திருவாதிரை - 2

நம் தமிழ் - திருவாதிரை

நட்சத்திரம் -திருவாதிரை தொடர்ச்சி

குடும்ப வாழ்க்கை

கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்கள் ஆதலால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையே. வாழ்க்கை துணை, பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியும்

நண்பர்கள்

உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே நட்பு வட்டம் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். ஆனாலும் அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடன் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். தங்களின் உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும் விரும்புவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி தவிர்ப்பது நல்லது

தொழில்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும். தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.

மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள். நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் இவர்களில் பலர் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும், மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள்

தசா பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் ராகு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

ராகு தசை:
ராகு தசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையுடன் கருத்து வேறுபாடு, பெரியவர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை, உடலில் வியாதிகளால் தொல்லை போன்றவை ஏற்படும். ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும். மேலும் செல்வ நிலை உயரும். குரு தசை:
இரண்டாவதாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகள் மற்றும் பொருளாதார மேன்மைகள் உண்டாகும். சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை என்றாலும் சனி நல்ல பலம் பெற்று அமைந்திருந்தால் இந்த தசா காலத்தில் எதிலும் முன்னேற்றம், வேலையாட்களின் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படும். ஆனால் சனி பலமிழந்திருந்தால் அதாவது தீய நட்சத்திரம் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், அக்கினியால் பயம் ஆகியவை ஏற்படும். புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை புதன் தசை ஆகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இந்த தசை காலங்களில் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். மேலும் ராசி அதிபதியின் தசை ஆகும். பல நன்மைகள் ஏற்படும். கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். பொதுவாக அனைவருக்கும் கேது தசை நன்மை தராது. எனவே இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

பொது பரிகாரம்

திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளைத் திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டிலில் இடுத்தல், காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்

4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

திருவாதிரை 1ம்பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பார்கள். எதிலும் ஒழுங்கையும் நேர்மையையும் விரும்புவார்கள். சற்று முரட்டு குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். புதிதாகப் பார்ப்பவர்களிடம் கூட பல காலம் பழகியவரைப்போல் எளிதில் நட்பு கொண்டுவிடுவார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற ரீதியில் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவார்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இருப்பார்கள். தன் வயதை ஒத்தவர்களை விட, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களின் நட்பையே அதிகம் பெற்றவராக இருப்பார்கள். பிற மொழிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள் \. வயதானாலும் குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைவீர்கள்.

திருவாதிரை 2ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சனி பகவான் இருக்கிறார் எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் மற்றும் செயல்பாடு இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார்கள். பேசும்போது சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாக பேசி, மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாவார்கள். பேசும்போது கூடுமானவரை பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். அவ்வளவு சுலபத்தில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காக கடுமையாக படுபாடுவார்கள்

திருவாதிரை 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதி சனி என்பதால், ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் நிலை அமையும். பிறரை பற்றி இகழ்வாக புறம் பேசுவார்கள். உடல் நோயுடன் அழுக்கு ஆடைகளை அணிந்து இருக்கும் அமைப்பு வரும். பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் சண்டைகளை காண்பதில் விருப்பம் பெற்றிருப்பார்கள். உடன் பிறந்த சகோதரர்களை விட சகோதரிகளே அதிகம் உதவி செய்வார்கள். மூலிகைகள் பற்றி அறிந்து கொள்வதிலும், மூலிகைகளைத் தேடி அலைவதிலும் அலாதி பிரியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தமான ஆளாக இருப்பார்கள்.

திருவாதிரை 4ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிஷ்டங்கள், யோகங்கள் மூலம் பணம் மற்றும் லாபங்கள் ஏற்படும். பந்துஜன விரோதங்களுடன், காரியவாதியாகவும், பைத்தியக்காரன் போன்ற செயல்களுடன் நீதி நேர்மை இல்லாதவராகவும், காமாந்தகாராகவும் இருப்பார்கள். கணிதத்தில் திறமை, எழுதுவதில் சாமார்த்தியமும் இருக்கும்

பொதுவான குணங்கள்

இந்த நட்சத்திரத்தின் ராசி மிதுனம். மிதுனம் என்பது இரட்டையைக் குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒட்டியும் பேசுவார்கள்; வெட்டியும் பேசுவார்கள். ஒரு கருத்துக்கு ஆதரவும் தெரிவிப்பார்கள்; அதே கருத்தை மற்றொரு சமயம் மறுத்தும் பேசுவார்கள். அதிபதி ராகு என்பதால் முன் கோபமும் முரட்டு தனமும் அதிகமிருக்கும். காரிய வாதியாக திகழும் இவர்கள் தங்களுடைய நன்மைக்காக பொய் சொல்லவும் தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களை அடிக்கடி பகைத்து கொள்ள நேரிடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல பேசுவதால் இவர்களை இரட்டை நாக்கு உள்ளவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. சிறந்த அறிவாற்றலும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும், எடுக்கும் காரியங்களை முடிக்காமல் விடாத பிடிவாத குணமும் நிரம்பியிருக்கும்.

"இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரும் சோடை போனதில்லை" என்று ஜாதக அலங்காரம் என்ற நூல் கூறுகிறது. உங்கள் திறமையின் மீது சற்று கர்வம் இருக்கும். பள்ளி பருவத்தில் ஆசிரியர் சொல்வதையும் மேலும் யார் எதை சொன்னாலும் அதை கிரகிக்கும் ஆற்றல் உண்டு

நல்ல தோற்றம், அழகு, உடல் வலிமை, திடசித்தமும் உள்ளவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு கடினமான நபர்களை போல் காணப்பட்டாலும், இவர்களிடம் நன்கு பழகிய பின்பு அவர்களின் இனிமையான குணங்களை பலர் தெரிந்து கொள்வார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிப்பார்கள். தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றாலும் அது குறித்து தெரிந்ததை போல் பேசி சமாளிப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை

கண்டதை கவிதையாக்கும் கற்பனை வளம் கொண்டவர்கள் ஆதலால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையே. வாழ்க்கை துணை, பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள். வாழ்க்கையை ரசித்து, ருசித்து இன்பமாக வாழ்வது எப்படி என்பதை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள முடியும்

நண்பர்கள்

உறவினர்களை விட நண்பர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே நட்பு வட்டம் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். ஆனாலும் அடிக்கடி நண்பர்களுடனும், பிறருடன் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி காரசாரமாக விவாதிப்பார்கள். தங்களின் உறவினர், நண்பர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அவர்களின் வயிறும், மனமும் குளிரும் வகையில் சிறப்பாக உபசரிப்பார்கள். உறவினர்களின் ஆதரவை மிகவும் விரும்புவார்கள்

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி. ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி தவிர்ப்பது நல்லது

தொழில்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல அறிவாற்றலும் திறமையும் இருக்கும். தங்களின் பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவதுடன் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலைக்கு வருவார்கள். 39 வயதிற்கு மேல் சகல வசதி வாய்ப்புகளையும் பெற்று செல்வம் செல்வாக்குடனும், சமுதாயத்தில் நல்ல உயர்வுடனும் வாழ்வார்கள்.

மக்கள் தொடர்பு, காவல், சுற்றுலா, தொலைபேசி, கனரக மின் ஆற்றல், நிலக்கரிச் சுரங்கம் ஆகிய துறைகளில் பெரிய பதவிகளை வகிப்பார்கள். வாகனம், வாகன உதிரி பாகம், ஹார்ட்வேர் பொருள் ஆகியவற்றை விற்பவர்களாக இருப்பார்கள். நட்சத்திர ஓட்டல், கேளிக்கை விடுதி ஆகியவற்றைப் பெரிய அளவில் இவர்களில் பலர் நடத்துவார்கள். அரசுப் பணி, தனியார் துறை எதுவாக இருந்தாலும், மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக்கூடியவர்கள்

தசா பலன்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை முதல் திசையாக வரும். ராகு தசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் ராகு தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்

ராகு தசை:
ராகு தசை காலங்களில் பிடிவாதம், முன்கோபம், தந்தையுடன் கருத்து வேறுபாடு, பெரியவர்களை மதிக்காத குணம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை, கல்வியில் மந்த நிலை, உடலில் வியாதிகளால் தொல்லை போன்றவை ஏற்படும். ராகு பலம் பெற்றிருந்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்களை அடைய முடியும். மேலும் செல்வ நிலை உயரும்.

குரு தசை:
இரண்டாவதாக வரும் தசை குரு தசை ஆகும். இந்த காலங்களில் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அறிவாற்றலை மென் மேலும் பெருக்கி கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். வாய்ப்பு எதிர்பாராத திடீர் தன வரவுகள் மற்றும் பொருளாதார மேன்மைகள் உண்டாகும்.

சனி தசை:
மூன்றாவதாக வரும் சனி தசை என்றாலும் சனி நல்ல பலம் பெற்று அமைந்திருந்தால் இந்த தசா காலத்தில் எதிலும் முன்னேற்றம், வேலையாட்களின் ஒத்துழைப்பு ஆகியவை ஏற்படும். ஆனால் சனி பலமிழந்திருந்தால் அதாவது தீய நட்சத்திரம் பார்வை அல்லது சேர்க்கை பெற்று இருந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட நேரிடும். உடல் ஆரோக்கியத்திலும் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், அக்கினியால் பயம் ஆகியவை ஏற்படும்.

புதன் தசை:
அடுத்து வரும் நான்காவது தசை புதன் தசை ஆகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் இந்த தசை காலங்களில் நல்ல மேன்மைகள், அசையும் அசையா சொத்து சேர்க்கைகள், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும். மேலும் ராசி அதிபதியின் தசை ஆகும். பல நன்மைகள் ஏற்படும்.

கேது தசை:
ஐந்தாவதாக வரும் கேது தசை 7 வருட காலங்கள் நடைபெறும். பொதுவாக அனைவருக்கும் கேது தசை நன்மை தராது. எனவே இக்காலங்களில் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது. இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டம் ஏற்படும்.

பொது பரிகாரம்

திருவாதிரை நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் செங்கரு மரமாகும். இம்மரத்தை வழிபட்டு வந்தால் நல்ல பலன்களை பெற முடியும்

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

திருவாதிரை நட்சத்திரத்தில் தெய்வ பிரதிஷ்டை செய்வது, மந்திரங்கள் ஜெபிப்பது, வேத பரிகாரங்கள் செய்வது, நீண்ட நாட்களாக பூட்டியுள்ள கதவுகளைத் திறப்பது, சூளைக்கு நெருப்பிடுவது, குழந்தையை தொட்டிலில் இடுத்தல், காது குத்துவது போன்ற காரியங்களை செய்யலாம்.

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம் 1 2 3, பூரம், சித்திரை 1 2, விசாகம் 4, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

ரோகிணி, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரகாரர்களை திருமணம் செய்ய கூடாது.

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர, பிரசோதயாத்

4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

திருவாதிரை 1ம்பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

திருவாதிரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தின் மீது குரு பகவான் ஆதிக்கம் செலுத்துகிறார். எனவே ஆசார அனுஷ்டானங்களை கடைப்பிடிப்பார்கள். எதிலும் ஒழுங்கையும் நேர்மையையும் விரும்புவார்கள். சற்று முரட்டு குணமும் இருக்கும். தலைமைப் பதவிகளை பெறுபவர்களாக இருப்பார்கள். புதிதாகப் பார்ப்பவர்களிடம் கூட பல காலம் பழகியவரைப்போல் எளிதில் நட்பு கொண்டுவிடுவார்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற ரீதியில் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவார்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இருப்பார்கள். தன் வயதை ஒத்தவர்களை விட, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களின் நட்பையே அதிகம் பெற்றவராக இருப்பார்கள். பிற மொழிகளில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பார்கள் \. வயதானாலும் குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைவீர்கள்.

திருவாதிரை 2ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

திருவாதிரை நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் சனி பகவான் இருக்கிறார் எனவே இந்தப் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நேர்மை குணம் மற்றும் செயல்பாடு இருக்கும் இந்த சூழ்நிலையிலும் சட்டதிட்டங்களை மீறாமல் நடப்பார்கள் இவர்களில் சிலருக்கு கூச்ச சுபாவம் உடையவராக இருப்பார்கள். பேசும்போது சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாக பேசி, மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாவார்கள். பேசும்போது கூடுமானவரை பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. பெரும்பாலும் தனிமையில் இருப்பதை விரும்புவார்கள். அவ்வளவு சுலபத்தில் மற்றவர்களுடன் பழக மாட்டார்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காக கடுமையாக படுபாடுவார்கள்

திருவாதிரை 3ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சனி

மூன்றாம் பாதத்திற்கு நவாம்ச அதிபதி சனி என்பதால், ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பார்கள். வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில் பல கஷ்டமான சூழ்நிலைகளை சந்திக்கும் நிலை அமையும். பிறரை பற்றி இகழ்வாக புறம் பேசுவார்கள். உடல் நோயுடன் அழுக்கு ஆடைகளை அணிந்து இருக்கும் அமைப்பு வரும். பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் சண்டைகளை காண்பதில் விருப்பம் பெற்றிருப்பார்கள். உடன் பிறந்த சகோதரர்களை விட சகோதரிகளே அதிகம் உதவி செய்வார்கள். மூலிகைகள் பற்றி அறிந்து கொள்வதிலும், மூலிகைகளைத் தேடி அலைவதிலும் அலாதி பிரியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மனதில் உள்ளதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தமான ஆளாக இருப்பார்கள்.

திருவாதிரை 4ம் பாதம்:
நட்சத்திர அதிபதி ராகு ராசி அதிபதி புதன் நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி குரு

இந்த நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ கடாட்சம் நிரம்பியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திடீர் அதிஷ்டங்கள், யோகங்கள் மூலம் பணம் மற்றும் லாபங்கள் ஏற்படும். பந்துஜன விரோதங்களுடன், காரியவாதியாகவும், பைத்தியக்காரன் போன்ற செயல்களுடன் நீதி நேர்மை இல்லாதவராகவும், காமாந்தகாராகவும் இருப்பார்கள். கணிதத்தில் திறமை, எழுதுவதில் சாமார்த்தியமும் இருக்கும்

முதல் பக்கத்தை அறிய அமுக்கவும்

திருவாதிரை

நம் தமிழ் - திருவாதிரை

நட்சத்திரம் -திருவாதிரை

திருவாதிரை என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் . மேற்கத்திய உலகத்தில் வழக்கிலிருக்கும் பெயர் பீட்டல்கியூஸ் (Betelgeuse) ஆகும். இந்திய வானியலின் பழைய மரபு படியும் ஜோதிட மரபு படியும் இது மிதுன ராசியில் கணக்கிடப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம். மற்றொன்று திருமாலுக்கு ஆனாது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கு சிவன் கோயில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில் தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை ஒரு 10-நாள் விழாவாக கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப்பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (= ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்.

ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்து ஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதிரை திருவிழா சங்க தமிழர்களால் சிவனுடைய நட்சத்திரமாகக் கொண்டாட பட்டதை பரிபாடல் (71-78) சிறப்பாக பாடல் வடிவில் விளக்கபடுகிறது.

திருவாதிரை குறித்த தமிழ்ச் செய்யுள் வரிகள்:
                       ஆதிரை ஒரு மணி ஆயிழை ஒன்றரை.

பொருள்: ஒரே நட்சத்திரமான திருவாதிரை உச்சத்தில் வரும்போது கன்னிராசியில் ஒன்றரை நாழிகையாகியிருக்கும் என்பது தான் பாடல் வரியின் பொருள்.வட மொழியிலுள்ள வாய்பாடும் கிட்டத்தட்ட இதேபொருள்பட உள்ளது: ஆர்த்ரா கன்யாயுதா என்பது தான் அது.

ஆளும் உறுப்புகள்

தொண்டை, தோள், கைகள்

பார்வை

மேல் நோக்கு

பாகை

66.40 - 80.00

தமிழ் மாதம்

ஆனி

நிறம்

கருப்பு

இருப்பிடம்

தேரடி

கணம்

மனுஷ கணம்

குணம்

தாமசம்

மிருகம்

ஆண் நாய்

பறவை

அன்றில் பறவை, சிட்டுக்குருவி

மரம்

செங்கரு(பாலில்லா மரம் )

மலர்

வில்வம்

தமிழ் அர்த்தம்

மூதிரை

தமிழ் பெயர்

மூதிரை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

உபயம்

நாடி

பார்சுவ வாத நாடி

ஆகுதி

 தேன், நெய்.

பஞ்சபூதம்

நீர்

நைவேத்யம்

வெல்லம், நெய்

தேவதை

சிவன், துர்கை, மகாவிஷ்ணு

அதி தேவதை

சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 பேரில்  சிவ அம்சம் கொண்ட ருத்ரன்.

அதிபதி

ராகு

நட்சத்திரம் தன்மைகள்

அலி நட்சத்திரம், மிருது நட்சத்த்ரம், அபசவ்வியம் (இடது பாகமாக சஞ்சரிப்பது)

உருவம்

ரத்தினம் போலவும் தாமரை மொட்டு போலவும் வடிவமுடைய ஒரே நட்சத்திரம்.

மற்ற வடிவங்கள்

மனிததலை,வைரம்,கண்ணீர்துளி

மற்ற பெயர்கள்

செங்கை, மார்கழி, யாழ், வீணை, உருத்திரன், சிவன்

வழிபடவேண்டிய தலம்

ஸ்ரீ அருணாசலேஸ்வர், திருவண்ணாமலை, சிதம்பரம், பட்டீஸ்வரம்

அதிஷ்ட எண்கள்

1, 4, 6.

வணங்க வேண்டிய சித்தர்

பார்கவா,  சித்தர் இடைக்காடார்

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

கு, க, ங, ச.

அதிஷ்ட நிறங்கள்

கருமை கலந்த மஞ்சள்

அதிஷ்ட திசை

தென்மேற்கு

அதிஷ்ட கிழமைகள்

வெள்ளி, சனி.

அணியவேண்டிய நவரத்தினம்

கோமேதகம்

அதிஷ்ட உலோகம்

பித்தளை

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர், ராமானுஜர்

குலம்

இராட்சச குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

காமம்

மேலும் விவரமாக அறிய அமுக்கவும்

மிருகசீரிஷம்

நட்சத்திரம் -மிருகசீரிஷம்

மிருகசீரிடம் என்பது இந்திய வானியலிலும் ஜோதிடத்திலும் ராசிச் சக்கரத்தில் (Zodiac) பேசப்படுகிற 27 நட்சத்திரங்களில் ஐந்தாவது நட்சத்திரம் ஆகும். இதனுடைய அறிவியல் பெயர் (பொதுவாக வழங்கப்படும் பெயர் Meissa). தற்கால வானியல் படி இது Orion என்ற விண்மீன் குழுவின் தலைப்பக்கம் காணப்படுகிறது. இந்திய வானியலின் பழைய மரபு படியும் ஜோதிட மரபுப்படியும் இது ரிஷப ராசியிலும் உள்ளது என்று கணக்கிடப்படுகிறது. மானின் தலை போலத் தோற்றமளிப்பதால் மிருகசீரிசம் எனப் பெயர் பெற்றது. அதாவது ம்ருக என்றால் மான்; சீர்ஷம் என்றால் சிரசு அல்லது தலை. தமிழின் ஆயுத எழுத்தான ஃ போல மூன்று நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.

ஆளும் உறுப்புகள்

பாதம் -1,2 - முகம், கன்னம், நாக்கு பாதம் -3, 4 - தொண்டை, தோள், காது, நெஞ்செலும்பு

பார்வை

சம நோக்கு பார்வை( திரியங்முக நட்சத்திரம்)

பாகை

53.20 - 66.40

நிறம்

இளஞ்சிவப்பு

இருப்பிடம்

நகரம்

கணம்

தேவ கணம்

குணம்

தாமசம், மென்மை

மிருகம்

பெண் சாரை பாம்பு

பறவை

கோழி

மரம்

பாலில்லாத கருங்காலி மரம்

மலர்

வெள்ளை அல்லி

தமிழ் அர்த்தம்

மான் தலை

தமிழ் பெயர்

மான்றலை

சராதி நட்சத்திரப்பிரிவுகள்

ஸ்திரம்

நாடி

மத்திம நாடி

ஆகுதி

பயிறு, எள்

பஞ்சபூதம்

பூமி

நைவேத்யம்

பாயசம்

தேவதை

 நாக தேவதைகள்

அதி தேவதை

சோமன், சந்திர ஸூடேஸ்வரன்

அதிபதி

செவ்வாய்

நட்சத்திரம் தன்மைகள்

அலி நட்சத்திரம்,  அபசவ்விய நட்சத்திரம்

உருவம்

மானின் தலை வடிவத்தில் மூன்று நட்சத்திரங்கள் சேர்ந்த நட்சத்திரக் கூட்டம்.

மற்ற வடிவங்கள்

மான்தலை,தேங்கைக்கண்

மற்ற பெயர்கள்

மான்றலை, தேங்காய், ஐந்தானம், மும்மீன், மிருகவதனம்

வழிபடவேண்டிய தலம்

ஆதிநாராயணப் பெருமாள் கோவில், முகூந்தனூர்

அதிஷ்ட எண்கள்

3, 7, 9

வணங்க வேண்டிய சித்தர்

ஸ்வேதயி

பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துகள்

வே, வோ, கா, சீ

அதிஷ்ட நிறங்கள்

மஞ்சள், பழுப்பு

அதிஷ்ட திசை

கிழக்கு, தெற்கு

அதிஷ்ட கிழமைகள்

செவ்வாய், வியாழன்

அணியவேண்டிய நவரத்தினம்

பவளம்

அதிஷ்ட உலோகம்

வெண்கலம்

வெற்றி தரும் நட்சத்திரங்கள்

சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

கண்ணப்பர், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சேந்தமங்கலம் சுவாமிகள், புருஷமிருகம்

குலம்

வேடர் குலம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்

மோட்சம்

பொதுவான குணங்கள்

இதில் 1, 2 ம் பாதங்கள் சுக்கிரனின் ராசியான ரிஷபத்திலும் 3, 4ம் பாதங்கள் புதனின் ராசியான மிதுனத்தில் அடங்கும். அதாவது முதல் இரண்டு பாதங்களில் பிறப்பவர்கள் ரிஷப ராசி காரர்களாகவும், 3,4ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசி காரர்களாகவும் இருப்பார்கள்.
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். மொழி, இனப்பற்று அதிகம் உடையவர்கள். கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தாய் நாட்டை மறக்காதவர்கள். யார் சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுய சிந்தனையோடு எடுக்கும் காரியங்களை செய்து முடிப்பார்கள். அபார நினைவாற்றல் இருக்கும். முன் கோப அதிகமிருந்தாலும் மற்றவர்களிடம் தாழ்ந்து நடக்கும் பண்பும், தவறை கண்டால் தயக்கமின்றி தட்டி கேட்டுகும் தைரியம் இருக்கும். எப்பொழுதும் இளமையாக இருப்பவர்கள், உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பவர்கள், புத்திக்கூர்மை, அளவுகடந்த ஊக்கம், பேச்சுத்திறமை உள்ளவர்கள். அன்பு, நட்பு, பாசம் உள்ளவர்கள். தனக்கென ஒரு தனிவழியைத் தேர்ந்தெடுத்து நடப்பவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் மேலும் தன்னை தானே வழி நடத்திக் கொள்ளும் திடமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். பேச்சு ஆற்றலால் பகைவரையும் நண்பராக்கிக் கொள்வார்கள்

குடும்ப வாழ்க்கை

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலோர் குடும்பத்தில் விட்டு கொடுக்கும் பண்பில்லாதவர்களாக இருப்பார்கள். இதனால் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவாகவே இருக்கும் அடிக்கடி மன சஞ்சலங்களும் கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். அதனால் மனக்கசப்பு ஏற்படும். வெளி நபர்களிடம் விட்டுக் கொடுக்கும் பண்பிருக்கும் அளவிற்கு வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடக்க மாட்டார்கள். உரிய வயதிலேயே திருமணம் முடியும். பிள்ளைகளுக்காக சொத்து சேர்ப்பார்கள். வீட்டில் அதாவது வாழக்கை துணை மற்றும் பிள்ளைகளிடம் கறாராக நடந்துகொள்வார்கள். வாழ்க்கை துணை வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பார்

நண்பர்கள்

இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டு இருப்பதாலும், மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணத்தாலும் அதனால் உங்களைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அதிக நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள்.

நட்பு நட்சத்திரங்கள்

திருவாதிரை, சுவாதி, சதயம் இந்த நட்சத்திரக்காரர்கள் நட்பு வைத்துக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்வதும் நல்லது. அதே போல் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் காரியங்கள் செய்தால் வெற்றி பெறலாம்

தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள்

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம். சித்திரை நட்சத்திரக்காரர்கள் டென்ஷனை உருவாக்குவதுடன் மனம் சங்கடப்படும் நிலை உருவாக்குவார்கள். அவர்களுடன் பழகுவது, திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தல் நல்லது.

தொழில்

விவசாய இயந்திரத் தொழில், பூமி தொடர்பான இயந்திரங்கள் (பொக்லைன்) தொழில், விவசாய இடு பொருள் வியாபாரம், பதிப்பகம், அச்சுத்தொழில், பத்திரிகைத் தொழில், பேச்சுத் தொழில், நம்பிக்கை மற்றும் உற்சாகம் தரும் பேச்சு மற்றும் எழுத்துத் தொழில். உயர்தர உணவகங்கள், பெண்கள் விடுதிகள், உயர்தர மது விடுதிகள், மனமகிழ் மன்றம் போன்ற தொழில்கள் இவர்களுக்கு ஏற்றது எனலாம்

தசா பலன்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் தசை முதல் திசையாக வரும். செவ்வாய் தசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் செவ்வாய் தசை நடைபெறும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய் தசை:
செவ்வாய் திசையில் எதிலும் துடிப்பு, ரத்த சம்பந்தபட்ட பாதிப்பு, கழுத்து மற்றும் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகள் உண்டாகலாம். பொன் மற்றும் ஆடை சேர்க்கை உண்டாகும்
ராகு தசை:
அடுத்து வரும் 2வது தசையாக ராகு தசையாகும். இது மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். இளமை காலத்தில் ராகு தசை வருவதால் ராகு பலம் பெற்றிருந்தால் மட்டும் நல்ல கல்வி அறிவை பெற முடியும். ராகு பலம் இல்லாமல் இருந்தால் அல்லது கெட்ட கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் கல்வியில் மந்த நிலை, முன் கோபம் முரட்டு சுபாவம், தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையால் அவ பெயர்கள், பெற்றோர்களிடம் கருத்து வேறுபாடு ஆகியவை உண்டாகும்.
குரு தசை:
மூன்றாவதாக வரும் குரு தசை 7 மற்றும் 10 க்குடைய தசை என்பதால் இந்த காலங்களில் சற்று உயர்வுகளைப் பெற முடியும். மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நன்மை தராது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்த தசையில் இவர்கள் பூமி மனை வாங்கும் யோகம் பொருளாதார மேன்மையும் செய்யும் உத்தியோகத்தில் உயர்வு ஆகிய நன்மைகள் உண்டாகும்.
சனி தசை:
நான்காவதாக வரும் சனி தசை மாரக தசை என்றாலும் சனி பலம் பெற்று அமைந்து விட்டால் சமுதாயத்தில் நல்ல உயர்வையும், வாழ்வில் அதிஷ்டத்தையும் அள்ளித் தருவார். வயிறு, கண் சம்மந்தப்பட்ட வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. சனி நன்றாக இருப்பவருக்கு இரும்பு சம்மந்தப்பட்ட தொழில்களால் நன்மையையும், உடனிருக்கும் தொழிலாளர்களால் உயர்வும் உண்டாகும். நல்ல செல்வந்தர்களாக வாழக் கூடிய ஆற்றல் இருக்கும்.

பொது பரிகாரம்

மிருகசீரிஷ நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் கருங்காலி மரமாகும். இம்மரத்தை வழிபடுவதால் நல்ல பலன்களை பெற முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்

மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் நாளில் அதாவது மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நட்சத்திரத்தில் திருமணம், காது குத்துதல், சீமந்தம் செய்தல் ஆபரணங்கள் செய்தல், தானியம் வாங்குதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், யாத்திரை செல்லுதல், கல்வி கற்க தொடங்குதல் கால் நடைகள் வாங்குதல் போன்ற நல்ல காரியங்கள் செய்யலாம்

பொருந்தும் மற்றும் பொருந்த நட்சத்திரங்கள்:

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது

பொருந்தும் நட்சத்திரங்கள்:

திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி, ரேவதி

பொருந்தா நட்சத்திரங்கள்:

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, பரணி

(குறிப்பு: மிக பொருந்தும் நட்சத்திரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.)

சொல்ல வேண்டிய மந்திரம்

விச்வேச்வராய நரகார்வை தாரணாய
கர்ணாம்ருதாய சசிகேகர தாரணாய
கர்பூரகந்தி தவளாய ஜடாதராய
தாரித்திய துக்க தஹணாய நமச் சிவாய.

4 பாதங்களில் பிறந்தவர்களின் குணம்:

ஒவ்வொரு பாதத்தில் பிறந்தவர்களின் தனிப்பட்ட குணங்கள் உண்டு.

மிருகசீரிஷம்1ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சூரியன்

செல்வத்துடனும், திறமையுடனும், விசாலமான புத்தியுடனும், அழகுடனும் இருப்பார்கள். மன அழுத்தம் கொண்டவர்கள். பிறர் பொருட்களை அபகரிக்கும் குணம் இருக்கும் உடலில் சிரங்கு போன்ற வியாதிகள் வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். தாத்தா, பாட்டியின் மீது அதிக பாசம் இருக்கும்.

மிருகசீரிஷம்2ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி சுக்கிரன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி புதன்

உண்மை பேசுவதுடன், உண்மையாக அனைவரிடமும் பழகுவார்கள். சத்தியவான்கள். மிகவும் திறமை இருந்தாலும் முன்கோபம் அதிகம். ஆண்களாக இருந்தால் பெண்களிடம் அற்ப ஆசையோடு இருப்பார்கள். இரக்க சுபாவம் மிகுந்தவராக இருப்பார்கள். பகைவர்க்கும் அருளும் உள்ளம் கொண்டிருப்பார்கள். சுய முயற்சியால் முன்னேற விரும்புவார்கள். ஏழை மற்றும் பணக்காரன் என்கிற வர்க்க பேதம் பார்க்காமல் மனிதர்களின் நல்ல குணத்தையும், உள்ளத்தையும் மட்டுமே பார்த்து உறவை ஏற்படுத்திக் கொள்வார்கள். உலகின் விஷயங்களை பற்றிய தகவல்களை அறிந்து வைத்திருப்பார்கள்.

மிருகசீரிஷம்3ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி சுக்கிரன்

வாழ்க்கையை யதார்த்தமாகவும் சந்தோஷமாகவும் கழிப்பார்கள். சண்டை என்றாலே காத தூரம் ஓடுவீர்கள். எப்போதும் சமாதானத்தையே விரும்புவீர்கள். வாழ்வில் எத்தகைய கடினமான சூழ்நிலைகளை சந்தித்தாலும் சிறிதும் மனம் கலங்க மாட்டார்கள். இறைவழிபாடு ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு இருக்கும். பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பார்கள். அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்

மிருகசீரிஷம்4ம் பாதம்:

நட்சத்திர அதிபதி செவ்வாய்
ராசி அதிபதி புதன்
நட்சத்திரத்தின் நவாம்ச அதிபதி செவ்வாய்

திறமை உள்ளவராகவும், சாதுவாகவும், பிறர் மனதை புரிந்து கொண்டு அதன்படி நடப்பவராகவும் இருப்பார்கள். காம குணம், நெஞ்ச அழுத்தம், பிடிவாத குணம் இருக்கும். நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள். அதனால், மற்றவர்களால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை தங்களிடம் அதிக பாசம் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பிள்ளைகளை மிகவும் கட்டுப்பாட்டுடனும் பொறுப்பு உணர்வுடனும் வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.