை தருவார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நீங்கள் நாசூக்காகச் சுட்டிக் காட்டித் திருத்துவார்கள்.படிப்பை விட விளையாட்டுகளில்தாம் ஆர்வம். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் நலனுக்காகப் போராடுபவர்களாக இருப்பார்கள். குழந்தைப் பருவத்தில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். மற்றவர்களை நம்பி உங்கள் பொறுப்புகளை ஒப்படைக்க மாட்டார்கள். கடினமான காரியங்களையும் சவாலாக ஏற்று செய்து முடிப்பார்கள்

 

கும்பம் லக்கினம் - பூரட்டாதி  1, 2 பாதங்கள்

பூரட்டாதி  நட்சத்தர பாத  லக்கினத்தில்  பிறக்கும் ஜாதகர்  குரு,  சனி  தாக்கத்தில்  இருப்பார்.

பூரட்டாதிநட்சத்திரத்தின் அதிபதி குரு ஆவார். இரக்க சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இயற்கையெழிலை ரசிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். நவீன ரக ஆடைகளையும் நகைகளையும் அணிவதில் விருப்பம் கொண்டிருப்பார்கள். எல்லோருடனும் சேர்ந்து வாழவேண்டும் என்று நினைப்பார்கள். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நட்புக்கு முக்கியத்துவம் தருவ ர்கள். வாழ்க்கைத்துணைக்குப் பூரண சுதந்திரம் கொடுப்பார்கள். அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டடார்கள். மற்றவர்கள் போற்றும்படி உயரிய பண்புகளைப் பெற்றிருப்பார்கள். பெற்றோர்களிடமும் உடன்பிறந்தவர்களிடமும் அன்பாக நடத்துவார்கள். உண்மையை நிலைநாட்ட போராடுவார்கள்.வருமானம் வரக்கூடிய தொழிலை சரியாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம்

 

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வு அமைய சிவன் துதி மனதார சொல்லி வருவது நல்லது.

ஈசனடி போற்றி யெந்தையடி போற்றி

தேசனடி போற்றி சிவன்சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலனடி போற்றி

மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி

சீரார் பெருந்துறைநம் தேவனடி போற்றி

ஆராத இன்பம் அருளும்மலை போற்றி !

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நிழலே !

ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.